Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, February 18, 2021

தமிழும் சமஸ்கிருதமும்

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!

ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி"

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

Saturday, August 22, 2020

திறுநீறும் காவி உடையும்

ஒரு ஊரில் ஒரு திருடன் 
அவன் திருடாத இடமே இல்லை,

ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து தப்பித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்துததந்தால் ருபாய் ஐந்து லட்சம் என ஆனையிட்டார்.

"இது ஒருபுரம் இருக்காட்டும்"

சில நாட்கள்கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,

யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்துவிடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிபார்த்து அழைத்துவாரும் என ஆனையிட்டார்.

மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூரியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன். என உறுதி அளித்தான்.

சரி என இந்த திருடனும் சம்மதித்தான். அந்த திருடனுக்கு ,

திருநீறும் ருத்ராட்சமும் போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,

கடைசியாக அவர் தன் ராஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா,
நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளைவிட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வனங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மலை தருவேன் அதை எற்றுக்கொள்க என,

இந்த சன்யாசி வேண்டாம் என்றார்.
பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பனம், என தானமாக தந்தார்.

இந்த சன்யாசி எதுவும் வேண்டாம் என்றார்.

பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார்.

(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)

ஆனால் அந்த சன்யாசி வேண்டாம் என்றார். (மந்திரிமுகம் மாறிவிட்டது அடபாவி வேண்டாம் என்றுவிட்டானே, இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக் உள்ளே குழம்பத்தில் நிற்க்)

கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூரினார்.

அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் வேண்டாம் என்றார்.

நீறே தீர்க்கதரிசி என வீழ்ந்து வனங்கி அந்த ராஜா சென்றுவிட்டார்.

பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என் வயத்துல இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாமா என சண்டை போட,

அதற்க்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.

எப்போது நீங்கள்
திருநீறும் ருட்ராச்சமும் என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.

மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோளத்தை பார்த்து என் காலில் விழுந்தார்.

அந்த பனிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த 
திறுநீறுக்கும் காவி உடைக்கும் ருத்ராட்சத்துக்கும் தான்,

நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பெருள் தான் எனக்கு கிடைத்தது.

மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால்
விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்
அதுவே எனக்கு போதும் என்றார்.

ஆம், என் அன்பின் உறவுகளே
இந்த திறுநீறும் காவி உடையும் ருத்ராச்சமும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...இதை அணிந்து களங்கமும் விளைவிப்பதோ அறத்திற்கு புறம்பான செயல்களை செய்வதோ வேண்டாம்..

திருச்சிற்றம்பலம்

கண் எதற்கு?

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்.
சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.
அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. 

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

Tuesday, August 18, 2020

மருத்துவம் தர்மம் _காந்தி

காந்திஜியைக் காண, 75 வயது மதிக்கத்தக்க, ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட பெண்மணி வந்திருந்தார். அவரின் நிலையை அறிந்த காந்திஜி, தனது மருத்துவரிடம் அப்பெண்மணிக்கு, வேப்பிலையைக் கசக்கிப் பிழிந்து அச்சாரையும், மேற்கொண்டு குடிப்பதற்கு மோரும் கொடுக்குமாறு கூறினார்.

 உடனே மருத்துவர் அப்பெண்மணியை நோக்கி, தாங்களே மோர் எடுத்துக் குடிக்குமாறு கூறினார்.

    மறுநாள் காந்திஜி மருத்துவரிடம், நேற்று அப்பெண்மணி எவ்வளவு மோர் குடித்தார்? என்று கேட்டார். மருத்துவரால் பதில் கூற முடியவில்லை. அதனை அறிவதற்காக அவர், அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்றார். மருத்துவரிடம் அப்பெண்மணி, தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் மோர் குடிக்கவில்லை என்று கூறினார்.

   காந்திஜி அனைத்து விஷயத்தையும் அறிந்து கொண்டு மனக்கவலை கொண்டார். மருத்துவரிடம், “வெளிநாட்டில் நீங்கள் என்ன படித்தீர்கள்? இப்பொழுது கூட நீங்கள் அப்பெண்மணிக்கு மோர் வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் அக்கிராம மக்களிடமிருந்தாவது மோர் வாங் அப்பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும்; அப்பெண்மணியின் அழுகையைப் போக்காமல் இங்கு வந்து என்ன பயன்?” என்றார்.

