Friday, January 24, 2020

1008 லிங்கம் போற்றி

படியுங்கள் பலன்பெறுங்கள் சிவாயநம 

1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி லிங்கம்
10 அங்கி லிங்கம்
11 அங்கு லிங்கம்
12 அசரிய லிங்கம்
13 அசுர லிங்கம்
14 அசை லிங்கம்
15 அசோக லிங்கம்
16 அச்சு லிங்கம்
17 அஞ்சா லிங்கம்
18 அட்ட லிங்கம்
19 அட்ச லிங்கம்
20 அட்சதை லிங்கம்
21 அட்டோ லிங்கம்
22 அடிமுடி லிங்கம்
23 அடி லிங்கம்
24 அணணா லிங்கம்
25 அண்ட லிங்கம்
26 அணி லிங்கம்
27 அணு லிங்கம்
28 அத்தி லிங்கம்
29 அதழ் லிங்கம்
30 அதிபதி லிங்கம்
31 அதிர்ஷ்ட லிங்கம்
32 அதிய லிங்கம்
33 அதிசய லிங்கம்
34 அதீத லிங்கம்
35 அந்தார லிங்கம்
36 அந்தி லிங்கம்
37 அநந்தசாயி லிங்கம்
38 அநலி லிங்கம்
39 அநேக லிங்கம்
40 அப்ப லிங்கம்
41 அப்பு லிங்கம்
42 அபய லிங்கம்
43 அபி லிங்கம்
44 அபிநய லிங்கம்
45 அபிஷேக லிங்கம்
46 அம்பல லிங்கம்
47 அம்பி லிங்கம்
48 அம்புசி லிங்கம்
49 அம்ம லிங்கம்
50 அமல லிங்கம்
51 அமர லிங்கம்
52 அமராவதி லிங்கம்
53 அமிர்த லிங்கம்
54 அர்ச்சனை லிங்கம்
55 அர்ச்சுண லிங்கம்
56 அர்த்த லிங்கம்
57அரச லிங்கம்
58 அரவ லிங்கம்
59 அரங்க லிங்கம்
60 அரம்பை லிங்கம்
61 அரளி லிங்கம்
62 அரி லிங்கம்
63 அரிணி லிங்கம்
64 அரிமா லிங்கம்
65 அருக லிங்கம்
66 அருணை லிங்கம்
67 அருமணி லிங்கம்
68 அரும்பு லிங்கம்
69 அருளி லிங்கம்
70 அரூப லிங்கம்
71 அல்லி லிங்கம்
72 அலை லிங்கம்
73 அவைய லிங்கம்
74 அழகு லிங்கம்
75 அளத்தி லிங்கம்
76 அற லிங்கம்
77 அறிவு லிங்கம்
78 அன்பு லிங்கம்
79 அன்புரு லிங்கம்
80 அன்ன லிங்கம்
81 அனுதாபி லிங்கம்
82 அனுபூதி லிங்கம்
83 அஷ்ட லிங்கம்
84 ஆக்கை லிங்கம்
85 ஆகம லிங்கம்
86ஆகாய லிங்கம்
87 ஆசான லிங்கம்
88 ஆசிரிய லிங்கம்
89 ஆசி லிங்கம்
90 ஆட லிங்கம்
91 ஆடரி லிங்கம்
92 ஆண் லிங்கம்
93 ஆண்டி லிங்கம்
94 ஆணுரு லிங்கம்
95 ஆத்ம லிங்கம்
96 ஆதார லிங்கம்
97 ஆதி லிங்கம்
98 ஆதிரி லிங்கம்
99 ஆதிசேவி லிங்கம்
100 ஆதிரை லிங்கம்
101 ஆதினா லிங்கம்
102 ஆபேரி லிங்கம்
103 ஆமிர லிங்கம்
104 ஆமை லிங்கம்
105 ஆய லிங்கம்
106 ஆயதி லிங்கம்
107 ஆர்த்தி லிங்கம்
108 ஆரண்ய லிங்கம்
109 ஆரண லிங்கம்
110 ஆராதனை லிங்கம்
111 ஆராபி லிங்கம்
112 ஆரூர லிங்கம்
113 ஆரோக்ய லிங்கம்
114 ஆலகால லிங்கம்
115 ஆலவாய் லிங்கம்
116 ஆலால லிங்கம்
117 ஆலி லிங்கம்
118 ஆவார லிங்கம்
119 ஆவி லிங்கம்
120 ஆவே லிங்கம்
121 ஆவுடை லிங்கம்
122 ஆழி லிங்கம்
123 ஆனந்த லிங்கம்
124 இக்கு லிங்கம்
125 இசை லிங்கம்
126 இடப லிங்கம்
127 இணை லிங்கம்
128 இதய லிங்கம்
129 இந்திர லிங்கம்
130 இமய லிங்கம்
131 இமை லிங்கம்
132 இரட்டை லிங்கம்
133 இராம லிங்கம்
134 இலக்கிய லிங்கம்
135 இலாப லிங்கம்
136 இளைய லிங்கம்
137 இறவா லிங்கம்
138 இறை லிங்கம்
139 இனிமை லிங்கம்
140 ஈகை லிங்கம்
141 ஈசான்ய லிங்கம்
142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
144 ஈடித லிங்கம்
145 ஈடிலி லிங்கம்
146 ஈர்ப்பு லிங்கம்
147 ஈழ லிங்கம்
148 ஈஸ்வர லிங்கம்
149 ஈஸ்வரி லிங்கம்
150 உக்ர லிங்கம்
151 உச்சி லிங்கம்
152 உசித லிங்கம்
153 உடம்பி லிங்கம்
154 உடுக்கை லிங்கம்
155 உணர் லிங்கம்
156 உத்தம லிங்கம்
157 உத்ராட்ச லிங்கம்
158 உதய லிங்கம்
159 உதிர லிங்கம்
160 உப்பிலி லிங்கம்
161 உப்பு லிங்கம்
162 உப லிங்கம்
163 உபதேச லிங்கம்
164 உபய லிங்கம்
165 உமா லிங்கம்
166 உமை லிங்கம்
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம்
169 உரு லிங்கம்
170 உருணி லிங்கம்
171 உருமணி லிங்கம்
172 உவப்பு லிங்கம்
173 உழவு லிங்கம்
174 உழுவை லிங்கம்
175 உற்சவ லிங்கம்
176 உன்னி லிங்கம்
177 ஊக்க லிங்கம்
178 ஊசி லிங்கம்
179 ஊதா லிங்கம்
180 ஊருணி லிங்கம்
181 ஊழி லிங்கம்
182 ஊற்று லிங்கம்
183 எட்டி லிங்கம்
184 எட்டு லிங்கம்
185 எதனா லிங்கம்
186 எந்தை லிங்கம்
187 எம லிங்கம்
188 எருது லிங்கம்
189 எல்லை லிங்கம்
190 எளிய லிங்கம்
191 எழிலி லிங்கம்
192 எழுத்தறி லிங்கம்
193 என்குரு லிங்கம்
194 ஏக லிங்கம்
195 ஏகம லிங்கம்
196 ஏகா லிங்கம்
197 ஏகாம்பர லிங்கம்
198 ஏகாந்த லிங்கம்
199 ஏடக லிங்கம்
200 ஏந்திழை லிங்கம்
201 ஏம லிங்கம்
202 ஏர் லிங்கம்
203 ஏரி லிங்கம்
204 ஏவச லிங்கம்
205 ஏழிசை லிங்கம்
206 ஏறு லிங்கம்
207 ஏனாதி லிங்கம்
208 ஐங்கர லிங்கம்
