Showing posts with label நீதிகதை. Show all posts
Showing posts with label நீதிகதை. Show all posts

Monday, May 24, 2021

சிந்தனை செய் மனமே

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.

அற்புதமான ஒரு நிகழ்வு இது.

ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""

நம்பிக்கையுட்டும் உற்சாகம்

ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது.  பல போர்களில்,போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும்.எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது .  நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை.  எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது.

     ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது.ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது .  அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.  யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.  யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.  ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை.

  கவுதம புத்தர் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தார்.  கவுதம  புத்தர் முதலில் சம்பவ இடத்தைப் பரிசோதித்தார், பின்னர் ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார். 

     
        சேற்றில் சிக்கிய யானை, முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள். போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது.

                
            முதலில் யானை மெதுவாக எழுந்து நின்று,பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கவுதம புத்தர் செயலிலிருந்து நாம் அறிந்து  கொள்ள வேண்டியது :

 யானையின் உடல் பலம் குறைந்து விட இல்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது.

மேலும் மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.மேலும் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது  

  இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், உற்சாகப்படுத்தும் படியும் பேச வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்(போர் முரசு கொட்டுவது போல் )

             வரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும்  நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பெற்று வாழ்க்கையை கொண்டாடுவோம்  !!

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்

“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். 

இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.

இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை. 

அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. 

ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.அப்போது குரு அவனுக்குச் சொன்ன 

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...