Sunday, May 31, 2020

தக்ஷயக்ஞஷத மூர்த்தி

தக்ஷன் சிவபெருமானை மதிக்காமல்., சிவ சிந்தனையே இல்லாமலிருந்தான்.

இதனையறிந்தோர் தக்ஷனிடம் சென்று சிவபெருமான் ஒருவரே கடவுள்., அவரை பகைக்க வேண்டாமென்றும்., அவரை வணங்கி வரவும் பணித்தனர். இதைக்கேட்ட தக்ஷனும் கையிலை சென்றான். ஆனால் அங்கேயிருந்த கணநாதர் தக்ஷனை திருப்பியனுப்பினர். இதனால் மனம் நொந்த தக்ஷன் தன் தலைநகர் திரும்பி அனைவரிடத்திலும் கையிலையில் நடந்ததைக் கூறி., சிவபெருமானை வணங்க வேண்டாமெனத் தடுத்தான். அதற்கு பிரம்மனை தவிர., தேவர்குழாமும் ஒப்புக் கொண்டது. ஒருமுறை பிரம்மன் யாகமொன்று நடத்த இருந்தான். அதற்கு அழைக்க சிவபெருமானை அழைத்துவர கையிலை சென்று அவரையும்ஹஅழைத்தான். அவரோ தனக்கு பதிலாக நந்திதேவரை அனுப்புவதாகக் கூறினார். அதன்படி யாகத்திற்கு நந்திதேவர் தனது பூதகணங்களுடன் சென்றார். இதனைக் கண்ட தக்ஷன் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல்., திருமாலுக்கு கொடுக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினான். இதனால் கோபமுற்ற பிரம்மன் தக்ஷனின் தலை துண்டாகவும்., அவனது கூட்டாளிக்கு (தேவர்களுக்கு) சூரபத்மனால் ஆபத்து உண்டு எனவும் சாபம் விடுத்தார். இதனால் அவ்வேள்வி தடைபட்டது. இதற்கிடையே தக்ஷன் ஒரு யாகம் நடத்த இருந்தான். சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் நடத்த நினைத்தான். உடனே தத்சி முனிவர் இது முறையற்றது., சிவபெருமான் இன்றி யாகம் செய்தல் கூடாது என்றார்.

பார்வதிதேவியும் அவிர்பாகம் பெற உக்கிரமாகாளி., வீரபத்திரர் உடன் வந்திருந்தார். பார்வதி தேவி கேட்டும் அவர்க்குரிய அவிர்பாகம் மறுக்கப்பட்டது. அப்பொழுது தேவர்கள் அனைவரும் ஊமை போல் காணப்பட்டனர். இதனால் பெருங்கோபம் கொண்ட வீரபத்திரர், தனது தண்டத்தால் திருமாலை அடிக்க அவர் வீழ்ந்தார். பின்னர் பிரம்மன் வீழ்ந்தார். வீரபத்திரர் சந்திரனைத் தன் காலடியில் தேய்த்தார். வீரபத்திரிரன் பூதகணங்கள் தக்ஷன் இருப்பிடம் யாகசாலை., கோட்டை., மதில் என அனைத்தையும் அழித்தனர். வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் துவம்சம் செய்தார். தேவகணங்களை வதைத்தார். தேவர்களின் மனைவியர்., இந்திராணி., தக்ஷனின் மனைவியர் என அனைவரையும் பார்வதி தேவியும்., காளியும் துவம்சம் செய்தனர். அனைவரும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கும்படி வீரபத்திரர் செய்தார். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப் படுத்தினார்.
பார்வதியின் உத்தரவிற்கேற்ப மாண்ட அனைவரும் உயிர் பெற்றனர்.
தக்ஷனையும் பிழைக்க வைக்கும்படி பிரம்மன் வேண்ட., உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். அவன் பார்வதி சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான்.

சிவபெருமான் தன்னை வணங்காத தக்ஷனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே *தக்ஷயக்ஞஷத மூர்த்தி* ஆகும். தரங்கம்பாடி., செம்பனார் கோயில் அருகே உள்ளத் ஸ்தலம் *திருப்பறியலூர்* (தற்போது பரசலூர் என்று வழங்குகிறது) ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேஸ்வரர்., என்பதும்., இறைவி திருநாமம் சுகந்த இளம்கொம்பனையாள்., என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும்., பால் நைவேத்தியமும் திங்கள்., பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.


இறைவனின் பெயர் : வீரட்டேஸ்வரர்., தக்ஷபுரீசுவரர்

உற்சவர் : சம்ஹாரமூர்த்தி.

இறைவியின் பெயர் : இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)

முகவரி : அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்., கீழப்பரசலூர்., திருப்பறியலூர் - 609 309. நாகப்பட்டினம் மாவட்டம்.

தொலைபேசி : +91 - 4364 -  205 555 & 287 429

கைப்பேசி : ~

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை., மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை திறந்திருக்கும்.

நம்பெருமாள்

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்...

ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு  கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்)  திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது....

1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து  மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.

பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்?

இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.

அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும் வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில்… அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே!


Saturday, May 30, 2020

ருக்மிணி கல்யாணம்

தாயார் ருக்மிணிக்கு சிசுபாலனுடன் திருமணம முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சமயம், விதர்ப்ப நாட்டில் எங்கு பார்த்தாலும் கல்யாண வைபவ விழாக் கோளம்.  கண்ணனை துவாரகையில் சந்தித்த ஒரு அந்தணர் ருக்மிணி சொன்னதாக கண்ணனிடம் சொன்னது.

""கண்ணா..... இப்போது நான்
சொல்வ தெல்லாம் என் குரல்வழி
ருக்மிணி சொன்னது... எனவே, என்னை மறந்து என் குரலையும்
மறந்து, ருக்மிணியை மனதில்
கொண்டு, நான் கூறுவதை
செவிமடுத்துக் கேட்பாயாக...'' என்று
அந்தணர் தொடங்குகிறார்.

""அச்சுதனே..... மூவுலகிலும் எழிலானவனே! உமது கல்யாண குணங்களை கேள்வியுற்ற நாள் முதல் என் மனம் உன்னையே நாடி
நிற்கிறது..... முகுந்தனே..... முக்திக்கு வித்தானவனே.... நல்ல குலத்தில் பிறந்த கன்னியர்களால் உன்னை விரும்பாமல் இருக்க முடியாது என்பதே என் பிரமாணம். நான் மட்டும் எப்படி விதிவிலக்காவேன்?
ஆகையினால், நான் என் மனதில்
உன்னையே என் கணவனாய் வரித்து விட்டேன். 

தாமரை மலர் போன்ற கண்கள்
கொண்டவனே! விரைந்து வந்து என்னை ஏற்றுக் கொள். இல்லாவிட்டால், சிசுபாலன் எனும் நரிக்கு நான் மாமிசமாகி விடுவேன். இதுநாள் வரை நான் வாழ்ந்த வாழ்வில் தானதர்மங்களும், புண்ணிய நீராடல்களும், மானசீக பூஜைகளும் இருந்தது உண்மையானால், கிருஷ்ண சந்திரனே! நீயே எனக்கு மாலையிடுவாய். சிசுபாலனுக்கு என்னிடத்தே இடமில்லை என்றாகட்டும்.

