Sunday, January 22, 2023

சகல சௌபாக்ய அஷ்டகம்

1..மங்கள மாலினி மன்மத ரூபிணி மஞ்சுள பாஷிணி மதிவதனீ சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் பங்கயன் மாலொடு பரமனும் பணிந்திடும் பதுமபதங்கொளும் பகவதியே ஐயஜய மங்கள கவுரி மகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி 
2..கஞ்சியில் மிஞ்சிய கருணையுடன் திகழ் கற்பக மென்றொளிர் சிற்பரையே தஞ்சமென்றுன்சரண் சாருமெனக்கு நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் அஞ்சிய நெஞ்சுடனடிகள் பணிந்திடும் அன்பருக்கபயமளிப்பவனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

3..பூமகள் நாமகள் பூவடி போற்றிடப் பொலிவுடன் கொலுகொளும் பூரணியே தாமத மின்றியென் சஞ்சலம் தவிர்த்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் கோமள முகமதிற் குறு நகை கொஞ்சிடக் குங்குமமும் திகழ் கோமகளே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

4..பங்கய னுன்பதத் தூளிக ளால் பல அண்டமும் நன்கு படைத்தனனே சங்குடை மாயவன் தன் தலை ஆயிரம் கொண்டவை சீர்படத் தாங்கினனே சங்கரன் இறுதியில் சாம்பலுமாக்கியே தன் நுதலொளிபெற தரித்தனனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி.

5..கற்பகவல்லியும் கஞ்சிகாமாக்ஷியும் கயற்கண் மீனாக்ஷியுமானவளே சற்கதி கூடிட சஞ்சலமோடிட சகலசௌபாக்கியம் தந்தருள்வாய் பொற்பதம் போற்றிடும் புண்ணியர் கவலைகள் போக்கியருள்புரி பூரணியே ஜயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர
சுந்தரி காமாக்ஷி. 

6..ஆதியும் அந்தமும் அற்ற சுதந்தரி அகிலமும் தானென ஆனவளே பாத சரோருகம் பணியுமெனக்கு நீ பரிந்து சௌபாக்கியம் பல்கிடுவாய் வேதமெலாம்புகழ் மீன்விழியாள் பசும் பொன்னென மின்னிய மேனியளே ஐயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

7..நாதமும் பிந்துவும் நாடுமெய் ஞானமும் நானென நன்குமொருந்தவளே வேதனை நீங்கிட வெம்மிடர் தீர்ந்திட விரைவில் சௌபாக்கியம் தந்தருள்வா போதமெலாம்தரும் புண்ணியனே பல போகமு மிந்தருள் பூரணியே ஜயஜய மங்கள கவுரிய கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

8.ஜயஜய மங்கள சண்டிகையே ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரியே ஜயஜய ஜய சௌபாக்கிய சுந்தரி ஜயமகிஷாஸுரமர்த்தனியே ஜய ஜய ஜயலலிதாம்பிகையே ஐய ஐயபுவனேஸ்வரி பைரவியே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி . 

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...