Thursday, November 14, 2019

ராணா பிரதாப் சிங்கை

அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரைப் பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹூக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்குத் திரும்பியவனாக அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான்.அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்பிய அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில்  சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான்.

“சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணத்தை? “அப்துல்லின் குரல் மாளிகைச் சுவர்களில் எதிரொலிக்கிறது.

“ஒரு படையெடுப்பை நிகழ்த்தப் போகிறேன் அப்துல்.அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்! அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது.

“கட்டளையிடுங்கள்.
வெற்றிகனியைப் பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்! “

அக்பரின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை ஓடியது.

“ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் நீ வெல்ல வேண்டியது.
கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை! “கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவமாடியது.

“ராஜபுதனத்தின் சிங்கத்தை வெல்லச் சொல்கிறீர்கள்? “

“என் படைபலம் உமக்கு உண்டு.”

“ராணாவைத் தேடிப் பிடிப்பது வைக்கோலில் விழுந்த ஊசியைத் தேடுவது போன்றது.
ராணாவை குறி வைக்கக் காரணம்? “

“இந்துஸ்தானம் என் காலடியில் விழுந்து கிடக்கிறது அப்துல்.
ராஜபுதனமும் கூட.
ஆனால் உதய்ப்பூர் என்னும் மேவார் விழ மறுக்கிறது.என்னைத் தொழவும் மறுக்கிறது.
காரணம் ராணா.
அவனது வீரம்.என்னை அவமானம் செய்து மகிழ்கிறான் அவன்.
அவனது ஆணவத்தை போக்கியாக வேண்டும்.
மொகல் ராஜ்ஜியத்தின் கரும்புள்ளியை கலைந்தாக வேண்டும்! 

“என்ன சொல்லி அவமானப்படுத்துகிறான் ராணா? “

“என்னை எதிர்க்கும் அரசர்களின் தங்கைகளையும், மகள்களையும் மணந்து அவர்களை அடக்குகிறேனாம். பெண்களின் பாவாடையால் விஸ்தரிக்கப்பட்டது மொகல் சாம்ராஜ்ஜியம் என்று அவமதிக்கிறான் ராணா! “

“அது மட்டுமா? தங்களுக்குப் பெண் கொடுத்த ராஜபுத்திர அரசர்களை, மதம் மாறியவர்களை ராணா சற்றும் மதிப்பதில்லை.
சபை நடுவே கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறான்.  கூட்டிக் கொடுத்தவர்கள் என்று கேவலப்படுத்துகிறான். அவர்களை ராஜபுத்திர இனத்திலிருந்தே ஒதுக்கியும் வைக்கிறான்.!”

“எனக்கு இணங்காமல் ராணா இறுமாப்புடன் இருக்க என்ன காரணம்? “

“சித்தூரை நாம் கைப்பற்றிய போது நடந்தவற்றை ராணா இன்னமும் மறக்கவில்லை.அவன் நெஞ்சில் அணையாத நெருப்பாய் அந்த துயரம் எரிந்து கொண்டேயிருக்கிறது.!”

“சித்தூரை நாம் வெற்றி கொண்ட போது என்ன நடந்தது? “

“வென்ற நீங்கள் மறந்து விட்டீர்கள்.
பாதிக்கப்பட்ட அவன் அதை மறக்கவேயில்லை.நம் கையில் அகப்படாதிருக்கும் பொருட்டு 25,000 பெண்கள் ஜஹர் என்னும் தீக்குளிப்பில் இறந்ததை ராணா இன்னமும் மறக்கவில்லை.
தோற்றோடி ஆரவல்லி மலைக் குன்றுகளில் ஒளிந்து வாழ்ந்ததை மறக்கவில்லை.
உதய்பூர் என்னும் மேவாரை உருவாக்கி அரசாண்டதை மறக்கவில்லை.!”

“பயத்தில் அவர்கள் இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்.?”