      பிறகு காந்திஜி, “மருத்துவம் என்பது தர்மம் நிறைந்த செயல் என்று வெறுமனே மருந்து எழுதிக் கொடுப்பதும், அளவைச் சொல்வதும் மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வரை அவரைப் பார்க்கும் பொறுப்பும் மருத்துவருடையதே" எனக் கூறினார்.

Friday, July 31, 2020

ஆத்திரம்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும்  வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும்  அழிவைத் தருகிறது.

*ஆத்திரம் , கோபம்  தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட*
இந்த நாள் இனிய நாளே....
இனிய  மாலை வணக்கம்

Sunday, July 26, 2020

தியான் சந்த் சிங்

நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்"  பிறந்த தினம்.

அப்படி சிறப்பு என்ன?
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங்  என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங்,  அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .

    சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயிற்சியாளர் அவருக்கு சந்த்(chand )நிலா ஒளி என்று பெயரிட்டார்.

     அது முதல் அவருக்கு தியான் சந்த் என்ற பெயர் நிலைத்துவிட்டது. தனக்கு பழக்கம் இல்லாத ஹாக்கி விளையாட்டு என்றாலும் முழு பயிற்சி பயிற்சி மூலம் தன்னை அதிக திறன் உள்ளவராக ஆக்கிக்கொண்டார் தியான்சந்த். நாமும்  ஷாகாவில் அதிக பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவோம்.

  அவரது அதீத திறமை காரணமாக ராணுவத்தின் அவரது பிரிவு அவரை அனைத்து ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது. அவரும் நாட்டுக்குள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று சிறப்பாக ஆடி வந்தார்.

  முதல்முறையாக 1928ஆம் ஆண்டு ஹாக்கியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்தார்கள். அந்த ஆண்டு இந்திய குழுவில் தியான் சந்த் மற்றும் அவரது சகோதரர் நீப் சிங் உட்பட இந்திய குழு ஆம்ஸ்ட்ராங்மில்  நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றது. முதல் முறையாக வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினார். அந்தப் போட்டிகளில் நமது குழுவில் பல வீரர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை சரி  இல்லாமல் போனது தியான் சந்த் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராது அவர் சிறப்பான விளையாட்டை நடத்திக் காட்டினார். அதன்மூலம் சக வீரர்களுக்கு வெளிநாடுகளிலும் சென்று ஒன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மேலும் சர்வதேச அளவில் நமது ஹாக்கி குழு மீது மதிப்பு பிறந்தது.

    தியான் சந்த் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனால் தியான் சந்த் அவர்கள் தன் முழுக்கவனத்தையும் திறன் வளர்ச்சியில் மட்டுமே செலுத்தினார் .நாம் ஆர்வத்தடனும், ஈடுபாட்டுடனும் சங்க வேலை செய்கிறோம். ஆனால் நமது கவனம் நம் திறனை வளர்ப்பதிலே முழுதும் செலுத்தவேண்டும். 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அது நாசிச ஆட்சியில் அடாப் ஹிட்லர் தலைமையில் இருந்த ஜெர்மனியில் நடக்க இருந்தது. அலுவல் காரணமாக தியான் சந்த் அவர்களுக்கு பயிற்சி முற்றிலும் கிடைக்கவில்லை. தேர்ச்சி விளையாட்டிற்கு நேரம் அனுமதி அவரது படைப்பிரிவு கொடுக்கவில்லை. ஆனால் நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