ஒருவேளை சிசுபாலன் என்னை
நெருங்கும் பட்சத்தில் அவனை சிதற அடித்து, என்னை நீ கவர்ந்து சென்றே தீர வேண்டும். இது என் மேல் ஆணை... இன்னும் சுலபமான வழியொன்றும் உண்டு.

நான் குலதெய்வத்தை தரிசிக்க வரும் சமயம் நீ அங்கு வந்தும் என்னைக் கவர்ந்து செல்லலாம். திண்தோள் மணிவண்ணா! உன் திருவடித் தூசுக்கு தவமிருப்போர் வாழும் இவ்வுலகில் உன்னை நான்
அடையாது போனால் என் பிறப்பே
வீணன்றோ? அது வீணகலாமா? ஒன்று மட்டும் உறுதி.. எத்தனை ஜென்மம் எடுத்தாவது நான் உன்னைச் சேர்ந்தே தீருவேன்!'' என்று ருக்மிணியின் உருக்கமான மொழிகளைச் சொல்லி முடித்த அந்தணர், ""கண்ணா... பாவம்
ருக்மிணி.... தவியாய்த் தவித்தபடி
உள்ளாள். அவளை ஏமாற்றி விடாதே..'' என்றார்.

கண்ணனும்மறுமொழியாக, ""பிராமணரே! உங்கள் வார்த்தைகளில் ருக்மிணியின் காதல் நெஞ்சம் பளிச்சென எனக்குத் தெரிகிறது. நான் ருக்மிணியை கை விட மாட்டேன். அதே சமயம், அவள் சகோதரன் ருக்மி, சிசுபாலன் பால் உள்ள நட்பாலும், அன்பாலும் என்னைப் பகைவனாக கருதுகிறான்.

அவனுக்கு நான் நேருக்கு நேர் நின்று பாடம் கற்பிப்பேன்,'' என்றான். சொன்ன கையோடு அந்தணரோடு அப்போதே விதர்ப்ப நாட்டுக்கு புறப்பட்டு விட்டான். 

கண்ணன் இப்படி ருக்மிணி நிமித்தம் தனியாக விதர்ப்ப தேசம் சென்ற செய்தி சற்று தாமதமாக பலராமரை எட்டியது. பலராமர் உடனேயே பெரும்படையைத் திரட்டினார். கண்ணனுக்குத் துணைபுரிய புறப்பட்டு விட்டார்.

அவருக்குத் தெரியும்.. ருக்மிணி
விஷயம் நிச்சயம் சண்டையில் தான்
முடியும் என்று.... விதர்ப்ப நாட்டிலோ எங்கு பார்த்தாலும் கல்யாணக் களை! சிசுபாலன் தான் மாப்பிள்ளை
என்னும் செய்தி மட்டும் ஊர் மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது.

அப்போது கண்ணனும், பலராமரும்
அங்கு வர, திருமணத்தில் பங்கு கொள்ளத் தான் வருகிறார்கள் என்றே எல்லோரும் எண்ணினார்கள்.

அந்தணர் மட்டும் முன்பாக ருக்மிணியிடம் சென்று, ""கண்ணன் உன்னைக் கவரும் பொருட்டே வந்திருக்கிறார். உற்சாகமாயிரு,'' என்று அவளை மகிழ்வித்தார். அவளும் புதுத்தெம்பு பெற்றாள்.

மறுபுறம் சிசுபாலனும் அவன் நண்பன் சால்வன், ஜராசந்தன், தந்தவக்கிரன், விதுரதன் முதலியோருடன் கூடி ஆலோசனை செய்யத் தொடங்கி விட்டான்.

கண்ணன் ருக்மிணியை அடைய
முயன்றால், யுத்தம் தான் என்கிற
முடிவுக்கும் அவர்கள் வந்தனர்.
ஜராசந்தன், ஏற்கனவே கண்ணன் மேல் 18 முறை போர் தொடுத்தான்.
சிசுபாலனோ, கண்ணனே தன் காலன் என்று அவன் மேல் பெரும் அச்சத்தோடு இருப்பவன். இவர்கள் சேர்ந்தால் கேட்க வேண்டுமா?

மறுநாள், மணமேடையில் ருக்மிணி மாலையும் கழுத்துமாய் நின்ற நிலையில் அவர்கள் பயந்தது போல்
தான் நடந்தது. கண்ணனின் ரதம் அவள் முன் வந்து நின்றது தெரியவில்லை. அதில் ருக்மிணி ஏறியது தெரியவில்லை. 

அப்படியொருமின்னல் வேகம்... அந்த ரதம் துவாரகை நோக்கிப் பறக்க ஆரம்பித்து விட்டது. பின் தொடர்ந்த சிசுபாலனையும், ஜராசந்தனையும் பலராமர் பார்த்துக் கொண்டார்.

அப்படியும் ருக்மிணியின் சகோதரன் ருக்மி கண்ணனை விடாது பின் தொடர்ந்து மறித்து விட்டான். அடாத வார்த்தைகள் பேசி பாணம் போட முயன்றான். ஆனால், கண்ணனின் பாணங்களால் அவன் நிலை குலைந்து போனான். இறுதியாக, அவனது உயிரைப் பறிக்க வாளை உருவிய போது, ருக்மிணி, தன் சகோதரனை விட்டுவிடும்படி, கண்ணனின் காலில் விழுந்து கதறினாள்.

""பிரபோ... என் சகோதரனை ஏதும்
செய்து விடாதீர்கள். அவனை
மன்னித்து விடுங்கள்.....'' என்றாள்.
கண்ணனும் அவனை மன்னித்தான். பின் ருக்மிணியுடன் துவாரகை வரவும் ஊரே திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றது.

விதர்ப்ப நாட்டு கல்யாணக் களை
இப்போது துவாரகைக்கு வந்து விட்டது.

இப்படி ருக்மிணி பரிணயத்தை இந்த
உலகறியச் சொன்னவர் சுகமுனிவர்.
இவரே கிருஷ்ண பத்தினியர்களில்

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.

2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி : ஹதாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

Wednesday, May 27, 2020

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

ஸ்ரீ  சனீஸ்வர கவசம் படித்து நமது துன்பங்களை நீக்கிக்கொண்டு இன்பங்கள் பெற்று மகிழ 

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

நெருங்கிடு பிணி யெலாம்

நீக்கு நோன்மையும்

ஒருங்கு மொய்ம்பு இரண்டும்

ஆங்குறும் கருந்துகில்

மருங்குலும் கழுகிவர்

வனப்பும் கொண்டு அமர்

அருங்கதிர் மதலை தாள்

அன்போடு ஏத்துவாம்!

(வேறு)

மறுவறும் எனது சென்னி

வளர்புகழ்ச் சனி புரக்க

பெறுமுகம் அன்பர் அன்பன்

பேணுக செவி கறுக்கும்

அறுவை நன்கு அணிவோன் காக்க

அச்சமே விளைக்கு மெய்யோன்

நறுமலர் விழி புரக்க

நாசி கை காரி காக்க.