209 ஐய லிங்கம்
210 ஐராவத லிங்கம்
211 ஒப்பிலா லிங்கம்
212 ஒப்பிலி லிங்கம்
213 ஒருமை லிங்கம்
214 ஒளி லிங்கம்
215 ஓசை லிங்கம்
216 ஓடேந்தி லிங்கம்
217 ஓம் லிங்கம்
218 ஓம்கார லிங்கம்
219 ஓவிய லிங்கம்
220 ஔடத லிங்கம்
221 ஔவை லிங்கம்
222 கங்கா லிங்கம்
223 கச்ச லிங்கம்
224 கண்ட லிங்கம்
225 கடம்ப லிங்கம்
226 கடார லிங்கம்
227 கடிகை லிங்கம்
228 கடை லிங்கம்
229 கதிர் லிங்கம்
230 கதலி லிங்கம்
231 கந்த லிங்கம்
232 கபால லிங்கம்
233 கபில லிங்கம்
234 கமல லிங்கம்
235 கயா லிங்கம்
236 கயிலை லிங்கம்
237 கர்ண லிங்கம்
238 கர்ப்ப லிங்கம்
239 கரண லிங்கம்
240 கரு லிங்கம்
241 கருட லிங்கம்
242 கருமை லிங்கம்
243 கருணை லிங்கம்
244 கல்ப லிங்கம்
245 கல்வி லிங்கம்
246 கலி லிங்கம்
247கலை லிங்கம்
248 கவி லிங்கம்
249 கற்பக லிங்கம்
250 கற்பூர லிங்கம்
251 கன்னி லிங்கம்
252 கன லிங்கம்
253 கனக லிங்கம்
254 கனி லிங்கம்
255 கஸ்தூரி லிங்கம்
256 கஜ லிங்கம்
257 கருணாகர லிங்கம்
258 காசி லிங்கம்
259 காஞ்சி லிங்கம்
260 காடக லிங்கம்
261 காத்த லிங்கம்
262 காதம்பரி லிங்கம்
263 காந்த லிங்கம்
264 காப்பு லிங்கம்
265 காம லிங்கம்
266 கார் லிங்கம்
267கார்த்திகைலிங்கம்
268 காரண லிங்கம்
269 கால லிங்கம்
270 காவி லிங்கம்
271காவிய லிங்கம்
272 காவேரி லிங்கம்
273 காளி லிங்கம்
274 காளத்தி லிங்கம்
275 காளை லிங்கம்
276 கான லிங்கம்
277கிண்கிணி லிங்கம்
278 கிரி லிங்கம்
279 கிரியை லிங்கம்
280 கிரீட லிங்கம்
281 கிருப லிங்கம்
282 கிள்ளை லிங்கம்
283 கீத லிங்கம்
284 கீர்த்தி லிங்கம்
285 கீர்த்தன லிங்கம்
286 குக லிங்கம்
287 குங்கும லிங்கம்
288 குஞ்சு லிங்கம்
289 குட லிங்கம்
290 குடுமி லிங்கம்
291 குண லிங்கம்
292 குணக்ரி லிங்கம்
293 குபேர லிங்கம்
294 குருதி லிங்கம்
295 குமர லிங்கம்
296 குமரி லிங்கம்
297 குமுத லிங்கம்
298 குல லிங்கம்
299 குழலி லிங்கம்
300 குழவி லிங்கம்
301 குழை லிங்கம்
302 குற்றால லிங்கம்
303 குன்று லிங்கம்
304 குண்டலி லிங்கம்
305 குந்த லிங்கம்
306 கும்ப லிங்கம்
307 குரவ லிங்கம்
308 குறிஞ்சி லிங்கம்
309 கூததாடி லிங்கம்
310 கூத்து லிங்கம்
311 கூர்ம லிங்கம்
312 கெஜ லிங்கம்
313 கேச லிங்கம்
314 கேசரி லிங்கம்
315 கேசவ லிங்கம்
316 கேடிலி லிங்கம்
317 கேதார் லிங்கம்
318 கேள்வி லிங்கம்
319 கைலாய லிங்கம்
320 கொங்கு லிங்கம்
321 கொடி லிங்கம்
322 கொடு லிங்கம்
323 கொளஞ்சி லிங்கம்
324 கொற்றை லிங்கம்
325 கொன்றை லிங்கம்
326 கோ லிங்கம்
327 கோகழி லிங்கம்
328 கோகுல லிங்கம்
329 கோட்டை லிங்கம்
330 கோடி லிங்கம்
331 கோண் லிங்கம்
332 கோண லிங்கம்
333 கோதண்ட லிங்கம்
334 கோதை லிங்கம்
335 கோப லிங்கம்
336 கோபி லிங்கம்
337 கோமதி லிங்கம்
338 கோல லிங்கம்
339 கௌசிக லிங்கம்
340 கௌதம லிங்கம்
341 கௌரி லிங்கம்
342 சக்தி லிங்கம்
343 சக்கர லிங்கம்
344 சகஸ்ர லிங்கம்
345 சகல லிங்கம்
346 சங்க லிங்கம்
347 சங்கம லிங்கம்
348 சங்கர லிங்கம்
349 சங்கு லிங்கம்
350 சஞ்சீவி லிங்கம்
351 சடாட்சர லிங்கம்
352 சடைமுடி லிங்கம்
353 சண்முக லிங்கம்
354 சத்திய லிங்கம்
355 சதங்கை லிங்கம்
356சதய லிங்கம்
357 சதா லிங்கம்
358 சதாசிவ லிங்கம்
359 சதுர் லிங்கம்
360 சதுர்த்தி லிங்கம்
361 சதுரங்க லிங்கம்
362 சதுரகிரி லிங்கம்
363 சந்த லிங்கம்
364 சந்திர லிங்கம்
365 சந்தன லிங்கம்
366 சந்தான லிங்கம்
367 சப்த லிங்கம்
368 சபா லிங்கம்
369 சம்பந்த லிங்கம்
370 சம்பு லிங்கம்
371 சமுத்திர லிங்கம்
372 சயன லிங்கம்
373 சர்வேஸ லிங்கம்
374 சரச லிங்கம்
375 சரீர லிங்கம்
376 சவரி லிங்கம்
377 சற்குண லிங்கம்
378 சஹான லிங்கம்
379 சற்குரு லிங்கம்
380 சாட்சி லிங்கம்
381 சாணக்ய லிங்கம்
382 சாதக லிங்கம்
383 சாதனை லிங்கம்
384 சாதி லிங்கம்
385 சாது லிங்கம்
386 சாந்த லிங்கம்
387 சாந்து லிங்கம்
388 சாம்ப லிங்கம்
389 சாமுண்டி லிங்கம்
390 சிகர லிங்கம்
391 சிகா லிங்கம்
392 சிகரி லிங்கம்
393 சிகை லிங்கம்
394 சிங்கார லிங்கம்
395 சிசு லிங்கம்
396 சித்தி லிங்கம்
397 சித்திரை லிங்கம்
398 சிந்தாமணிலிங்கம்
399 சிந்து லிங்கம்
400 சிநேக லிங்கம்
401 சிப்பி லிங்கம்
402 சிபி லிங்கம்
403 சிம்ம லிங்கம்
404 சிர லிங்கம்
405 சிரஞ்சீவி லிங்கம்
406 சிரபதி லிங்கம்
407 சிருஷ்டி லிங்கம்
408 சிலம்பு லிங்கம்
409 சிவ லிங்கம்
