Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts

Wednesday, April 29, 2020

மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் -காந்தியடிகள்

நான்காம் வகுப்பு படிக்கு காலத்திலிருந்து சமையவகுப்பு போன்ற செயல்பாடுகளினால் இந்து இயக்கங்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருந்தது அவர்கள் எப்போதுமே நமது சமையத்தைபற்றியும் நாட்டைபற்றியும் மட்டுமே பேசுவார்கள் பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்  

பிற மதங்களை பற்றி விமர்சித்து ஒருமுறைகூட பிரசங்கம் செய்ததே இல்லை பின்னாட்களில் நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் அதை எழுதியவர் இந்தியாவின் மிகபெரிய ஆளுமைகளுள் ஒருவர் ஒரு அத்தியாயத்தில் கிருத்தவமதத்தினரின் இயல்பு குறித்து அவர் எழுதியதை படித்து ஆச்சரியம் அடைந்தேன் அவர் பின்வருமாறு எழுதுகிறார் 

அச்சமயம் கிரிஸ்தவ மதம் மாத்திரமே இதற்கு ஒரு விதிவிலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது அதற்கு ஒரு காரணமும் உண்டுஅக்காலங்களில் கிருஸ்தவ பாதிரிமார்கள் உயர்நிலைபள்ளிக்கு அருகில் தெருதிருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள்.இதை என்னால் சகிக்க முடிவதில்லை.அவர்கள் சொல்லுவதை கேட்க்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன்.இந்தபரீட்சை இனி வேண்டாம் என்றுநான் தீர்மானித்துவிட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று ஏறகுறைய அதே சமையத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிருஸ்தவத்திற்கு மதம் மாற்றபெற்றார் என அறிந்தேன்அவர் ஞானஸ்தானம் செய்விக்கபெற்றபோது மாட்டிறச்சி தின்று மதுபானம் குடிக்க வேண்டி இருந்தது என்றும் தமது உடையையும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் போக ஆரம்பித்தாராம் இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின மாட்டிறச்சி தின்னவேண்டும் என்றும் குடிக்கவேண்டும் என்றும் தமது சொந்த உடையை மாற்றிக்கொண்டுவிட வேண்டும் என்றும் ஒருவரை கட்டாயப்படுத்தும் ஒரு மதம்,மதம் எனும் பெயருக்கே நிச்சயம் அருகதையில்லாதது என்று நான் எண்ணினேன். புதிதாக மதம்மாறியவர் தமது மூதாதையரின் மதத்தையும் பழக்கவழக்கங்களையும் நாட்டையும் தூஷித்து பேசவும் தலைபட்டுவிட்டார் என்றும் கேள்விபட்டேன் இவைகளெல்லாம் கிருஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின 

மகாத்மா காந்தி
சத்தியசோதனை பக்கம் 39

இதைபடித்த பிறகுதான் நான் என்னை சுற்றி இருந்த கிருத்தவர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன் நம் நாட்டைபற்றி உயர்வாக பேசினால் அவர்கள் மனசமநிலையை இழந்து எதிர்வாதம் செய்யக்கூடியவர்களாக இருந்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை
காந்தியடிகள் எழுதி இருப்பது உண்மைதான் என்பதை அறிந்து வியந்தேன்  

மதமாற்றம் நிச்சயம் ஒரு தேசிய அபாயம் மதமாறுகிறவர்கள் வெறுமனே தெய்வத்தைமட்டும் மாற்றிக்கொள்வதில்லை அவர்கள் தேசத்தையே மாற்றிக்கொள்கிறார்கள் 

மதம் மாறுவதால் இந்த நாட்டிற்கு ஒரு எதிரி உருவாகிறான் எனும் சுவாமி விவேகானந்தரின் கூற்று தெய்வவாக்கன்றி வேறென்ன

Monday, April 27, 2020

கம்ப ராமாயணத்தில் வானூர்தி.....

