Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Tuesday, August 25, 2020

மாந்திதோஷம்

மரணத்தின் காரகன் , மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தையும்  மரணத்திற்கு சமமான கண்டங்களையும்  தருபவன் , சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......

                   இந்த மாந்தி ஒருவருடைய ஜாதகங்களில் இருக்கும் இடத்தை பொருத்து பலனை வழங்குகிறார்.

    மாந்தி லக்னத்திற்கு 3 6 11 ஆகிய பாவங்களிலும் கும்பம் மகரம்  சிம்மம் ஆகிய ராசிகளில் இருக்கும் போதும் அதிகமான கெடுதல்களை செய்வதில்லை .

         ஆனால் 1 2 4 5 7 8 9 10 12 ஆகிய  இடங்களில் மாந்தி இருக்கும் போது ஜாதகர்களுக்கு பெரும் துன்பத்தையும் கஷ்டங்களையும் ,பிரச்சனைகளையும் அசிங்கத்தையும் ,அவமானங்களையும் திடீர்இழப்புகள்,  திடீர்விபத்துகள், திடீர்மரணம் ,  எதிர்பாராத வீழ்ச்சி  கல்வித்தடை , திருமணதடை ,
தொழில்தடை  ,  வேலைஇழப்பு குழந்தைதடை,  நோய்நொடிகள் , வம்புவழக்கு,  கோர்ட்  கேஸ்,  தண்டனை போன்றவைகளை தருகிறார் .

        

Wednesday, August 19, 2020

கடனால் தலைமறைவு வாழ்க்கை


     ஒருவருடைய ஜாதகத்தில் 
6ம் அதிபதி ஆட்சி ,உச்சம், மூலத்திரிகோணம் அடைந்து ,
12ம் இடம் இடம் தொடர்பு கொண்டு , 6ம் இடத்தில் இருக்கும் கிரக திசை நடக்கும் போது , அந்த ஜாதகர் பெரும் கடன் பிரச்சனையை சந்திப்பார். மேலும் வம்பு ,வழக்கு, சண்டை சச்சரவுகளையும் சந்திப்பார்.  இந்த காரணங்களுக்காக  ஒருநாள் ,ஒருபொழுதாவது, கண்டிப்பாக   அந்த ஜாதகர் தலைமறைவு வாழ்க்கை  வாழ்வார். 

     மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டில் அல்லது வேலைபார்க்கும் அல்லது தொழில் செய்யும் இடத்தில் தெற்கு ,தென்மேற்கு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கும் .

          

கொடுத்த கடன் திரும்பவருமா?


          ஒருவருடைய ஜாதகத்தில் 
8 மற்றும் 12ம் இடத்து அதிபதிகள்
இணைந்து, 2ம் இடத்தில் இருந்தாலும், அல்லது 2ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், அல்லது 2ம் அதிபதி 8 & 12ம் அதிபதிகளின். பார்வை பெற்றாலும் , ஜாதகர்கொடுத்த கடன் திரும்பவராது.

     மேலும் இவர் கையை விட்டு சென்ற பொருளோ ,சொத்துகள் திரும்ப வராது . இவருடைய காதலி மனைவி போன்றோர் நீண்ட நாள் பிரிந்து இருந்தாலும் மீண்டும் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் .


          

செவ்வாய்திசையின் பலன்கள்


       ஒருவருடைய ஜாதகத்தில் 
ஸ்ரீசெவ்வாய் பகவான் ஆட்சி ,
உச்சம் ,மூலத்திரிகோணம் ,நட்பு 
பெற்று திசை நடத்தினால் , ஜாதகரின் சகோதர சகோதரிஆதரவு கிடைக்கும் .வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும் .பதவி உயர்வு எதிர்பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் . சொத்து சேர்க்கை ஏற்படும் .

           ஆனால் ஸ்ரீசெவ்வாய் பகவான் நீசம் ,பகை, மறைவு இடங்களில் இருந்து திசை நடத்தினால் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி இறக்கம் ஏற்படும் . செய்யாத குற்றதிற்கோ அல்லது எப்போதோ செய்த குற்றத்திற்கு இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும். விபத்து ஏற்பட்டோ அல்லது கீழே விழுந்தோ அடிபட்டு காயம் ஏற்படும் .