“பயத்தை உருவாக்கியது நாம் தான்! “
“இருக்கலாம்!ஆனால் அவனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஜக்பல், சக்தி சிங், சரவ் சிங் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள்.சொந்த ரத்தங்களை எதிர்த்து ராணா யுத்தம் செய்கிறான்.அந்த துணிச்சல்? “

“மகாபாரதத்திலிருந்த கிருஷ்ணா உபதேசம் தரும் தைரியமது.
ஜக்பல் மேவாரின் அரசனாக வேண்டியவன்.மக்களும் அரசு பிரதானிகளும் அதை விரும்பாததால் ராணா மன்னனாக்கப்பட்டான். வெறுப்படைந்த ஜக்பல் உங்களோடு சேர்ந்து கொண்டான்.தன் உற்றார் உறவினர்களை பகைத்துக் கொண்டு சொந்த சகோதரர்களின் துரோகத்தை சகித்து கொண்டு காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து கொண்டு ஒற்றை ஆளாக ரஜபுதன வீரத்தை மெய்பித்துக் கொண்டிருக்கிறான் ராணா.”

“அந்த இனத்தின் பெருமைக்கு அவன் ஒருவன் போதும்.!”

“வீரன் வீழ்ந்தாலும் அவன் இனத்திற்கு பெருமை சேர்த்து விட்டே வீழ்கிறான்.
துரோகி நெடுநாள் வாழ்ந்தாலும் இனத்தின் பெயரை சேதப்படுத்தி விடுகிறான்.”

“உண்மை தான்.
ராணாவின் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்.
ஆனாலும் அவன் என் எதிரி.ஆகவே படையெடுப்பு துவங்கட்டும்.
ராணாவை உயிரோடு பிடிக்க முயற்சி செய்.!”

“விசித்திரமான விசயம் என்னவென்றால் உங்களின் தாத்தா பாபரை ராணாவின் தாத்தா ராணா சங்கா எதிர்த்தார்.இப்போது அவர்களின் பேரர்கள் களத்தில் எதிரெதிராக நிற்கிறீர்கள்! “

“தலைமுறை எதிரி! “என்றான் அக்பர்.

மறுநாள் அப்துல் ரகுமான் தலைமையிலான படை ரஜபுதனத்தை நோக்கி பயணமானது.தன் படைகளுடன் நிலை கொண்ட அப்துல் ராணாவைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தான்.அதே நேரம் படையை பின்பற்றி வந்து கொண்டிருந்த அப்துல்லின் மனைவியும் மகளும் வழி தவறியிருந்தனர்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! நாம் வழி தவறி விட்டோம்.
சரியான வழியை கண்டறிய முடியவில்லை! “என்றான்.

“அந்தி கவிழ்கிறது.
இனி என்ன செய்வது? “ஆயிசா குழம்பிக் கொண்டிருந்த போது அந்த குதிரை வீரர்கள் பல்லக்கு தூக்கிகளை சூழ்ந்தார்கள்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! பயம் வேண்டாம்! வழிப்பறி கொள்ளையர்களாக இருக்ககூடும்.
தளபதியின் பெயரைக் கேட்டதும் விலகி விடுவார்கள்! “என்றதுடன் அதை சொல்லவும் செய்தான்.
முன்னணியில் இருந்த குதிரை வீரன் உரக்கச் சிரித்ததுடன் “நல்லது.
நான் அமர்சிங்! ராணா பிரதாப் சிங்கின் மூத்த மகன்! “என்றான்.
பேகத்தின் முகம் சவமாக வெளுத்தது.
சேதியறிந்த அப்துல் எரிமலையானான்.

சற்று நேரத்தில் குதிரையில் வந்து இறங்கினான் ராணா பிரதாப்சிங்.

“வலிய வந்து மாட்டியிருக்கிறார்கள் எதிரியின் சொந்தங்கள்! “என்று அமர்சிங் ஆயிசாவையும் சாயீராவையும் சுட்டிக் காட்டினான்.