1000 ஆண்டுகளுக்கு முன்னரே, வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்ப ராமாயணத்தில் குறித்து இருக்கிறார்.
இது உண்மையில் வியப்பான ஒன்று தான். ஏனென்றால் ஆரம்பத்தில் மேலை நாடுகளில் வானூர்திகள் உருவாக்கப்பட்ட போது, அதை எப்படி பறக்க வைப்பது என்று தெரியாமல் நிறைய பேர் மாண்டு போனர். சிலர், மலைகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதித்து பறக்க வைக்க முயன்றனர்.
ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் குறித்திருக்கிறார்.
"மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கிஎண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.”
இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள்தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.
ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது. எவ்வளவு துல்லியமாக விளக்கி இருக்கிறார் என்று பாருங்கள்.
வானூர்திகள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீர்ப்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.
வானூர்தி பறப்பதை நேரில் கண்டாரா? இல்லை! அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? அப்படியென்றால்,தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் வானூர்திகளை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா!?
அறிவியலும் ஆன்மீகமும் கலன்ந்தது தான் இந்து தருமம்...!

Wednesday, January 22, 2020

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?

1.இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு.சுவாமி விவேகானந்தரது காலத்தில் சைவம்,வைணவம்,சாக்தம் என்று பல பெயர்களில் துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு மதங்களையும்,மதப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார்.
-
2.வேதத்தின் கருத்துக்களை இன்றைய விஞ்ஞான உலகிற்கு ஏற்றாற்போல  நமக்கு வார்த்து அளித்தார்.
-
3.மக்கள்சேவையே மகேசன் சேவை. மக்களிடம் இறைவனைக்கண்டு,அவர்களுக்கு சேவை செய்வதே இறைவனுக்கு செய்யும் மேலான சேவையாகும். மக்களுக்கு சேவைசெய்ய அனைவரையும் கேட்டுக்கொண்டார்
-
4.முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு.ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர்.ஏழைகளை பாவிகள் என்று அன்றைய சமுதாயம்கூறி ஒதுக்கியது.அதை மாற்றி, நாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.ஆனால் அந்தோ அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார்.
-
5.வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கேட்கிறீர்களே,முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு நீங்கள் விடுதலை கொடுங்கள்.பிறருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்பாதவனுக்கு சுதந்திரம் பெற தகுதி இல்லை என்றார்.
இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள் தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்.
-
6.இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு,அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார்.அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.(ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை,வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)
-
7.கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து,இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார்.வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே ,தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
--
8.மேல்சாதி மக்கள் மட்டுமே படிக்கலாம் என்றிருந்த வேத கருத்துக்களை எல்லோரும் படிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
-
9.இந்தியாவை இணைக்க வேண்டுமானால் அது இந்து மதத்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இந்துமதம் வலுவாக இல்லாவிட்டால் இந்தியா வலுவிழந்து பல துண்டுகளாக உடைந்துவிடும் என்று எச்சரித்தார்.
-
10.மதம் ஒரு சிலருக்கானது அல்ல தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவரும் மதக் கல்வி பெற வேண்டும். மதத்தை ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
-
11.துறவியரை சமுதாய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய,நவீன பரிமாணத்தை அளித்தார்
-
12.அன்றாட வாழ்வில் வேதாந்தத்தை செயல்முறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் முக்திபெற முடியும் என்று கூறினார். சாதாரண கூலிகூட வேதாந்த கருத்துக்களை செயல்முறைப்படுத்தினால் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று கூறினார்.செயல்முறை வேதாந்தம் என்ற அவரது கருத்து அற்புதமானது,அனைவருக்கும் பொதுவானது
-
13.கிறிஸ்தவ மதமே உலகில் மிக உயர்ந்த மதம் என்பதை நிரூபிப்பதற்காக அமைக்கப்பட்ட சிகாகோ சர்வமத மகாசபையில் இந்துமதமே சிறந்த மதம் என்பதை நிரூபித்து கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்
-
14.ஆரியர்.திராவிடர் என்று இன ரீதியாக மக்களை பிரித்து சூழ்சியில் ஈடுபட்ட வெள்ளையர்களின் சூழ்ச்சிகளை தகர்த்து,இந்தியர்கள் இனத்தால் வேறுபட்டிருந்தாலும்,மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று கூறினார்
-
15 சுவாமி விவேகானந்தரது காலத்திற்கு பிறகே சுதந்திரப்போராட்டம் தீவிரம் அடைந்தது.அந்த காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் கையில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் இருந்தது.தனது உயிரைக்கூட துச்சமாக மத்தித்து தலைவர்கள் போராடியதற்கு பின்னால் சுவாமி விவேகானந்தரின் ஊக்கம்மிக்க கருத்துக்கள் இருந்தது.