      அதன்பின் அவர் ஜெர்மனிக்கு குழுவோடு அனுப்பப்பட்டார். அங்கு சென்று எல்லா நேரத்திலும் பயிற்சி மேற்கொண்டு தங்களை எதிர்த்த எல்லா நாட்டு அணிகளையும், அதிக கோல் வித்தியாசத்தில் நமது அணி வெற்றி பெற்று வந்தது. எல்லாவற்றுக்கும் முன் நமது அணியை உற்சாகப்படுத்த தியான் சந்த் அவர்கள் அன்றைய காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக்கொடி முன் சபதம் ஏற்பார். மற்ற அணியினரும் அவரோடு சபதம் ஏற்பார்கள். சிறப்பாக விளையாடி நமது அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 15 ஆகஸ்ட் 1936 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அன்று மிகவும் சக்திவாய்ந்த ஜெர்மனியில், அதுவும் அவர்கள் நாட்டில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கண்முன் நடக்க இருந்தது. இதுவே ஹிட்லருக்கு தனது பெருமையை உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. .ஜெர்மனி வெற்றி பெற்று விடும் என்ற இருமாப்போடு  இருந்த நேரம் அது.
        
      விளையாட்டு தொடங்கியது முதல் காலப்பகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. நமது வீரர்களால் கோல் போட முடியவில்லை. ஆனால் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னிலையில் சென்றது. இரண்டாவது காலப்பகுதியின் போது தனது வேகம் குறைந்து வருவதாக உணர்ந்த தியான் சந்த் அவர்கள் தான் அணிந்த காலணியை(sports shoe) கழற்றிவிட்டு ஆடுகளத்தில் ஓடி விளையாட ஆரம்பித்தார். வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த மற்ற வீரர்களுக்கு உற்சாகம் பிறந்தது. தியான் சந்த் அடுத்தடுத்து கோல்களைப் போட பாரதம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஹிட்லர் உட்பட ஜெர்மானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய அணி 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

     தான் ஆடும் களம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், தன் குழு மீதும் தேசத்தின் மீதும் தன் மீதும், முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு விளையாடி வெற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒலிம்பிக் தங்கத்தை பெற்றுத் தந்தவர் தியான் சந்த் அவர்கள். நாமும் சங்க வேலை செய்யும்போது கடினமான சூழ்நிலைகள் வரும் ஆனால் தன் திறமை மீது நம்பிக்கை, தன் சக கார்யகர்தர்களுக்கு நம்பிக்கை, தன் தேசத்தின் மீது முழு நம்பிக்கையோடு வெற்றியை லட்சியமாகக் கொண்டு வேலை செய்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது தியான் சந்த் அவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள செய்த சில முயற்சிகள்

1. போசிஷன் மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் முழு நீள அகலத்தில் ஓடி செல்வார் அதன் மூலம் எதிரணியின் நிறை குறைகளை அறிந்து கொள்வார்.
 
2. ஹாக்கி மட்டையை விட்டு பந்து வெளியே செல்லாமல் இருக்கும் அளவிற்கு (dribbling) என்ற முறையை அதிகம் பழகுவார். ஒருமுறை நெதர்லாந்து  நாட்டினர்  அவருடைய மட்டையை வாங்கி அதில் காந்தம் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.

3. கோல் சரியாக போடுவதற்கு ஒரு காலிடயர்  வைத்து அதனுள் பந்தை அடிக்க அதிக பயிற்சி எடுப்பார். அதன் மூலம் குறி மாறாமல் அடிக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டார்.

4. விளையாட்டின் அனைத்து விதிமுறைகளையும் சரியாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு முறை நடந்த விளையாட்டில் அவர் ஒரு கோல் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் கோல் போஸ்ட் அளவு தவறாக உள்ளது, அதை அளந்து சரி செய்யுமாறு கூறினார். அவர்களும் பார்த்தபோது அவ்வாறே தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின் சரி செய்தார்கள்.
 
       ஆகவே ஹாக்கி உலகத்தின் மெஜிசியன் என்ற பெயரைப் பெற்ற தியான் சந்த் நமது நாட்டிற்கு ஒலிம்பிக் சங்கத்தை அளித்த பெருமையை பெற்றார். சுதந்திரத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் மேஜர் என்ற நிலைக்கு வந்து பணி ஓய்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது நமது அரசாங்கம். அவர் தன்னை பற்றி சொல்லும்போது “என்னிடம் இயற்கையான திறமை (Talent) இருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதை தக்கவைக்க கடும் உழைப்பை மட்டும் தான் நான் போட்டேன்” என்று அடக்கமாக கூறினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு மனிதன், விளையாட்டு வீரர், தேசபக்தர், யோகி, தியான் சந்த் அவர்களைப் போல நாமும் தினசரி ஷாகா மூலம் நம் திறமைகளை வளர்த்து, தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் பல நல்ல செயல்களில் வெற்றி பெற தொடர்ந்து கடும் உழைப்பை காணிக்கையாக்குகிறோம்.