410 சிவகதி லிங்கம்
411 சிவாய லிங்கம்
412 சிற்பவ லிங்கம்
413 சினை லிங்கம்
414 சிஷ்ட லிங்கம்
415 சீதன லிங்கம்
416 சீதாரி லிங்கம்
417 சீமை லிங்கம்
418 சீர்மை லிங்கம்
419 சீற்ற லிங்கம்
420 சீனி லிங்கம்
421 சுக்கிர லிங்கம்
422 சுக லிங்கம்
423 சுகந்த லிங்கம்
424 சுகநிதி லிங்கம்
425 சுகுண லிங்கம்
426 சுடர் லிங்கம்
427 சுத்த லிங்கம்
428 சுதர்சண லிங்கம்
429 சுந்தர லிங்கம்
430 சுந்தரி லிங்கம்
431 சுப்பு லிங்கம்
432 சுமித்ர லிங்கம்
433 சுய லிங்கம்
434 சுயம்பு லிங்கம்
435 சுரபி லிங்கம்
436 சுருதி லிங்கம்
437 சுருளி லிங்கம்
438 சுரை லிங்கம்
439 சுவடி லிங்கம்
440 சுவடு லிங்கம்
441 சுவர்ண லிங்கம்
442 சுவாச லிங்கம்
443 சுவாதி லிங்கம்
444 சுனை லிங்கம்
445 சூட்சம லிங்கம்
446 சூர லிங்கம்
447 சூரி லிங்கம்
448 சூரிய லிங்கம்
449 சூல லிங்கம்
450 சூள்முடி லிங்கம்
451 சூளாமணி லிங்கம்
452 செக்கர் லிங்கம்
453 செங்கு லிங்கம்
454 செண்பக லிங்கம்
455 செந்தூர லிங்கம்
456 செம்ம லிங்கம்
457 செம்பாத லிங்கம்
458 செரு லிங்கம்
459 செருக்கு லிங்கம்
460 செல்வ லிங்கம்
461 செழுமை லிங்கம்
462 சேகர லிங்கம்
463 சேலிங்கம்
464 சேது லிங்கம்
465 சேர்ப்பு லிங்கம்
466 சேற்று லிங்கம்
467 சைல லிங்கம்
468 சைவ லிங்கம்
469 சொக்க லிங்கம்
470 சொப்பன லிங்கம்
471 சொர்க்க லிங்கம்
472 சொரூப லிங்கம்
473 சோம லிங்கம்
474 சோண லிங்கம்
475 சோபன லிங்கம்
476 சோலை லிங்கம்
477 சோழ லிங்கம்
478 சோழி லிங்கம்
479 சோற்று லிங்கம்
480 சௌந்தர்ய லிங்கம்
481 சௌந்தர லிங்கம்
482 ஞான லிங்கம்
483 தகழி லிங்கம்
484 தகு லிங்கம்
485 தங்க லிங்கம்
486 தச லிங்கம்
487 தட்சண லிங்கம்
488 தடாக லிங்கம்
489 தத்துவ லிங்கம்
490 தந்த லிங்கம்
491 தந்திர லிங்கம்
492 தமிழ் லிங்கம்
493 தர்பை லிங்கம்
494 தர்ம லிங்கம்
495 தருண லிங்கம்
496 தவ லிங்கம்
497 தளிர் லிங்கம்
498 தன லிங்கம்
499 தனி லிங்கம்
500 தவசி லிங்கம்
501 தாண்டக லிங்கம்
502 தாண்டவ லிங்கம்
503 தாமு லிங்கம்
504 தாய் லிங்கம்
505 தார லிங்கம்
506 தாழி லிங்கம்
507 தாழை லிங்கம்
508 தாள லிங்கம்
509 தான்ய லிங்கம்
510 தாரகை லிங்கம்
511 திக்கு லிங்கம்
512 திகம்பர லிங்கம்
513 திகழ் லிங்கம்
514 தியாக லிங்கம்
515 தியான லிங்கம்
516 திரி லிங்கம்
517 திரிபுர லிங்கம்
518 திரு லிங்கம்
519 திருமேனி லிங்கம்
520 திருவடி லிங்கம்
521 திருவாசக லிங்கம்
522 திருவாத லிங்கம்
523 திலக லிங்கம்
524 திவ்ய லிங்கம்
525 தீ லிங்கம்
526 தீட்சை லிங்கம்
527 தீர்க்க லிங்கம்
528 தீர்த்த லிங்கம்
529 தீப லிங்கம்
530 தீர லிங்கம்
531 தீர்ப்பு லிங்கம்
532 துதி லிங்கம்
533 துர்கை லிங்கம்
534 துருவ லிங்கம்
535 துலா லிங்கம்
536 துளசி லிங்கம்
537 துறவு லிங்கம்
538 தூங்கா லிங்கம்
539 தூண்டா லிங்கம்
540 தூமணி லிங்கம்
541 தூய லிங்கம்
542 தூளி லிங்கம்
543 தெங்கு லிங்கம்
544 தெய்வ லிங்கம்
545 தெரிவை லிங்கம்
546 தெளி லிங்கம்
547 தென்னவ லிங்கம்
548 தேக லிங்கம்
549 தேகனி லிங்கம்
550 தேகி லிங்கம்
551 தேச லிங்கம்
552 தேசு லிங்கம்
553 தேயு லிங்கம்
554 தேர லிங்கம்
555 தேவ லிங்கம்
556 தேவபத லிங்கம்
557 தேவாதி லிங்கம்
558 தேவு லிங்கம்
559 தேன் லிங்கம்
560 தேன்மணி லிங்கம்
561 தேன லிங்கம்
562 தேனுக லிங்கம்
563 தைரிய லிங்கம்
564 தொகை லிங்கம்
565 தொட்டி லிங்கம்
566 தொடி லிங்கம்
567 தொடைய லிங்கம்
568 தொண்டக லிங்கம்
569 தொண்டை லிங்கம்
570 தொல் லிங்கம்
571 தோகச லிங்கம்
572 தோண்டி லிங்கம்
573 தோணி லிங்கம்
574 தோத்திர லிங்கம்
575 தோரண லிங்கம்
576 தோரி லிங்கம்
577 தோழ லிங்கம்
578 தோன்ற லிங்கம்
579 தௌத லிங்கம்
580 தௌல லிங்கம்
581 நகமுக லிங்கம்
582 நகு லிங்கம்
583 நகை லிங்கம்
584 நங்கை லிங்கம்
585 நசை லிங்கம்
586 நஞ்சு லிங்கம்
587 நடன லிங்கம்
588 நடம்புரி லிங்கம்
589 நடு லிங்கம்
590 நதி லிங்கம்
591 நந்தி லிங்கம்
592 நம்பி லிங்கம்
593 நம லிங்கம்
594 நயன லிங்கம்
595 நர்மதை லிங்கம்
596 நலமிகு லிங்கம்
597 நவ லிங்கம்
598 நவமணி லிங்கம்
599 நவிர லிங்கம்
600 நற்குண லிங்கம்
601 நற்றுணை லிங்கம்
602 நறுமண லிங்கம்
603 நன்மணி லிங்கம்
604 நன்மை லிங்கம்
605 நனி லிங்கம்
606 நா லிங்கம்
607 நாக லிங்கம்
608 நாச்சி லிங்கம்
609 நாசி லிங்கம்
610 நாட லிங்கம்
611 நாடி லிங்கம்