16.சுவாமி விவேகானந்தர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும். கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.அமெரிக்க பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் மறைந்துபோனதுபோல இந்தியாவிலிருந்து இந்துக்களும்,இந்துமதமும் காணாமல் போயிருக்கும்.
-
என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?
-
மேலை நாடுகளுக்குச் சென்று,நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார்.நீங்கள் அடிமைகள்,நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை,எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம்.எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது.
-
நாங்கள் எதற்கும் உதவாதவர்கள்,எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள்.
-
இந்தியாவின் பெருமையை,அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல,இந்தியாவும் தான்.
நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா?உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா?நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா?நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா?என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.
-
சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால்,இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது.அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது.நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்.
--
இந்தியாவின் குடிசைவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும்,கிறிஸ்தவர்களின் காலடியிலும் ,அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு,நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில், அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் .அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார்.
-
அதற்காக அவர் வகுத்த திட்டம்தான்,ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவது. அந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல்,ஆண்கள்,பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள்.ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும்,இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்.ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லை. கல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்.
-
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள் அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள்,அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்.அதுவும் எப்படிப்பட்ட கல்வி? அரசியல்,வரலாறு,புவியியல்,மதம்,சுயதொழில் போன்றவை.
இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்.
-
அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார். ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார்.அவர் ஆணிலும் பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார்.அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமா? என்று கேட்டார்.பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்.எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்.

Saturday, August 10, 2019

கஷ்மீர் ஹிந்துக்களின் உயிர்நாடி

காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது. வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்தறியாத இரண்டாம்தர, மூட, சினிமா நடிகன் போடுகிற கேவலமான ட்வீட்டுகளைப் படிக்கையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என வெளியில் சொல்லக்கூட உண்மையில் வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் அறியாமையே அவர்களை அழித்தது. அழித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அழியும்.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி....) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்”  எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

காஷ்மீரின் மீதான இஸ்லாமியப்படையெடுப்புகள் பொதுயுகம் 750-ஆம் வருடத்திலிருந்தே துவங்கிவிட்டன. இஸ்லாமிய காலிஃப்பான அல்-மன்சூர், ஹசம்-பின்-அம்ரூ என்பவனை காஷ்மீரின் மீது படையெடுக்க அனுப்பினான்.  அதுவே காஷ்மீர் மீதான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு.  அந்த முதல் படையெடுப்பில் “காஷ்மீர் ஹிந்து அரசனை அடக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை சிறைக் கைதிகளாகவும்,அடிமைகளாகவும்” பிடித்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறான் அம்ரூ.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கூட்டம் கூட்டமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு எழுத இடமில்லை (இதனைக் குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், தமிழ்ஹிந்து.காமில்).

முகலாய அரசர்களின் காலத்தில் காஷ்மீரத்தில் கட்டாய மதமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டன. அதிலும் அவரங்ஸிப்பின் காலத்தில் மதமாற்றம் உச்சத்திற்குச் சென்றது. காஷ்மீர் முழுமையான இஸ்லாமியப் பகுதியாக மாறியதும் அப்போதுதான். இந்தத் துயரைத் தாங்க இயலாத காஷ்மீரி பண்டிட்டுகள் சீக்கிய குருவான தேஜ்பகதூரிடம் சென்று முறையிட்டார்கள். ஹிந்துக்களின் மீதான இந்தக் கொடுமைகளை எதிர்த்தால் கோபமடைந்த அவ்ரங்ஸிப் சீக்கிய மதகுருவான குரு தேஜ்பகதூரையும் அவரது பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்ற வரலாறு இருக்கிறது.

