Sunday, July 28, 2019

அருணாசலனே அண்ணாமலையே போற்றி

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அணலே நமச்சிவாயம்
அலலே நமச்சிவாயம்
கனலே நமச்சிவாயம்
காற்றே நமச்சிவாயம்

புலியின் தோலை இடையில் அணிந்த
புனிதக்கடலே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

கலியின் தீமை யாவும் நீக்கும்
கருணை கடலேப் போற்றி

ஹர ஓம் நமச்சிவாயா
ஹர ஓம் நமச்சிவாயா

புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
சீதழே ஒளியே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தவமே செய்யும் தபோவனத்தில்
ஜோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்

மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
அருணாச்சாலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
செங்கனல வண்ணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
-------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நினைத்த உடனே முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட
சன்னிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்

சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அன்னை உமைக்கு இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
ஜோதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்

சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
ஒதி நாடும் நாதா போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
வேதலிங்கமே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்

ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குளிரே நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
பனியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்
நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

திருவே நமச்சிவாயம் தெளிவே நமச்சிவாயம்
கருவே நமச்சிவாயம் கனிவே நமச்சிவாயம்

அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

பெண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்னம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஒலியே நமச்சிவாயம் உணர்வே நமச்சிவாயம்
வெளியே நமச்சிவாயம் விசையே நமச்சிவாயம்

மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஞானம் வழங்கி நர்கதி அளீக்கும்
நந்தி வாகனா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நாகம் நமச்சிவாயம் ரகசியம் நமச்சிவாயம்
யோகம் நமச்சிவாயம் யாகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்
ராக நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதிர்வும் நமச்சிவாயம் அசைவும் நமச்சிவாயம்
நிலையும் நமச்சிவாயம் நிறைவும் நமச்சிவாயம்

ரமண முனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்
ஈசமகேஷா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கோடை நமச்சிவாயம் கொண்டலும் நமச்சிவாயம்
வாடையும் நமச்சிவாயம் தென்றலும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பரணி தீபமாய தரணியில் ஒளிரும்
பரமேஷ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஹரஹர என்றால் வரமழை பொழியும்
ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சித்தியும் நமச்சிவாயம் முக்தியும் நமச்சிவாயம்
பக்தியும் நமச்சிவாயம் சக்தியும் நமச்சிவாயம்

கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்
தீபச்சுடரே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நிலவே நமச்சிவாயம் நிஜமே நமச்சிவாயம்
கலையே நமச்சிவாயம் நினைவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்
சோனாலச்சனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்
புரியும் பரமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

லிங்கம் நமச்சிவாயம் லீலை நமச்சிவாயம்
கங்கை நமச்சிவாயம் கருணை நமச்சிவாயம்

சோனை நதி தீரம் கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வானவெளிதனை கோபுரம் ஆக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

செல்வம் நமச்சிவாயம் சீரும் நமச்சிவாயம்
வில்வம் நமச்சிவாயம் வேஷம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

வேதியர் போற்றும் வென்சடை இறைவா
வேதப்பொருளே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

முதலும் நமச்சிவாயம் முடிவும் நமச்சிவாயம்
இடையும் நமச்சிவாயம் விடையும் நமச்சிவாயம்

நாகமுடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேத நடுவிலே திருநீர் அணியும்
அருனேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அம்மையும் நமச்சிவாயம் அப்பனும் நமச்சிவாயம்
நண்மையும் நமச்சிவாயம் நாதனும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

அம்மையப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதுவும் நமச்சிவாயம் இதுவும் நமச்சிவாயம்
எதுவும் நமச்சிவாயம் எதிலும் நமச்சிவாயம்

விடையாம் காளை வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேண்டிய கணமே என்னிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சூலம் நமச்சிவாயம் சுகமே நமச்சிவாயம்
நீலம் நமச்சிவாயம் நித்தியம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பௌர்னமி நாளீல் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஒஹவ்சகமாலாய் பிணிகள் தீர்க்கும்
அருணச்சலமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

தீபம் நமச்சிவாயம் திருவருள் நமச்சிவாயம்
ரூபம் நமச்சிவாயம் ருத்ரம் நமச்சிவாயம்

பனிகைலாயம் தீ வடிவாகிய
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

பனிவடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

எங்கும் நமச்சிவாயம் எல்லாம் நமச்சிவாயம்
எழிலும் நமச்சிவாயம் என்றும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

Thursday, July 18, 2019

பொடி தோசை

சென்னையிலிருந்து விடிகாலை 1:00 மணிக்கு கிளம்பிய எமிரேட்ஸ் ஃப்ளைட் அதில் நான்.. துபாய் சென்று அங்கிருந்து நியூயார்கிற்கு இன்னொரு ஃப்ளைட் சேஞ்ச் செய்து செல்லவேண்டும்.