612 நாத்திர லிங்கம்
613 நாத லிங்கம்
614 நாரண லிங்கம்
615 நாரணி லிங்கம்
616 நாரி லிங்கம்
617 நாபிச லிங்கம்
618 நாயன லிங்கம்
619 நாயாடி லிங்கம்
620 நாவ லிங்கம்
621 நாற்கர லிங்கம்
622 நான்மறை லிங்கம்
623 நான்முக லிங்கம்
624 நிகர் லிங்கம்
625 நித்தில லிங்கம்
626 நித்ய லிங்கம்
627 நிதர்சண லிங்கம்
628 நிதி லிங்கம்
629 நிபவ லிங்கம்
630 நிர்மல லிங்கம்
631 நிரஞ்சன லிங்கம்
632 நிரம்ப லிங்கம்
633 நிருதி லிங்கம்
634 நிமல லிங்கம்
635 நில லிங்கம்
636 நிலை லிங்கம்
637 நிவேத லிங்கம்
638 நிறை லிங்கம்
639 நிஜ லிங்கம்
640 நிசாக லிங்கம்
641 நீடு லிங்கம்
642 நீடுநீர் லிங்கம்
643 நீத்தவ லிங்கம்
644 நீதி லிங்கம்
645 நீர்ம லிங்கம்
646 நீரச லிங்கம்
647 நீரேறு லிங்கம்
648 நீல லிங்கம்
649 நீள்முடி லிங்கம்
650 நீறாடி லிங்கம்
651 நீறு லிங்கம்
652 நுதற் லிங்கம்
653 நுதி லிங்கம்
654 நூதன லிங்கம்
655 நெகிழ் லிங்கம்
656 நெஞ்சு லிங்கம்
657 நெட்ட லிங்கம்
658 நெடு லிங்கம்
659 நெய் லிங்கம்
660 நெற்றி லிங்கம்
661 நெறி லிங்கம்
662 நேச லிங்கம்
663 நேர் லிங்கம்
664 நைச்சி லிங்கம்
665 நைவேத்ய லிங்கம்
666 நொச்சி லிங்கம்
667 நோக்கு லிங்கம்
668 நோன்பு லிங்கம்
669 பசு லிங்கம்
670 பசுவ லிங்கம்
671 பசுபதி லிங்கம்
672 பஞ்ச லிங்கம்
673 பஞ்சாட்சர லிங்கம்
674 பட்டக லிங்கம்
675 படரி லிங்கம்
676 படிக லிங்கம்
677 பண்டார லிங்கம்
678 பண்டித லிங்கம்
679 பத்ம லிங்கம்
680 பத்ர லிங்கம்
681 பத்திர லிங்கம்
682 பதி லிங்கம்
683 பதிக லிங்கம்
684 பர்வத லிங்கம்
685 பரசு லிங்கம்
686 பரத லிங்கம்
687 பரம லிங்கம்
688 பரமாத்ம லிங்கம்
689 பரமேஸ்வர லிங்கம்
690 பரணி லிங்கம்
691 பரிதி லிங்கம்
692 பவண லிங்கம்
693 பவணி லிங்கம்
694 பவநந்தி லிங்கம்
695 பவழ லிங்கம்
696 பவாணி லிங்கம்
697 பவித்ர லிங்கம்
698 பளிங்கு லிங்கம்
699 பன்னக லிங்கம்
700 பனி லிங்கம்
701 பரகதி லிங்கம்
702 பராங்க லிங்கம்
703 பராபர லிங்கம்
704 பவநாச லிங்கம்
705 பா லிங்கம்
706 பாக்ய லிங்கம்
707 பாக லிங்கம்
708 பாச லிங்கம்
709 பாசறை லிங்கம்
710 பாசுர லிங்கம்
711 பாத லிங்கம்
712 பாதாள லிங்கம்
713 பாதி லிங்கம்
714 பாதிரி லிங்கம்
715 பார்வதி லிங்கம்
716 பாரதி லிங்கம்
717 பாராயண லிங்கம்
718 பாரி லிங்கம்
719 பாரிஜாத லிங்கம்
720 பாயிர லிங்கம்
721 பாலக லிங்கம்
723 பாலா லிங்கம்
723 பாவை லிங்கம்
724 பானு லிங்கம்
725 பாஷான லிங்கம்
726 பாகோட லிங்கம்
727 பாசுபத லிங்கம்
728 பாணிக லிங்கம்
729 பார்த்திப லிங்கம்
730 பாநேமி லிங்கம்
731 பாம்பு லிங்கம்
732 பாழி லிங்கம்
733 பிச்சி லிங்கம்
734 பிச்சை லிங்கம்
735 பிட்டு லிங்கம்
736 பிடரி லிங்கம்
737 பிடாரி லிங்கம்
738 பிடி லிங்கம்
739 பிண்ட லிங்கம்
740 பித்த லிங்கம்
741 பிதா லிங்கம்
742 பிம்ப லிங்கம்
743 பிரகதி லிங்கம்
744 பிரகாச லிங்கம்
745 பிரசன்ன லிங்கம்
746 பிரணவ லிங்கம்
747 பிரதர்சன லிங்கம்
748 பிரபாகர லிங்கம்
749 பிரபு லிங்கம்
750 பிரம்ம லிங்கம்
751 பிரம்பு லிங்கம்
752 பிரமிள லிங்கம்
753 பிராண லிங்கம்
754 பிராசித லிங்கம்
755 பிரிய லிங்கம்
756 பிரேம லிங்கம்
757 பிள்ளை லிங்கம்
758 பிழம்பு லிங்கம்
759 பிறவி லிங்கம்
760 பிறை லிங்கம்
761 பீச லிங்கம்
762 பீட லிங்கம்
763 பீடு லிங்கம்
764 பீத லிங்கம்
765 பீதகார லிங்கம்
766 பீதசார லிங்கம்
767 பீதமணி லிங்கம்
768 பீதாம்பர லிங்கம்
769 பீர லிங்கம்
770 பீம லிங்கம்
771 புகழ் லிங்கம்
772 புங்கவ லிங்கம்
773 புங்கவி லிங்கம்
774 புடக லிங்கம்
775 புண்ணிய லிங்கம்
776 புத்தி லிங்கம்
777 புத்ர லிங்கம்
778 புதிர் லிங்கம்
779 புது லிங்கம்
780 புரட்சி லிங்கம்
781 புரவு லிங்கம்
782 பராண லிங்கம்
783 புரி லிங்கம்
784 புருஷ லிங்கம்
785 புருவ லிங்கம்
786 புலரி லிங்கம்
787 புலி லிங்கம்
788 புவன லிங்கம்
789 புற்று லிங்கம்
790 புற லிங்கம்
791 புன்னை லிங்கம்
792 புனித லிங்கம்
793 புனை லிங்கம்
794 புஜங்க லிங்கம்
795 புஷ்கர லிங்கம்
796 புஷ்ப லிங்கம்
797 பூசனை லிங்கம்
798 பூத லிங்கம்
799 பூதர லிங்கம்
800 பூதி லிங்கம்
801 பூபதி லிங்கம்
802 பூபால லிங்கம்
803 பூதவணி லிங்கம்
804 பூர்ண லிங்கம்
805 பூர்த்தி லிங்கம்
806 பூர்வ லிங்கம்
807 பூரணி லிங்கம்
808 பூமித லிங்கம்
809 பூமுக லிங்கம்
810 பூவிழி லிங்கம்