காஷ்மீரத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு மிக ஆழமானது. ஆதிசங்கரரின் காலடிபட்ட மண் அது. சங்கரர் தனது சவுந்தர்யலஹரியை இயற்றிய இடமும் காஷ்மீரம்தான். ஸ்ரீநகருக்கு அவர் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கட்டப்பட்ட ஆலயம் இருக்கும் இடம் இன்றைக்கும் சங்கராச்சார்யா மலை (சங்கராச்சார்யா ஹில்) என்றே அழைக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அவரது காலடிபட்ட இன்னொரு இடமான சாரதா வித்யாபீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ஆம் வருடம் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தானிகள் அங்கிருந்து பல ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் சீக்கியப் பெண்களைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்களில் பலர் முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜீலம் சந்தையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள். தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

பாகிஸ்தானின் நோக்கம் வெறுமனே இந்தியாவைப் பிடிப்பது மட்டுமில்லை என்பதினை நீங்கள் உணரவேண்டும். அவர்களின் நோக்கம் “கஸ்வா-எ-ஹிந்த்” என்பதினை உணராத இந்தியன், தமிழன் வேசிமகன்களான சில்லறை சினிமா நடிகனுக்குச் சமமானவன். “காஃபிர்களின் மீதான இறுதிப் போர் ஹிந்துஸ்தானத்தில் நடக்கும். அதில் வெல்லப்போகிற முஸ்லிம்களை வானத்திலிருந்து அல்லா இறங்கி வந்து வரவேற்று ஜன்னத்திற்கு அழைத்துப் போவார்” என்கிற மாதிரியானதொரு ஹதீசை முகமது நபி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதுவே கஸ்வா-எ-ஹிந்த்! காஃபிர் ஹிந்துக்களுக்கு எதிரான புனிதப்போர்!

இதை எத்தனை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறான். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், ஜெனரல்களும் பூரணமாக அதனை நம்புகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பாகிஸ்தானை முன்னேற்ற எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால் இந்தியாவை வென்றால் எல்லா ஹிந்து காஃபிரையும் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் சொத்துக்களை அபகரித்து சுகவாழ்வு வாழலாம். கணக்கற்ற காஃபிரி ஹிந்துப் பெண்களுடன் காம சுகம் கொள்ளலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கலாம். என்ன செய்ய? உண்மையை நம்பச் செய்வதுதான் இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது.

இப்படி அல்லாவின் ஆணைப்படி காஷ்மிரைப் பிடித்து, அதன்பிறகு கஸ்வா-எ-ஹிந்த் புனிதப் போர் செய்து இந்தியாவைக் கொள்ளையடித்து சுகவாழ்வு என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானியர்களின் கனவை மோடியும், அமித்ஷாவும் தகர்த்து எறிந்தால் பாகிஸ்தானியன் என்ன செய்வான்? அல்லா தங்களை இப்படி அம்போவெனக் கைவிடுவான் என்று எதிர்பார்க்காததால் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறியாமையில் உழலுகிற சில்லறை சினிமா நடிகனுக்காக இதனை நான் எழுதவில்லை. “உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நீ உணர்ந்து கொள்” என எச்சரிக்கவே இது எழுதப்பட்டிருக்கிறது.

நன்றி திரு. Narenthiran PS

ஆர்.எஸ்.எஸ் பார்வையில் காந்திஜி


ஒரு நாளிதழின் ஆசிரியர். அவர் சங்க ஸ்வயம்சேவகரும் கூட. காந்தியவாதி ஒருவர் எழுதிய கட்டுரை தனது நாளிதழில் வெளியிடப்படுவதாகச் சொன்னார். அந்த காந்திய சிந்தனையாளரிடம் கட்டுரை குறித்து பேச்செடுத்தபோது அவர் சொன்னாராம். சங்கத்திற்கும் காந்திஜிக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்று எனக்குத் தெரியும் ஆனால் உங்களுக்குத் தெரிந்திருக்காத சில அம்சங்களை நான் தொட்டுக்காட்டப்போகிறேன் என்று! சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உறவு எப்படி இருந்தது என்று! அந்த சிந்தனையாளருக்கு உண்மையிலேயே தெரியுமா என்று நான் கேட்டேன். ஒன்றுமே தெரியாமல் ஆராய்ந்தும் பார்க்காமல் சிலர் கற்பனைக்கோட்டைகளை கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். தங்களை அறிஞர்கள், படிப்பாளிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் நுனிப்புல் மேய்ந்துவிட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட புத்தகத்தின் ஆதாரத்தில் தங்கள் ‘மேதைமை’  நிறைந்த சிந்தனைகளை வெளியிடுகிறார்கள். விஷயம் என்னவென்றால் இந்த சிந்தனைகளுக்கும் உண்மைக்கும் தொடர்பே கிடையாது.