விளையும் பயிர்

பள்ளி மாணவராக இருந்த நாட்களில் திலகர் ஒல்லியாக ஒடிந்து விழுகிறவராகத்தான் இருந்தார். கல்லூரியில் காலடி வைத்ததும், ஒரு வருடம் முழுவதும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வலிமையும் நிறைந்ததாக ஆக்கிக்கொண்டார்.
கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் ஐந்தாறு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் இளைஞரான திலகர். “நாம் சுயராஜ்ஜிய போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் நம்மை சி.ஐ.டி.கள் வட்டமிடுகிறார்கள். திடீரென்று இங்கே வந்து, அவர்கள் நம்மை வளைத்துக் கொண்டால், நாம் மாயமாய் மறைவது எப்படி?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
“இதோ இப்படித்தான்!” என்று சொல்லிக் கொண்டே, திலகர் தொபேலென்று கைப்பிடி சுவர் ஏறி மாடியில் இருந்து குதித்து விட்டார். மற்றவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு படி இறங்கி வந்து பார்த்தால், திலகர் ஆனந்தமாகக் கைகளைத் தட்டியவாறு படியேறி வந்து கொண்டிருந்தார்!  பின்னாளில் “சுதந்திரம் நமது பிறப்புரிமை!” என்ற தாரக மந்திரத்தை நாட்டுக்குத் தந்தவர் அல்லவா அவர். விளையும் பயிர் முளையிலேயே - அன்றே பளிச்சென்று மின்னி இருக்கிறது!

தவ வலிமை

அடியோடு நம்பிக்கை இழந்து போய் அந்த அரசன், முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் தேடி போனான். “முனிவர் பெருமானே! போரில் தோற்று நாட்டை இழந்து விட்டேன். அன்பு கூர்ந்து என்னை கைதூக்கி விட வேண்டும்” என்று வேண்டினான்.
முனிவர், “அரசே அதோ அந்த மரத்தின் கீழே போய் நின்று மரத்திடம் உன் விருப்பத்தைச் சொல்” என்றார். அது கற்பக விருட்சம்! அதனால் அரசன் எண்ணம் நிறைவேறியது. இழந்த நாட்டை பெற்றுவிட்டான். ஆனால் மறுபடி ஆசிரமத்துக்குப் போய் முனிவரிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
“புண்ணியாத்மாவே! தங்களிடம் விரும்பியதையெல்லாம் அளிக்கும் கற்பகமே இருக்கும் போது தாங்கள் இப்படி ஏழையாகவே ஏன் இருக்கிறீர்கள்? மிகவும் தேவையான சௌகரியங்களைக் கூட கேட்டு பெற்றுக் கொள்வதில்லையே ஏன்?” என்றான் அரசன்.
முனிவர் சிரித்தபடி சொன்னார்:-
“அரசே! நாங்கள் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்துகிறோம். ஆகவேதான் கற்பகமரம் இங்கே முளைத்துள்ளது. எனது தவம் தளர்ச்சி அடையுமானால் அந்தக் கணத்திலேயே இந்த கற்பக மரத்தின் சக்தி போய்விடும். மனிதன் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும்போது சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் பொருட்படுத்தவே கூடாது. பற்றற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும். நமது எண்ணம் கைகூட இவைதான் காரணமாகின்றன”.

Thursday, November 14, 2019

ராணா பிரதாப் சிங்கை

அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரைப் பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹூக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்குத் திரும்பியவனாக அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான்.அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்பிய அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில்  சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான்.

“சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணத்தை? “அப்துல்லின் குரல் மாளிகைச் சுவர்களில் எதிரொலிக்கிறது.

“ஒரு படையெடுப்பை நிகழ்த்தப் போகிறேன் அப்துல்.அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்! அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது.

