Friday, November 13, 2015

திப்பு சுல்தான் ஒரு காட்டுமிராண்டி


திப்புசுல்தான் பெரிய வீரன் மாதிரி ஒரு பொய்யான வரலாறை இங்கே பாட புத்தகங்களில் படிக்கிறோம்.

உண்மையில் திப்பு சுல்தான் ஒரு காட்டுமிராண்டி, மதத்தின் பெயரால் பல ஆயிரம் கொலைகளை கொடூரமாக செய்தவன். ஹிந்து பெண்களை கற்பழித்தவன், கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்தவன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரலாற்று ஆதாரங்களை படியுங்கள்

பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்.

”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்."

“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”
 
Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon).

”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.

மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:
 

”ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது”.
 
பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
“இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.
 
“அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் – கல்யாணிகள் – அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”
 
1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).
 

ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.
 
“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”
 
1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:
 
“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”
 
1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:
 
“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.
 
ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.
 
1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai) எழுதிய கடிதம்:
 
”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”. 
 
திப்பு தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
 
“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”


ஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரன் எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.
”ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”
 
இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான்.
Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.
 
ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.” 
 
அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில், ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.
 
கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.
 
திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.
 
திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice) ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.
 
      
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, October 26, 2015

மதன்லால் திங்கரா‬

கர்சன் வில்லி என்பவர் வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர். ஏராளமான ஹிந்துப் பெண்கள் குழந்தைகள், குடும்பங்களின் இடப்பெயர்ச்சிக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்.
 
இவரை லண்டனில் வைத்துக் கொலைசெய்ய வீர சாவர்க்கர், வ.வே.சு. ஐயர் போன்றோர் முடிவு செய்தனர். நான் செய்கிறேன் என்று முன் வந்த இளைஞர் தான் மதன்லால் திங்கரா. ஆனால் சாவர்க்கர் மறுத்தார். "நீ சிறு பையன். உன்னால் இயலாது. பிடிபட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டால் நீ நம் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுவாய். " என்றார். மதன்லால் மறுத்தார். எவ்வளவு கொடுமை செய்தாலும் நம் இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றார்.
 
அதற்கு வீர சாவர்க்கர் சில சோதனைகளுக்கு உட்படுத்தினார். கண்களை மூடிக்கொண்டு, மனதைக் கல்லாக்கிகொண்டு. மதன்லாலின் நகக் கண்ணில் ஊசியை ஏற்றினார். ஆனால் மதன் அசைந்து கொடுக்கவில்லை. முகத்தில் சலனமும் இல்லை.

இவனின் மன உறுதிகண்டு வீர சாவர்க்கரே மிரண்டு போனார். பிறகு திங்க்ராவிடமே இப்பொறுப்பை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கர்சன் வைலியை லண்டனில் ஒரு விருந்தில் கண்டு மதன்லால் திங்கரா சுட்டக்கொன்றார். மூன்று குண்டுகள் சுட்டு நான்காவது குண்டு சுடும் முன் அருகிலிருந்த மருத்துவர் இவருடைய மணிக்கட்டைப் பிடித்துகொண்டார். மதன்லால் கைது செய்யப்பட்டார்.
 
விசாரணையின் போது மேற்படி மருத்துவர் "நான் இவனுடைய மணிக்கட்டைப் பிடித்தபோது இவனுடைய நாடித்துடிப்பைக் கணித்தேன். கொலை செய்துவிட்ட பதைபதைப்போ, பதட்டமோ துளியும் இல்லை. நாடி மிக நிதானமாக இருந்தது. " என்றார். மதன் லால் கொடுத்த வாக்குமூலத்தில் லண்டன் மாநகரமே கிடுகிடுத்தது. பிரிட்டிஷார் அரண்டு போயினர். லண்டன் பத்திரிகை அனைத்தும் பக்கம் பக்கமாக திங்கராவைப் பற்றி எழுதின. 