அருகே வந்து நின்ற ராணா “பயம் வேண்டாம் பெண்களே! என் பகை அப்துல்லோடு மட்டுமே! நீங்கள் என் விருந்தாளிகளே! இன்று இரவு பில் பழங்குடியினரோடு நீங்கள் தங்கலாம்.
நாளைக் காலை உங்களின் படைமுகாமுக்கு நானே அனுப்பி வைப்பேன்! “

சாயீரா ,அமர்சிங் பல்லக்கை மடக்கிய உடனேயே சேலைத் தலைப்பைக் கிழித்து ஆபரணங்களைக் கோர்த்து அவசரமாக இரண்டு ராக்கிகளை தயாரித்திருந்தாள்.

“உங்களை சகோதரர்களாக ஏற்க விரும்புகிறோம்.
கையை நீட்டுங்கள்! “
“அச்சம் வேண்டாம் பெண்ணே.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரிகளாக எண்ணுவது தான் இந்துஸ்தானத்தின் பண்பாடு.அதற்கு நாங்கள் விதி விலக்கல்ல.உன் மனசாந்திக்காக அதை கட்டி கொள்ளச் சம்மதிக்கிறேன்.இந்த நேரத்தில் இதே ராக்கியை வைத்து அக்பர் செய்த அயோக்கிய தனத்தை சொல்ல வேண்டியது என் கடமை! “

“சொல்லுங்கள்.இதே ராக்கியை அக்பரின் கரத்தில் கட்டினாள் ராணி துர்க்காதேவி.
சகோதரியாக எண்ணாமல் அவளைக் கொன்றான் அக்பர்.
பெண்களை கொல்லக் கூடாது என்ற மத விதிகளை அவன் மதிக்கவில்லை.
ஆனால் எங்களின் போர் விதிகள் பெண்களை சீரழிக்க சொல்லவில்லை! “

“அக்பரை போல் நீங்களும் வாக்கு தவறி? “

“நான் ராணா பிரதாப்சிங் பெண்களே! அக்பரை போல் ஈனப் பிறவியல்ல நான்.
இந்துஸ்தானத்தின் பெருமைக்கு ஒரு தீங்கும் என்னால் நேராது.பெண்களால் ஒரு வெற்றி கிட்டுமெனில் தோற்பதையே பெருமையாகக் கருதுவேன்.!”

அதே நேரம் தீக்கனவுகளைக் கண்டு தூக்கமிழந்து கொண்டிருந்தான் அப்துல்.விடியற்காலை வேளையில் முகாமிற்கு வெளியே சத்தத்தை கேட்டு எழுந்து வந்தவன் அதிர்ந்தான்.

வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ராணா.அவனுடன் அமர்சிங்கும் பில் பழங்குடியினரும் பேகமும் நின்றிருந்தனர்.

“இதோ! உனக்குச் சொந்தமானவைகள்.
எந்த சேதமும் இன்றி திரும்ப ஒப்படைக்கிறேன்.
பெற்றுக் கொள் அப்துல்! “

பேகமும் மகளும் முன்னேறி முகாமுக்குள் வர தாக்க முனைந்த வீரர்களை அப்துல்லின் சைகை நிறுத்தியது.

“போய் வருகிறேன் அப்துல்.களத்தில் சந்திப்போம்! “ராணா தன் குதிரையில் தாவி ஏறினான்.

“ராணா!ஒரு கேள்வி? “

“கேள்! “

“உன் இடையில் இரண்டு வாள்கள் தொங்குகின்றனவே? எதற்காக? “

“நான் நிராயுதபாணிகளைக் கொல்வதில்லை.அப்படி சந்தர்ப்பம் வாய்த்து விட்டால் இந்த வாளில் ஒன்றைப் பரிசளிப்பேன்.போராடி வெல்வதே எனக்குப் பிடிக்கும்! “

“உன் வீரத்திற்கும், பெருந்தன்மைக்கும் தலை வணங்குகிறேன் ராணா! “

“ஜெய் பவானி! “என்ற முழக்கத்தோடு ராணாவின் குழு அங்கிருந்து கிளம்பியது.

