Sunday, January 22, 2023

கிராதன்

சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. "கிராதன்" என்பதுவே சரி.


கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை த்தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...