811 பூலோக லிங்கம்
812 பூஜித லிங்கம்
813 பெண் லிங்கம்
814 பெண்பாக லிங்கம்
815 பெரு லிங்கம்
816 பேரின்ப லிங்கம்
817 பேழை லிங்கம்
818 பைரவி லிங்கம்
819பொன்னம்பலலிங்கம்
820 பொன்னி லிங்கம்
821 பொருந லிங்கம்
822 பொருப்பு லிங்கம்
823 பொழி லிங்கம்
824 பொய்கை லிங்கம்
825 போக லிங்கம்
826 போதக லிங்கம்
827 போதன லிங்கம்
828 போதி லிங்கம்
829 போற்றி லிங்கம்
830 போனக லிங்கம்
831 பௌதிக லிங்கம்
832பௌர்ணமி லிங்கம்
833 மகர லிங்கம்
834 மகவு லிங்கம்
835 மகா லிங்கம்
836 மகிழ லிங்கம்
837 மகுட லிங்கம்
838 மகுடி லிங்கம்
839 மகேச லிங்கம்
840 மகேஸ்வர லிங்கம்
841 மங்கள லிங்கம்
842 மஞ்சரி லிங்கம்
843 மஞ்சு லிங்கம்
844 மண லிங்கம்
845 மணி லிங்கம்
846 மதன லிங்கம்
847 மதி லிங்கம்
848 மந்தாரை லிங்கம்
849 மந்திர லிங்கம்
850 மயான லிங்கம்
851 மயூர லிங்கம்
852 மரகத லிங்கம்
853 மருக லிங்கம்
854 மருத லிங்கம்
855 மருது லிங்கம்
856 மலர் லிங்கம்
857 மழலை லிங்கம்
858 மவுலி லிங்கம்
859 மன்னாதி லிங்கம்
860 மனித லிங்கம்
861 மனோ லிங்கம்
862 மலை லிங்கம்
863 மாங்கல்ய லிங்கம்
864 மாசறு லிங்கம்
865 மாசி லிங்கம்
866 மாசிவ லிங்கம்
867 மாட்சி லிங்கம்
868 மாணிக்க லிங்கம்
869 மாதங்கி லிங்கம்
870 மாதவ லிங்கம்
871 மாதவி லிங்கம்
872 மாது லிங்கம்
873 மாதேவி லிங்கம்
874 மாமிச லிங்கம்
875 மாயை லிங்கம்
876 மாலை லிங்கம்
877 மார்க்க லிங்கம்
878 மிசை லிங்கம்
879 மிண்டை லிங்கம்
880 மீளி லிங்கம்
881 மீன லிங்கம்
882 முக்கனீ லிங்கம்
883 முக்தி லிங்கம்
884 முகுந்த லிங்கம்
885 முடி லிங்கம்
886 முத்து லிங்கம்
887 மும்மல லிங்கம்
888 முரசு லிங்கம்
889 முருக லிங்கம்
890 முல்லை லிங்கம்
891 முனி லிங்கம்
892 மூர்த்தி லிங்கம்
893 மூல லிங்கம்
894 மெய் லிங்கம்
895 மேக லிங்கம்
896 மேதினி லிங்கம்
897 மேவி லிங்கம்
898 மேனி லிங்கம்
899 மொழி லிங்கம்
900 மொட்டு லிங்கம்
901 மோட்ச லிங்கம்
902 மோன லிங்கம்
903 மோலி லிங்கம்
904 மௌன லிங்கம்
905 யதி லிங்கம்
906 யாக லிங்கம்
907 யாசக லிங்கம்
908 யாத்திரை லிங்கம்
909 யுக்தி லிங்கம்
910 யுவ லிங்கம்
911 யோக லிங்கம்
912 யோகி லிங்கம்
913 ரகசிய லிங்கம்
914 ரம்ய லிங்கம்
915 ரமண லிங்கம்
916 ரத்தின லிங்கம்
917 ரத லிங்கம்
918 ராக லிங்கம்
919 ராட்சச லிங்கம்
920 ராவண லிங்கம்
921 ராஜ லிங்கம்
922 ரிஷப லிங்கம்
923 ரிஷி லிங்கம்
924 ருத்ர லிங்கம்
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம்
927 லகரி லிங்கம்
928 லாவண்ய லிங்கம்
929 லீலா லிங்கம்
930 லோக லிங்கம்
931 வசந்த லிங்கம்
932 வஞ்சி லிங்கம்
933 வடுக லிங்கம்
934 வர்ம லிங்கம்
935 வர லிங்கம்
936 வருண லிங்கம்
937 வல்லப லிங்கம்
938 வழக்கு லிங்கம்
939 வள்ளுவ லிங்கம்
940 வளர் லிங்கம்
941 வன லிங்கம்
942 வனப்பு லிங்கம்
943 வஜ்ர லிங்கம்
944 வாகை லிங்கம்
945 வாசி லிங்கம்
946 வாணி லிங்கம்
947 வாயு லிங்கம்
948 வார்ப்பு லிங்கம்
949 வாழ்க லிங்கம்
950 வான லிங்கம்
951 வானாதி லிங்கம்
952 வார்சடை லிங்கம்
953 விக்ர லிங்கம்
954 விக்ரம லிங்கம்
955 விகட லிங்கம்
956 விகார லிங்கம்
957 விகிர்த லிங்கம்
958 வசித்ர லிங்கம்
959 விடங்க லிங்கம்
960 வித்தக லிங்கம்
961 விதி லிங்கம்
962 விது லிங்கம்
963 விந்தை லிங்கம்
964 விநாசக லிங்கம்
965 விபீஷ்ண லிங்கம்
966 விபூதி லிங்கம்
967 விமல லிங்கம்
968 வியூக லிங்கம்
969 விருட்சக லிங்கம்
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம்
972 விழி லிங்கம்
973 வினைதீர் லிங்கம்
974 வினோத லிங்கம்
975 விஜய லிங்கம்
976 விஷ்ணு லிங்கம்
977 விஸ்வ லிங்கம்
978 விஸ்வேஸ்வரலிங்கம்
979 வீர லிங்கம்
980 வீணை லிங்கம்
981 வெற்றி லிங்கம்
982 வெற்பு லிங்கம்
983 வெள்ளி லிங்கம்
984 வேங்கட லிங்கம்
985 வேங்கை லிங்கம்
986 வேட்டுவ லிங்கம்
987 வேத லிங்கம்
988 வேதாந்த லிங்கம்
989 வேம்பு லிங்கம்
990 வேழ லிங்கம்
991 வேள்வி லிங்கம்
992 வைகை லிங்கம்
993 வைர லிங்கம்
994 வைத்திய லிங்கம்
995 வைய லிங்கம்
996 ஜடா லிங்கம்
997 ஜதி லிங்கம்
998 ஜல லிங்கம்
999 ஜீவ லிங்கம்
1000 ஜெக லிங்கம்
1001 ஜெய லிங்கம்
1002 ஜென்ம லிங்கம்
1003 ஜோதி லிங்கம்
1004 ஶீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம்
1006 ஹேம லிங்கம்
1007 ஐஸ்வர்ய லிங்கம்
1008 சுப லிங்கம்

