Saturday, December 14, 2019

அமர்சிங் Vs ஜகாங்கீர்

பிரதாப்பின் புதல்வர் அமர்சிங் ஜகாங்கீருடன் 17 முறை போர் புரிந்தார் 
17 முறையும் மொகலாய  படைகள் துரத்தி அடிக்கப்பட்டது.
 
இறுதிப்போர்  ஒண்டாலா கோட்டைக்குமுன் நடந்தது 

இளவரசர் குர்ரத்தின் தலைமையில் பெரும்படை ஒண்டாலாவை முற்றுகை  இட்டது.

நடு இரவு  

ராஜபுத்திர பட்டத்து யானை பிளிற,
 கோட்டைக்கதவுகள் திறந்தன 

மாவீரர் ஜெயன்த்   சந்தாவத்   தலைமையில் மின்னலென வெளியே வந்த ராஜபுத்திர படைகள் மொகலாய படைகளை  துவம்சம் செய்ய  ,கூடாரங்கள் கொளுத்தப்பட, குர்ரத்தின் பாதுகாப்புப்படை அவரை இரண்டு மைல் அப்பால் தூக்கிக்கொண்டு ஓடின. 

மொகலாய படை நிலை குலைந்து பாதியாக குறைந்தது. 

வெற்றியுடன் ராஜபுத்திர படைகள் மறுபடியும் கோட்டையில்  நுழைந்தது  

இந்த வெற்றிக்கு பிறகும் அமரசிங் சமாதானத்துக்கு  ஒப்புக்கொண்டார் .ஏன் தெரியுமா?

ஜகாங்கீர் டைரி குறிப்புகளிலிருந்து அவரது சொந்த வார்த்தைகளில் :

" நான் பதவி ஏற்று எட்டாவது வ்ருடம் என் அதிருஷ்ட மகன் குர்ரம் ஒண்டாலா கோட்டையை  பிடிக்கமுடியாவிட்டாலும் அதை சுற்றியுள்ள பிரமுர்களின் மனைவியர், மகள், முதியோரை 
சிறைபிடித்து கூடுகளில் அடைத்து வைத்துவிட்டான் .
அவர்களை விடுவிக்க முடியாத நிலையில் 
வேறு வழி இல்லாமல் ராணா சமாதானத்துக்கு ஒப்புக்கொண்டு என் மகனுடன்  உடன்படிக்கை செய்துகொண்டார் "

இதே ராஜபுத்திர ஆவணங்களில்… 

சமாதானத்துக்கு செல்லுமுன் ...

" இந்த மகுடம் நான் தரித்திருப்பது எனக்காக அல்ல ...மக்களுக்காக என்ற ராணா, மகன் கருணாவின் நெற்றியில் சுக்லமிட்டு, இனி மேவாரின் கௌரவம் உன்கையில் என்று சொன்னார்.

பரிவார வங்களுடன் சென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் திரும்பும்போது பின்தங்கி கோட்டைக்கு வெளியே தந்தை கட்டிய பாழடைந்த மண்டபத்தினருகே நின்றார் .

“ என் சாம்பலை என் தந்தையுடன் சேர்த்திடுங்கள் “ என்று சொல்லி உள்ளே நுழைந்தவர் அதன்பின் வெளியே வரவே இல்லை ...சாம்பலாகும்வரை .

படித்தபின் இலேசாக கண்கள் பனித்தது 

இவரை பற்றிய ராஜபுதன தெருப்பாடலை ஆங்கில ஆசிரியர் இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் : 

Rather than be less 
Cared not to be at all

Sunday, December 8, 2019

நைக்கிதேவி VS கோரி

இன்றைய ஈரானை தாய்நாடாக கொண்ட முஹம்மத் கோரி 1173 இல் கஜினியின் முஹம்மத் நகரை  தீக்கு இரையாக்கினான். 

எதனால் முஹம்மது கோரி அவ்வாறு செய்தான் ?

முஹம்மத் கோரியின் மூதாதையர் முஹம்மத் இப்ன் சுரி கஜினி மஹ்மூத்தால் கொல்லப்பட்டான்.

அதாவது கிபி 1030 திலேயே கஜினி மஹ்மூத் இறந்து விட்டான்.