“அசல் ராஜபுதன ரத்தத்தைப் பார்த்து விட்டேன்! “என்ற அப்துல் பேகத்தையும் மகளையும் தழுவிக் கொண்டான்.

அக்பரை இறுதி மூச்சுவரை எதிர்த்த பிரதாப் தன் 56 வது வயதில் மரணமடைந்தான்.

அவனுடைய மகன் அமர் சிங் மொகலாயப் படைகளை 13 முறை வென்று துரத்தியடித்தான்.

பிரதாப்பை எதிர்த்து போரிட முடியாது என்று பதவி விலகிய அப்துல் ரகீம் அக்பரின் மகன் சலீமின் மெய்க் காவலனாக நியமிக்கப்பட்டான்.

இழந்த மேவாரைத் திரும்ப பெறும் வரை ராணா வெறுந்தரையிலேயே உறங்கி சப்பாத்தியை மட்டுமே உண்டு வைராக்கியமாக வாழ்ந்து மேவாரை அக்பரிடமிருந்து கைப்பற்றினான்.

ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம்

அத ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம் ||
மஹிம்னஃ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்றுஶீ
ஸ்துதிர்ப்ரஹ்மாதீனாமபி ததவஸன்னாஸ்த்வயி கிரஃ |
அதா‌உவாச்யஃ ஸர்வஃ ஸ்வமதிபரிணாமாவதி க்றுணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர னிரபவாதஃ பரிகரஃ || 1 ||

அதீதஃ பம்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோஃ
அதத்வ்யாவ்றுத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி |
ஸ கஸ்ய ஸ்தோதவ்யஃ கதிவிதகுணஃ கஸ்ய விஷயஃ
பதே த்வர்வாசீனே பததி ன மனஃ கஸ்ய ன வசஃ || 2 ||

மதுஸ்பீதா வாசஃ பரமமம்றுதம் னிர்மிதவதஃ
தவ ப்ரஹ்மன்‌ கிம் வாகபி ஸுரகுரோர்விஸ்மயபதம் |
மம த்வேதாம் வாணீம் குணகதனபுண்யேன பவதஃ
புனாமீத்யர்தே‌உஸ்மின் புரமதன புத்திர்வ்யவஸிதா || 3 ||



தவைஶ்வர்யம் யத்தஜ்ஜகதுதயரக்ஷாப்ரலயக்றுத்
த்ரயீவஸ்து வ்யஸ்தம் திஸ்ருஷு குணபின்னாஸு தனுஷு |
அபவ்யானாமஸ்மின் வரத ரமணீயாமரமணீம்
விஹன்தும் வ்யாக்ரோஶீம் விததத இஹைகே ஜடதியஃ || 4 ||

கிமீஹஃ கிம்காயஃ ஸ கலு கிமுபாயஸ்த்ரிபுவனம்
கிமாதாரோ தாதா ஸ்றுஜதி கிமுபாதான இதி ச |
அதர்க்யைஶ்வர்யே த்வய்யனவஸர துஃஸ்தோ ஹததியஃ
குதர்கோ‌உயம் காம்ஶ்சித் முகரயதி மோஹாய ஜகதஃ || 5 ||

அஜன்மானோ லோகாஃ கிமவயவவன்தோ‌உபி ஜகதாம்
அதிஷ்டாதாரம் கிம் பவவிதிரனாத்றுத்ய பவதி |
அனீஶோ வா குர்யாத் புவனஜனனே கஃ பரிகரோ
யதோ மன்தாஸ்த்வாம் ப்ரத்யமரவர ஸம்ஶேரத இமே || 6 ||

த்ரயீ ஸாங்க்யம் யோகஃ பஶுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதமதஃ பத்யமிதி ச |
ருசீனாம் வைசித்ர்யாத்றுஜுகுடில னானாபதஜுஷாம்
ன்றுணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ || 7 ||

