ஒன்றின் ஆதியாகி அந்தமாகி ஆதிநடுஅந்தமற்றதாகி,
அனைத்தையும் ஆக்கும் வளர்க்கும் அழிக்கும், அதற்கு ஆக்கம் அழிவு இல்லை, ஆதி எப்படி என்று அறியா அனாதியாக, ஏகமாகி அநேகமாகி ஏகஅநேகமாய்,
உருவாய் அருவாய் அருஉருவாய், ஒன்றாகி ஒன்றினுள் ஒன்றாகி, பலவாகி, எண்ணில்லா பல்குணங்களாகி, கோடிப்பல கோடிகள் இயல்புடையதாகி,
நாதமாகி விந்துவாகி இரண்டும் இணைந்து சிவசக்தியாகி, அண்ட பேரண்டமாகி, அணுவாகி, அணுவினுள் பராபர சோதி வெளியாகி உயிராகி, அதற்கு கன்மம் ஆகி சுத்த அசுத்த மாயை ஆகி,
மலமாகி, விமலமாகி பஞ்ச பூத மூல ஆதாரமாகி, பஞ்ச பூதமாகி, சுத்த வித்தையாகி, ஞானந்திரியங்களாகி, அந்த கரணங்களாகி, தன்மாத்திரைகளாகி, ஆன்ம தத்துவமாகி , காலமாகி, நியதியாகி, கலையாகி, வித்தை ஆகி, அராகமாகி, புருடானாகி,
சித்தாந்த, போதாந்த, நாதாந்த, கலாந்த, வேதாந்த, யோகாந்த உச்சமாகி,
காரிய காரணமாகி, வித்தாகி அதில் சத்தாகி, அதில் முளையாகி அதில் வித்தாகி, விண்ணாகி மண்ணாகி, உயிர் கொண்ட ஊனாகி, தேவாதி தேவனாகி, அசூரானாகி, பல்வகை ஜீவர்களாகி, ஆதி சபையாகி, அருள் கூத்தனாகி, வல்வினையாகி, பித்தனாகி, சித்தனாகி, குருவாகி, சீடனாய், நட்பாய், காதலாய், காமமாகி, கருத்தாய், யோகமாய், தத்துவமாய், மொழியாய், தத்துவங்கள் கடந்த தனியாய், பரமாகி, சிவமாகி, அருளாகி, ஆத்மனாகி அருட்பெருஞ்ஜோதியாகி, பல குணம், பல பெயர், பல இயல், இன்னும் யாவுமாகி... அனைத்தையும் கடந்த பராபரமே
No comments:
Post a Comment