கருங்களம் உடைய தேவன்

கவின்படு கண்டம் காக்க

பெருங்கடின் படுபு யத்தோன்

பெருவரைப் புயம் புரக்க

வருங்கை நீலோற் பலம்போல்

வளர்ஒளி அண்ணல் காக்க

ஒருங்குறும் எனது நெஞ்சம்

உடல் கரியவன் புரக்க.

சுந்தரம் தழுவும் உந்தி

சுட்கமாம் வயிற்றோன் காக்க

சந்தமார் விகடன் செய்வோன்

தடம்படு கடி புரக்க

நந்திய கோர ரூபன்

நற்றொடை புரக்க நாளும்

முந்துறு நெடிய ரூபன்

மொழிதரு முழுந்தாள் காக்க.

மங்கலம் ஈயும் ஈசன்

வனப்புறு கணைக்கால் காக்க

தங்குறு பரடு இரண்டும்

தகு குணாகரன் புரக்க

பங்கெனப் படுவோன் பாதம்

பழுதறப் புரக்க பார்மேல்

செங்கதிர் அளிக்கு மைந்தன்

திருந்திமென் அங்கங் காக்க.

நன்றிதரு சனிகவச நாள்தோறும்

அன்பினொடு நவின்று போற்றில்

வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்

பெருவாழ்வு மேவ நல்கும்

கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்

பிணி ஒழிக்கும் கவலை போக்கும்

அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி

யம்கனியாம் அவனி யோர்க்கே.

அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்

இயந்திரம் எள்ளுள் அமரவைத்து

வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்

பூசித்து மனுப்பு கன்று

பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்

கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்

கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்

களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.

ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு

அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்

தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு

வாழ்நாளும் செல்வப் பேறும்

ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்

றப்பொலிவும் உதவும் காண்பீர்

வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்

கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்


சனி பகவானின் மூல மந்திர

ஏழரை சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி திசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இதோ சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்கள் !

சனி பகவானின் மூல மந்திர ஜபம்:

"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", 

 இதை 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்!

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி சனைச்சரம்!!

சனி காயத்ரி மந்திரம்:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|

தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி திசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

அதிசயமான ஆலயங்கள்

1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் 

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்ற அழைக்கப்படுகிறார்.

24.சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

சிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது.

திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது. 

இந்த கோவிலில் இறைவன்: வீரட்டானேசுவரர், இறைவி: பெரிய நாயகி.

புண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திரு வதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்கு கிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.

கோவிலை பற்றி சம்மந்தர், நாவுக்கரசர், அருணகிரி நாதர், மனவாசம்டைந்தார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர். 

எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சிவபெருமான், திருவதிகையில் முப்புரம் எரித்ததை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்தன. 

திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. 

ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த கோவில் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது. 

கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.

இங்குதான் முன்பு ஒரு சமயம் சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோய் வரப்பெற்று சைவ மதத்துக்கு திரும்பிய போது தமக்கையார் திலவகதி அம்மையாரின் திருக்கரங்களால் அப்பர் பெருமானுக்கு திருநீறு பூசி கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றதால் திருநீற்றின் பெருமை உலகிற்கு உணர்த்திய தலமாகவும், திருநாவுக்கரசருக்கு வாழ்வில் திருப்பம் தந்த தலமாகவும் திருவதிகை திகழ்கிறது.

*திருநீறு அணியும் முறை*

மேலும் பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.

திருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. 

தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம். 

இங்கு தலை குனிந்து வந்தால் தலைநிமிர்ந்து வாழலாம். தலைகுனிந்து ஆணவம் கொள்ளாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பம் தரும் தலமாக இது திகழ்கிறது.

*தீர்த்த சிறப்பு*

திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். 

இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. 

இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.

*வராகி*

கோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். 

இந்த வராகி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகளையும், வழக்கில் வெற்றிகளையும் கொடுத்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி திருப்பம் தரும். தாய்க்கு தாயாக வராகி அம்மன் திகழ்கிறார்.

உள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். 

செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். 

வீரட்டா னேசுவரர் உமா தேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார். 

திருவதிகையில் ஒரு தடவை வந்து காலடி வைத்தாலே உன்ன தமான மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

திருந்து தேவன்குடி திருப்பதிகம்

"சம்பந்தப் பெருமான் தேவாரம்"

குறிப்பு: "நண்டாங்கோயில்", என்று தற்காலத்தே அழைக்கப் பெறுகிறது, 

இது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காவிரி வடகரை வழியே மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள "திருவியலூர்" என்ற பாடல் பெற்ற தலத்திற்கு வடக்கே 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இது "அம்பிகை நண்டுருவில் இறைவனை வழிபட்ட தலம், இந்திரனுங் கூட தன்னிலை மறந்து ஆலயத்தை சுற்றி அகழி ஒன்றில் தாமரை மலர்களை பயிரிட்டு அம்மலர்களை கொண்டு இத்தல இறைவரை வழிபட்டு வந்தனன்"

ஒருமுறை நண்டு உருவில் இருந்த அம்பிகை இந்திரனது காவலில் இருந்த தாமரை மலரைபறித்து வந்து இறைவனுக்கு சாற்ற முயன்று பெருமானது திருமேனியில் ஏறி படர்ந்து சென்றதனை கண்ட இந்திரன்,

தன் கைவாளால் நண்டினை ஓங்கி வெட்டினன், ஆனால் வெட்டு நண்டின் மேல் விழாமல் சுவாமியின் திருமேனி மீது விழுந்தது 

இரண்டு வெட்டிற்கு தப்பித்த நண்டு மூன்றாவது வெட்டின் போது சிவலிங்கத் திருமேனியின் உச்சியில் ஏறியிருந்தது, "அச்சமயம் இந்திரன் நண்டினை வெட்ட முயன்ற போது இறைவன், லிங்க உச்சியில் ஒரு வளையை உண்டு பன்னி அதனுள் நண்டுருவில் இருந்த அம்பிகையை ஐக்கியப் படுத்தி கொண்டனர்"

உடனே அம்பிகை தன் பழமையான நண்டுருவு நீங்கி இறைவனுடன் காட்சி தரவே "தேவேந்திரன் மனந்திருந்தினன்" ஆதலால் இத்தலம் "திருந்து தேவன்குடி" என்று அழைக்கப் பெருகிறது

திருந்து தேவன்குடி தற்காலத்தில் மக்கள் வாழும் பகுதியாக இல்லாமல் நஞ்சை நிலப்பகுதியாக உள்ளது, நஞ்சை நிலங்களுக்கு மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது, காலையும் மாலையும் மட்டும் அருகிலுள்ள திருவியலூரில் இருந்து அர்ச்சகர் ஒருவர் வந்து வழிபாடு பன்னுகிறார்

நண்டு வழிபட்ட இறைவர் ஆதலால் "கற்கடகேஸ்ரர்" எனப்படுகிறார், சுவாமி திருமேனியில் இந்திரனது வெட்டு தழம்பும் நண்டுவளையும் இன்றுங் காணத்தக்கது

"ஆடிப்பூரமும் அமாவாசையும் கூடிய நந்நாளில் இருபத்தியொரு குடம் பசுப்பாலால் அபிசேகித்தால் வளையில் இருந்து நண்டு வெளிப்பட்டு காட்சி அளிக்கும் என்று "வசிஸ்ட்ட மாத்மியம்" என்ற நூல் கூறுகிறதாம்"