143 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கஜினி மஹ்மூத் செய்த கொலைக்காக 1173 இல் முஹம்மத் கோரி கஜினியை கொளுத்தினான் என்றால் அப்ப கோரியின் மனதிலே எத்தகைய ஒரு பழிவாங்கும் வெறி இருக்கும்.

நாடி, நரம்பு, எலும்பு, சதை, ரத்தம், புத்தி னு எல்லாத்து லயும் பழிவாங்கற உணர்வு ஊறிப்போன ஒருத்தனால தான் இப்படி செய்ய முடியும்.

கஜினியை தீயிட்டு கொளுத்திய பின்னர் அந்த நகரில் மிஞ்சிய பகுதிகளில் சிலவற்றை அவன் சீர்படுத்தி அந்த கஜினியையே அவன் தனது மையப்பகுதியாக கொண்டு பல்வேறு பகுதிகளில் முஹம்மத் கோரி தாக்குதல் நடத்தினான். அங்கிருந்து நேராக முல்டான் சென்ற கோரி. முல்டானை தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாற்றினான். அதன் பின்னர் ராஜஸ்தான் வந்த அவன் ராஜஸ்தான் பாலைவனம் வழியாக குஜராத் நோக்கி வந்தான். அங்கே அவன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் அப்பொழுது அந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்த ராஜமாதா நைக்கிதேவியின் அழகை அவன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட அதனால் அவன் தனது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தான்.

அப்பொழுது அந்த பகுதி சோலாங்கி [ Solanki ] சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாளுக்கியர்களின் வழிவந்தவர்கள் தான் சோலாங்கிகள். கிபி 940 முதல் 1244 வரை சோலாங்கி பேரரசு இந்த பகுதியை ஆட்சி செய்தது.

அப்பொழுது சோலாங்கி பேரரசின் பட்டத்து ராஜா இரண்டாம் பீம்தேவ் சிறுகுழந்தை அதனால் பீம்தேவின் அம்மா ராணி நைக்கிதேவி தான் தனது மகனின் படைக்கு தளபதியாக இருந்து ஒரு ராஜமாதாவாக சிறப்பாக அந்த பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ராணி நைக்கி தேவி யின் அழகை தனது ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட முஹம்மத் கோரி அவளை அடைவதற்கு விரும்பினான். அதனால் அவன் நைக்கி தேவிக்கு தனது தூதுவன் மூலம் ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் கோரி என்ன சொல்லி இருந்தான் என்றால்.

இதுவரை நான் படை எடுத்து சென்ற அணைத்து இடங்களிலும் எனக்கு வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது. வலிமையான பல சாம்ராஜ்யங்கள் கூட என்னால் வீழ்த்தப்பட்டு அங்கு இன்று எனது கொடி பறந்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய ராஜ்யத்தை வீழ்த்துவது எனக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால் இங்கு எனக்கு போர் புரிவதில் விருப்பம் இல்லை. அதற்கு காரணம் இப்பொழுது இந்த தேசம் ஒரு பலவீனமான பெண்ணால் ஆளப்பட்டு கொண்டிருக்கிறது என்பதால் நான் இந்த ராஜ்யத்திற்கு கருணை காட்டலாம் என்று நினைக்கிறேன். ஆனால்? நீ எனது கருணையை பெற வேண்டுமானால் என்னிடம் சரணடைய வேண்டும். எனது அடிமையாக நீ ஆகி என்னை நீ கட்டிலில் மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு நீ செய்யவில்லை என்றால் எனது வாளிற்கு நீ பதில் சொல்ல வேண்டி வரும். நீ என்னிடம் சரண் அடைகிறாயா இல்லை எனது வாளிற்கு பதில் சொல்கிறாயா?

கோரி தூது அனுப்பிய ஓலையை படித்த ராணி நைக்கி தேவி அந்த தூதுவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். நான் உனது எஜமானர் கோரியை இந்த நாளில். இன்ன தேதியில் கயாதாரா என்னும் இடத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல். அனைத்தும் உனது எஜமானர் கோரியின் விருப்பப்படியே ஆகட்டும். அதற்கு முன்பாக நான் துவாரகை கிருஷ்ணரை கொஞ்சம் வேண்டி விட்டு வருகிறேன் என்று சொல்லி நைக்கி தேவி அந்த தூதுவனை அனுப்பி வைத்தார்.

