நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்" பிறந்த தினம்.
அப்படி சிறப்பு என்ன?
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங் என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங், அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .
சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயிற்சியாளர் அவருக்கு சந்த்(chand )நிலா ஒளி என்று பெயரிட்டார்.
அது முதல் அவருக்கு தியான் சந்த் என்ற பெயர் நிலைத்துவிட்டது. தனக்கு பழக்கம் இல்லாத ஹாக்கி விளையாட்டு என்றாலும் முழு பயிற்சி பயிற்சி மூலம் தன்னை அதிக திறன் உள்ளவராக ஆக்கிக்கொண்டார் தியான்சந்த். நாமும் ஷாகாவில் அதிக பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவோம்.
அவரது அதீத திறமை காரணமாக ராணுவத்தின் அவரது பிரிவு அவரை அனைத்து ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது. அவரும் நாட்டுக்குள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று சிறப்பாக ஆடி வந்தார்.
முதல்முறையாக 1928ஆம் ஆண்டு ஹாக்கியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்தார்கள். அந்த ஆண்டு இந்திய குழுவில் தியான் சந்த் மற்றும் அவரது சகோதரர் நீப் சிங் உட்பட இந்திய குழு ஆம்ஸ்ட்ராங்மில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றது. முதல் முறையாக வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினார். அந்தப் போட்டிகளில் நமது குழுவில் பல வீரர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை சரி இல்லாமல் போனது தியான் சந்த் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராது அவர் சிறப்பான விளையாட்டை நடத்திக் காட்டினார். அதன்மூலம் சக வீரர்களுக்கு வெளிநாடுகளிலும் சென்று ஒன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மேலும் சர்வதேச அளவில் நமது ஹாக்கி குழு மீது மதிப்பு பிறந்தது.
தியான் சந்த் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனால் தியான் சந்த் அவர்கள் தன் முழுக்கவனத்தையும் திறன் வளர்ச்சியில் மட்டுமே செலுத்தினார் .நாம் ஆர்வத்தடனும், ஈடுபாட்டுடனும் சங்க வேலை செய்கிறோம். ஆனால் நமது கவனம் நம் திறனை வளர்ப்பதிலே முழுதும் செலுத்தவேண்டும். 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அது நாசிச ஆட்சியில் அடாப் ஹிட்லர் தலைமையில் இருந்த ஜெர்மனியில் நடக்க இருந்தது. அலுவல் காரணமாக தியான் சந்த் அவர்களுக்கு பயிற்சி முற்றிலும் கிடைக்கவில்லை. தேர்ச்சி விளையாட்டிற்கு நேரம் அனுமதி அவரது படைப்பிரிவு கொடுக்கவில்லை. ஆனால் நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் அவர் ஜெர்மனிக்கு குழுவோடு அனுப்பப்பட்டார். அங்கு சென்று எல்லா நேரத்திலும் பயிற்சி மேற்கொண்டு தங்களை எதிர்த்த எல்லா நாட்டு அணிகளையும், அதிக கோல் வித்தியாசத்தில் நமது அணி வெற்றி பெற்று வந்தது. எல்லாவற்றுக்கும் முன் நமது அணியை உற்சாகப்படுத்த தியான் சந்த் அவர்கள் அன்றைய காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக்கொடி முன் சபதம் ஏற்பார். மற்ற அணியினரும் அவரோடு சபதம் ஏற்பார்கள். சிறப்பாக விளையாடி நமது அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 15 ஆகஸ்ட் 1936 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அன்று மிகவும் சக்திவாய்ந்த ஜெர்மனியில், அதுவும் அவர்கள் நாட்டில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கண்முன் நடக்க இருந்தது. இதுவே ஹிட்லருக்கு தனது பெருமையை உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. .ஜெர்மனி வெற்றி பெற்று விடும் என்ற இருமாப்போடு இருந்த நேரம் அது.
விளையாட்டு தொடங்கியது முதல் காலப்பகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. நமது வீரர்களால் கோல் போட முடியவில்லை. ஆனால் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னிலையில் சென்றது. இரண்டாவது காலப்பகுதியின் போது தனது வேகம் குறைந்து வருவதாக உணர்ந்த தியான் சந்த் அவர்கள் தான் அணிந்த காலணியை(sports shoe) கழற்றிவிட்டு ஆடுகளத்தில் ஓடி விளையாட ஆரம்பித்தார். வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த மற்ற வீரர்களுக்கு உற்சாகம் பிறந்தது. தியான் சந்த் அடுத்தடுத்து கோல்களைப் போட பாரதம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஹிட்லர் உட்பட ஜெர்மானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய அணி 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.
தான் ஆடும் களம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், தன் குழு மீதும் தேசத்தின் மீதும் தன் மீதும், முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு விளையாடி வெற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒலிம்பிக் தங்கத்தை பெற்றுத் தந்தவர் தியான் சந்த் அவர்கள். நாமும் சங்க வேலை செய்யும்போது கடினமான சூழ்நிலைகள் வரும் ஆனால் தன் திறமை மீது நம்பிக்கை, தன் சக கார்யகர்தர்களுக்கு நம்பிக்கை, தன் தேசத்தின் மீது முழு நம்பிக்கையோடு வெற்றியை லட்சியமாகக் கொண்டு வேலை செய்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது தியான் சந்த் அவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள செய்த சில முயற்சிகள்
1. போசிஷன் மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் முழு நீள அகலத்தில் ஓடி செல்வார் அதன் மூலம் எதிரணியின் நிறை குறைகளை அறிந்து கொள்வார்.
2. ஹாக்கி மட்டையை விட்டு பந்து வெளியே செல்லாமல் இருக்கும் அளவிற்கு (dribbling) என்ற முறையை அதிகம் பழகுவார். ஒருமுறை நெதர்லாந்து நாட்டினர் அவருடைய மட்டையை வாங்கி அதில் காந்தம் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.
3. கோல் சரியாக போடுவதற்கு ஒரு காலிடயர் வைத்து அதனுள் பந்தை அடிக்க அதிக பயிற்சி எடுப்பார். அதன் மூலம் குறி மாறாமல் அடிக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டார்.
4. விளையாட்டின் அனைத்து விதிமுறைகளையும் சரியாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு முறை நடந்த விளையாட்டில் அவர் ஒரு கோல் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் கோல் போஸ்ட் அளவு தவறாக உள்ளது, அதை அளந்து சரி செய்யுமாறு கூறினார். அவர்களும் பார்த்தபோது அவ்வாறே தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின் சரி செய்தார்கள்.
ஆகவே ஹாக்கி உலகத்தின் மெஜிசியன் என்ற பெயரைப் பெற்ற தியான் சந்த் நமது நாட்டிற்கு ஒலிம்பிக் சங்கத்தை அளித்த பெருமையை பெற்றார். சுதந்திரத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் மேஜர் என்ற நிலைக்கு வந்து பணி ஓய்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது நமது அரசாங்கம். அவர் தன்னை பற்றி சொல்லும்போது “என்னிடம் இயற்கையான திறமை (Talent) இருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதை தக்கவைக்க கடும் உழைப்பை மட்டும் தான் நான் போட்டேன்” என்று அடக்கமாக கூறினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு மனிதன், விளையாட்டு வீரர், தேசபக்தர், யோகி, தியான் சந்த் அவர்களைப் போல நாமும் தினசரி ஷாகா மூலம் நம் திறமைகளை வளர்த்து, தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் பல நல்ல செயல்களில் வெற்றி பெற தொடர்ந்து கடும் உழைப்பை காணிக்கையாக்குகிறோம்.
No comments:
Post a Comment