பள்ளி மாணவராக இருந்த நாட்களில் திலகர் ஒல்லியாக ஒடிந்து விழுகிறவராகத்தான் இருந்தார். கல்லூரியில் காலடி வைத்ததும், ஒரு வருடம் முழுவதும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வலிமையும் நிறைந்ததாக ஆக்கிக்கொண்டார்.
கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் ஐந்தாறு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் இளைஞரான திலகர். “நாம் சுயராஜ்ஜிய போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் நம்மை சி.ஐ.டி.கள் வட்டமிடுகிறார்கள். திடீரென்று இங்கே வந்து, அவர்கள் நம்மை வளைத்துக் கொண்டால், நாம் மாயமாய் மறைவது எப்படி?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
“இதோ இப்படித்தான்!” என்று சொல்லிக் கொண்டே, திலகர் தொபேலென்று கைப்பிடி சுவர் ஏறி மாடியில் இருந்து குதித்து விட்டார். மற்றவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு படி இறங்கி வந்து பார்த்தால், திலகர் ஆனந்தமாகக் கைகளைத் தட்டியவாறு படியேறி வந்து கொண்டிருந்தார்! பின்னாளில் “சுதந்திரம் நமது பிறப்புரிமை!” என்ற தாரக மந்திரத்தை நாட்டுக்குத் தந்தவர் அல்லவா அவர். விளையும் பயிர் முளையிலேயே - அன்றே பளிச்சென்று மின்னி இருக்கிறது!
No comments:
Post a Comment