Thursday, July 2, 2020

தலைவாசல் சாஸ்திரம்

தலைவாசல் கதவை எப்போதும் சாற்றி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? செய்யவேக்கூடாத தவறுகள் என்று சாஸ்திரம் கூறுவதென்ன?


நம் முன்னோர்கள் முந்தைய காலங்களில் எல்லாம் மஹாலட்சுமி வீட்டிற்குள் வருவதற்காக சில விஷயங்களை வழக்கமாக கடைபிடித்து வந்தனர். ஆனால் அதே விஷயத்தை இன்று பலரும் பின்பற்றுவதில்லை. அதற்கு நவீன கால பிரச்சனைகள் காரணமாக அமைந்திருந்தாலும், சாஸ்திர ரீதியாக இந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு பணவரவை தடை செய்கின்றன. நாம் என்ன தான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் வீட்டில் நிலைத்து நிற்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டுமல்லவா? ஒரு மனிதனுக்கு எப்படி சுவாசம் இன்றி அமையாத ஒன்றாக இருக்கிறதோ! அதே போல ஒரு வீட்டின் உயிர்மூச்சாக இருப்பது நிலைவாசல்.

வீடு கட்டும் போது வாசற்கதவு வைப்பதற்கு என்று தனியாக பூஜைகள் செய்வதுண்டு. தலைவாசல் கதவு சரியாக அமைந்தால் தான் அந்த வீடு சுபிட்சம் பெறும். அதனால் தான் அதற்கென்று பிரத்தியேக பூஜைகள் செய்யப்படுகின்றன. நிறைய சாஸ்திர, சம்பிரதாயங்கள் பார்க்கப்படுகின்றன. அத்தகைய தலைவாசல் கதவை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். இன்று தனி வீடுகளை விட கூட்டாக அமைந்த அடுக்குமாடி வீடுகள் பரவலாகக் காணப்படுவதால் இதனை செய்வதில் அவர்கள் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். நம் பாதுகாப்பு கருதி எப்போதும் நிலைவாசல் கதவை மூடியே வைத்து இருக்கிறோம். இதனால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? இதற்கான தீர்வுதான் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் அலசி ஆராய்வோம் வாருங்கள்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் வாசல் கதவை திறந்து வைத்திருப்பது என்பது முடியாத ஒரு விஷயம் தான். வீட்டில் இருக்கும் அனைவரும் வேலைக்கு செல்லும் நிலையில் வாசல் கதவை திறந்து வைப்பது மிகவும் ஆபத்தாக இருக்கிறது. அந்த காலத்திலெல்லாம் ஒரு வீட்டிற்கு இரண்டு கதவு கொண்டது போல் நிலைவாசலில் வைத்திருப்பார்கள். அதில் ஒரு கதவை மட்டும் மூடி வைத்திருப்பார்கள். அதுவும் உள்ளிருந்து வெளியே வரும் பொழுது வலது பக்கம் மூடி வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வெளியிலிருந்து உள்ளே வரும் பொழுது முதலில் வலது காலை எடுத்து வரவேண்டும் என்பதற்காக அது போன்ற அமைப்பை உருவாக்கி வைத்தார்கள்.

புதுமண பெண் மட்டுமல்ல. நாம் ஒவ்வொரு முறை வெளியே இருந்து உள்ளே செல்லும் போது வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல வேண்டும். நமது வலது காலில் தான் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் இருக்கிறார்கள். இடது காலில் மூதேவி இருக்கிறாள் என்று சாஸ்திரம் கூறியிருக்கிறது. நாம் இரவில் மூடி வைப்பது ஒன்றும் தவறில்லை. இரவில் எந்த நல்ல சக்தியும் வீட்டிற்குள் வருவதில்லை. ஆனால் பகல் முழுவதும் திறந்து வைத்திருப்பது மிகவும் நல்ல பலன்களை தரும். அறிவியல் ரீதியாக பார்த்தால், கதவைத் திறந்து வைப்பதால் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் மரங்களின் மூலம் நமக்கு தூய காற்றும் கிடைக்கும். எப்போதும் மூடிய நிலையில் வைத்திருப்பதால் சாஸ்திர ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிறைய கெடுபலன்கள் உண்டு.

பகல் முழுவதும் நம்மால் திறந்து வைத்திருக்க முடியாவிட்டாலும் வேறு ஒரு வழியை பின்பற்றலாம். சூரியன் உதயமாகும் காலை வேளையிலும், அந்தி சாயும் காலத்தில் நாம் விளக்கேற்றும் பொழுதும் ஒரு அரைமணி நேரமாவது அனைத்து கதவு ஜன்னல்களையும் திறந்து வைத்திருப்பது நன்மைகளை அளிக்கும். இதனால் வீட்டிற்குள் மகாலட்சுமி மனம் கோணாமல் உள்ளே வந்தமர்வாள். அவளின் அருள் இருந்தால் தான் நாம் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்க முடியும்.

https://chat.whatsapp.com/GAVV1K5wlFw461y4v69QYy

இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செயலாற்றுவது குடும்பத்திற்கு நல்ல விஷயம். ஒரு சில பேர் பூஜை செய்யும் பொழுது கூட கதவுகளை மூடி வைத்து செய்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு விஷயமாகும். பூஜை செய்யும் பொழுது கட்டாயம் கதவுகள் திறந்துதான் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பூஜை செய்வதற்குரிய பலன் கிட்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...