Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

Friday, July 18, 2025

புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில்கள்


01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேயசுவாமி கோயில்

02. தஞ்சாவூர் ஜயவீர ஆஞ்சநேயர் கோயில்

03. வீர ஆஞ்சநேயசுவாமி சன்னதி, கோதண்ட ராமர் கோயில், செங்கல்பட்டு.

04. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில் - அனந்தமங்கலம்

05. தாஸ ஆஞ்சநேயர் கோயில் - தர்மபுரி.

06. ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயசுவாமி கோயில், நங்க நல்லூர் சென்னை.

07. அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம், திருத்துறைபூண்டி,

08. சஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர்,

09. முக்யப்ராணா, ஆஞ்சநேயசுவாமி கோயில், திருவல்லிகேணி, சென்னை,

10. வீர மங்கள அனுமார், நல்லத்தூர், திருத்தணி,

11. யோக ஆஞ்சநேயர், சோளிங்கர்,

12. சஞ்சீவிராயர் கோயில், ஐயன்குளம், காஞ்சிபுரம்,

13. ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்,

14. ஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர், .

15. ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி, .

16. வீர ஆஞ்சநேயர் கோயில், கடலூர்,

17. அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூர்,

18. ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர்.

19. பங்க் ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர்.

20. தாஸ ஆஞ்சநேயர்,புது அக்ரஹாரம், திருவையாறு,

21. பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர்,

22. சஞ்சீவிராயன் என்னும் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், சைதாப்பேட்டை, சென்னை

23. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு,

24. ஆஞ்சநேய சுவாமி கோயில், பஜார் தெரு, கும்பகோணம், .

25. கோபிநாத சுவாமி கோயில் இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், கும்பகோணம்.

26. ஆஞ்சநேயர் கோயில், வடக்குக்கரை, பொற்றாமறை குளம், கும்பகோணம்,

27. விஸ்வரூப ஹனுமார், சுசீந்திரம், கன்யா குமரி,

28. சேது பந்தன ஜய வீர ஆஞ்சநேயர் கோயில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்,

29. பெரிய ஆஞ்சநேயர் கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம்,

30. சஞ்சீவிராயன் கோயில், ஆவூர்,புதுக்கோட்டை மாவட்டம்,

31. அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி,

32. ஜயவீர ஆஞ்சநேய சுவாமி கோயில், சிம்மக்கல், மதுரை,

33. ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச கோயில், கருப்பூர், கும்பகோணம்.

34. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை.

35. வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி கோயில், டி.பி. பாளையம், குடியாத்தம், வேலூர்.

36. சப்தஸ்வர ஆஞ்சநேயர், வானமுட்டி பெருமாள் கோயில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை.

37. சஞ்சீவிராய பெருமாள் கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி,

38. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், ஆரணி,

39. வீர ஆஞ்சநேயசுவாமி கோயில், கல்லணை,

40. ஹனுமந்தராயன் திருக்கோவில், தாதா முத்தியப்பன் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை

41. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், காக்களூர், திருவள்ளூர்,
       [வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]

42. பால ஆஞ்சநேயர், லக்ஷ்மிநரசிம்மர் கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம்,

43. ஹனுமார், கோதண்டராமர் கோயில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா,

44. வீர ஆஞ்சநேயர் கோயில், படைவீடு, திருவண்ணாமலை மாவட்டம்,

45.சுவாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஹனுமான், வேலூர்,

46. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஆஞ்சநேய சுவாமி கோயில், மதுரை,

47. ஆஞ்சனேயர் கோயில், சத்தியவிஜய நகரம், ஆரணி,
       [வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]

48. ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, திருவாரூர் மாவட்டம்,

49. ஆஞ்சநேயசுவாமி கோயில், பெரியநாயக்கன் பாளயம், கோயம்புத்தூர்

50. ஆஞ்சநேயர் கோயில், பூவனூர்
51. ஆஞ்சநேயசுவாமி கோயில், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை

52. அரங்கநாதன் கோயில் ஆஞ்சநேயர், காரமடை, கோயம்பத்தூர்,

53. இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை

54. வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர்,

55. ஆஞ்சநேயர் கோயில், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை,

56. சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம்,

57. பாவபோத ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம்,

58. முக்யப்ராணா கோயில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை

59. ஹனுமந்தராயன் கோயில், நொய்யல் நதிக் கரை, பேரூர், கோயம்புத்தூர்,

60. ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், சிறுமுகை, கோவை

61. ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை

62. வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோயில், ஆதனூர், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்,