அம்மாவின் காரியங்கள் எல்லாம் ஆயிற்று. இந்தியாவுக்கும் எனக்குமான ஒரே இழை அம்மாதான். திடீரென்று என்னவெல்லாமோ நடந்தது. அடித்துப் பிடித்து வந்து.. இந்த இருபது நாட்களில் எல்லாம் முடிந்தேவிட்டது.

போர்டிங் பாஸை செக் செய்தேன் .. மனைவிதான் எனக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தாள். அவள் போன வாரமே கிளம்பிவிட்டாள். என் பெண்களுக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ்! புக் பண்ணும்போது மீல்ஸ் Indian vegetarian meal என்று செலக்ட் செய்து இருந்தது. அதை ரசித்துச் சாப்பிடுவேனா என்று தெரியாது.. ஆனாலும் நீண்ட பயணம், எதையாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்!

ஏனோ அம்மாவின் பொடி தோசை நினைவுக்கு வந்தது. அவளிருந்தால் கையில் கட்டிக் கொடுத்திருப்பாள். எத்தனை தடவைகள் சலிக்காமல், அலுக்காமல்...

கோடை விடுமுறையில் அருகில் சொந்தக்காரர்கள் ஊருக்குச் செல்வதானாலும், ஸ்கூலில் எஸ்கர்ஷன் அது இது என்றாலும், இப்படி இந்த பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று தெரியாது.. ஆனால் நான் வெளியூர் சென்றாலே என் அம்மாவின் கைகளால் மெல்லிசாக வார்க்கப்பட்ட தோசை, அதன் மேல் சரியான அளவு தூவப்பட்ட இட்லி மிளகாய்ப் பொடி, சரியான அளவு எண்ணெய் விட்டு.. ஓரு இன்டோலியம் டிஃபன் பாக்ஸில் வைத்து என்கூடவே பயணித்து வரும் அந்த பொடித் தோசை!

அம்மாவின் பொடித்தோசையில் அம்மாவின் மணம் இருக்கும், அதைப் பிரித்தால் அம்மாவே நேரில் வந்த மாதிரி ஒரு சுகம்.

கல்லூரியில் சேர்ந்த பின்பு, அம்மாவின் பொடி தோசை இன்டோலியம் பாக்ஸிலிருந்து வாழை இலை, நியூஸ் பேப்பர் வைத்துக் கட்டிய பொட்டலமாகியது. யூஸ் அண்ட் த்ரோ! படிப்பை முடித்து, முதல் பணியிடத்தில் செல்லும் ட்ராவல்களிலும் அம்மாவின் பொடி தோசைப் பொட்டலமும் என்னுடனே சேர்ந்து பயணிக்கும். அதை எடுத்துச் செல்வதால் சாப்பாட்டுக் காசு மிச்சம்.. வீட்டுத் தோசை என்பதால்.. அதை சந்தோஷமாக கையில் எடுத்துச் செல்வேன்.

பின்னர் அடுத்த கம்பெனியில் பதவி உயர்வு கூடவே ஆபீஸ் நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை, ட்ரெயினில் வரும் விதவிதமான உணவு வகைகளால் கவரப்பட்டும் அம்மாவின் பொடி தோசையின் மீது இருந்த ஆசை குறைந்து போயிருந்தது.

ஆனாலும் அம்மா நான் எத்தனை மணிக்குக் கிளம்பினாலும், தன் பங்கிற்கு வழக்கம்போல் இரண்டு பொடி தோசைகளை வாழை இலையில் வைத்து மேலே நியூஸ் பேப்பர் சுற்றி பாந்தமாக கட்டித் தருவாள்.

சில சமயங்கள் பயணத்தின் போது சாப்பிடாமல், வீட்டில் சாப்பிடலாம் என நினைத்து மறந்து போய் எவ்வளவு தரம் அவற்றைக் குப்பையில் வீசியிருப்பேன்?

அவ்வளவு ஏன், பல சமயம் ஏர்போர்ட்டில் உள்ள ட்ராஷிலும் வீசி எறிந்திருக்கேன்.

ஃப்ளைட் துபாயில் இறங்கியது. அங்கிருந்து நெடுந்தூரம் நடந்து, கனெக்‌ஷன் டெர்மினலுக்கு வந்து, ரெஸ்ட்ரூம் சென்று, முகம் கழுவியபோது முகத்தில் தாடியும் மீசையும் வளரத் துவங்கி இருந்தது. அம்மாவுக்காக மழித்தது.. அது ஒன்றைத்தான் நான் அம்மாவிற்குக் கொடுத்தேன் போலத் தோன்றியது.

அப்படியென்றால் அவள் செய்த அனைத்திற்கும்.. சிறு விஷயம், அவள் கட்டித் தந்த பொடித் தோசைக்குக்கூட பதிலாக நான் எதுவும் செய்யவில்லையே? ஏதோ தொண்டைக்குழியில் அடைத்தது. துக்கமா? அம்மாவின் நினைவா? தெரியவில்லை!