மஹோக்ஷஃ கட்வாங்கம் பரஶுரஜினம் பஸ்ம பணினஃ
கபாலம் சேதீயத்தவ வரத தன்த்ரோபகரணம் |
ஸுராஸ்தாம் தாம்றுத்திம் தததி து பவத்பூப்ரணிஹிதாம்
ன ஹி ஸ்வாத்மாராமம் விஷயம்றுகத்றுஷ்ணா ப்ரமயதி || 8 ||

த்ருவம் கஶ்சித் ஸர்வம் ஸகலமபரஸ்த்வத்ருவமிதம்
பரோ த்ரௌவ்யா‌உத்ரௌவ்யே ஜகதி கததி வ்யஸ்தவிஷயே |
ஸமஸ்தே‌உப்யேதஸ்மின் புரமதன தைர்விஸ்மித இவ
ஸ்துவன்‌ ஜிஹ்ரேமி த்வாம் ன கலு னனு த்றுஷ்டா முகரதா || 9 ||

தவைஶ்வர்யம் யத்னாத் யதுபரி விரிஞ்சிர்ஹரிரதஃ
பரிச்சேதும் யாதாவனலமனலஸ்கன்தவபுஷஃ |
ததோ பக்திஶ்ரத்தா-பரகுரு-க்றுணத்ப்யாம் கிரிஶ யத்
ஸ்வயம் தஸ்தே தாப்யாம் தவ கிமனுவ்றுத்திர்ன பலதி || 10 ||

அயத்னாதாஸாத்ய த்ரிபுவனமவைரவ்யதிகரம்
தஶாஸ்யோ யத்பாஹூனப்றுத ரணகண்டூ-பரவஶான் |
ஶிரஃபத்மஶ்ரேணீ-ரசிதசரணாம்போருஹ-பலேஃ
ஸ்திராயாஸ்த்வத்பக்தேஸ்த்ரிபுரஹர விஸ்பூர்ஜிதமிதம் || 11 ||

அமுஷ்ய த்வத்ஸேவா-ஸமதிகதஸாரம் புஜவனம்
பலாத் கைலாஸே‌உபி த்வததிவஸதௌ விக்ரமயதஃ |
அலப்யா பாதாலே‌உப்யலஸசலிதாம்குஷ்டஶிரஸி
ப்ரதிஷ்டா த்வய்யாஸீத் த்ருவமுபசிதோ முஹ்யதி கலஃ || 12 ||

யத்றுத்திம் ஸுத்ராம்ணோ வரத பரமோச்சைரபி ஸதீம்
அதஶ்சக்ரே பாணஃ பரிஜனவிதேயத்ரிபுவனஃ |
ன தச்சித்ரம் தஸ்மின் வரிவஸிதரி த்வச்சரணயோஃ
ன கஸ்யாப்யுன்னத்யை பவதி ஶிரஸஸ்த்வய்யவனதிஃ || 13 ||

அகாண்ட-ப்ரஹ்மாண்ட-க்ஷயசகித-தேவாஸுரக்றுபா
விதேயஸ்யா‌உ‌உஸீத்‌ யஸ்த்ரினயன விஷம் ஸம்ஹ்றுதவதஃ |
ஸ கல்மாஷஃ கண்டே தவ ன குருதே ன ஶ்ரியமஹோ
விகாரோ‌உபி ஶ்லாக்யோ புவன-பய- பங்க- வ்யஸனினஃ || 14 ||

அஸித்தார்தா னைவ க்வசிதபி ஸதேவாஸுரனரே
னிவர்தன்தே னித்யம் ஜகதி ஜயினோ யஸ்ய விஶிகாஃ |
ஸ பஶ்யன்னீஶ த்வாமிதரஸுரஸாதாரணமபூத்
ஸ்மரஃ ஸ்மர்தவ்யாத்மா ன ஹி வஶிஷு பத்யஃ பரிபவஃ || 15 ||


மஹீ பாதாகாதாத் வ்ரஜதி ஸஹஸா ஸம்ஶயபதம்
பதம் விஷ்ணோர்ப்ராம்யத் புஜ-பரிக-ருக்ண-க்ரஹ- கணம் |
முஹுர்த்யௌர்தௌஸ்த்யம் யாத்யனிப்றுத-ஜடா-தாடித-தடா
ஜகத்ரக்ஷாயை த்வம் னடஸி னனு வாமைவ விபுதா || 16 ||