63. வீர அழகர் பெருமாள் கோயிலின் ஆஞ்சநேயர், மானாமதுரை,

64. ஆஞ்சநேயர் கோயில், பைராகி மடம், தெற்கு சித்திரை வீதி, மதுரை,

65. எல்லைக்கரை ஆஞ்சநேய சுவாமி கோயில்,ஸ்ரீரங்கம்,
       [வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]

66. ஆனந்த ஆஞ்சநேயர், ஜகத்ரக்ஷக பெருமாள் கோயில், திருக்கூடலூர்,

67. தல்லா குளம் பெருமாள் கோயில் ஆஞ்சநேய சுவாமி, மதுரை,

68. அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்,

69. ஆஞ்சநேயர், சீதாராம ஆஞ்சநேய மடாலயம், அலங்கார் திரையரங்கம் பின்புறம், மதுரை

70. வீர ஆஞ்சநேயர், ரங்க விலாஸ் மண்டபம், ஸ்ரீரங்கம்,

71. ஹனுமார் கோயில், நவபிருந்தாவனம், சென்பாக்கம், வேலூர்,
       [வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]

72. சுந்தர வீர ஆஞ்சநேயர் கோயில், தர்மராஜா கோயில் வீதி, திருப்பத்தூர்,

73. அஞ்சலி வரத ஆஞ்சநேயர், சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டம்

74 பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயில் புதுச்சேரி அருகில், விழுப்புரம் மாவட்டம்

75 ஞானபுரி ஆஞ்சநேயர் கோயில் ஆலங்குடி அருகில், திருவாரூர் மாவட்டம்

Tuesday, January 24, 2023

செல்வநாராயணர் கோவிலில் உள்ள மகுடி வாசிக்கும் சிற்பம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலில் உள்ள ராயர கோபுரத்தின் கல் தூணில், ஒருவர் பாம்புக்கு மகுடி வாசிக்கும் சிற்பச்செதுக்கல் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..!!

Sunday, January 22, 2023

உமாமகேஸ்வரி ஹலபேடு

சிவ_பெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை, அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள், அதிலும் உமாமகேஸ்வரியின் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து, பொற்கொல்லர்களைப் போல் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்கள் நம் சிற்பிகள்..!!
அமைவிடம்: ஹலபேடு, ஹாசன் மாவட்டம், கர்நாடக மாநிலம்.

கிராதன்

சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. "கிராதன்" என்பதுவே சரி.


கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை த்தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்

திருக்கடையூ அபிராமி பட்டர்

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், "இன்று என்ன திதி..??" என கேட்டார். உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய "பவுர்ணமி" என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை. கோபமுற்ற மன்னன், "இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா..??" என்று கேட்க, அதற்கு பட்டர் "முடியும்..!!" என்றார். இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், "இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்..!!" என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது, அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். "இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்..!!" என்று சபதம் செய்தார்.

பின்பு,
‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார். உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச, அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக..!!’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும். அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்.


Wednesday, January 18, 2023

அஷ்டபுஜ காளி


கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி என்னும் ஊர். இங்கு சுவேத_விநாயகர் எனப்படும் வெள்ளை விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் வடக்குப் பகுதியில் அம்மன் சன்னிதி ஒன்று உள்ளது.
 சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, இந்த அஷ்டபுஜ காளி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அம்மனின் முன்பாக வாள், ஈட்டி, கேடயம் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் அனைத்தையும் வைத்து பூஜை நடத்தி, அம்மனின் உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் புகுந்துள்ளனர். அப்போது அவர்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை சோழர்களிடம் நிலவியிருக்கிறது.

இந்த அன்னை ஏகவீரி என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்று பெயர் மாற்றம் பெற்று கோவிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். தற்போது இந்த ஆலயத்திற்கு வரும் பலரும், இந்த அன்னையை கோவிலில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் என்ற வகையிலேயே பார்த்து வணங்கிச் செல்கின்றனர். ஆனால் , புன்னகை புரியும் போர்க்காலகாளி..!!
அந்த காலத்தில் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறாள் என்பது, அங்குள்ள கல்வெட்டுகளுக்கு மட்டுமே தெரியும். இந்த அன்னையின் புன்னகைக்கு ஈடாக எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு இந்த அஷ்டபுஜ காளியின் சிரிப்பு சிறப்பு வாய்ந்தது..!!

