Wednesday, April 29, 2020

மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் -காந்தியடிகள்

நான்காம் வகுப்பு படிக்கு காலத்திலிருந்து சமையவகுப்பு போன்ற செயல்பாடுகளினால் இந்து இயக்கங்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருந்தது அவர்கள் எப்போதுமே நமது சமையத்தைபற்றியும் நாட்டைபற்றியும் மட்டுமே பேசுவார்கள் பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்  

பிற மதங்களை பற்றி விமர்சித்து ஒருமுறைகூட பிரசங்கம் செய்ததே இல்லை பின்னாட்களில் நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் அதை எழுதியவர் இந்தியாவின் மிகபெரிய ஆளுமைகளுள் ஒருவர் ஒரு அத்தியாயத்தில் கிருத்தவமதத்தினரின் இயல்பு குறித்து அவர் எழுதியதை படித்து ஆச்சரியம் அடைந்தேன் அவர் பின்வருமாறு எழுதுகிறார் 

அச்சமயம் கிரிஸ்தவ மதம் மாத்திரமே இதற்கு ஒரு விதிவிலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது அதற்கு ஒரு காரணமும் உண்டுஅக்காலங்களில் கிருஸ்தவ பாதிரிமார்கள் உயர்நிலைபள்ளிக்கு அருகில் தெருதிருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள்.இதை என்னால் சகிக்க முடிவதில்லை.அவர்கள் சொல்லுவதை கேட்க்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன்.இந்தபரீட்சை இனி வேண்டாம் என்றுநான் தீர்மானித்துவிட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று ஏறகுறைய அதே சமையத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிருஸ்தவத்திற்கு மதம் மாற்றபெற்றார் என அறிந்தேன்அவர் ஞானஸ்தானம் செய்விக்கபெற்றபோது மாட்டிறச்சி தின்று மதுபானம் குடிக்க வேண்டி இருந்தது என்றும் தமது உடையையும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் போக ஆரம்பித்தாராம் இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின மாட்டிறச்சி தின்னவேண்டும் என்றும் குடிக்கவேண்டும் என்றும் தமது சொந்த உடையை மாற்றிக்கொண்டுவிட வேண்டும் என்றும் ஒருவரை கட்டாயப்படுத்தும் ஒரு மதம்,மதம் எனும் பெயருக்கே நிச்சயம் அருகதையில்லாதது என்று நான் எண்ணினேன். புதிதாக மதம்மாறியவர் தமது மூதாதையரின் மதத்தையும் பழக்கவழக்கங்களையும் நாட்டையும் தூஷித்து பேசவும் தலைபட்டுவிட்டார் என்றும் கேள்விபட்டேன் இவைகளெல்லாம் கிருஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின 

மகாத்மா காந்தி
சத்தியசோதனை பக்கம் 39

இதைபடித்த பிறகுதான் நான் என்னை சுற்றி இருந்த கிருத்தவர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன் நம் நாட்டைபற்றி உயர்வாக பேசினால் அவர்கள் மனசமநிலையை இழந்து எதிர்வாதம் செய்யக்கூடியவர்களாக இருந்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை
காந்தியடிகள் எழுதி இருப்பது உண்மைதான் என்பதை அறிந்து வியந்தேன்  

மதமாற்றம் நிச்சயம் ஒரு தேசிய அபாயம் மதமாறுகிறவர்கள் வெறுமனே தெய்வத்தைமட்டும் மாற்றிக்கொள்வதில்லை அவர்கள் தேசத்தையே மாற்றிக்கொள்கிறார்கள் 

மதம் மாறுவதால் இந்த நாட்டிற்கு ஒரு எதிரி உருவாகிறான் எனும் சுவாமி விவேகானந்தரின் கூற்று தெய்வவாக்கன்றி வேறென்ன

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...