மேலும், உவேசாமி நாதையர் அவர்கள், "ஒரே நிறம் கொண்ட காராம் பசுப்பால் பத்து கலம் கொண்டு பெருமானை அபிசேகித்தில் லிங்க உச்சியில் பொன்னிற வண்டு ஊர்வது போல காட்சி கிடைக்கும் என்கிறார்கள்"

"திருஞானசம்பந்தப் பெருமான் தமது காவிரி வடகரை தலயாத்திரையில் திருவியலூரை வணங்கி செங்கண் விடையார் திருவேடங் காட்டும் திருந்து தேவன்குடி வந்தடைந்தனர்

"திருந்து தேவன் குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்திப் பொருந்திய காதலிற் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார் மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்" என்பது சேக்கிழார் பெருமானது திருவாக்கு

"மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை புரிந்து கேட்கப் படும் புண்ணியங்கள் இவை அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!!" என்று இறைவனது திருவேடச்சிறப்பினை குறிக்கும் சிறப்பு பொருந்திய பதிகத்தினை பிள்ளையார் இங்கருளியமையை சேக்கிழார் பெருமான் குறிப்புணர்த்துவது எண்ணுந் தொறும் இனிமை செய்வதாம்

"வேடங் கைதொழ வீடு எளிதாமே!!" என்ற அப்பரடிகள் வாக்கிற்கு இணங்க திருவேடத்தின் சிறப்பே இப்பதிகம் முழுதும் ஓதப்படுகின்றது

"மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே" என்று ஸ்ருதிபலன் கூறும் பதிகப் பாடல்கள் இவை

பண்: கொல்லி

பாடல்

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

வீதி போக்காவன வினையை வீட்டுவ்வன
ஓதியோர்க்கப் படாப் பொருளை ஓர்விப்பன
தீதில் தேவன்குடித் தேவர்தேவு எய்திய
ஆதி அந்தம்மிலா அடிகள் வேடங்களே.

மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன வானை உள்கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண்டும் மிசை பாடுந் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே

பொருள்

திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட் கெல்லாம் தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும் , மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும் , சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் .

தேவர்கட்கெல்லாம் தேவனாக , தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன

தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன .

திருச்சிற்றம்பலம்


திருமந்திரம் 1055:


"தான் எங்குளன், அங்கு உளள் தையல் மாதேவி,
ஊன் எங்கு உள , அங்கு உள உயிர்க்காவலன்;
வான் எங்கு உள அங்குளே வந்து மப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே"

எங்கெங்கு சிவபிரான் விளங்கி நிற்கிறாரோ, அங்கங்கு அவரை அதிட்டித்து விளங்குபவள் தையலாள்!! என்றும் பதினாறு வயதுடையவள் ஆதலின் அவள் தையல் நல்லாள்!! மாதேவி!! இவளை விட பெரியவர் எவருமில்லை ஆதலின் இவள் மஹாதேவி!!

எங்கெல்லாம் உடம்பு இருக்கிறதோ, அங்கெலாம் உயிர் விளங்குவது போல், சிவனிருக்குமிடத்தெல்லாம் , அச்சிவத்திற்கு ப்ரணனைப்போல் விளங்குபவள் மஹாதேவியாகிய அம்பிகை!! உயிருக்கு காவலாய் விளங்கி நிற்பவளும் இவளேயன்றோ!!

வெளியில்லாத இடம் என்பது எதுவும் கிடையாது!! அதுபோல் எவ்விடத்திலும் நிறைந்திருப்பவள் பராசக்தி!! "Vacuum" என்றால் வெற்றிடம் என்பர்!! அவ்விடத்திலும் வெளியானது நிற்கும்!! அவ்வெளி எங்கும் நிறைந்துள்ளதைப் போல் பராசக்தியாகிய அம்மையும் எவ்விடத்திலும் விளங்கி நிற்பவள்!! அவளில்லாத இடமே எங்கும் இல்லை!!

அப்படிபட்ட மாதேவி அவ்வெளியையும் கடந்து பரஞான மயமாய் ஒளிர்பவள்!! ஆகாயத்தினைக் கடந்த பரவெளியிலும் அவள் விளங்குவதை ஞானியர் காண்பர்!! ப்ரஹ்மாணடத்தைச் சுற்றி ஒரு சுவர் உண்டு!! அதற்குள்ளே தான் கைலாயம், வைகுண்டம் முதலியன இயங்கும்!! அதன் வெளியில் சிதாகாசம்!! ஆங்கு நாதசக்தியாக மஹாசம்புநாதரும், ஞானசக்தியான பராசக்தியும் விளங்குவர்!! அங்கு ஞானமயமாய் விளங்குபவளும் திரிபுரை ஆவாள்!!

அச்சிதாகாசத்திற்கும் அப்பால் மஹாகைலாயம் விளங்கும் என்று கூறுவர்!! பூர்ண ப்ரம்ம வடிவான சிவசக்தியர் அங்கே உறைவர்!!

ஆதலின் உலகிற்குள்ளும் அப்பாலும் எவ்விடத்திலும் விளங்குவது திரிபுரை ஒருத்தியே!! அவளே யாவுமாய், எதிலுமாய், எங்குமாய் ஒளிர்வாள்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:


ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஜம் ||
இக்ஷூ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை : |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம்
சம்மோஹனம்  க்ருஷ்ண மாஸ்ரயே ||

நற்றுணையாவது நமசிவாயவே

திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

ஆறாம் திருமுறை

திருமறைக்காடு
திருத்தாண்டகம்


தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
  தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
  கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
  மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
  காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
  மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
  பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்
  திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
  நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
  தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
  காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
  புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்
  வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
  முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
  இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
  அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
  அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
  குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
  நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றான

வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்
  விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
  அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்
பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்
  பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
  அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
  என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
  வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
  முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
  ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
  பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் றானே

அயனவனும் மாலவனு மறியா வண்ணம்
  ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று
  சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
  பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாலன் றானே

நற்றுணையாவது நமசிவாயவே

            திருச்சிற்றம்பலம்

சகல ரோக நிவாரணி அஷ்டகம்

ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகம், நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்த,மிக மகிமை வாய்ந்த துதியாகும். நம்பிக்கையுடன் இதைப் பாராயணம் செய்து அம்பிகையைப் பூஜித்தால், அம்பிகையின் அருளால், சகல விதமான நோய்களும், பிறவிப்பிணியும் நீங்கி பேரானந்த நிலையை அடையலாம்.

ராகு காலத்தில் - குறிப்பாக செவ்வாய்க் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை
அம்மாவாசை மற்றும் அதற்கு முன் நாள், பௌர்ணமி போன்ற நாடுகளில் இந்த வழிபாடு செய்யலாம்.

ராகு காலத்தில் ஏற்ற ஒரு குத்து விளக்கை வாங்கி கொள்ளவும்.

அந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி கிழே கொடுத்துள்ள சகல ரோக நிவாரணி அஷ்டகம் படிக்கவும்.