Friday, July 29, 2022

ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர்


 சிவபெருமான்  ராஜராஜேஸ்வரி தேவியை சதுரங்கத்தில  வென்று  மணத்தா கோவில் திருவாருர் மாவட்டத்தில் பூவனூரில் உள்ளது. இது பாடல் பெற்ற ஸ்தலம்.
ராஜா ஓருவர் குழந்தை இல்லாமல் இறைவன் நெல்லையப்பரிடம் வேண்டுகிறார். பார்வதிதேவியே மகளாக பிறப்பாள் என்று சிவபிரான் அருளுகிறார். ராஜா, ராணி இருவரும் ஆற்றங்கரையில் ஒரு சங்கை காண்கிறார்கள். அந்த சங்கை அவர்கள் எடுக்கும் பொழுது அது பெண்குழந்தை மாறுகிறது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தையை பார்த்து கொள்ள சிவனால் அனுப்பப்படுகிறார். ராஜராஜேஸ்வரி எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குகிறார்.சதுரங்கம் சிறப்பாக ஆடுவார். அதனால் ராஜா தன் பெண்ணுக்கு சதுரங்கம் ஆடுவதில் சிறந்தவரை திருமணம் பண்ண ஏற்பாடு செய்கிறார். சிவபெருமான் சித்தராக வருகிறார். சதுரங்கம் விளையாடி ஜெயித்து தான் ராஜராஜேஸ்வரியை மணப்பதாக ராஜாவிடம் சொல்லுகிறார். ராஜாவும் சம்மதிக்க சித்தர் சதுரங்கத்தில் வென்று ராஜராஜேஸ்வரியை மணக்கிறார். தெய்வீக திருமணத்தை இறைவன் எல்லோருக்கும் காண அருள்புரிகிறார். இவரை சதுரங்க வல்லப நாதர் என்ற திருநாமத்துடன் வணங்குகிறோம். 


https://maps.app.goo.gl/rg7u94kt8v31A7Fq5

Thursday, July 30, 2020

பசுபதேஸ்வரர் திருக்கோவில்

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி

பெயர் காரணம் 

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘"#ஆனந்தவனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது #பசுபதேஸ்வரர்ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘#வருணாச்சிமலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘#வாரணாசிபுரம்’ என்றும், ‘#வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘#சர்வேஸ்வரன்மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘#பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

திருதலத்தின் சிறப்புகள் 

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது
குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாடு 

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

ஓம் சிவாய நம 
சர்வம் சிவமயம் 
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 

                

Wednesday, July 22, 2020

பெரியபாளையம் பவானி அம்மன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

தல வரலாறு 

கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

*🔯வளையல் வியாபாரி 

முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

🚩ஆலய அமைப்பு :

பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.

ஓம் சக்தி 
பராசக்தி 

Wednesday, June 17, 2020

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோவில் !!

ஆரூர் அகிலேசுவரர் கோவில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோவிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.

மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்
உற்சவர் : அரநெறியப்பர்
தாயார் : வண்டார்குழலி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்
புராண பெயர் : ஆருர் அரநெறி
ஊர் : ஆருர் அரநெறி
மாவட்டம் : திருவாரூர்

தல வரலாறு :

நமிநந்தியடிகள் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோவிலில் உள்ள எம்பெருமானை வழிபட்டு வந்தார்.

இக்கோவிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோவில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோவிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார்.

கோவில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா? என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோவில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோவிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே? என கேலி பேசினார்.

இதனால் வருத்தமடைந்த அடிகள் கோவிலுக்கு வந்து, இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.

இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக, அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்.

கோவில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோவிலுக்கு தலைவராக்கி, கோவிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

தலபெருமை :

கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.

தல சிறப்பு :

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

Sunday, June 14, 2020

விண்ணவராய பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

மூலவர்–விண்ணவராய பெருமாள்

உற்சவர்–ஸ்ரீனிவாசன்

தாயார்–கனகவல்லி

ஆகமம்–வைகானசம்

பழமை–1000 வருடங்களுக்கு முன்

ஊர்–பழைய அம்பத்தூர்

மாவட்டம்–திருவள்ளூர்

மாநிலம்–தமிழ்நாடு

இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசன் ஒருவர், தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தார். கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுப்பொருள் ஏதும் கிடைக்காமல் பசியில் களைத்துப் போனார். அவருடன் வந்த வீரர்களும் பசி தாளாமல், ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவர்களது கண்ணில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கே ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வரும்படி வீரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் பெருமாள் கோயிலைக் கண்டனர். அர்ச்சகரிடம் தங்கள் நிலையைக் கூறினர். சுவாமிக்கு நைவேத்யம் செய்த வரகரிசி பிரசாதத்தை வீரர்களிடம் அர்ச்சகர் வழங்கினார். சுவாமிக்கே இவ்வளவு எளிய உணவா என எண்ணிய நவாப், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்டார். பஞ்சம் காரணமாக வரகரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வதாக அர்ச்கர் தெரிவித்தார். அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்து, நைவேத்யம் செய்ய பணஉதவியும் செய்வதாக வாக்களித்தார். அப்போது, வரகரிசி பிரசாதம் உடனடியாக உயர்ரக அரிசி பிரசாதமாக மாறியது. கண் எதிரில் நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட அரசன், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