அதாவது நைக்கி தேவி இந்த கோரி போன்ற அரேபிய அடிமைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார்.

கோரியின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியாது என்று நான் சொன்னால் கோரியின் படை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் என் நாட்டில் உள்ள பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலை செய்யலாம். அதனால் யுத்தம் என்பது எனது படைக்கும், கோரி படைக்கும் மட்டும் தான் இருக்க வேண்டும். இந்த யுத்தத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த ஒரு சின்ன பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நைக்கிதேவி அம்மையார் நினைத்தார். அதன் காரணமாக தான் நைக்கி தேவி இந்த தந்திரத்தை செய்தார். அதே சமயம் நைக்கிதேவி வீரமும், துணிவும் மிக்க பெண் என்பதை முஹம்மத் கோரி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அதனால் நைக்கிதேவி உடனே சரணடைய ஒத்து கொண்டதன் பின்னால் எதோ ஒரு சதித்திட்டம் இருக்கிறது என்பதை முஹம்மத் கோரி அறிந்து கொண்டான்.

முஹம்மத் கோரி ஒரு கொடியவன் அதே சமயம் அவன் ஒன்னும் முட்டாள் அல்ல. ஒருவேளை நமது திட்டத்தை அவன் சரியாக யூகித்து இருக்கலாம். ஒருவேளை அவன் நம் திட்டத்தை சரியாக யூகித்து இருந்தால். அதனால் நாம் சிறு படையோடு அங்கே செல்வது நமக்கும் ஆபத்து, நம் தேசத்திற்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்ட நைக்கி தேவி அம்மையார் 20 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையோடு கயாதாரா என்னுமிடத்திற்கு விரைந்தார்.

முதலில் நைக்கிதேவி துவாரகை கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று முழங்கியவாறே கோவிலில் இருந்து வெளியே வந்த நைக்கிதேவி அம்மையார் குதிரை மீது பாய்ந்து அமர்ந்து வீறுகொண்டு புறப்பட்டார்.

நைக்கிதேவி ஒரு பெரிய படையோடு கயாதாரா வரும் தகவலை முஹம்மத் கோரி தனது ஒற்றர்கள் மூலம் உறுதிப்படுத்தி கொண்டான் உடனே முஹம்மத் கோரி தனது படையினர் சுமார் 50 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி கயாதாரா வில் நிற்க வைத்தான்.

குதிரை மீது அமர்ந்து ராணி நைக்கி தேவி வரும் அந்த தோரணையை தூரத்தில் இருந்து பார்த்த கோரிக்கு உடலில் லேசான ஒரு நடுக்கம் வந்தது. அதுவரை அவன் அத்தகைய ஒரு துணிவு மிக்க, வீரம்மிக்க பெண்ணை பார்த்தது இல்லை. நான் உன்னோடு கட்டிலில் படுக்க வரவில்லை உன்னை இங்கே வெட்டி வீழ்த்தவே நான் வந்தேன் என்று நைக்கிதேவி சொன்னவாறே தனது வாளினை உயர்த்த அடுத்த நொடி நைக்கிதேவி அம்மையாரின் படைக்கும், கோரியின் படைக்கும் ஆக்ரோஷமான யுத்தம் நடந்தது.

நைக்கிதேவி யின் படையில் வெறும் 20 ஆயிரம் வீரர்கள் தான். கோரியின் படையிலோ 50 ஆயிரம் அதே சமயம் நைக்கிதேவி அம்மையாரின் படையில் இருந்த ஒவ்வொரு வீரனும் கோரி படையில் இருந்த 3 வீரர்களை அடித்து கொல்லும் அளவு வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நைக்கிதேவி அன்று கயாதாரா யுத்தத்தில் சுழற்றிய அந்த வாளின் வீச்சு என்பது மிக வேகமாக ஓடும் ஒரு வண்டியின் சக்கரம் எவ்வாறு சுழலுமோ அதுபோல் நைக்கி தேவி அம்மையாரின் வாள் சுழண்டது. கோரி படையில் இருந்த பலநூறு பன்றிகளின் தலைகளையும், மார்பினையும் நைக்கிதேவி யின் வாள் பதம் பார்த்தது.