பகவதி தேவி பர்வத தேவி.

பலமிகு தேவி துர்க்கையளே

ஜகமது யாவும் ஜயஜயவெனவே

சங்கரி உன்னைப் பாடிடுமே

ஹநஹந தகதக பசபச வெனவே

தளிர்த் திடு ஜோதியானவளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


தண்டினி தேவி தக்ஷிணி தேவி

கட்கினி தேவி துர்க்கையளே

தந்தன தான தனதன தான

தாண்டவ நடன ஈச்வ ரியே

முண்டினி தேவி முனையொளி சூலி

முனிவர்கள் தேவி மணித் தீவியளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


காளினி நீயே காமினி நீயே

கார்த்திகை நீயே துர்க்கையளே

நீலினி நீயே நீதினி நீயே

நீர்நிதி நீயே நீர் ஒளியே

மாலினி நீயே மாதினி நீயே

மாதவி நீயே மான் விழியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


நாரணி மாயே நான் முகன் தாயே

நாகினியாயே துர்க்கையளே

ஊரணி மாயே ஊற்றுத்தாயே

ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே

காரணி மாயே காருணி தாயே

கானகயாளே காசி னியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


திருமகளானாய் கலைமகளானாய்

மலைமகளானாய் துர்க்கையளே

பெருநிதியானாய் பேரறிவானாய்

பெருவலியானாய் பெண்மையளே

நறுமலரானாய் நல்லவ ளானாய்

நந்தினி யானாய் நங்கையளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


வேதமும் நீயே வேதியள் நீயே

வேகமும் நீயே துர்க்கையளே

நாதமும் நீயே நாற்றிசை நீயே

நாணமும் நீயே நாயகியே

மாதமும் நீயே மாதவம் நீயே

மானமும் நீயே மாயவளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


கோவுறை ஜோதி கோமள ஜோதி

கோமதி ஜோதி துர்க்கையளே,

நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி

நாட்டிய ஜோதி நாச்சியாளே

பூவுறை ஜோதி பூரண ஜோதி

பூதநற் ஜோதி பூரணியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம

சாரிணி சந்திர கண்டினியே

ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யாயன்ய யளே

ஜய ஜய காலராத்திரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


சகல ரோக நிவாரணி அஷ்டகம் சகலருக்கும் சகலவிதமான நன்மைகளை அருளும் மந்திரம்,
துர்கையை துதிப்பவர்களுக்கு துயரம் இல்லா வாழ்வுகிட்டிடும்

ஸ்ரீ ராமரின் மூல மந்திரம்

  
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ

“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மூல மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மற்றும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். உங்களை பீடித்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.

Tuesday, May 26, 2020

ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள அபாமார்ஜந ஸ்தோத்ரம் மிக அபூர்வமானது. இது ஏவல், சூன்யம், வியாதி, க்ரஹபீடை, விஷபீடை, முதலிய எல்லாத் துயர்களையும்  நீக்கவல்லது. ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து, தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள். துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும், இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவபூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள்.



ஸ்ரீ தால்ப்ய உவாச:

 

பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷரோகாத்யுபத்ரவை

துஷ்டக்ரஹாபிகாதைஶ்ச ஸர்வகால முபத்ருதா:                                             1

 
ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶரோகைஶ்ச தாருணை:

ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநிஸத்தம                                               2


கேந கர்மவிபாகேந விஷரோகாத்யுபத்ரவா:

ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி                                           3


ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

 
வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்யஜந்மநி தோஷித:

தே நரா முநிஶார்தூல விஷரோகாதி பாகிந:                                                       4

யைர்ந தத்ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்

விஷஜ்வரக்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்ய பாகிந:                         5

ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி

தத்ததாப்நோத்ய ஸந்திக்தம் பரத்ராச்யுத தோஷக்ருத்                                                6
நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷக்ரஹ நிபந்தநம்

க்ருத்யாஸ்பர்ஶபயம் வாபி தோஷிதே மதுஸூதநே                                         7
ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:

தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந:                          8

யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே

உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே                                                      9

தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ணமநோரதா:

அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநிஸத்தம                            10

ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶரோகாதி பாகிந:

க்ரஹரோகாதிகம் வாபி பாபகார்யம் ந ஜாயதே                                                           11

அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச

ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித:                                     12


ஸ்ரீ தால்ப்ய உவாச:

 
அநாராதித கோவிந்தா யே நரா து:கபாகிந:

தேஷாம் து:காபிபூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி:                                         13

 
பஶ்யத்பிஸ் ஸர்வபூதஸ்தம் வாஸுதேவம் மஹாமுநே

ஸமத்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத:                                     14

 
ஸ்ரீ புலஸ்த்ய உவாச:


ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:

அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸபூர்வ மிதம் பரம்                                              15


ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஸர்வக்லேஶாபஹந்த்ரே நம:

அத ந்யாஸ:

 
அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:

அநுஷ்டுப்சந்த:

ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶநா தேவதா:
 

ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்

அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:

ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்

வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்

 

ஸ்ரீவாராஹ  நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶந ப்ரஸாத ஸித்யர்த்தே16

 

வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:

நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா

வாமநாய மத்யமாப்யாம் வஷட்

விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்

ஸுதர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்

பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:

இதி கர ந்யாஸ:                                                                                                                 17

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:

நம: கமல கிஞ்ஜல்க பீதநிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்

தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே பலாய கவசாய ஹும்

காஶ்யபாயாதிஹ்ரஸ்வாய  ருக்யஜுஸ்ஸாமமூர்த்தயே தேஜஸே

நேத்ரத்ரயாப்யாம் வௌஷட்

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்

 

ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:  எட்டுதிக்கில் வலமாக சொடக்கவும்18


த்யாநம்


அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்

வராஹரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்                                  19


ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா

விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா

ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா

ஸ மே ஸ்வயம்பூர் பகவாந் ப்ரஸீதது                                                           20

சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புரதுரு ரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்

கர்ஜத பாஜநய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ரரௌத்ரம்

த்ரஸ்தாஶா ஹஸ்தியூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோதபாஸமாநம்

ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம்         21

அதிவிபுல ஸுகாத்ரம் ருக்மபாத்ரஸ்தமந்நம்

ஸலலித ததிகண்டம் பாணிநா தக்ஷிணேந

கலஶம் அம்ருதபூர்ணம் வாமஹஸ்தே ததாநம்

தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய:                                        22

விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்

ஶ்ரோணீபூஷ ஸுவக்ஷோ மணிமகுட மஹா குண்டலைர் மண்டிதாங்கம்

ஹஸ்தோதயத் சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கௌஶேய மாஶா

வித்யோதத பாஸ முதயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23


கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்

ரக்தாக்ஷம் பிங்ககேஶம் ரிபுகுலதமநம் பீம தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்

ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்குஶாக்நீந்

பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ரஸம்ஜ்ஞம்         24

ஸ்தோத்ராரம்ப:


ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே

அரூப பஹுரூபாய வ்யாபிநே பரமாத்மநே                                                          25

நிஷ்கல்மஷாய ஶுத்தாய த்யாநயோக ரதாய ச

நமஸ்க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச:                                              26

நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶாயேஶ்வராய ச

அச்யுதாநந்த கோவிந்த பத்மநாபாய ஸௌஹ்ருதே                                        27

ஹ்ருஷீகேஶாய கூர்மாய மாதவாச்யுதாய ச

தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே                                                    28

ஜநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய ச

த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச                                                  29


ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:

யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே                                                  30

பக்தப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே

அதோக்ஷஜாய தக்ஷாய மத்ஸ்யாய மதுஹாரிணே                                           31

வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே

வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம                                              32

ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹராஶுபம்

அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:                                                      33

அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வதுஷ்டஹரோ பவ

ஹராமுகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்                                             34

ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத்பலம்

பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம்                                                      35

கரஸ்பர்ஶ மஹாரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர

ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே                               36

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே

நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே                                                   37


மஹாஹவ ரிபுஸ்கந்த க்ருஷ்ட சக்ராய சக்ரிணே

தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதித்ருதே த்ரயீமூர்த்திமதே நம:                                        38

மஹாயஜ்ஞவராஹாய ஶேஷபோகோபஶாயிநே

தப்தஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந                                                      39

வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்யஸிம்ஹ நமோஸ்து தே

காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக்யஜுஸ்ஸாம மூர்த்தயே                                40

துப்யம் வாமநரூபாய க்ரமதே காம் நமோ நம:

வராஹாஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை                                               41

மர்த மர்த மஹாதம்ஷ்ட்ர மர்த மர்த ச தத்பலம்

நரஸிம்ஹ கராளாஸ்ய தந்தப்ராந்தோஜ் ஜ்வலாநந                                           42

பஞ்ஜ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ்யார்த்தி நாஶந

ருக்யஜுஸ்ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக்                                           43

ப்ரஶமம் ஸர்வதுஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்தந:

கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா
 44

ஜ்வராந்ம்ருத்யுபயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்

த்ரிபாத்பஸ்மப்ரஹரண: த்ரிஶிரா ரக்தலோசந:

ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர்ஜ்வர:                             45

ஆத்யந்தவந்த: கவய: புராணா:

ஸந்மார்கவந்தோ ஹ்யநுஶாஸிதார:

ஸர்வஜ்வராந் க்நந்து மமாநிருத்த

ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா:                                                                     46

ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸஜ்வரம்

சாதுர்த்திகம் ததாத்யுக்ரம் ததைவ ஸததஜ்வரம்                                                 47

தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்

ஶமம் நயாஶு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம்                               48

நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோதரஸம்பவம்

அதிஶ்வாஸ மநுச்ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும்                                              49

குதக்ராணாங்க்ரிரோகாம்ஶ்ச குக்ஷிரோகம் ததா க்ஷயம்

காமாலாதீந் ததாரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதாருணாந்                              50

பகந்தராதிஸாராம்ஶ்ச முகரோகாம்ஸவல்குளிம்

அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந்                         51

யே வாத ப்ரபவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:

கபோதவாஶ்ச யே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா:                                  52

ஆகந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாதய:

ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத்                                     53
விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச

க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே:                                        54
அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத

ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு தந்வந்தரே ஹரே                                  55

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்

நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்                                 56

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே

வேதாச்சாஸ்த்ரபரம் நாஸ்தி நதைவம் கேஶவாத்பரம்                                                57

ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத்விஷம்

தந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶப்ரபவம் விஷம்                                       58

லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ்ஸஹம்

ஶமம் நயது தத்ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்தந:                                              59

க்ரஹாந் ப்ரேதக்ரஹாந் சைவ ததா வைநாயிகக்ரஹாந்

வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச கந்தர்வாந் யக்ஷராக்ஷஸாந்                           60

ஶாகிநீபூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிகக்ரஹாந்

முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந்                                            61

வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததாமாத்ருகணாநபி

பாலஸ்ய விஷ்ணோஶ்சரிதம் ஹந்து பாலக்ரஹாநிமாந்                                   62

வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபாலக்ரஹா: க்வசித்

நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே                                63

ஸடா கராளவதநோ நரஸிம்ஹோ மஹாரவ:

க்ரஹாநஶேஷாந்நிஶ்சேஷாந் கரோது ஜகதோ ஹித:                                      64

நரஸிம்ஹ மஹாஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந

க்ரஹாநஶேஷாந் ஸர்வேஷாம் காதகாதாக்நிலோசந                                                65

யேரோகா யேமஹோத்பாதா யத்விஷம் யே மஹோரகா:

யாநி ச க்ரூரபூதாநி க்ரஹபீடாஶ்ச தாருணா:                                                     66

ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய:

யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச                                             67

தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந

கிஞ்சித்ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய                          68

க்ஷிப்த்வா ஸுதர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதிபூஷணம்

ஸர்வதுஷ்டோபஶமநம் குரு தேவவராச்யுத                                                         69

ஸுதர்ஶந மஹாசக்ர கோவிந்தஸ்ய கராயுத

தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடிகோடி ஸமப்ரப                                                  70

த்ரைலோக்யகர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண

தீக்ஷ்ணதார மஹாவேக சிந்தி சிந்தி மஹாஜ்வரம்                                             71

சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத்பயம்

க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷஜ்வாலாம் ச கர்தமாந்                                 72

ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண

ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச தக்ஷிணோத்தரயோஸ்ததா                             73

ரக்ஷாம் கரோது பகவாந் பஹுரூபி ஜநார்தந:

பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                            74

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஜகத்ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம்                         75

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா:                       76

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                  77

தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                               78

வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ்ஸம்மார்ஜிதம் மயா

அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா                                         79

மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:

ஶாந்தாஸ்ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச                   80

பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே

ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூதக்ரஹபயேஷுச

அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம்  விஷ்ணூநாமாபி மந்த்ரிதம்                                  81

ஏதே குஶா விஷ்ணுஶரீர ஸம்பவா:

ஜநார்தநோஹம் ஸ்வயமேவ சாகத:

ஹதம் மயா துஷ்டமஶேஷஸ்ய

ஸ்வஸ்தா பவத்வேஷ யதாவசோ ஹரே:                                                                82

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது               83


யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத்க்ஷிப்தம் லவணார்ணவே

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                     84

ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா

விஷ்ணுபக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம்                                                           85

அநேந ஸர்வதுஷ்டாநி ப்ரஶமம் யாந்த்யஸம்ஶய:

ஸர்வபூதஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி                                   86


குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி

இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வவ்யாதி விநாஶநம்                               87


விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச

இதம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி:                      88


வ்யாத்யபஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:

தஸ்ய பார்ஶ்வம் ந கச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத்                                89

வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச

ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வது:க்கோபஶாந்தயே


இதி விஷ்ணு தர்மோத்தரபுராணே

தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே

அபாமார்ஜந ஸ்தோத்ரம்

ஸம்பூர்ணம்

பராபரமே

ஒன்றின் ஆதியாகி அந்தமாகி ஆதிநடுஅந்தமற்றதாகி,

அனைத்தையும் ஆக்கும் வளர்க்கும் அழிக்கும், அதற்கு ஆக்கம் அழிவு இல்லை, ஆதி எப்படி என்று அறியா அனாதியாக, ஏகமாகி அநேகமாகி ஏகஅநேகமாய்,