  ஓல்டுபெய்லி   நீதிமன்றத்தில்  தம்மீது  சுமத்தப்  பெற்ற  கொலைக் குற்றத்தை  ஒப்புக்கொண்டு மதன்லால் திங்கரா கொடுத்த வாக்கு மூலத்தின்
ஒரு பகுதி வருமாறு:


    "தேசாபிமானம்மிக்க  இந்திய  இளைஞர்களை, தூக்கிலிடப்படும், நாடு கடத்தப்படும்  மிருகத்தனமான செய்கைக்கு வஞ்சந்தீர்த்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர்  இரத்தத்தைச்  சிந்த  அன்று  முயன்றேன் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றேன்.  இம்முயற்சியில்  நான்  எனது  மனச்சாட்சியைத் தவிர வேறு  யாரையும்  கலந்து  ஆலோசிக்கவில்லை.  என்  கடமையைத் தவிர வேறு   யாருடனும்   சேர்ந்து   நான்   சதியாலோசனை செய்யவுமில்லை. அன்னியரின்  துப்பாக்கி  முனை  கொண்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு  நாட்டு  மக்கள்,   நிராயுதபாணிகளான   ஓர்   இனத்தினருக்காகப் போராடுவது அடிக்கடி  மறுக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  நிரந்தரமான போர் நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்."

   
   "இந்து  என்ற  முறையில்,  நாட்டுக்கு  இழைக்கப்படும்  தீமையைக் கடவுளுக்குச்  செய்யப்படும்  அவமதிப்பாக நான் கருதினேன். அவனுடைய (தாய் நாட்டினுடைய) லட்சியம் ஸ்ரீராமரின் லட்சியம்; அவளுக்குச் செய்யும் சேவை  ஸ்ரீகிருஷ்ணனுக்குச்  செய்யும்  சேவை.  செல்வத்திலும் அறிவிலும் ஏழையான  என்னைப்போன்ற  ஒரு  மகன்,  தன்  தாய்க்கு  அர்ப்பணம்செய்யக்கூடியது,  தனது  சொந்த இரத்தத்தைத்  தவிரவேறு எதுவும் இல்லை. எனவே, அதையே அவளுடைய  திருவடிகளில்   அர்ப்பணஞ்  செய்கிறேன்."
   
   "இந்தியாவுக்கு  இப்போது  தேவைப்படும் படிப்பினை, எப்படி சாவது என்பதை  அறிந்து  கொள்வதே, இதைப் போதிப்பதற்குள்ள ஒரேவழி நாமே சாவதுதான். ஆகையால், நான் உயர்ந்த லட்சியத்திற்கு  உயிரைக் கொடுத்துக் கீர்த்தியுடன் சாகிறேன்.
    
  "கடவுளிடம்  ஒன்றே  ஒன்றுக்காகத்தான்  பிரார்த்தனை செய்கிறேன். என் தாய்நாடு  தன்னுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து மனிதவர்க்கத்தின்
நன்மைக்காகவும்   கடவுளின்   அருளுக்காகவும்   சுதந்திரத்துடன்  வாழத் தொடங்கும்  வரையில்,  நான்  இதே தாய்நாட்டின் மகனாகப் பிறந்து, இதே தெய்வீக லட்சியத்திற்காகத் திரும்பவும் சாக அருள வேண்டும். இதுவே என் பிரார்த்தனை. வந்தே மாதரம்."



 
முடிவில் திங்கராவுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்கு முதல் நாள் இரவு வீர சாவர்க்கர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோர் திங்கராவைப் பார்க்க வந்தனர். உனக்கு கடைசி ஆசை என்னவென்று கேட்டனர். அதற்கு மதன்லால் திங்கரா "எனக்கு ஒரு சீப்பும், முகம் பார்க்கும் கண்ணாடியும் வேண்டும்" என்று கேட்டார். ஏன் என்றதற்கு மதன்லால் சொன்னார் "நான் என்ன சாதாரணமாகவா சாகப் போகிறேன் ? இந்தியத் தாயின் பாதங்களில் மலராக அல்லவா விழப் போகிறேன். அப்போது நான் அழகாக இருக்க வேண்டாமா ?"
 