வியத்வ்யாபீ தாரா-கண-குணித-பேனோத்கம-ருசிஃ
ப்ரவாஹோ வாராம் யஃ ப்றுஷதலகுத்றுஷ்டஃ ஶிரஸி தே |
ஜகத்த்வீபாகாரம் ஜலதிவலயம் தேன க்றுதமிதி
அனேனைவோன்னேயம் த்றுதமஹிம திவ்யம் தவ வபுஃ || 17 ||

ரதஃ க்ஷோணீ யன்தா ஶதத்றுதிரகேன்த்ரோ தனுரதோ
ரதாங்கே சன்த்ரார்கௌ ரத-சரண-பாணிஃ ஶர இதி |
திதக்ஷோஸ்தே கோ‌உயம் த்ரிபுரத்றுணமாடம்பர-விதிஃ
விதேயைஃ க்ரீடன்த்யோ ன கலு பரதன்த்ராஃ ப்ரபுதியஃ || 18 ||

ஹரிஸ்தே ஸாஹஸ்ரம் கமல பலிமாதாய பதயோஃ
யதேகோனே தஸ்மின்‌ னிஜமுதஹரன்னேத்ரகமலம் |
கதோ பக்த்யுத்ரேகஃ பரிணதிமஸௌ சக்ரவபுஷஃ
த்ரயாணாம் ரக்ஷாயை த்ரிபுரஹர ஜாகர்தி ஜகதாம் || 19 ||

க்ரதௌ ஸுப்தே ஜாக்ரத்‌ த்வமஸி பலயோகே க்ரதுமதாம்
க்வ கர்ம ப்ரத்வஸ்தம் பலதி புருஷாராதனம்றுதே |
அதஸ்த்வாம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ரதுஷு பலதான-ப்ரதிபுவம்
ஶ்ருதௌ ஶ்ரத்தாம் பத்வா த்றுடபரிகரஃ கர்மஸு ஜனஃ || 20 ||

க்ரியாதக்ஷோ தக்ஷஃ க்ரதுபதிரதீஶஸ்தனுப்றுதாம்
றுஷீணாமார்த்விஜ்யம் ஶரணத ஸதஸ்யாஃ ஸுர-கணாஃ |
க்ரதுப்ரம்ஶஸ்த்வத்தஃ க்ரதுபல-விதான-வ்யஸனினஃ
த்ருவம் கர்துஃ ஶ்ரத்தா-விதுரமபிசாராய ஹி மகாஃ || 21 ||

ப்ரஜானாதம் னாத ப்ரஸபமபிகம் ஸ்வாம் துஹிதரம்
கதம் ரோஹித்‌ பூதாம் ரிரமயிஷும்றுஷ்யஸ்ய வபுஷா |
தனுஷ்பாணேர்யாதம் திவமபி ஸபத்ராக்றுதமமும்
த்ரஸன்தம் தே‌உத்யாபி த்யஜதி ன ம்றுகவ்யாதரபஸஃ || 22 ||

ஸ்வலாவண்யாஶம்ஸா த்றுததனுஷமஹ்னாய த்றுணவத்
புரஃ ப்லுஷ்டம் த்றுஷ்ட்வா புரமதன புஷ்பாயுதமபி |
யதி ஸ்த்ரைணம் தேவீ யமனிரத-தேஹார்த-கடனாத்
அவைதி த்வாமத்தா பத வரத முக்தா யுவதயஃ || 23 ||

ஶ்மஶானேஷ்வாக்ரீடா ஸ்மரஹர பிஶாசாஃ ஸஹசராஃ
சிதா-பஸ்மாலேபஃ ஸ்ரகபி ன்றுகரோடீ-பரிகரஃ |
அமங்கல்யம் ஶீலம் தவ பவது னாமைவமகிலம்
ததாபி ஸ்மர்த்றூணாம் வரத பரமம் மங்கலமஸி || 24 ||

