Wednesday, July 18, 2012

விண் குப்பைகளை

வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு திட்டத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
வானில் கைவிடப்பட்டுக் கிடக்கும் செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டமாகும்.
விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும்.
வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம்.
கைவிடப்பட்ட ஒரு செய்மதி
கைவிடப்பட்ட ஒரு செய்மதி
ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம்.
பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட பொருட்கள் பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கிறன. சரியாக எவ்வளவு பொருட்கள் அவ்வாறு இருக்கின்றன என்று எவருக்கும் கணக்கு எதுவும் இதுவரை தெரியாது.
இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவை அடங்கும். இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
இந்த குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தற்போது இவற்றை அகற்றுவதற்காக லௌசானில் உள்ள ஈகோல் பொலிதெக்னிகில் உள்ள சுவிஸ் விண்வெளி மையம் றிமோட் காண்ட்ரோல் மூலம் இயக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை அறிவித்திருக்கிறது.
அந்த குப்பைகளை அங்கே பெருக்கியெடுத்து அவற்றை பூமிக்கு கொண்டுவரும் போதே எரியச் செல்வது ஒரு வழி. அல்லது அவற்றை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வந்து இங்கே அவற்றை எரிப்பது இரண்டாவது வழி. இவை இரண்டு குறித்தும் தாம் ஆராய்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
பத்து மில்லியன் டாலர்கள் பெறுமதியான இந்த விண்வெளியை சுத்தம் செய்யும் திட்டம் இன்னமும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆரம்பமாகும் என்று அந்த மையத்தின் இயக்குனர் வோல்க்கர் காஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...