Friday, September 30, 2016

RSS_இன்_கிளை_அமைப்புகள்

RSS சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேற்பட்டவை. அவற்றில் சில இதோ..
1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு
2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு
3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு
4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு
5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது
6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP– மாணவர் அமைப்பு.
7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.
8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.
9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு
10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு
11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு
12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு
14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு
15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.
16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு
17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு
18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு
19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு
20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு
21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு
22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு
23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை
24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு
25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு
26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு
27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.
28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு
29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு
30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு
31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.
32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு
33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு
34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு
35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு
36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு
37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு
38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு
39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு
40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு
41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு
42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு
43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை
44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு.
– இவை தவிர,
\ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன.
மீனவர் கூட்டுறவு அமைப்புகள்,
மருத்துவ சேவை அமைப்புகள்,
ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள்,
ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன.
மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன.
"RSS என்பது உடற்பயிற்சி பள்ளியோ ராணுவ பள்ளியோ அல்ல.இது இரும்பை விட பலஆயிரம் மடங்கு வலிமையான, பிரிக்கமுடியாத ,ஒருங்கிணைந்த ‪#‎இந்துக்களின்‬ சக்தி" -RSS இயக்கத்தை படைத்த டாக்டர் ஹெட்கேவார் கூறியது .
27 செப்டம்பர் 1925 விஜயதசமி அன்று RSS என்ற மாபெரும் ஆலமரத்தின் விதை அன்று விதைக்கப் பட்டது.அன்று நடந்த மிக எளிய விழாவில் தனது வீட்டில் சில சிறுவர்களைக்கொண்டு ‪#‎ஹெட்கேவார்‬ RSS இயக்கத்தை துவங்கினார்.
‪#‎இன்று‬ கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக RSS சங்க பரிவார் வளர்ந்துள்ளது .
வாழ்க பாரதம்!

பாட்டியும், Talking Tomமும்

நண்பனுடன் அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android  தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது   டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..

பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

(வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)

பாசம் வைத்தவர்களிடம்
பேச  கூட நேரமில்லை என்றால்
நாம் வாழ்வதற்கே! அர்த்தமில்லை!
நாமும் முதியோர் ஆவோம் என்ற எண்ணதோடு
பழகுங்கள்...

படித்து வேதனைத்தது!

விரதம் முறை மற்றும் பலன்கள


ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது.

ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும்.

மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும்,

அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா?
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது.

நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது.

ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது.

அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?
என பலர் நினைக்கிறார்கள்.

மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி.

திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை.

அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார்.

தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன்.

ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார்.

குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன்.

கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.

காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை.

பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே
நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும்.

விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும்.

ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம்,

தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது.

ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது.

மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு.

உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.

உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை.

உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும்.

மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.

பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை.

நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை.

நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள்.

அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள்.

அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள்.

சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

மேலும் சன்யாசிகளுக்கு
என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம்.

இதில் யாருக்கும் தடையில்லை.

உலகின் சிறந்த மொழி மெளனம்.

தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம்.

மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம்.

மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள்.

மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல்.

மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்
கொள்ளுங்கள்.

உங்கள் உடல்☘ செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.

அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம்.

ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான
சுவாச விரதம் எனலாம்.

மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம்.

தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம்.

தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம்.

ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன்
இருப்பது பக்தி.

ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும்.

இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது.

நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும்.

இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது,

அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும்.

அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது.

விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்...

Tuesday, September 27, 2016

விதுரர் சொன்ன நீதி


இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம்.
ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது.
மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

Monday, September 26, 2016

"தகுதிச் சிறப்புதான் காரணம்"

மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம், ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க அவசரபுத்தியும், கோபமும் கொண்ட எனக்கு கீதையை உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க,

அதற்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,
"அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;

"கடைப்பிடித்தால்தான் சிறப்பு"

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது
தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.

இது இரட்டை வேடம் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.

"எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்"
பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர்.
தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு.  தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. 
ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப்
போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.
அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம்..

களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்.. அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால்
என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்..

நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது
ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்

"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை"

"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு"

இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; "தகுதிச் சிறப்புதான்" காரணம்.
அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை
எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்

ஓம் நமோ நாராயணாய:

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...