மனஃ ப்ரத்யக்சித்தே ஸவிதமவிதாயாத்த-மருதஃ
ப்ரஹ்றுஷ்யத்ரோமாணஃ ப்ரமத-ஸலிலோத்ஸங்கதி-த்றுஶஃ |
யதாலோக்யாஹ்லாதம் ஹ்ரத இவ னிமஜ்யாம்றுதமயே
ததத்யன்தஸ்தத்த்வம் கிமபி யமினஸ்தத் கில பவான் || 25 ||

த்வமர்கஸ்த்வம் ஸோமஸ்த்வமஸி பவனஸ்த்வம் ஹுதவஹஃ
த்வமாபஸ்த்வம் வ்யோம த்வமு தரணிராத்மா த்வமிதி ச |
பரிச்சின்னாமேவம் த்வயி பரிணதா பிப்ரதி கிரம்
ன வித்மஸ்தத்தத்த்வம் வயமிஹ து யத் த்வம் ன பவஸி || 26 ||

த்ரயீம் திஸ்ரோ வ்றுத்தீஸ்த்ரிபுவனமதோ த்ரீனபி ஸுரான்
அகாராத்யைர்வர்ணைஸ்த்ரிபிரபிததத் தீர்ணவிக்றுதி |
துரீயம் தே தாம த்வனிபிரவருன்தானமணுபிஃ
ஸமஸ்தம் வ்யஸ்தம் த்வாம் ஶரணத க்றுணாத்யோமிதி பதம் || 27 ||

பவஃ ஶர்வோ ருத்ரஃ பஶுபதிரதோக்ரஃ ஸஹமஹான்
ததா பீமேஶானாவிதி யதபிதானாஷ்டகமிதம் |
அமுஷ்மின் ப்ரத்யேகம் ப்ரவிசரதி தேவ ஶ்ருதிரபி
ப்ரியாயாஸ்மைதாம்னே ப்ரணிஹித-னமஸ்யோ‌உஸ்மி பவதே || 28 ||

னமோ னேதிஷ்டாய ப்ரியதவ தவிஷ்டாய ச னமஃ
னமஃ க்ஷோதிஷ்டாய ஸ்மரஹர மஹிஷ்டாய ச னமஃ |
னமோ வர்ஷிஷ்டாய த்ரினயன யவிஷ்டாய ச னமஃ
னமஃ ஸர்வஸ்மை தே ததிதமதிஸர்வாய ச னமஃ || 29 ||

பஹுல-ரஜஸே விஶ்வோத்பத்தௌ பவாய னமோ னமஃ
ப்ரபல-தமஸே தத் ஸம்ஹாரே ஹராய னமோ னமஃ |
ஜன-ஸுகக்றுதே ஸத்த்வோத்ரிக்தௌ ம்றுடாய னமோ னமஃ
ப்ரமஹஸி பதே னிஸ்த்ரைகுண்யே ஶிவாய னமோ னமஃ || 30 ||

க்றுஶ-பரிணதி-சேதஃ க்லேஶவஶ்யம் க்வ சேதம் க்வ ச தவ குண-ஸீமோல்லங்கினீ ஶஶ்வத்றுத்திஃ |
இதி சகிதமமன்தீக்றுத்ய மாம் பக்திராதாத் வரத சரணயோஸ்தே வாக்ய-புஷ்போபஹாரம் || 31 ||

அஸித-கிரி-ஸமம் ஸ்யாத் கஜ்ஜலம் ஸின்து-பாத்ரே ஸுர-தருவர-ஶாகா லேகனீ பத்ரமுர்வீ |
லிகதி யதி க்றுஹீத்வா ஶாரதா ஸர்வகாலம் ததபி தவ குணானாமீஶ பாரம் ன யாதி || 32 ||

அஸுர-ஸுர-முனீன்த்ரைரர்சிதஸ்யேன்து-மௌலேஃ க்ரதித-குணமஹிம்னோ னிர்குணஸ்யேஶ்வரஸ்ய |
ஸகல-கண-வரிஷ்டஃ புஷ்பதன்தாபிதானஃ ருசிரமலகுவ்றுத்தைஃ ஸ்தோத்ரமேதச்சகார || 33 ||

