Friday, July 20, 2012

சில நிறுவனங்களும் சுவாரஸ்ய தகவல்களும்


1.Santoor அழகு சாதனங்கள்,Chandrika சோப்பு,Glucovita பானம்,Baby Soft soap இவையெல்லாம் யாரின் தயாரிப்பு என நினைக்கின்றீர்கள்? IT-யில் இந்தியாவில் கலக்கிக்கொண்டிருக்கும் விப்ரோவின்(Wipro) தயாரிப்புகள் தாம்.


2.compaq-ஐ விழுங்கி நிற்கும் வன்பொருள்கள்,பிரிண்டர்கள் தயாரிப்பு புகழ் HP நிறுவனம் முதலில் தாயாரித்தது Audio oscillatorகள் தாம்.
(1938)



3.அந்தகால IBM-ன் ஒரு பிரிவுதான் International Time Recording Company. அது கடிகாரங்களை (clock) தயாரித்தன.அதில் ஒன்று தான் நீங்கள் படத்தில் பார்ப்பது.



4.apple நிறுவனம் கணிணிகள் தயாரிப்பதோடில்லாமல் இப்போது iPod,iPhone என பிற ஆடம்பரசாதனங்களிலும் கவனம் செலுத்துவதால் அதன் பெயர் சமீபத்தில் Apple Computer Inc-ரிலிருந்து வெறும் apple Inc ஆக மாற்றப்பட்டது.



5.Sun Java வுக்கு போட்டியாக HP உருவாக்கிய ஜாவாவின் பெயர் Chai.(ஜாவா means காஃபி ,சாய் means டீ )


6.இன்று பலதுறைகளில் சாதனை படைக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் துவக்கப்பட்டது டெக்ஸ்டைலை மையமாக கொண்டுதான்.



7.கிங் பிஷர் ஏர்லைன்ஸின் Airline Code என்னவென்கிறீர்கள்? IT-யாம்


8.LG யின் விரிவாக்கம் Lucky Goldstar
BPL யின் விரிவாக்கம் British Physical Laboratories


9.TEN Sports-ல் TEN-ன் விரிவாக்கம் Taj Entertainment Network


10.உண்மையில் அந்நிறுவனம் துவக்கப்பட்டபோது அது Mahindra & Mohammad-வாம்.இந்தியா பாகிஸ்தான் பிளவின் போது முகமது பாகிஸ்தான் போய்விட பெயர் M & M ஆகவே இருக்க அது Mahindra & Mahindra-வாக்கப்பட்டது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...