காந்திஜியின் சில கருத்துக்கள் குறித்து கடும் ஆட்சேபம் இருந்தாலும் சங்கத்துடன் அவரது தொடர்பு எப்படி இருந்தது என்பதை, கிடைக்கின்ற தகவலை ஆய்ந்து பார்க்கவேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மக்கள் ஆதரவுதளத்தை விஸ்தரிக்கும் நல்ல எண்ணத்துடன் அவர் மதவெறி பிடித்த ஜிகாதி மனப்பான்மையுள்ள முஸ்லிம் குழுக்களிடம் சரணாகதியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் சாமானிய மக்களை சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக ராட்டை, கதர் போன்ற எளிமையான உத்திகளையும் சத்தியாகிரகம் போன்ற சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அவரது வழிமுறையையும் வைத்துப் பார்த்தால் அவரது மேன்மை புலப்படும். கிராம சுயாட்சி, சுதேசி, பசுப்பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று அவர் வற்புறுத்திய விஷயங்களால் பாரதத்தின் அடிப்படையான ஹிந்து சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பண்புகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட அவர் வாழ்க்கை, எத்தனையோ இளைஞர்களையும் யுவதிகளையும் வாழ்நாள் முழுதும் விரதம் ஏற்றவர்களாக உருவாக்கி சமூகசேவையில் ஈடுபட ஊக்கம் கொடுத்தது.

ஒத்துழையாமை இயக்கத்திலும் (1921) சட்டமறுப்பு இயக்கத்திலும் (1930) டாக்டர் ஹெட்கேவார் பங்குகொண்டார். அதனால் அவருக்கு 1921 ஆகஸ்டு 19 முதல் 1922 ஜூலை 12 வரை ஒருமுறையும் 1930 ஜூலை 21 முதல் 1931 பிப்ரவரி 14 வரை இன்னொருமுறையும் ஆக இரண்டுமுறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1922 மார்ச் 18 அன்று மகாத்மா காந்திக்கு ஆறு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதிருந்து அவர் விடுதலை ஆகும் வரை ஒவ்வொரு மாதத்தின் 18ம் தேதியும் ‘காந்தி தினம்’ என அனுசரிக்கப்பட்டு வந்தது. 1922 அக்டோபர் மாதத்தில் வந்த காந்தி தினத்தன்று டாக்டர் ஹெட்கேவார் நிகழ்த்திய சொற்பொழிவில் பின்வருமாறு கூறினார்: ‘‘இன்றைய தினம் மிகப்புனிதமான நாள். மகாத்மாஜி போன்ற மாமனிதரின் வாழ்க்கையில் நிறைந்துள்ள நற்பண்புகளை பற்றி சொல்லி கேட்டு சிந்தனை செய்ய வேண்டிய நாள் இது.

‘‘அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறவர்களுக்கு அவரது இந்த பண்புகளை வாழ்வில் கடைபிடைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது.’’

காந்திஜி 1934ல் வர்தா நகரில் ஜம்னாலால் பஜாஜ் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதற்குப் பக்கத்திலேயே சங்கத்தின் பனிகால முகாம் நடந்துகொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, காந்திஜி அங்கு சென்றபோது சங்க பொறுப்பாளர்கள் அவரை வரவேற்றார்கள் காந்திஜி ஸ்வயம்சேவகர்களுடன் உரையாடவும் செய்தார். உரையாடும்போது பட்டியல் சமூக ஸ்வயம்சேவகர்களும் முகாமில் இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் எந்த விதத்திலும் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதில்லை, அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன், நட்புடன், ஒன்றிப் பழகுவதையும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதையும் பார்த்துதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொன்னார்.