உருவாய் அருவாய் அருஉருவாய், ஒன்றாகி ஒன்றினுள் ஒன்றாகி, பலவாகி, எண்ணில்லா பல்குணங்களாகி, கோடிப்பல கோடிகள் இயல்புடையதாகி,

நாதமாகி விந்துவாகி இரண்டும் இணைந்து சிவசக்தியாகி, அண்ட பேரண்டமாகி, அணுவாகி, அணுவினுள் பராபர சோதி வெளியாகி உயிராகி, அதற்கு கன்மம் ஆகி சுத்த அசுத்த மாயை ஆகி,

மலமாகி, விமலமாகி பஞ்ச பூத மூல ஆதாரமாகி, பஞ்ச பூதமாகி, சுத்த வித்தையாகி, ஞானந்திரியங்களாகி, அந்த கரணங்களாகி, தன்மாத்திரைகளாகி, ஆன்ம தத்துவமாகி , காலமாகி, நியதியாகி, கலையாகி, வித்தை ஆகி, அராகமாகி, புருடானாகி,

சித்தாந்த, போதாந்த, நாதாந்த, கலாந்த, வேதாந்த, யோகாந்த உச்சமாகி, 
காரிய காரணமாகி, வித்தாகி அதில் சத்தாகி, அதில் முளையாகி அதில் வித்தாகி, விண்ணாகி மண்ணாகி, உயிர் கொண்ட ஊனாகி, தேவாதி தேவனாகி, அசூரானாகி, பல்வகை ஜீவர்களாகி, ஆதி சபையாகி, அருள் கூத்தனாகி, வல்வினையாகி, பித்தனாகி, சித்தனாகி, குருவாகி, சீடனாய், நட்பாய், காதலாய், காமமாகி, கருத்தாய், யோகமாய், தத்துவமாய், மொழியாய், தத்துவங்கள் கடந்த தனியாய், பரமாகி, சிவமாகி, அருளாகி, ஆத்மனாகி அருட்பெருஞ்ஜோதியாகி, பல குணம், பல பெயர், பல இயல், இன்னும் யாவுமாகி... அனைத்தையும் கடந்த பராபரமே

விநாயகருக்கு வாகனம் எலி ஏன்

யானை வடிவம் கொண்ட விநாயகர், எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும்?
 
ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானதுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்

இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.


மாறாநீர்

 பெய்திறனின் அடிப்படையில் தான் மழைக்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது.

• தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது,விரைவில் உலர்ந்துவிடும்.
• சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
• மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
• பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.
• அடைமழை – ஐப்பசியில் பெய்வது.
• கனமழை – கார்த்திகையில் பெய்வது.

இதையே அளவில் கூறும்போது:

•மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

• அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

• 4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் 
 "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். 
இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

"கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி". (குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று . நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே  குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு"
(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் தன்மையை இல்லை அளவைத்தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.


மந்திர ஜெபம்

மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம்

மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள், முத்திரைகள் பற்றிய சிறு விளக்கம்:

மந்திரங்கள் – ஏழு அங்கங்கள் மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள் பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:  
1.ரிஷி  
2. சந்தஸ்  
3. தேவதை  
4. பீஜம்  
5. சக்தி  
6. கீலகம்  
7. அங்க நியாசம் என்பன.

1. ரிஷி  
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),.

எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.

நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.

2. சந்தஸ்  
சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.

3. தேவதை: தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதாநியாசம்.

4. பீஜம்: மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது.

அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்குவந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.

பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.

5. சக்தி: அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.

6. கீலகம்: சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.

மந்திரங்களின் ஆற்றல்:  மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம்.

பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது. இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா்.

இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம் என்று குறிப்பிட்டனா்.

மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.

இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்.

காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்.

சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.

ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.

மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை.

விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations)  நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.

ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.

அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம்.

சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.

இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய வழிமுறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.

மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள்.

எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை  
1. தூல வடிவம்  
2. சூக்கும வடிவம்  
3. அதி சூக்கும வடிவம்.

அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம்.

முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு. எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.

மந்திரங்கள் – அதி தேவதைகள் உலகில் உள்ள பொருள்களை இருவகையாக வேறுபடுத்துகிறது.  
1. அசையும் பொருள்  
2. அசையாப்பொருள்.

அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு.

அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீவித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம்.

பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீவித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.

ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச்சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?

ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால்  
1. உரிய காலம் வேண்டும்.  
2. உரிய நிலம் வேண்டும்.  
3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும்.  
4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும்.  
5. நல்ல கைராசிவேண்டும்.  
6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும்.  
7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.  
8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும்.  
9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.

அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவைமனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும்.

ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம்போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும்.

எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் சிலர். மந்திரம் பலிப்பது போலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும்பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.

சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும்.

முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீவித்யை மந்திரம்.

அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, சோடசாட்சரி,  ஸ்ரீவித்யை என்று ஆறு வகைப்படும்.

ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜமந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.

ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி.

ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும்.

சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா். ஸ்ரீவித்யை உபாசகா்கள் சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு.

இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே.

தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா்.

சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள். ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா்.

அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை. அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.

இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களையும் எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும். முத்தி கிடைக்கும். கரநியாசம் அங்க நியாசம், அதற்கான முத்திரைகள் என விதிமுறைகளோடு ஜெபித்தால் பலன் உண்டு.

ஒரு நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு எந்தக் கோலத்தில் நிற்கிறோமோ அந்தக் கோலத்தையே கண்ணாடி காட்டும். அதுபோல ஒருவன் எந்தத் தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபம் செய்கிறானோ அந்த மந்திரத்திற்குரிய அதி தேவதையாகவே அவன் ஆகிவிடுகிறான் என்பது மந்திர சாத்திர விதி.

அந்நிலையில் அவன் மந்திர ஆன்மாவாகி விடுகிறான் என்பது விதி. “மன ஒருமையோடு என் மந்திரங்களைப் படிக்கிறபோது நீயும் சக்தி மயமாய் ஆகிறாய் மகனே!”– என்பது நம் அன்னையின் அருள்வாக்கு.

பறவை, விலங்கு, மரம் முதலிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்துக்கும் மந்திரம் உண்டு. அதி தேவதைகள் உண்டு.

மந்திரங்களின் துணையால் உலகியல் இன்பங்களிலிருந்தும், உலகக் கவா்ச்சியிலிருந்தும் விடுபட்டு முக்தியையும் பெறலாம். உலகியல் பொருள்களையும், இன்பங்களையும் அடையலாம்.