Wednesday, January 22, 2020

மருத்துவ பழமொழிகள்

1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்..நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.

3) கண்ணுக்கு நன்மை செய்யும்.. பொன்னாங்கண்ணி
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி.

4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி..
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.

5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.

6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.

7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.

8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.

9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.

10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.

11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.

12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.

13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.

14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.

15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.

16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

17) வில்வம் பித்தம் தீர்க்கும். 

18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் . 

19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.

இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... 


சிவபுராணம்

 திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

2. கீர்த்தித் திரு அகவல்
(தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா)
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏல் உடைத்தாக எழில்பெற அணித்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே

திருச்சிற்றம்பலம்

சிவபுராணம் பாடல் வரிகள் pdf free download
சிவபுராணம் திருவாசகம்
சிவபுராணம் pdf
சிவபுராணம் mp3
சிவபுராணம் பாடல் mp3 free download

சிவபுராணம் பாடல் விளக்கம்
முன்னுரை:

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.

பதிகமும் உரையும்.

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
பொருள்:
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:
1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற
திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப்
போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன.
வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, “ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்” எனப் போற்றுகின்றார்.

3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்
பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.

 

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
பொருள்:
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:
1. வேகம் கெடுத்தல் – துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்
(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து
தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.
2. பிஞ்ஞகன் – பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
(இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)
3. சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
பொருள்:
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

குறிப்பு:
1. தேசு – ஒளி (சிபிவிஷ்டாய நம: – சிவ அஷ்டோத்தரம் )

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20
பொருள்:
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

குறிப்பு:
1. “சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம்
விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,
“இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.” கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா
உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.
அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே
துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.
(அருளே துணையாக … அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – சம்பந்தர்)

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25
பொருள்:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரிய தன்மைகளை
மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

குறிப்பு:
1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும்
(சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன
என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.
2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

குறிப்பு:
1. விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

பொருள்:
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
“ஐயா !” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

குறிப்பு:
1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு – வேதம்.
2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும்
அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய
அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
பொருள்:
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

குறிப்பு:
1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர்.
உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.
2. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

குறிப்பு:
1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு,
அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.
2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.
3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது.
இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.
4. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ……
பொருள்:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !

குறிப்பு:
1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன்
திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும்
இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.

……. வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
பொருள்:
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு
மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

குறிப்பு:
1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
பொருள்:
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குறிப்பு:
1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய
இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை
ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

குறிப்பு:
1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை
காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை
புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார்.

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !

குறிப்பு:
1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில்
எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும்
உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை
ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும்
காண இயலாதவர்களாக உள்ளனர்.
(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே – திருமூலர்)

2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க
“இன்பமும் துன்பமும் இல்லானே” எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால்,
இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை.
செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

பொருள்:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

குறிப்பு:
1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல.
அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.
2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும்,
அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.
எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை
வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர்.
(ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்)

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

குறிப்பு:
1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார்,
புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத
பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும்,
பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.
2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.
(ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே – தேவாரம் )

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

குறிப்பு:
1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி – வேதம்.