1947 ஆகஸ்டு 15 அன்று சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு டெல்லியில் துப்புரவுத்தொழிலாளர்கள் வசிக்கும் காலனியில் காந்திஜி தங்கியிருந்தார். அதன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் சங்கத்தின் பிரபாத் ஷாகா (காலை நேர கிளை) நடைபெற்றுக்கொண்டிருந்தது. செப்டம்பர்  மாதத்தில் மூத்த ஸ்வயம்சேவகர்களுடன் கலந்துரையாட விரும்பினார். கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்பிறகு பேசுகையில் ‘‘பல ஆண்டுகளுக்கு முன் வர்தா நகரில் நான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரு முகாமிற்குப் போயிருந்தேன். அந்த சமயம் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீ ஹேட்கேவார் உயிருடன் இருந்தார். காலஞ்சென்ற ஜம்னாலால் பஜாஜ் என்னை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றார். ஸ்வயம்சேவகர்களின் கடுமையான கட்டுப்பாடு, எளிமையான வாழ்க்கை, தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்ட சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து மிகுந்த மனநிறைவு அடைந்தது.  அதன்பிறகு சங்கம் மிகவும் வளர்ந்துவிட்டது. தொண்டு, தியாகம் இவற்றால் ஊக்குவிக்கப்பட்டு இயங்குகின்ற எந்தவொரு இயக்கமும் வலிமையோடு வளர்ந்தோங்கும் என்பதுதான் எப்போதும் எனது அபிப்ராயம். ஆனால் உண்மையிலேயே பயனுள்ளதாக விளங்குவதற்கு தியாக உணர்வுடன் கூடவே தூய லட்சியம் உண்மையான ஞானம் இவையும் சேர்வது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம் சமுதாயத்தில் நாசம் எற்படுத்திவிடுகிறது.’’ இந்தச் சொற்பொழிவு காந்திஜி நூல் தொகுதி 89ல் 215, 217 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.

1948 ஜனவரி ௩௦ அன்று அப்போதைய சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அவருக்கு காந்திஜியின் மரணச்செய்தி கிடைத்தது. உடனே அவர் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் படேல், காந்திஜியின் மைந்தர் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு தந்திமூலம் தனது இரங்கல் தெரிவித்தார். ‘‘குரூரமான தாக்குதலின் விளைவாக ஒரு மகானின் துயரம் தரும் மரணச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இன்றைய கடினமான சூழ்நிலையில் இதனால் தேசத்திற்கு எல்லையில்லாத இழப்பு நேர்ந்துள்ளது. ஈடு இணையற்ற இயக்க கட்டமைப்பாளரான ஒருவரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் கடினமான பணி நம்முன் வந்துள்ளது. அதை நிறைவேற்றும் ஆற்றலை கடவுள் நமக்கு அருளட்டும்’’ என்று அந்த இரங்கல் செய்தியில் குருஜி கூறியிருந்தார். காந்திஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 13 நாட்கள் சங்கத்தின் தினசரி பணியை நிறுத்திவைக்கும்படி நாடுமுழுவதிலும் ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும் குறிப்பும் அனுப்பினார். 1948 ஜனவரி 31 அன்று, அதாவது மறுநாளே, பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஸ்ரீகுருஜி விரிவான கடிதங்கள் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டார்: ‘‘யாரோ ஒருவர் சற்றும் சிந்திக்காமல் மனம் தடுமாறி வணக்கத்திற்குரிய மகாத்மாஜியை சுட்டதில் அந்த மாமனிதர் திடீரென அகால மரணம் அடைந்தார். இந்த இழிசெயல் குறித்த பயங்கர செய்தி நேற்று சென்னையிலிருந்தபோது எனக்கு கிடைத்தது. உலகோர் கண்முன் நமது சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கண்டனத்திற்குரிய செயல் இது’’.

இந்த விவரங்களெல்லாம் ‘ஜஸ்டிஸ் ஆன் டிரையல்’ (Justice On Trial) நூலிலும் ஸ்ரீ குருஜி குறித்த நூல்தொகுப்
பிலும் பதிவாகியுள்ளன.