         சகோதர-சகோதரிகள் இடையே பகை ஏற்படும் . பக்கத்து வீட்டாரிடம்  சண்டை சச்சரவு ஏற்படும் . போலீஸ் வழக்கு, கோர்ட் கேஸ்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் . எதிரிகள் தொல்லை இருக்கும் .

               

யாருக்கு குரு (ஆசான் ) அமையாது


     ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனிபகவான் வீட்டில் இருந்தாலும் , 
குரு+சனி சேர்க்கை இருந்தாலும் , சனிபகவான் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் , ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் , குரு ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த ஜாதகருக்கு முறையான குரு (ஆசான் ) அமையமாட்டார் அல்லது கிடைக்கமாட்டார் .

    இவர்களுக்கு அனுபவமே குருவாக அமையும் . இவர்கள் பல துறைகள் பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள் . அல்லது அதில் அடிபட்டு சுய அனுபவம் பெற்று இருப்பார்கள்.

        இவர்களுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமாவது கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அங்கும் குரு மற்றும் சீடன் நிலை நிலைக்காது. குரு ஜாதகரை ஒதுக்குவார் அல்லது ஜாதகர் குருவை ஒதுக்குவார் . இது ஒரு சாபக்கேடு அல்லது தோஷம் என சொல்லலாம் .

   இந்த ஜாதகர்கள் ஏகலைவன் போன்றவர்கள் . இவர்கள் குருவை மிஞ்சிய சிஷியர்கள் பட்டியலில் சேர்க்க படவேண்டியவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு குருவாக இருந்து கற்றுத்தரும் வித்தை மேன்மை அடையும் . இவர் சொல் கேட்பர் நல்ல நிலை அடைவார். ஆனால் இவரால் முதன்மை நிலையை அடைய முடியாது.

   

மனம் தொடர்பான பிரச்சனைகள் யாருக்கு ஏற்படும் ?


    ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் பாவம் பாதிக்கப்பட்டாலும், 5ம் இடத்து அதிபதியும் 6ம் இடத்து அதிபதியும் சேர்ந்து இருந்தாலும் , இவர்களுக்கு இடையே  பார்வை ஏற்பட்டாலும், பரிவர்த்தனை பெற்று இருந்தாலும், 5ம் பாவத்தில் சனி , ராகு-கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் , பார்த்தாலும், தேய்பிறை சந்திரன் தொடர்பு பெற்றாலும்  , அந்த ஜாதகருக்கு ஞாபகமறதி , மனக்கலக்கம் , மனச்சிதறல் , தேவையில்லாத கற்பனை, பயம் , மனமாற்றம், ஹிஸ்டிரியா  போன்ற மனம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் . 

      இந்த அமைப்பு, பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் ஜாதகங்களை ஆய்வு செய்து அதற்கான ஆன்மீக வழிபாட்டு பரிகாரங்களை செய்து கொள்ளலாம் .

             

தீய சக்திகளால் பாதிப்பும் மனகுழப்பமும் யாருக்கு ஏற்படும்?


   ஒருவருக்கு ரிசபம் , சிம்மம் , விருச்சகம் , கும்பம் ஆகிய ராசிகளில் ஒன்று லக்கனமாக அமைந்து, அதில் சனி + மாந்தி சேர்ந்து இருந்தாலும் அல்லது 6 8 12ம் இடங்களில் ராகு-கேது இருந்தாலும், அவருக்கு தீயசக்திகளால் பாதிப்பு இருக்கும் . மேலும் மனகலக்கம் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , புத்திமாற்றம் , மனமாற்றம், போன்ற பாதிப்புக்கள் இருக்கும் .
 
      அதேபோல இவர்களுக்கு பெண் தெய்வங்களின் அருளும் கிடைக்கும் .

         

தந்தைக்கு தொல்லை தரும் பிள்ளைகள்


  ஒரு தந்தையின் ராசி லக்னத்திற்கு  12ம் இடத்து அதிபதியின் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை அதாவது பிள்ளைகள் தந்தையின் பேச்சை கேட்காமல், அவர்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் தந்தைக்கு தொல்லைகளை கொடுத்து கொண்டே இருப்பார்கள் .

      அந்த குழந்தைகள்  தந்தையை மதிக்காமல், தந்தை  சொல்படி கேட்டு நடக்காமல் ,ஊர் சுற்றி கொண்டு பிரச்சினை ,வம்பு ,வழக்கு ,அசிங்கம், அவமானம் , சண்டை சச்சரவு ,
போன்றவைகளை ஏற்படுத்தி, தந்தைக்கு  தொல்லைகளை தருவார்கள். அதாவது வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருப்பார்கள்.