“கட்டளையிடுங்கள்.
வெற்றிகனியைப் பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்! “

அக்பரின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை ஓடியது.

“ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் நீ வெல்ல வேண்டியது.
கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை! “கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவமாடியது.

“ராஜபுதனத்தின் சிங்கத்தை வெல்லச் சொல்கிறீர்கள்? “

“என் படைபலம் உமக்கு உண்டு.”

“ராணாவைத் தேடிப் பிடிப்பது வைக்கோலில் விழுந்த ஊசியைத் தேடுவது போன்றது.
ராணாவை குறி வைக்கக் காரணம்? “

“இந்துஸ்தானம் என் காலடியில் விழுந்து கிடக்கிறது அப்துல்.
ராஜபுதனமும் கூட.
ஆனால் உதய்ப்பூர் என்னும் மேவார் விழ மறுக்கிறது.என்னைத் தொழவும் மறுக்கிறது.
காரணம் ராணா.
அவனது வீரம்.என்னை அவமானம் செய்து மகிழ்கிறான் அவன்.
அவனது ஆணவத்தை போக்கியாக வேண்டும்.
மொகல் ராஜ்ஜியத்தின் கரும்புள்ளியை கலைந்தாக வேண்டும்! 

“என்ன சொல்லி அவமானப்படுத்துகிறான் ராணா? “

“என்னை எதிர்க்கும் அரசர்களின் தங்கைகளையும், மகள்களையும் மணந்து அவர்களை அடக்குகிறேனாம். பெண்களின் பாவாடையால் விஸ்தரிக்கப்பட்டது மொகல் சாம்ராஜ்ஜியம் என்று அவமதிக்கிறான் ராணா! “

“அது மட்டுமா? தங்களுக்குப் பெண் கொடுத்த ராஜபுத்திர அரசர்களை, மதம் மாறியவர்களை ராணா சற்றும் மதிப்பதில்லை.
சபை நடுவே கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறான்.  கூட்டிக் கொடுத்தவர்கள் என்று கேவலப்படுத்துகிறான். அவர்களை ராஜபுத்திர இனத்திலிருந்தே ஒதுக்கியும் வைக்கிறான்.!”

“எனக்கு இணங்காமல் ராணா இறுமாப்புடன் இருக்க என்ன காரணம்? “

“சித்தூரை நாம் கைப்பற்றிய போது நடந்தவற்றை ராணா இன்னமும் மறக்கவில்லை.அவன் நெஞ்சில் அணையாத நெருப்பாய் அந்த துயரம் எரிந்து கொண்டேயிருக்கிறது.!”

“சித்தூரை நாம் வெற்றி கொண்ட போது என்ன நடந்தது? “

“வென்ற நீங்கள் மறந்து விட்டீர்கள்.
பாதிக்கப்பட்ட அவன் அதை மறக்கவேயில்லை.நம் கையில் அகப்படாதிருக்கும் பொருட்டு 25,000 பெண்கள் ஜஹர் என்னும் தீக்குளிப்பில் இறந்ததை ராணா இன்னமும் மறக்கவில்லை.
தோற்றோடி ஆரவல்லி மலைக் குன்றுகளில் ஒளிந்து வாழ்ந்ததை மறக்கவில்லை.
உதய்பூர் என்னும் மேவாரை உருவாக்கி அரசாண்டதை மறக்கவில்லை.!”

“பயத்தில் அவர்கள் இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்.?”

“பயத்தை உருவாக்கியது நாம் தான்! “
“இருக்கலாம்!ஆனால் அவனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஜக்பல், சக்தி சிங், சரவ் சிங் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள்.சொந்த ரத்தங்களை எதிர்த்து ராணா யுத்தம் செய்கிறான்.அந்த துணிச்சல்? “

“மகாபாரதத்திலிருந்த கிருஷ்ணா உபதேசம் தரும் தைரியமது.
ஜக்பல் மேவாரின் அரசனாக வேண்டியவன்.மக்களும் அரசு பிரதானிகளும் அதை விரும்பாததால் ராணா மன்னனாக்கப்பட்டான். வெறுப்படைந்த ஜக்பல் உங்களோடு சேர்ந்து கொண்டான்.தன் உற்றார் உறவினர்களை பகைத்துக் கொண்டு சொந்த சகோதரர்களின் துரோகத்தை சகித்து கொண்டு காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து கொண்டு ஒற்றை ஆளாக ரஜபுதன வீரத்தை மெய்பித்துக் கொண்டிருக்கிறான் ராணா.”