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !

குறிப்பு:
1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய
பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது. அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொருள்:
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

குறிப்பு:
1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத்
தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.

திருச்சிற்றம்பலம்


போற்றித் திருஅகவல்

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
ஆடிமுதி யரியும் ஆதர வதனிற்
கதுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,
 
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்:
 
தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,
 
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
 
மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட,
கைதர வல்ல கடவுள், போற்றி!
 
ஆடக மதுரை அரசே, போற்றி!
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
 
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!
 
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
 
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
 
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
இடரைக் களையும் எந்தாய், போற்றி!
 
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
 
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி!
 
வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
 
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
 
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!
கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
 
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
 
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி!
 
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
 
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
 
தோழா, போற்றி! துணைவா, போற்றி!
வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!
 
முத்தா போற்றி! முதல்வா, போற்றி!
அத்தா, போற்றி! அரனே, போற்றி!
 
உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!
விரி கடல் உலகின் விளைவே, போற்றி!
 
அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
 
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!
 
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
வழுவு இலா ஆனந்த வாரி, போற்றி!

அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
 
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
வானகத்து அமரர் தாயே, போற்றி!
 
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
 
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
 
இடைமருது உறையும் எந்தாய், போற்றி!
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!
குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
கோகழி மேவிய கோவே, போற்றி!
ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!
 
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
 
ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
மானக் கயிலை மலையாய், போற்றி!
 
அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
இருள் கெட அருளும் இறைவா, போற்றி!
 
தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!
 
களம் கொளக் கருத அருளாய், போற்றி!
 
`அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
நஞ்சே அமுதா நயத்தாய், போற்றி!
 
அத்தா, போற்றி! ஐயா, போற்றி!
நித்தா, போற்றி! நிமலா, போற்றி!
பத்தா, போற்றி! பவனே, போற்றி!
 
பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!
அரியாய், போற்றி! அமலா, போற்றி!
 
மறையோர் கோல நெறியே, போற்றி!
முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!
 
உறவே, போற்றி! உயிரே, போற்றி!
சிறவே, போற்றி! சிவமே, போற்றி!
 
மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!
 
அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!
இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!
 
கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!
மலை நாடு உடைய மன்னே, போற்றி!
கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!
திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
 
அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!
மருவிய கருணை மலையே, போற்றி!
 
துரியமும் இறந்த சுடரே, போற்றி!
தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி

தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!
தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!
புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி!

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்;

1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

சுயம் அறிதல்

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.

கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.

‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.

கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.

சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள்.

‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’ என்றான்.

‘அப்படியா, இந்த ஆல மரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.

அப்படியே செய்தான் பக்தன்.

அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான் ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்து வலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லி விட்டுப் போனான்.

ஒரு துறவி வந்தார், ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட் படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் தர்மத்துடன், தைரியமாக செல்.
வெற்றி உனக்குத்தான்’ என்றார்.

பக்தன் தெளிவடைந்தான்

நாமும் தெளிவடைவோம்.


கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு குருவும் சீடனும் அடர்ந்தக் காட்டின் வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்...

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் பிறகு இருவரும் சூரியனை வணங்கினார்கள்..

அப்பொழுது சூரிய பகவான் அசீரிரியாக தோன்றி,
"வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக் கொண்டேன்
இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்டப்பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனைக் காப்பாற்றுங்கள்" எனக் கூறி மறைந்தான்..

குருவும் சூரியனை வணங்கி விட்டு சீடனைக் கவலையோடு பார்த்தார்..
இருவரும் சிறிது பழங்களைப் பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர்..
பின் ஊரைத் தாண்டி காடு வழியே நடந்துச் சென்றனர்..
சற்றுக் களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை...

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.
அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனைக் கொல்ல வந்தது..
இதைப் பார்த்து பதைப் பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நின்றது...

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனைக் காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் குருவிடம் பேசியது.
"வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது  தான் எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது..

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை?
சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையைச் செய்து விட்ட பலனை நிச்சயமாக பெறுவாய்." என்றுக் கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியைக் கீறினர்..

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்துப் பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்..

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்..
ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது..

குருவும் சீடனின் உயிரைக் காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலைச் சாற்றைப் பிழிந்து சீடனின் கழுத்துப் பகுதியில் பற்றுப் போட்டு விட்டு நிம்மதியோடு உறங்கச் சென்றார்..

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்..
அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டுப் பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல்,
"குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்றுக் கேட்டான்..

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும் போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்..

சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்..

இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகைப் பற்றைப் பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்றுக் கூறி பணிந்து நின்றான்..

குருவும் சீடனை ஆரத் தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்...

கதையின் நீதி :-

இந்தக் கதையில் சீடன் தான் நாம்... 

குரு தான் நம் கடவுள்... 

ராஜநாகம் தான் நம்முடைய தலைவிதி ..!

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?

