நம்முடைய பக்தி உணர்வு சிறிது மேம்பட்டவுடன் நமக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன தெரியுமா ?
பிரஞ்சு புரட்சியின் முடிவில் மக்களை கொடுமை செய்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ' கில்லெட்டின் ' என்ற இயந்திரத்தின் மூலம், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களின் தலைகள் வெட்டப்பட்டன. இப்படி ஒருநாள் மூன்று பேர் கில்லட்டின் முன்பு நிறுத்தப்பட்டார்கள்.
முதலில் வந்தவர் ஒரு மதபோதகர். இயந்திரத்தை ஆட்கள் இயக்க, அதன் பெரிய கத்தி பாதி தூரம் பயணித்து அப்படியே நடுவில் நின்றுவிட, அவர் தலை தப்பித்தது. ஒருமுறை இப்படி ஆகிவிட்டால், சம்பந்தப்பட்டவரை இறைவன் மன்னித்ததாக சொல்லி விடுவித்து விடுவார்கள். அவர் வானத்தைப் பார்த்தபடி கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு போனார். அடுத்து ஒரு டாக்டரின் முறை. அவருக்கும் இப்படியே ஆக, முகத்தில் வழிந்த வியர்வையும்
, பயத்தையும் துடைத்துக்கொண்டு, " இறைவா ....உன் கருணையே கருணை ! உனக்கு நன்றி " என்று உரக்கக் கத்தியபடி கிளம்பிப்போனார்.
மூன்றாவதாக வந்தவர் ஒரு இன்ஜினீயர் . கில்லட்டின் இயந்திரத்தில் படுக்க வைத்ததுமே மேலே நிமிர்ந்து பார்த்து அதை ஆராய்ந்தார். உடனே எதையோ கண்டுபிடித்த மகிழ்ச்சியில் உரக்கக் கத்தினார். " முட்டாள்களே ....அந்த பெரிய கத்தியை இயக்கும் ஸ்பிரிங் வளைந்து கத்தியின் மீது சிக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் அது கீழே வந்து எவர் தலையையும் வெட்டவில்லை. நீங்கள் என்னடா என்றால் எல்லோரையும் இறைவன் மன்னித்ததாக விட்டுவிட்டீர்கள் ! " என்று தன் தொழில் அறிவைப் பயன்படுத்திச் சொன்னார்.
அப்புறம் என்ன .......அதை செரிசெய்துவிட்டு இயங்கியபோது அது ஒழுங்காக வந்து அவருடைய தலையைத் துண்டித்தது. அவருடைய அறிவு அவருக்கே வில்லனாக முடிந்தது.
" கற்ற அறிவால் உன்னை நான் கண்டவன் போல் கூத்தாடில்
குற்றமென்று என்நெஞ்சே கொதிக்கும் பராபரமே ! "
- என்கிறார் தாயுமான ஸ்வாமிகள். நமக்குத்தான் எல்லாம் தெரியும், நாமே சரி என்ற அகங்காரத்தால் வீணாக அழிவதை விட, எவ்வளவு உயர்நிலை அடைந்தாலும் தனக்கு ஒன்றுமே தெரியாது , ஒன்றுமில்லையே தான் என்ற உத்தம பக்தர்களின் கூற்றுக்கள் சிந்திக்கத்தக்கது. இதனை வெளியே சொல்லிக்கொண்டு திரிய வேண்டும் என்ற அவசியமில்லை. உணர்வால் உணர்ந்து நடந்தால் போதும்.
No comments:
Post a Comment