Monday, July 23, 2012

வெங்காயத்தின் மகிமை!

ஒன்றுமில்லாத விஷயத்தை `வெங்காயம்’ என்று சொல்வது பலரின் வழக்கம். ஆனால் உண்மையில் வெங்காயம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.வெங்காயத்தை ஆங்கிலத்தில் `ஆனியன்’ என்கிறார்கள். இது `யூனியோ’ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு `பெரிய முத்து’ என்று பொருள்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற வேதிப்பொருளாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், அது நம் கண்ணில் பட்டு கண்ணீர் வரவழைக்கவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஒரே தன்மை உடையவை. ஒரே பலனைத் தருபவை.
வெங்காயத்தில் புரதச் சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. எனவே இது நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டிலும் கூட பாட்டி வைத்தியத்திலும், நாட்டுப்புற வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய இடம் பெறுவது தெரிந்தது. விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...