நியூயார்க் ஃப்ளைட்டிற்கு போர்டிங் அழைப்புவர, animated-ஆக சென்று அமர்ந்தேன். அசதியும், அம்மாவின் எண்ணங்களும் என்னை அப்படியே உறக்கத்தில் தள்ளியது..

தூக்கத்தில் ஒரு கனவு, அந்தக் கனவில் நான் ஒரு வெறியோடு ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகக் கவிழ்த்து, என் அம்மாவின் பொடி தோசைப் பொட்டலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய துரோகமாக விஸ்வரூபம் எடுத்த அந்தப் பொட்டலங்கள் ஏனோ கண்ணில் படவேயில்லை.

நான் விடாமல் அந்த பொடித் தோசைகளை ஒவ்வொரு குப்பைத் தொட்டியாகத் தேடிக் கொண்டிருந்த போது.. ஒரு உயரமான ட்ராஷ் கன்டெய்னர் கண்ணில் பட்டது. அதிலும் அம்மாவின் பொடி தோசையை விட்டெறிந்திருக்கிறேன். அந்த ட்ராஷ் கன்டெய்னர் மீது ஏறி உள்ளே குதித்தபோது அதற்கு அடிப்பகுதியே இல்லாமல்.. எங்கோ கீழே பாதாளத்தில்... நான் அதில் தலைகீழாய் விழுந்து கொண்டிருந்தேன். “Excuse me.. Sir.." என்ற குரல் கேட்டு கண் விழித்தேன்.

“Your breakfast!" பணிப்பெண் கனிவான குரலுடன்..

"Oh! Thank you!" என்றேன்..

என்ன ஒரு பயங்கரமான கனவு? அம்மா என்னை மன்னிப்பாயா? தெரியாமல் செய்த தவறு.. உடல் வீக்கானதுபோல் உணர்ந்தேன். எதுவுமே சாப்பிடவில்லை என்பது புரிந்தது..

எதிரே இருந்த Breakfast.. தட்டை பிரித்தால் உள்ளே சிரித்தது பொடி தோசை வித் மசாலா! நான் என் நிலை மறந்து கேவி கேவி அழ ஆரம்பித்தேன்!

Monday, July 15, 2019

கவிஞர் கண்ணதாசனின் தத்துவ வரிகள்!

ஆறு மனமே ஆறு;
அந்த ஆண்டவன் கட்டளை     ஆறு:
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு,
தெய்வத்தின் கட்டளை ஆறு.

1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி;
(பேச்சு மாறாமல் ஒன்றையே பேசுபவர், அந்த பேச்சின்படி நடப்பவர் உள்ளத்தில் எப்பொழுதும் அமைதி நிறைந்திருக்கும்.)

2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி.
(இன்பமாக இருக்க வேண்டிய சமயத்தில் துன்பம் நேரிடுவதும்,
துன்பம் ஏற்பட்ட சமயத்தில் அந்த இடற் களைந்து இன்பம் ஏற்படுவதும் இறைவன் வகுத்த நியதி.)

சொல்லுக்கு செய்கை பொன்னாகும்;
வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்.
(சொன்னச் சொல் மாறாமல் சொல்லின்படியே செய்கையும் கடைப்பிடிப்பது பொன் போன்றதாகும்.
அவ்வாறு இருந்தால், வந்தடையும் இன்பத்தில் துன்பம் மறைந்துப் போய்விடும்.)

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்.

3. உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்;
(உண்மை பேசி நல்லவைகளை செய்தால் இந்த உலகத்தார் உனக்கு மதிப்பளிப்பார்கள்.)

4. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
(உயர்ந்த நிலையை அடையும் போது அகந்தை இல்லாமல் எவரிடத்திலும் பணிவுடன் நடந்து கொண்டால் மற்ற உயிரினங்கள் கூட உன்னை வணங்கும்.)

உண்மை என்பது அன்பாகும்;
பெரும் பணிவு என்பது பண்பாகும்.
(உண்மை என்பது கள்ளமில்லாத அன்பிலிருந்து பிறக்கக் கூடியது. பணிவு என்பது அன்பிலிருந்து பிறக்கும் பண்பு ஆகும்.)

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

5.  ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்;
(பேராசை, கடுங்கோபம், களவு இந்த மூன்று குணங்களும் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் ஆவான்.)

6.  அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்.
(அன்புடைமை, நன்றியுடைமை, கருணையுடைமை என்ற மூன்று குணங்களும் கொண்டவன் மனித உருவில் வாழும் தெய்வம் ஆவான்.)

இதில் மிருகம் என்பது கள்ள மனம்;
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்.
(இதில், கள்ள மனம் கொண்டவன் மிருக குணம் உடையவனாவான்.
குழந்தை மனம் கொண்டவன் உயர்ந்த தெய்வ குணம் உடையவனாவான்.)

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.

Saturday, July 13, 2019

My Dear Sin- சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

.... *அன்புடன் வாழுங்கள்!*

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...