முடிவில் தூக்கு நிறைவேறும் போது முகத்தை மூட மறுத்து விட்டார். நான் என் தாய் நாட்டை பார்த்துக் கொண்டேதான் இறப்பேன் என்று சொல்லி வீரசொர்க்கம் புகுந்தார்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர்

தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்ட  பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது.

இன்றைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர் - ராதாபாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

1901 ஆம் ஆண்டு யமுனா பாயை வாழ்க்கை துணையாக மணந்தார்.  பிறவிப் புரட்சியாளரான இவர் தனது 9-வது வயதில் தாயையும், 16வது வயதில் தந்தையையும் இழந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போதே திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம் மற்றும் கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் 1857 என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு மறைமுகமாக கொண்டு வரப்பட்டு இரண்டாம்யிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விறப்னையானது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இதன் தமிழ் பதிப்பு நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழக வீரர்களால் வேதம் போல படிக்கப்பட்டது.

1909ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் திங்கரா லண்டனில் கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் ஆட்சியர் ஜாக்சன் ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்பின்கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 ஆம் வருடம் மார்ச் 13 ஆம் தேதி கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் பக்கபலமாக விளங்கினார்.

சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்கரும் திலகரின் சீடராக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கர் இந்திய சுதந்திரத்துக்காக போராடியதற்காக அவர், அந்தமான் சிறையில் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பின்னர் 1921 ஆம் வருடம் மே 2 ஆம் தேதி ல் ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் இந்துத்வா என்ற நூலை எழுதினார்.
ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து 1924 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.

பாலகங்காதரத் திலகரை அரசியல் குருவாக கொண்ட இவர் புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். இவரது வீரமிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியபோதும், அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கு இந்தியா ஹவுஸ்ஸில் இந்திய மாணவர்களுடன் இணைந்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை உலக அளவில் நடத்தினார். அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டும் விதமாகப் பேசியது எனக் குற்றம் சாட்டப்பட்டு 50 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காகக் காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறியவர். வலியில்லாத மரணத்தின் மூலம் மரணத்தை சுயமாக திர்மானித்த இவர் 1966 ஆம் வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 1966 பிப்ரவரி 26 ஆம் தேதி இவ்வுலகை வாழ்வை நீத்தார். 2001 ஆண் ஆண்டு சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் வெளியானது.

இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

வ. வே. சுப்பிரமணியம்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
 
வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ வே சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.
கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.

1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.

பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வ ந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.
புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.
இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.
பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்."

வ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கருப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; நடப்பதற்கும் நடை என்று பெயர், ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு.

1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.

தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.
1925 இல் வ. வே. சு வின் குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுகின்றது என்ற செய்தி சர்ச்சையை உண்டாக்கியது. பெரியார் ஈ. வே. ராமசாமி பிராமணரல்லாதோர் இந்திய தேசிய காங்கிரசில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி கட்சியிலிருந்து வெளியேறி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.

தமிழிலக்கிய பங்களிப்பு

மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
  • இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
  • 1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
  • கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
  • கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
  • பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
  • லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
  • மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.

Friday, October 23, 2015

தியாக வீரத்திருமகள் குயிலி



சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. அனால் வீரத்திருமகன் முத்துவடுகத்தேவர் இதை எதிர்த்தார். இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

வீரத்தாய் குயிலி

சிவகங்கையை மீட்க படையெடுத்து வேலுநாச்சியார் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார். அப்போது பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும்பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும் வைத்திருந்தார். வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப்பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்? வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார். அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார். இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள். நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
 
குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார். நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார். முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக்கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின. வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன.
 
விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான். சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார். வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.
 
அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது. என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான். வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

Thursday, October 15, 2015

ஆன்மீக சூட்சமங்கள்.


நீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி., இதை முதலில் படியுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும் வியாதி போகும்., திருமணம் நடைபெறும் அன்பர்களே.
சகல செல்வங்கள் நிலைக்க

1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும

10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்
.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள

21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும

22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள

23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும

24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்

.27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும

28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது

.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும

32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது

.33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும

37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,

38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு, 100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான

39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...