“அந்த இனத்தின் பெருமைக்கு அவன் ஒருவன் போதும்.!”

“வீரன் வீழ்ந்தாலும் அவன் இனத்திற்கு பெருமை சேர்த்து விட்டே வீழ்கிறான்.
துரோகி நெடுநாள் வாழ்ந்தாலும் இனத்தின் பெயரை சேதப்படுத்தி விடுகிறான்.”

“உண்மை தான்.
ராணாவின் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்.
ஆனாலும் அவன் என் எதிரி.ஆகவே படையெடுப்பு துவங்கட்டும்.
ராணாவை உயிரோடு பிடிக்க முயற்சி செய்.!”

“விசித்திரமான விசயம் என்னவென்றால் உங்களின் தாத்தா பாபரை ராணாவின் தாத்தா ராணா சங்கா எதிர்த்தார்.இப்போது அவர்களின் பேரர்கள் களத்தில் எதிரெதிராக நிற்கிறீர்கள்! “

“தலைமுறை எதிரி! “என்றான் அக்பர்.

மறுநாள் அப்துல் ரகுமான் தலைமையிலான படை ரஜபுதனத்தை நோக்கி பயணமானது.தன் படைகளுடன் நிலை கொண்ட அப்துல் ராணாவைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தான்.அதே நேரம் படையை பின்பற்றி வந்து கொண்டிருந்த அப்துல்லின் மனைவியும் மகளும் வழி தவறியிருந்தனர்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! நாம் வழி தவறி விட்டோம்.
சரியான வழியை கண்டறிய முடியவில்லை! “என்றான்.

“அந்தி கவிழ்கிறது.
இனி என்ன செய்வது? “ஆயிசா குழம்பிக் கொண்டிருந்த போது அந்த குதிரை வீரர்கள் பல்லக்கு தூக்கிகளை சூழ்ந்தார்கள்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! பயம் வேண்டாம்! வழிப்பறி கொள்ளையர்களாக இருக்ககூடும்.
தளபதியின் பெயரைக் கேட்டதும் விலகி விடுவார்கள்! “என்றதுடன் அதை சொல்லவும் செய்தான்.
முன்னணியில் இருந்த குதிரை வீரன் உரக்கச் சிரித்ததுடன் “நல்லது.
நான் அமர்சிங்! ராணா பிரதாப் சிங்கின் மூத்த மகன்! “என்றான்.
பேகத்தின் முகம் சவமாக வெளுத்தது.
சேதியறிந்த அப்துல் எரிமலையானான்.

சற்று நேரத்தில் குதிரையில் வந்து இறங்கினான் ராணா பிரதாப்சிங்.

“வலிய வந்து மாட்டியிருக்கிறார்கள் எதிரியின் சொந்தங்கள்! “என்று அமர்சிங் ஆயிசாவையும் சாயீராவையும் சுட்டிக் காட்டினான்.

அருகே வந்து நின்ற ராணா “பயம் வேண்டாம் பெண்களே! என் பகை அப்துல்லோடு மட்டுமே! நீங்கள் என் விருந்தாளிகளே! இன்று இரவு பில் பழங்குடியினரோடு நீங்கள் தங்கலாம்.
நாளைக் காலை உங்களின் படைமுகாமுக்கு நானே அனுப்பி வைப்பேன்! “

சாயீரா ,அமர்சிங் பல்லக்கை மடக்கிய உடனேயே சேலைத் தலைப்பைக் கிழித்து ஆபரணங்களைக் கோர்த்து அவசரமாக இரண்டு ராக்கிகளை தயாரித்திருந்தாள்.

