Wednesday, April 17, 2019

ஏழு

ரிஷிகள் ஏழு

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
________________________________
கன்னியர்கள் ஏழு

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி,
வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
________________________________
சஞ்சீவிகள் ஏழு

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
மார்க்கண்டேயர்,
வியாசர்,
பரசுராமர்,
அசுவத்தாமர்.
_______________________________
முக்கிய தலங்கள் ஏழு

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
________________________________
நதிகள் ஏழு

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
________________________________
வானவில் நிறங்கள் ஏழு

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு. 
________________________________
நாட்கள் ஏழு

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
________________________________
கிரகங்கள் ஏழு

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
________________________________
மலைகள் ஏழு

இமயம்/கயிலை,
மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
________________________________
கடல்கள் ஏழு

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
________________________________
மழையின் வகைகள் ஏழு

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
________________________________
பெண்களின் பருவங்கள் ஏழு

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
________________________________
ஆண்களின் பருவங்கள் ஏழு

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
________________________________
ஜென்மங்கள் ஏழு

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
________________________________
தலைமுறைகள் ஏழு

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
________________________________
கடை வள்ளல்கள் ஏழு

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
________________________________
சக்கரங்கள் ஏழு

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம், 
மணிபூரகம், 
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
________________________________
கொடிய பாவங்கள் ஏழு

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
________________________________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
________________________________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
சனாதன தர்மத்துடன்...

குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் .

Friday, April 12, 2019

கவலைகள் மறப்போம்!

பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால்  அவதிப்பட்டபோது, தன்னுடைய மருத்துவருக்கு  போன் செய்து,  நெஞ்சுவலி அதிகமா இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு  அழைத்தார்.

       அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வர வேண்டியது தானே? என்றார்.

ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க கூட முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார்
      சரியென்று மருத்துவரும் தன் கிளினிக்கில் உள்ள நோயாளிகளைப் பற்றிய கவலையுடன், பெர்னார்ட்ஷாவின் வீட்டிற்கு வந்தார். மாடியில் தங்கியிருந்த ஷாவைப் பார்க்க படியேறிவந்தார். ஷாவைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய  நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.

    அதைப்பார்த்து பதறிப்போன ஷா , எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.

டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார். ஷா, சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து,  என்ன டாக்டர் இது?  எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து  நான்தானே பணிவிடை செய்தேன்.  எனக்கே பில் எழுதி தருகிறாயே? எனக்கேட்டார்.

அதற்கு டாக்டர் உங்களுக்கு பார்த்த வைத்தியக்குத்தாங்க இந்த ஃபீஸ் என்றார். 

மீண்டும் டாக்டர் சொன்னார்...

போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்...

"எழுந்து நடக்க முடியவில்லை" என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள்.

"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள கூட முடியவில்லை" என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க.

"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்.....

அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்; அதனால் அவை பெரிதாக தெரிந்தன.  இப்போ எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது பார்த்தீர்களா என்றார். (   ' இரு கோடுகள் ' தத்துவம் !  )

       இந்த கலந்துரையாடலில் எத்தனை யதார்த்தம் இருக்கிறது பாருங்கள். 

நம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத்தான் தெரியும். பிறரின் கவலைகளையும் நினைத்துப் பார்த்தால் அவற்றின் முன்பு
நம்முடைய கவலைகள் பரவாயில்லையே எனத் தோன்றும். அதன் தாக்கமும் நம் மனதை விட்டு பறந்து போகும்.

          கவலை யாருக்குத்தான் இல்லை ?
   நாமும் கவலைகளை மறந்து மகிழ்வாக வாழ்வோமே !

        அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை , தவறுகளை மறந்து அவர்களை மீண்டும் நம்பும் நமக்கு,  நமது கவலைகள் ஒரு பொருட்டா என்ன ?
       

ஈசன் உபதேசித்த தலங்கள் !

ஓமாம்புலியூர்

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

உத்திரகோசமங்கை

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

இன்னம்பர்

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

திருவுசாத்தானம்

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

ஆலங்குடி

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

திருவான்மியூர்

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

திருவாவடுதுறை

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

சிதம்பரம்

பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

திருப்பூவாளியூர்

நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

திருமங்களம்

சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

திருக்கழு குன்றம்

சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

திருமயிலை

1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.

செய்யாறு

வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

திருவெண்காடு

நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.

திருப்பனந்தாள்

அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

திருக்கடவூர்

பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

திருவானைக்கா

அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

மயிலாடுதுறை

குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

திருவாவடுதுறை

அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

தென்மருதூர்

1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.

விருத்தாசலம்

இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

திருப்பெருந்துறை

மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.

இராமேஸ்வரம்

திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

உத்தரமாயூரம்

ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

காஞ்சி

ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

திருப்புறம்பயம்

சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

விளநகர்

அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

திருத்துருத்தி

சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.

கரூர்

ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

திருவோத்தூர்

ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

ஓம் நமசிவாய...!
சிவாய நம ஓம்...!

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...