பெருமாள் எதிரிலுள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். அத்துடன் தடைப்பட்ட திருமணங்கள், தடை நீங்கி கைகொடுக்கும். தாயார் கனகவல்லிக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. விண்ணவராயப் பெருமாளை 11 வாரம் சென்று பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன், உணவுக்குப் பஞ்சம் வராது என்ற நம்பிக்கை உள்ளது.

கோயில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருப்பது போன்று பல்லி வடிவம் மேற்கூரையில் செதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்டபம் இடிந்து போனதால், பல்லி உருவம் பொறித்த விதானக்கல்லை தனியே வைத்துள்ளனர். தலையில் பல்லி விழுதல் போன்றவற்றால் மனக்கஷ்டம் அடைந்துள்ளவர்கள், இதனை 11 வாரம் சென்று பூஜித்து, பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. கருவறையில் கரியமாணிக்கப்பெருமாள் என்ற தன் முந்தைய திருநாமத்திற்கு ஏற்ப, கரிய நிறத்துடன், அருள்ஒளி வீச நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமகளும், பூமகளும் அவரருகில் உள்ளனர். மூலவருக்கு முன் கருணை விழிகளுடன், அபயவரதகரங்களுடன் அன்பே வடிவாக கனகவல்லிதாயார் அருள்பாலிக்கிறாள். தாயாருக்கான தனிச்சன்னதி புனரமைக்கப்பட்டு வருவதால், பெருமாள் அருகில் தாயார் அருள்பாலிக்கிறார். திருவோணத்தன்று இந்தப் பெருமாளை வணங்கினால் நினைத்தவை கைகூடும்.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, கனகவல்லி தாயார், பெருமாள், கருடாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது சிறப்பு.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம், வைகுண்ட ஏகாதசி விழா தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, சர்ப்ப தோஷம் நீங்க இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுகின்றனர். வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. பிரார்த்தனை நிறைவேறியவுடன் துலாபாரம் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம:

Wednesday, May 27, 2020

அதிசயமான ஆலயங்கள்

1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் 

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்ற அழைக்கப்படுகிறார்.

24.சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

சிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது.

திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது. 

இந்த கோவிலில் இறைவன்: வீரட்டானேசுவரர், இறைவி: பெரிய நாயகி.

புண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திரு வதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்கு கிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.

கோவிலை பற்றி சம்மந்தர், நாவுக்கரசர், அருணகிரி நாதர், மனவாசம்டைந்தார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். 

எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவபெருமான், திருவதிகையில் முப்புரம் எரித்ததை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. 

திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. 

ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த கோவில் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது. 

கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.

இங்குதான் முன்பு ஒரு சமயம் சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோய் வரப்பெற்று சைவ மதத்துக்கு திரும்பிய போது தமக்கையார் திலவகதி அம்மையாரின் திருக்கரங்களால் அப்பர் பெருமானுக்கு திருநீறு பூசி கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றதால் திருநீற்றின் பெருமை உலகிற்கு உணர்த்திய தலமாகவும், திருநாவுக்கரசருக்கு வாழ்வில் திருப்பம் தந்த தலமாகவும் திருவதிகை திகழ்கிறது.

*திருநீறு அணியும் முறை*

மேலும் பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.

திருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. 

தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம். 

இங்கு தலை குனிந்து வந்தால் தலைநிமிர்ந்து வாழலாம். தலைகுனிந்து ஆணவம் கொள்ளாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பம் தரும் தலமாக இது திகழ்கிறது.

*தீர்த்த சிறப்பு*

திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். 

இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. 

இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.

*வராகி*

கோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். 

இந்த வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், வழக்கில் வெற்றிகளையும் கொடுத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி திருப்பம் தரும். தாய்க்கு தாயாக வராகி அம்மன் திகழ்கிறார்.

உள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். 

செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். 

வீரட்டா னேசுவரர் உமா தேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார். 

திருவதிகையில் ஒரு தடவை வந்து காலடி வைத்தாலே உன்ன தமான மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...