“உங்களை சகோதரர்களாக ஏற்க விரும்புகிறோம்.
கையை நீட்டுங்கள்! “
“அச்சம் வேண்டாம் பெண்ணே.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரிகளாக எண்ணுவது தான் இந்துஸ்தானத்தின் பண்பாடு.அதற்கு நாங்கள் விதி விலக்கல்ல.உன் மனசாந்திக்காக அதை கட்டி கொள்ளச் சம்மதிக்கிறேன்.இந்த நேரத்தில் இதே ராக்கியை வைத்து அக்பர் செய்த அயோக்கிய தனத்தை சொல்ல வேண்டியது என் கடமை! “

“சொல்லுங்கள்.இதே ராக்கியை அக்பரின் கரத்தில் கட்டினாள் ராணி துர்க்காதேவி.
சகோதரியாக எண்ணாமல் அவளைக் கொன்றான் அக்பர்.
பெண்களை கொல்லக் கூடாது என்ற மத விதிகளை அவன் மதிக்கவில்லை.
ஆனால் எங்களின் போர் விதிகள் பெண்களை சீரழிக்க சொல்லவில்லை! “

“அக்பரை போல் நீங்களும் வாக்கு தவறி? “

“நான் ராணா பிரதாப்சிங் பெண்களே! அக்பரை போல் ஈனப் பிறவியல்ல நான்.
இந்துஸ்தானத்தின் பெருமைக்கு ஒரு தீங்கும் என்னால் நேராது.பெண்களால் ஒரு வெற்றி கிட்டுமெனில் தோற்பதையே பெருமையாகக் கருதுவேன்.!”

அதே நேரம் தீக்கனவுகளைக் கண்டு தூக்கமிழந்து கொண்டிருந்தான் அப்துல்.விடியற்காலை வேளையில் முகாமிற்கு வெளியே சத்தத்தை கேட்டு எழுந்து வந்தவன் அதிர்ந்தான்.

வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ராணா.அவனுடன் அமர்சிங்கும் பில் பழங்குடியினரும் பேகமும் நின்றிருந்தனர்.

“இதோ! உனக்குச் சொந்தமானவைகள்.
எந்த சேதமும் இன்றி திரும்ப ஒப்படைக்கிறேன்.
பெற்றுக் கொள் அப்துல்! “

பேகமும் மகளும் முன்னேறி முகாமுக்குள் வர தாக்க முனைந்த வீரர்களை அப்துல்லின் சைகை நிறுத்தியது.

“போய் வருகிறேன் அப்துல்.களத்தில் சந்திப்போம்! “ராணா தன் குதிரையில் தாவி ஏறினான்.

“ராணா!ஒரு கேள்வி? “

“கேள்! “

“உன் இடையில் இரண்டு வாள்கள் தொங்குகின்றனவே? எதற்காக? “

“நான் நிராயுதபாணிகளைக் கொல்வதில்லை.அப்படி சந்தர்ப்பம் வாய்த்து விட்டால் இந்த வாளில் ஒன்றைப் பரிசளிப்பேன்.போராடி வெல்வதே எனக்குப் பிடிக்கும்! “

“உன் வீரத்திற்கும், பெருந்தன்மைக்கும் தலை வணங்குகிறேன் ராணா! “

“ஜெய் பவானி! “என்ற முழக்கத்தோடு ராணாவின் குழு அங்கிருந்து கிளம்பியது.

“அசல் ராஜபுதன ரத்தத்தைப் பார்த்து விட்டேன்! “என்ற அப்துல் பேகத்தையும் மகளையும் தழுவிக் கொண்டான்.

அக்பரை இறுதி மூச்சுவரை எதிர்த்த பிரதாப் தன் 56 வது வயதில் மரணமடைந்தான்.

அவனுடைய மகன் அமர் சிங் மொகலாயப் படைகளை 13 முறை வென்று துரத்தியடித்தான்.

பிரதாப்பை எதிர்த்து போரிட முடியாது என்று பதவி விலகிய அப்துல் ரகீம் அக்பரின் மகன் சலீமின் மெய்க் காவலனாக நியமிக்கப்பட்டான்.

இழந்த மேவாரைத் திரும்ப பெறும் வரை ராணா வெறுந்தரையிலேயே உறங்கி சப்பாத்தியை மட்டுமே உண்டு வைராக்கியமாக வாழ்ந்து மேவாரை அக்பரிடமிருந்து கைப்பற்றினான்.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...