Wednesday, July 18, 2012

குருத்துயிர் கலங்கள் மூலம் கண்நோய்க்கு சிகிச்சை

குருத்துயிர்க் கலங்கள்
மனிதக் கருவில் இருக்கும் குருத்துயிர்க் கலங்களைக் கொண்டு கண்ணோய்க்கு முதல் தடவையாகச் செய்யப்பட்ட பரீட்சார்த்த சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது முன்னிலை ஆய்வுகளின்படி இந்த சிகிச்சை முறையானது பாதுகாப்பானது என்று தெரிய வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு தசாப்தத்துக்கும் அதிகாமான கால ஆய்வுகளுக்குப் பின்னர் மனிதக் கருவில் இருக்கும் குருத்துயிர்க் கலங்கள் மூலம் செய்யப்பட்ட இந்தச் சிகிச்சை குறித்த செய்திகள் லான்செட் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
இரு பெண்களுக்கு அமெரிக்காவில் இந்த முறையின் மூலம் செய்யப்பட்ட சிகிச்சையின் மூலம் அவர்களது பார்வையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சஞ்சிகை கூறுகிறது.
மனித உடலின் திசுக்களாக மாறக்கூடிய இந்த கரு குருத்துயிர் கலங்கள் மூலமான இந்த ஆய்வுகள் குறித்து நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இப்படியான சிகிச்சை முறை அமெரிக்காவில் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகின்றது. 2001 ஆம் ஆண்டில் கருக்களில் உள்ள உயிர்க்கலங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அரச நிதியில் அதிபர் புஷ் தார்மீக அடிப்படையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்.
ஆனால், 2009 ஆம் ஆண்டில் அதிபர் ஒபாமாவில் அவை நீக்கப்பட்டன.
முன்னதாக முண்ணானில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முயற்சிகள் நிதி போதாது என்ற காரணத்தால் அமெரிக்க உயிரியற் தொழில்நுட்ப நிறுவனமான ஜெரோனால் நிறுத்தப்பட்டன.
கண்பார்வை படிப்படியாக மங்கிவரும் நோயைக் கொண்ட ஒரு பெண்மணிக்கும், வயதானதால் கண்பார்வை குறைந்த ஒரு பெண்ணுக்கும் இந்தத்தடவை இந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள் என்று பதியப்பட்டவர்களாவர்.
இவர்கள் இருவருக்கும் இந்த சிகிச்சையின் பின்னர் ஓரளவு பார்வை திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வகையிலான சிகிச்சை பாதுகாப்பானதா என்பது குறித்து அனைத்து தரப்புமே இதுவரை எச்சரிக்கையுணர்வுடனேயே கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சிகிச்சையால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...