         

Friday, July 20, 2018

நோய்க்கான கிரகங்கள்

சூரியன் –

உஷ்ணக்காரன் ஆகையால் உஷ்ணம் சம்மந்தமான நோயைக் கொடுப்பார். இருமல், வலிப்பு, கண், சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்;. புhர்வை குறைபாடு ஏற்படலாம்.

சந்திரன் –

ஜலதோஷம், வாதம், ரத்தம் சம்மந்தமான நோய், சீதளம், தோல், சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம்.

செவ்வாய் –

ரத்தக்காரன் என்பதால் ரத்தம் சம்மந்தமான நோய்கள், ரத்தப்புற்று நோய், பிளட் பிரஷர். கண் எரிச்சல், தீக்காயம், விஷம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.
புதன் – நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்சினைகள், கண், மூக்கு, கழுத்து, இவற்றில் ஏற்படும் நோய், சளி இருமல் தொல்லை, வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

குரு –

சர்க்கரை நோய்,காது சம்மந்தப்பட்ட நோய், பித்தம் சம்மந்தப்பட்ட நோய் என்பன ஏற்படலாம்.

சுக்கிரன் –

கிட்னி சம்மந்தமான நோய், பெண்கள் சம்மந்தமான நோய், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், வாத நோய் என்பன ஏற்படலாம்.

சனி –

வாத நோய், வலிப்பு நோய், யானைக்கால் வியாதி, காலல் ஏற்படும் உபத்திரவம், வயிற்றுவலி, சளி, குளிர்காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ராகு –

இதய நோய், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புற்று நோய், குடல் நோய், குஷ்டம் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் என்பன உண்டாகலாம்.

கேது –

வெட்டுகாயம், அம்மை, அஜூரணம், வயிற்றுவலி, விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புண், உடல் வலி என்பன உண்டாகலாம

சுக்கிரன்

பொதுவாக லக்ஷ்மியை குறிக்கும் கிரஹம் சுக்கிரன். 8 கிரகங்களுடன் சுக்கிரனை இணைத்து அஷ்ட லக்ஷ்மியை கீழ் கண்ட வாறு பிரிக்கலாம்

1) சுக்கிரன் + சூரியன் = ஸ்ரீ விஜய லக்ஷ்மி (வெற்றியை தருபவள்)

2) சுக்கிரன் + சந்திரன் = ஸ்ரீ தன்ய லக்ஷ்மி ( தானியம் + உணவை தருபவள்)

3) சுக்கிரன் + செவ்வாய்  = ஸ்ரீ தைரிய லக்ஷ்மி  (முயற்சி + தைரியத்தை  தருபவள்)

4) சுக்கிரன் + புதன் = ஸ்ரீ வித்யா லக்ஷ்மி (வித்தை + கல்வியை  தருபவள்)

5) சுக்கிரன் + குரு = ஸ்ரீ சந்தான லக்ஷ்மி ( சந்ததியை தருபவள்)

6) சுக்கிரன் + சனி = ஸ்ரீ ஆதி லக்ஷ்மி (தாமதம், தடைகளை நீக்கிக்குபவள்)

7) சுக்கிரன் + ராகு = ஸ்ரீ தன லக்ஷ்மி (புதையல் போன்ற திடீர் செல்வத்தை தருபவள்)

8) சுக்கிரன் + கேது = ஸ்ரீ கஜ லக்ஷ்மி ( ஞானம் +அரசயோகத்தை தருபவள்)

வெற்றி நமதே
பயிற்சி+முயற்சி+தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!

Wednesday, July 18, 2018

நவகிரகங்களின்_பயோடேட்டா

சூரியன்.
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்.
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்

3 .அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு.
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்.
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

8.ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஶ்ரீவில்லிபுத்து தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

திருமணம் நடக்குமா???

நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி

ஆண் ஜாதகம்

1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேதுஇல்லாமல் இருக்க வேண்டும்.

2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.
4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 )
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த
பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

பெண் ஜாதகம்

1, பெண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

2, பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-
இல் செவ்வாய் நின்றிருக்க, செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...