Showing posts with label நீதி கதைகள். Show all posts
Showing posts with label நீதி கதைகள். Show all posts

Saturday, May 23, 2020

பொறுமை

கந்தன் என்பவர் ஒருநாள் கோவிலுக்கு சென்றார். அந்த கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை பார்த்து அருகில் நின்று கவனித்தார். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டு எழுத்துக்கள் ஒன்றுமே புரியாது போல் இருந்தது. ஆனால் அவருக்கு அந்த எழுத்துக்களை படிக்க தெரியும். அதனால், அதை படித்து பார்த்தார்.

அந்த கல்வெட்டில் இந்த பெருமாளுக்கு யார் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறாறோ, அவருக்கு ராஜ பதவி கிடைக்கும்! என்று எழுதி இருந்தது. அதை படித்த கந்தன் அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா?

ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே! என்று நினைத்து வியந்து நின்றார்.

உடனே, ஓடிச்சென்று ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். மனதிற்குள் ஒன்று, இரண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். இப்பொழுது எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று..

உடனே கந்தன் புலம்ப ஆரம்பித்தார், என்னடா இது.! 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கிரீடத்தை எடுத்துக்கொண்டு யாராவது வருகின்றனரா? என்று சுற்றும், முற்றும் பார்த்தார். அப்படியாரும் அங்கு வரவில்லை. கந்தனுக்கு இருந்த பொறுமையும் குறைந்தது.

சரி எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம் என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தார். 96, 97, 98. குடம் ஊறினார். மீண்டும் ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம் என்று புலம்பினார்.

பொறுமையை இழக்க ஆரம்பித்தார். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது பலன் தெரியவில்லை. நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தார். உடனே, இவர் முன் பெருமாள் தோன்றி, பக்தா! நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம்.

நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன். நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மம் கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்! என்று கூறி மறைந்து விட்டார்.

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

Wednesday, May 6, 2020

சின்ன பிரச்சனை

உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. நாள்தோறும் ஒரு முயல் அந்த தோட்டத்திற்குள் நுழைந்து இலை, காய்கறி பிஞ்சுகளை தின்று வந்தது. அதை பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.

எப்படியாவது முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த உழவன் அரசனிடம் சென்றான். அரசரே... என் தோட்டத்தை முயல் ஒன்று வீணாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றான். சிரித்த அரசன் ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா? என்று கேட்டான்.

நான் முயலை பார்த்து கல்லையோ, கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை என்றான் அவன். நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலை பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன் என்றான் அரசன்.

மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான். எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர்களுக்கு சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்... என்று வேட்டையாடப் புறப்பட்டான்.

பின்பு வேட்டை நாய்கள் பயங்கரமாக குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.

அதைப் பார்த்த அரசன், அந்த முயலைத் தப்ப விடாதீர்கள். பிடியுங்கள் என்று கத்தியபடி வேலிப்பக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும், வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள். தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும், இங்கும் ஓடியது.

அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவரிடம் காட்டினான் அரசன்.

இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகிவிட்டதை அறிந்து வருந்தினான் உழவன். ஒரு முயல் என்ன?... ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள் தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேன் என்று வருந்தினான் உழவன்.

நீதி : சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய முடிவு எடுக்கக்கூடாது.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...