Thursday, July 19, 2012

வின்ஸ்டன் சர்ச்சிலை சாக்லெட் மூலம் கொல்ல திட்டமிட்ட ஹிட்லர்!

 Death Chocolate Nazis Plotted Assassinate Churchill லண்டன்: இரண்டாம் உலக போரின் போது, உலக பிரபலங்களான சர் வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின், பிரங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோரை வெடிக்கும் தன்மை கொண்ட சாக்லெட் மூலம் கொலை செய்ய ஹிட்லரின் நாசி இயக்கம் திட்டமிட்டது. ஆனால் அந்த திட்டம் உளவாளி மூலம் முறியடிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது, எதிரிகளை வீழ்த்த ஒவ்வொரு நாடும் பல திட்டங்களை திட்டியது. இதன்படி ஹிட்லரின் நாசி இயக்கத்தினர் பல தந்திரமான திட்டங்களை திட்டினர். இதில் நாசி இயக்கத்தினரின் ஒரு முக்கிய திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து பிரபலங்கள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் மூலம் கொலை செய்வதே அந்த திட்டம் ஆகும். சாதாரண சாக்லெட் போன்று தோற்றமளிக்கும் நீள்வடிவிலான வெடிக்கும் திறன் கொண்ட ஸ்டீல் குண்டு தயாரிக்கப்படும். இதன் மேலே சாக்லெட் மூலம் மூடப்படும் பின்னர் வழக்கம் போல தங்க காகிதத்தால் சுற்றப்பட்டு, பீட்டர்ஸ் என்ற பெயரில் கருப்பு கவரில் இட்டு இந்த சாக்லெட் தயாரிக்கப்பட்டது.
இந்த சாக்லெட்டின் ஒரு பகுதியை உடைத்தாலோ, கடித்தாலோ போதும், அடுத்த 7 நொடிகளில் வெடித்து சிதறிவிடும். இதன்மூலம் குறிப்பிட்ட மீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள பலரும் பலியாக நேரிடும்.
இந்த தந்திரமான திட்டத்தை தீட்டிய ஹிட்லரின் நாசி இயக்கம், உலகின் பிரபலங்களான சர் வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின், பிரங்கலின் ரூஸ்வெல்ட் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டது. இதற்காக ஜெர்மனியின் உளவாளிகளை நியமித்தது.
உளவாளிகளின் மூலம் பிரபலங்கள் பயன்படுத்தும் முக்கிய அலமாரிகள், உணவுப் பொருட்கள் வைக்கும் இடங்களை கண்டறிந்து, அங்கே இந்த வெடிக்கும் திறன் கொண்ட சாக்லெட்களை வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் நாசி இயக்கத்தில் இருந்த ரஷ்ய உளவாளி மூலம் இந்த கொடூர திட்டம் குறித்து இங்கிலாந்திற்கு தெரியவந்தது. இங்கிலாந்தின் பிரபல உளவு நிறுவனமான எம்.ஐ.5 யின் மூத்த அதிகாரி லாட் விக்டர் ரோச்சைல்டு என்பவர் இதை கண்டறிந்து, மேற்கண்ட வெடிக்கும் தன்மை கொண்ட சாக்லெட்டின் உருவத்தை வரைபடமாக வரைந்து தருமாறு ஒரு ஓவியரிடம் தெரிவித்தார்.
அந்த படத்தை இங்கிலாந்தில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் பொது மக்களை கூட இந்த அபாயமான சாக்லெட்டின் பிடியில் இருந்து காப்பாற்றலாம் என்று திட்டமிட்டார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...