அஹரஹரனவத்யம் தூர்ஜடேஃ ஸ்தோத்ரமேதத் படதி பரமபக்த்யா ஶுத்த-சித்தஃ புமான் யஃ |
ஸ பவதி ஶிவலோகே ருத்ரதுல்யஸ்ததா‌உத்ர ப்ரசுரதர-தனாயுஃ புத்ரவான் கீர்திமாம்ஶ்ச || 34 ||

மஹேஶான்னாபரோ தேவோ மஹிம்னோ னாபரா ஸ்துதிஃ |
அகோரான்னாபரோ மன்த்ரோ னாஸ்தி தத்த்வம் குரோஃ பரம் || 35 ||

தீக்ஷா தானம் தபஸ்தீர்தம் ஜ்ஞானம் யாகாதிகாஃ க்ரியாஃ |
மஹிம்னஸ்தவ பாடஸ்ய கலாம் னார்ஹன்தி ஷோடஶீம் || 36 ||

குஸுமதஶன-னாமா ஸர்வ-கன்தர்வ-ராஜஃ
ஶஶிதரவர-மௌலேர்தேவதேவஸ்ய தாஸஃ |
ஸ கலு னிஜ-மஹிம்னோ ப்ரஷ்ட ஏவாஸ்ய ரோஷாத்
ஸ்தவனமிதமகார்ஷீத் திவ்ய-திவ்யம் மஹிம்னஃ || 37 ||

ஸுரகுருமபிபூஜ்ய ஸ்வர்க-மோக்ஷைக-ஹேதும்
படதி யதி மனுஷ்யஃ ப்ராஞ்ஜலிர்னான்ய-சேதாஃ |
வ்ரஜதி ஶிவ-ஸமீபம் கின்னரைஃ ஸ்தூயமானஃ
ஸ்தவனமிதமமோகம் புஷ்பதன்தப்ரணீதம் || 38 ||

ஆஸமாப்தமிதம் ஸ்தோத்ரம் புண்யம் கன்தர்வ-பாஷிதம் |
அனௌபம்யம் மனோஹாரி ஸர்வமீஶ்வரவர்ணனம் || 39 ||

இத்யேஷா வாங்மயீ பூஜா ஶ்ரீமச்சங்கர-பாதயோஃ |
அர்பிதா தேன தேவேஶஃ ப்ரீயதாம் மே ஸதாஶிவஃ || 40 ||

தவ தத்த்வம் ன ஜானாமி கீத்றுஶோ‌உஸி மஹேஶ்வர |
யாத்றுஶோ‌உஸி மஹாதேவ தாத்றுஶாய னமோ னமஃ || 41 ||

ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் யஃ படேன்னரஃ |
ஸர்வபாப-வினிர்முக்தஃ ஶிவ லோகே மஹீயதே || 42 ||

ஶ்ரீ புஷ்பதன்த-முக-பங்கஜ-னிர்கதேன
ஸ்தோத்ரேண கில்பிஷ-ஹரேண ஹர-ப்ரியேண |
கண்டஸ்திதேன படிதேன ஸமாஹிதேன
ஸுப்ரீணிதோ பவதி பூதபதிர்மஹேஶஃ || 43 ||

|| இதி ஶ்ரீ புஷ்பதன்த விரசிதம் ஶிவமஹிம்னஃ ஸ்தோத்ரம்

Friday, November 1, 2019

முன்று வகை மனிதர்கள்

கிருபானந்த வாரியார் கூறியது

1. கஜ கர்ணம்🐘

2. அஜ கர்ணம்🐏

3. கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் :

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !!

அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...

அவர்களை கஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்..

2. அஜகர்ணம் :

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும் !!!

அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...

அவர்களை அஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

3.கோகர்ணம்

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !!!

அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள்...

இவர்களை கோகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...