ஒரு கட்டத்தில் நைக்கிதேவி க்கும், முஹம்மத் கோரிக்கும் நேரடி யுத்தம் நடந்தது அதில் நைக்கிதேவி க்கு உடலில் சிறு காயம் உற்றாலும் முஹம்மத் கோரிக்கு மிகப்பெரிய அளவில் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

அந்த நேரம் கயாதாரா மண்ணிற்குள் மறைந்து இருந்த கோரி படையை சேர்ந்த 30 வீரர்கள் மண்ணில் இருந்து வெளியே வந்து நைக்கிதேவியை பின் பக்கமாக சூழ்ந்து தாக்குதல் நடத்த அதில் நைக்கிதேவி கீழே விழுந்தார். நைக்கிதேவி கீழே விழுவதற்கு முன்பே முஹம்மத் கோரி கீழே விழுந்து கிடந்தான்.

கோரியின் படையில் இருந்த 50 ஆயிரம் பேரில் மிஞ்சியது வெறும் 1700 த்தி சொச்சம் வீரர்கள் தான். நைக்கிதேவியின் ஆக்ரோஷ தாக்குதலில் முஹம்மத் கோரியின் படையில் இருந்த 95 சதவீதம் வீரர்கள் காலி ஆனார்கள். ஆனால் நைக்கிதேவியின் படையில் இருந்த 20 ஆயிரம் வீரர்களில் வெறும் 7 ஆயிரம் வீரர்களே இறந்தார்கள்.

அத்தகைய சூழலில் நைக்கிதேவி படையை எதிர்த்து போரிட்டாலும் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த அந்த 1700 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

போர் செய்வதற்கு இப்பொழுது இது சரியான தருணம் அல்ல. நைக்கிதேவி தாக்கியதால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நம் மன்னரை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று முஹம்மத் கோரியின் படை வீரர்கள் நினைத்தார்கள். மண்ணுக்குள் மறைந்திருந்து பின்பக்கமாக கோரி படையின் கோழை வீரர்கள் நைக்கிதேவி யை தாக்கியதால் நைக்கிதேவி பலத்த காயங்களுடன் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். அந்த சூழலில் நாம் முதலில் நமது ராணியாரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்னும் பதட்டத்தில் நைக்கிதேவி படையை சேர்ந்த வீரர்கள் இருந்தார்கள்.

ஒருபுறம் நைக்கிதேவியால் தாக்குதலுக்கு உள்ளான முஹம்மத் கோரிக்கு அன்று பஞ்சாபில் இருந்த முல்டானில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் நைக்கிதேவி க்கு குஜராத்தில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

முஹம்மத் கோரி சிகிச்சையின் மூலம் உயிர் பிழைத்தான், நைக்கிதேவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அன்று முஹம்மத் கோரியிடம் நைக்கிதேவி சரண் அடையவும் இல்லை, அவனோடு மோதி நைக்கிதேவி தோற்கவும் இல்லை. அன்று பல நாடுகளை நடுங்க வைத்து கொண்டிருந்த முஹம்மத் கோரியோடு நைக்கிதேவி அம்மையார் நேருக்கு நேர் மோதி அவனை வீழ்த்தினார். அன்று நைக்கிதேவி யின் வாள்வீச்சு வேகத்திற்கு முன்பாக முஹம்மத் கோரியால் நிற்க கூட முடியவில்லை. ஆனால் கோரியின் ஆட்களோ மண்ணுக்குள் மறைந்திருந்து திடீர் என்று வெளியே வெளிப்பட்டு நைக்கிதேவியின் முதுகில் தந்திரமாக தாக்கினார்கள்.

முஹம்மத் கோரியை முதன்முறையாக தோற்கடித்து அவனை ஓடவைத்த நைக்கிதேவி அம்மையாரை பற்றி நம்மில் எவ்வளவு பேர் முதலில் தெரிந்து வைத்திருக்கிறோம் ?

வீரப்பெண்மணி நைக்கிதேவி மாதாவின் வீரம் போற்றுவோம். 

நைக்கி தேவியின் வரலாற்றை பலர் அறியவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதை அதிகம் பகிருங்கள். 

இந்த மாதிரி நமது வீர வரலாறுகளை பாரதியர்களிடம் சென்று அடையாமல் பார்த்துக் கொண்டது கம்யூனிஸ்ட்களும் ...
காங்கிரஸ் அரசும் ...

courtesy : Chandran Muni

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...