காந்திஜியின் நூற்றாண்டு 1969ல் வந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் காந்திஜியின் திருவுருவச் சிலையை ஸ்ரீ குருஜி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறினார்: “நாம் இங்கு இன்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சௌராஷ்டிரப் பகுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் எத்தனையோ ஆண் குழந்தைகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை நாம் கொண்டாடுவதில்லை. மகாத்மா காந்தியின் பிறப்பு சாமானியர் பிறப்பு போலத்தான் அமைந்திருந்தது. ஆனால் அவர் தனது பணியால், உள்ளார்ந்த அன்பினால் மாமனிதராக உயர்ந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை நம்முன் உள்ளது நாம் அதைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அதிகமதிகமாக அவரது வாழ்க்கையை பின்பற்ற முடிகிறதோ அந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும்.’’

“லோகமான்ய திலகருக்குப் பிறகு மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டார். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவர் உள்ளத்திலும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தினார். தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ய வேண்டும், நம்மை நாமே ஆண்டுகொள்ள வேண்டும், அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ அதை நாம் கொடுத்தாக வேண்டும் என்றார். மகாத்மா காந்தி மண்ணைத் தொட்டால் அது பொன் ஆனது. சாதாரண மக்கள் மனதில் அசாதாரணமான உணர்ச்சி பொங்கச் செய்தார். அவர் உருவாக்கிய இந்த சூழ்நிலை காரணமாக ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.”

“நான் தீவிர ஹிந்து, எனவே மனிதர்கள் மீது மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தின் மீதும் நான் அன்பு செலுத்த முடிகிறது” என்று அவர் கூறுவார். அவரது வாழ்க்கையிலும் அரசியலிலும் சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் கிடைத்த முக்கியத்துவம் அந்த தீவிர ஹிந்துத்துவம் காரணமாகத்தான்.”

“எந்த ஹிந்து தர்மம் பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமோ அந்த ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் குறித்து காந்திஜி ‘பியூச்சர் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற தலைப்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் எழுதுகிறார்: ‘ஹிந்து தர்மம் என்பது சத்தியத்தை நாடி இடைநில்லாமல் திட்டவட்டமாக முன்னேறுவதற்கான பாதை. இன்று ஹிந்து சமயம் தளர்ந்து போனது போலத் தெரிகிறது. முன்னேறிச்செல்லும் ஊக்கம் தென்படவில்லை. நாம் களைத்து விட்டோம், ஆனால் நமது சமயம் களைத்துப் போய்விடவில்லை. நமது இந்த தளர்ச்சி நம்மை விட்டுப் போகின்ற கணமே ஹிந்து தர்மம் முன்னெப்போதும் கண்டிராத விதத்தில், அதிரடியாக, பிரம்மாண்டமான அளவில் செல்வாக்குடன் ஒளிவீசி உலகத்தில் எழுச்சி பெறும்’. காந்திஜி  வழங்கிய அந்த ஆரூடத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.”

நான் பலமுறை  காந்திஜியை சந்தித்திருக்கிறேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன். அவர் அப்போது வெளியிட்ட கருத்துக்களைத் தான் நான் இப்போது விவரித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கிடைத்த உள்ளார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் நான்காந்திஜி மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்கிறேன்.”

ஸ்ரீ குருஜி மேலும்கூறினார்:
“கடைசி முறையாக அவரை நான் சந்தித்தது 1947ல். அப்போது சுதந்திரம் கிடைத்த தருணம். ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தலைவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். அதே வேளையில் தில்லியில் கலவரம் மூண்டது. அமைதியை வேண்டி அறைகூவல் விடுக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். உள்துறை அமைச்சர் சர்தார் படேலும் முயற்சிசெய்து கொண்டிருந்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் மகாத்மா காந்தியை சந்தித்தேன்.  என்னிடம் அவர், ’என்னவெல்லாமோ நடக்கிறதே?’ என்றார். ’இது  நமது துரதிருஷ்டம்’ என்றேன் நான். ’ஆங்கிலேயர்கள், ’நாங்கள் இந்தியாவை விட்டுப்போய் விட்டால் நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டு போவீர்கள்’ என்று சொல்வதுண்டு. இன்று அதுதான் நடக்கிறது. உலகில் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இதை தடுக்க வேண்டும்’ என்றேன். அன்றைய தினம் தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி மிகுந்த மதிப்பார்ந்த சொற்களால் என் பெயர் குறிப்பிட்டு எனது கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினார். நாட்டுக்கு ஏற்பட்டுவிட்ட கெட்ட பெயரை நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த மகாத்மாவின் வாயில் இருந்து என்னைக் குறித்து அப்படி மதிப்பார்ந்த வார்த்தைகள் வந்தது எனது பெரும்பேறு. இத்தகைய உறவினால் தான் நாம் அவரைப் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறேன்” – இவ்வாறு ஸ்ரீ குருஜி பேசினார்.