1.இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு.சுவாமி விவேகானந்தரது காலத்தில் சைவம்,வைணவம்,சாக்தம் என்று பல பெயர்களில் துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு மதங்களையும்,மதப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார்.
-
2.வேதத்தின் கருத்துக்களை இன்றைய விஞ்ஞான உலகிற்கு ஏற்றாற்போல  நமக்கு வார்த்து அளித்தார்.
-
3.மக்கள்சேவையே மகேசன் சேவை. மக்களிடம் இறைவனைக்கண்டு,அவர்களுக்கு சேவை செய்வதே இறைவனுக்கு செய்யும் மேலான சேவையாகும். மக்களுக்கு சேவைசெய்ய அனைவரையும் கேட்டுக்கொண்டார்
-
4.முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு.ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர்.ஏழைகளை பாவிகள் என்று அன்றைய சமுதாயம்கூறி ஒதுக்கியது.அதை மாற்றி, நாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.ஆனால் அந்தோ அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார்.
-
5.வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கேட்கிறீர்களே,முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு நீங்கள் விடுதலை கொடுங்கள்.பிறருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்பாதவனுக்கு சுதந்திரம் பெற தகுதி இல்லை என்றார்.
இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்.
-
6.இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு,அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார்.அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.(ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை,வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)
-
7.கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து,இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார்.வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே ,தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
--
8.மேல்சாதி மக்கள் மட்டுமே படிக்கலாம் என்றிருந்த வேத கருத்துக்களை எல்லோரும் படிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
-
9.இந்தியாவை இணைக்க வேண்டுமானால் அது இந்து மதத்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இந்துமதம் வலுவாக இல்லாவிட்டால் இந்தியா வலுவிழந்து பல துண்டுகளாக உடைந்துவிடும் என்று எச்சரித்தார்.
-
10.மதம் ஒரு சிலருக்கானது அல்ல தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவரும் மதக் கல்வி பெற வேண்டும். மதத்தை ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
-
11.துறவியரை சமுதாய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய,நவீன பரிமாணத்தை அளித்தார்
-
12.அன்றாட வாழ்வில் வேதாந்தத்தை செயல்முறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் முக்திபெற முடியும் என்று கூறினார். சாதாரண கூலிகூட வேதாந்த கருத்துக்களை செயல்முறைப்படுத்தினால் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று கூறினார்.செயல்முறை வேதாந்தம் என்ற அவரது கருத்து அற்புதமானது,அனைவருக்கும் பொதுவானது
-
13.கிறிஸ்தவ மதமே உலகில் மிக உயர்ந்த மதம் என்பதை நிரூபிப்பதற்காக அமைக்கப்பட்ட சிகாகோ சர்வமத மகாசபையில் இந்துமதமே சிறந்த மதம் என்பதை நிரூபித்து கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்
-
14.ஆரியர்.திராவிடர் என்று இன ரீதியாக மக்களை பிரித்து சூழ்சியில் ஈடுபட்ட வெள்ளையர்களின் சூழ்ச்சிகளை தகர்த்து,இந்தியர்கள் இனத்தால் வேறுபட்டிருந்தாலும்,மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று கூறினார்
-
15 சுவாமி விவேகானந்தரது காலத்திற்கு பிறகே சுதந்திரப்போராட்டம் தீவிரம் அடைந்தது.அந்த காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் கையில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் இருந்தது.தனது உயிரைக்கூட துச்சமாக மத்தித்து தலைவர்கள் போராடியதற்கு பின்னால் சுவாமி விவேகானந்தரின் ஊக்கம்மிக்க கருத்துக்கள் இருந்தது.

16.சுவாமி விவேகானந்தர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும். கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.அமெரிக்க பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் மறைந்துபோனதுபோல இந்தியாவிலிருந்து இந்துக்களும்,இந்துமதமும் காணாமல் போயிருக்கும்.
-
என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?
-
மேலை நாடுகளுக்குச் சென்று,நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார்.நீங்கள் அடிமைகள்,நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை,எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம்.எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது.
-
நாங்கள் எதற்கும் உதவாதவர்கள்,எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள்.
-
இந்தியாவின் பெருமையை,அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல,இந்தியாவும் தான்.
நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா?உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா?நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா?நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா?என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.
-
சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால்,இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது.அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது.நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்.
--
இந்தியாவின் குடிசைவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும்,கிறிஸ்தவர்களின் காலடியிலும் ,அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு,நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில், அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் .அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்.
-
அதற்காக அவர் வகுத்த திட்டம்தான்,ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவது. அந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல்,ஆண்கள்,பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள்.ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும்,இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லை. கல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்.
-
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள் அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள்,அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்.அதுவும் எப்படிப்பட்ட கல்வி? அரசியல்,வரலாறு,புவியியல்,மதம்,சுயதொழில் போன்றவை.
இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்.
-
அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார். ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார்.அவர் ஆணிலும் பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார்.அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமா? என்று கேட்டார்.பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்.எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்.

எமனின் சாமர்த்தியம்

ஒருவருக்கு தேதி குறித்து விட்டால்? அந்த தேதியில் அவர் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள்!

அப்படி ஒரு சிற்பிக்கு எமன் தேதி குறித்து விட்டார்! அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரிந்து விட்டது!

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை!

எமன் ஒருமுறைதான் பாசக்கயிறை வீசுவார்! அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்!

அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிற்பி ஒரு யுக்தி செய்தார்!

தன் திறமையை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார்! 

எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்து விட்டு அதன் நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக் கொண்டு விட்டார்!

எமன் வந்தார், பார்த்தார்! சற்றே திகைத்துப் போனார்!

மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு மட்டும்தான் சிலைகள் என்பதை யூகித்துவிட்டார்!

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு நேர்த்தி!

தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே?

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது!
யோசித்தார்; ஒரு யோசனை வந்தது!

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், "அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது! என்னாலேயே எது சிலை எது மனிதன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?" இப்படி சொல்லி விட்டு மூன்று சிலைகளையும் எமன் உன்னிப்பாக கவனித்தார்!

அவர் எதிர்பார்த்தது நடந்தது!

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது!

தற்பெருமைதான், வேறென்ன? சடாரென வீசினார் கயிற்றை!

கெடுத்தது எது?

நான் என்ற தேகாபிமானத்தில் வீழ்ந்து விடுவதுதான் கொடுமை!

ஈகோ, எதிர்பார்ப்புகள், புகழுக்கு மனம் இலயித்துப் போவது தான் மனித மனதின் பலவீனம்!

கடவுள் எங்கே இருக்கிறார்

பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் மூன்று மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.

இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.

ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும், அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.

அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.

ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம் என்றார் மேஜர்.

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்,
"சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும், நாம் பூட்டை உடைக்கலாமே.." என்றார்.

இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு, 'தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா..? அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா..?' என்று குழம்பினார்.

சிறிது நேரம் கழித்து, அவர் அறிவை விட அவரின் மனம் ஜெயித்தது.

வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார். 

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.

அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாராகினார்கள்.

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம், நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல, இது ஒரு சூழல், நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க...

மேஜர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு.., தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்...

அடுத்த மூன்று மாத காலத்தில், அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றினார்கள்.

அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை... 

ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.

அதன் முதலாளியும் இருந்தார்.

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.

எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.

ஒரு வீரர் கேட்டார், தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..? என்று.

"அப்படி சொல்லாதீர்கள் தம்பி... 
கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. 
அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது. மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். 

நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. 

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது... 

கடவுளிடம் கதறி அழுதேன்...

ஐயா கனவான்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். 

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

'கடவுள் இருக்கிறார்' என்பதற்கு இதை விட நான் என்ன சொல்ல...? என்று முடித்தார் அவர்.

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.

அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.

அந்த முதியவரை தழுவிக்கொண்டு "ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்.."  இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.

யாரும் யாருக்கும் கடவுளாகலாம்...

பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்...

வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்...


பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...