மந்திரத்தால் இங்கிருந்தபடியே தேவா்களையும் அழைக்கலாம். வசீகரம் முதலிய சக்திகளையும் பெறலாம். மந்திரத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

உடம்பிலே பஞ்ச பூதங்களை வெல்லும் ஆற்றல் வாய்ந்த மையங்கள் உண்டு. மந்திர சித்தி பெற்றவன் கூடுவிட்டுக் கூடு பாயலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம். நினைத்த இடத்திற்குப் போகலாம். வரலாம். மற்றவா்கள் கண்ணுக்குத் தெரியாமலே உலாவலாம். தேவா் உலகமும் சென்று வரலாம். ஏன்? ஒருவா்க்கு மரணத்தையும் உண்டாக்கலாம்.

மகாலட்சுமி மந்திரம் என ஒன்று உண்டு. இம்மந்திரம் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது. ஆனால் எல்லோர்க்கும் பலன் தருவது இல்லை. வறுமையில் வாடிய வித்யாரண்யா் இம்மந்திர ஜெபத்தால் வறுமையைப் போக்கிக் கொள்ள மகாலட்சுமி உபாசனையை மேற்கொண்டார். இறுதியில் மகாலட்சுமி அவருக்குக் காட்சி கொடுத்தாள். இந்தப் பிறவியில் உனக்குச் செல்வம் அளிக்க முடியாது. உன் பிராரத்துவ வினை இது என்றாளாம்.

உடனே வித்யாரண்யா், பிறவியிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழிஒன்றை மேற்கொண்டார். சந்நியாசம் வாங்கிக் கொண்டால் புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். ஆகவே சந்நியாசம் பெற்றுக் கொண்டார். மந்திர ஜெபத்துக்கான பலனை மகாலட்சுமி கொடுத்தாக வேண்டும் அல்லவா? உடனே அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டாள். வித்யாரண்யருக்கு இப்போது புதியதரும சங்கடம் வந்து விட்டது. சந்நியாசியாகி விட்டபிறகு பணத்தைத் தொடக்கூடாது.

அடி தாயே! இந்தச் செல்வத்தை வைத்து சந்நியாசியாகிவிட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்றாராம். என்ன செய்வாயோ…… தெரியாது. உனக்குக் கொடுத்து கொடுத்ததுதான் என்றாளாம் மகாலட்சுமி. வேறுவழியின்றி இந்து சாம்ராஜ்யத்தை – விஜய நகரப் பேரரசை நிறுவுவதற்காக அரிகரா் என்ற அரசா்கட்கு அந்தச் செல்வத்தை அப்படியே கொடுத்து விட்டாராம்.

நினைத்த காரியத்தில் வெற்றியைக்கொடுப்பது வராகி மந்திரம். ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளை வலுவிழக்கச் செய்வது அஸ்வாரூடா மந்திரம். கா்ண பிசாசினி என்ற தேவதைக்குரிய மந்திரம் உண்டு. இம்மந்திர ஜெபம் சித்தியானால் அந்த உபாசகன் மற்றவா்கள் வாழ்வில் நடந்தவை நடக்க இருப்பவை, ஆகிய சம்பவங்களைத் தெரிந்து சொல்ல முடியும்.

ஆவஹந்தி தேவதை என்ற ஒரு தேவதை உண்டு. அவள் மந்திரததை உள்ளன்போடு ஜெபித்து வந்தால் ஒரு குடும்பத்தைப் பசியில்லாமல்காப்பாற்றும்.

\"ஆவஹந்தியும் அடுப்பிலே நெருப்பும் இருந்தால்சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை” என்பது கேரள நாட்டுப் பழமொழி.

தேள்கடி, பாம்புக்கடி, விஷம் இறக்க மந்திரம் உண்டு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க மந்திரம் உண்டு. வீட்டில் உள்ள கெட்ட தேவதைகளை விரட்ட மந்திரம் உண்டு. வீடு, தோட்டங்களில் திருடுகள் நடக்காமல் தடுக்க மந்திரம் உண்டு. நல்லது செய்யவும் மந்திரம் உண்டு. கெட்டது செய்யவும் மந்திரம் உண்டு.எல்லாமந்திரமும் எல்லோர்க்கும் பலித்து விடுவதில்லை.

ஏன்? தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!

அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.

உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும். சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும்.

இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.

குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம் ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை.  
1. இஷ்ட தெய்வம்  
2. மந்திரம்  
3. குரு

ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.

இதுபோன்ற நுட்பமெல்லாம் தெரியாமல் நாம் கிடப்பதால்தான் அன்னை \"நீங்களெல்லாம் ஆன்மித்தில் அனாதைகள்” என்கிறாள். தன் பக்தனுக்கு வலுவான அடித்தளங்களைப் போட்டுக்கொடுத்திருக்கிறாள். ஆதிபராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தன்பக்தனுக்கு அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். 108, 1008 மந்திரங்களை வழங்கியிருக்கிறாள்.

இந்த மூன்றையும் வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அது அவரவா் பக்தி சிரத்தையைப் பொறுத்தது. முயற்சியைப் பொறுத்தது.

தெய்வம்: குரு:  மந்திரம்: உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே!  உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே!  என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.

மந்திரங்கள் நால்வகை  
1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து.  
2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரிபோன்ற இருமுனை உள்ளவை கர்தரீ. 3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும்.  
4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள்.  
5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம். லலிதா சகஸ்ரநாமம்1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.புரச் சரணம்பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள்.

ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம்பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது.

மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரியவேண்டும்.பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.

பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை  
1. சித்த மந்திரங்கள்  
2. சுத்த மந்திரங்கள்  
3. சாத்திய மந்திரங்கள்  
4. சத்துரு மந்திரங்கள்.

புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும்.

குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.

முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திரதேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திரஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும்.

அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார்.

திருமணம்நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும்பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.

சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை.

ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.

பீஜ மந்திரங்கள்: மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  
ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது. அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன.

அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று.

இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது. இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா்.

\"நாத விந்து கலாதி நமோ! நம!\" என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து \"அ” – \"உ” – \"ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று.

இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின.

இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச்சக்தியிலிருந்து அண்ட – பகிரண்டசராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.

இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.

எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன.

இந்த ஒளி மூலமாகவும் ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக  அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம்.

வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா். உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று.

அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். \"முளை” மந்திரம் என்பார்கள்.

பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு  
1.நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.  
2.நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்  
3.நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்  
4.காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்  
5.ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமைநிறம்

உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு.

எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும்.

உதாரணமாக ஸ்ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜமந்திரம்  
க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஐம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.

நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை  
1.சூரியன்        க்ரீம் (Krim)  
2.சந்திரன்        ரீம் (Rim)  
3.செவ்வாய்      ஹ்ரீம் (Hrim)  
4.புதன்           ஸ்ரீம் (Srim)  
5.வியாழன்       ஔம் (Houm)  
6.வெள்ளி        கிலீம் (Klim)  
7.சனி            ஐம் (Aim)  
8.ராகு           ஹ்ரௌம் (Hraum)  
9.கேது           சௌம் (Soum)

வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.

“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.

“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.

“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத்தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.

“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.

ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.

ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.

ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.

ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச் சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா்சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.

ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.

ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத  சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில் மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.

அஜபா மந்திரம் இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று \"ஸம்\" என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.

மந்திர யோகம்:- மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.

மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...