1987 முதல் 1990 வரை வடோதராவில் பிரசாரக்காகப் பணிபுரிந்தேன். அந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொதுச் செயலர் ஸ்ரீ யாதவ ராவ் ஜோஷி அவர்களின் பொது நிகழ்ச்சி வடோதராவில் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் மிகுந்த மதிப்பார்ந்த சொற்களால் மகாத்மா காந்தி குறித்து அவர் புகழ்ந்தார். பொது நிகழ்ச்சி முடிந்த பிறகு சங்க காரியாலயத்தில் அவரிடம் ஒரு ஊழியர், ’இன்று உங்கள் சொற்பொழிவில் மகாத்மா காந்திக்கு அவ்வளவு மதிப்பளித்துப் பேசினீர்களே, அது நீங்கள் மனதார பேசியது தானா?’ என்று கேட்டார். அதற்கு விளக்கமாக விடையளிக்கையில், “மனதார உணராமல் வாய்ப்பேச்சுப் பேசுகிற அரசியல் தலைவர் அல்ல நான். நான் சொல்கிற எதுவும் மனதின் அடி ஆழத்தில் இருந்து தான் வருகிறது. ஒருவரை நாம் மரியாதை கொடுத்து மதிப்பளித்துப் பேசுகிறோம் என்றால் அவரது எல்லாக் கருத்துக்களையும் நாம் ஒப்புக் கொண்டுவிடுவதாக அர்த்தம் அல்ல. ஒரு குறிப்பிட்ட உயர் பண்பு  அவரிடம் இருந்தது என்பதற்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம், அவரை முன்னுதாரணமாகப் போற்றுகிறோம். தான் ஏற்ற சபதத்தில் உறுதியாக நின்றதற்காக பீஷ்மரை நாம் போற்றுகிறோம். ஆனால் அரசவையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது எல்லா அநியாயத்தையும் அவர் வாயை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாரே, அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அது போலத்தான் மதவெறி பிடித்த ஜிகாதி முஸ்லிம் தலைவர்கள் விஷயத்தில் காந்திஜி நடந்து கொண்ட விதத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனாலும் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் பொதுமக்களை பங்குகொள்ளச் செய்வதற்காக அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு, சாமானிய மக்கள் மனதில் அவர் கொழுந்து விட்டு எரியச் செய்த விடுதலை ஆர்வம், பாரதிய சிந்தனையின் அடிப்படையில் பல விஷயங்களை அவர் வலியுறுத்திய விதம், மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்திட சத்தியாகிரகம் என்ற அவரளித்த வடிவம் இவை போன்ற அவரது பங்களிப்புகள் நிச்சயம் பாராட்டுக்குரியவை. நமக்கெல்லாம் ஊக்கமளிப்பவை” – இவ்வாறு யாதவ ராவ்ஜி எடுத்துக் கூறினார்.

இந்த விவரங்கள் எதையும் கருத்தில் கொள்ளாமல் சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உள்ள உறவு குறித்து விமர்சனம் செய்வது உண்மைக்குப் புறம்பானது, பொருத்தமற்றது என்று தான் சொல்ல வேண்டும். கிராம வளர்ச்சி, இயற்கை வேளாண்மை, பசுப் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், தாய்மொழிக் கல்வி, சுதேசி உணர்வு அடிப்படையிலான பொருளாதாரக் கட்டமைப்பு, சுதேசி வாழ்க்கைமுறை என்று மகாத்மா காந்தியின் மனதுக்கு இனிய, அவர்  வலியுறுத்திய, விஷயங்களில் ஸ்வயம்சேவகர்கள் மனது வைத்து செயல்படுகிறார்கள். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி ஆண்டு. அவரது புனித நினைவுக்குத் தலைவணங்குவோம், மனம் குவிந்து அஞ்சலி செய்வோம்.                             நன்றி: விஜய பாரதம்

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...