உண்மை சம்பவம்
அஹோபிலமடத்தின் 33 ஆம் பட்டம் ஸ்ரீ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் அவர்கள் கர்நாடகா தேசத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது காடுகள் நிறைந்த தேசத்தில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது.
(அஹோபில மட ஆசார்யர்கள் மாலோலனையும் சிங்காசனத்தையும் செல்லும் இடங்களுக்கெல்லாம் டோலோத்சவ கண்ணனையும் தங்களுடன் இட்டுச் செல்வது பரம்பரை வழக்கம்.)
அப்போது தீவட்டிக் கொள்ளைக் காரரகள் என்று சொல்லப்படும் கள்வர்கள் அங்கு வந்து மடத்தைக் கொள்ளையடிக்க முற்பட்டனர்.
இதையறிந்த கைங்கர்யபரர்கள் ஸ்ரீமதழகிய சிங்கர் சன்னிதியில் விஞ்ஜாபித்தனர். ஸ்ரீமத் அழகிய சிங்கர் மந்தஹாஸத்துடன் ”கள்வர்தலைவனை இங்கு வரச் சொல்லுங்கள், நாமே எல்லாவற்றையும் கொடுப்பதாகச் சொல்லுங்கள்”என்று சொல்லியனுப்பினார்.
இவ்வார்த்தையைக் கேட்ட பரிஜனங்கள் பதறி அழுதனர். கொள்ளைக்காரர்களின் தலைவன் ஸ்ரீமத் அழகிய சிங்கரிடம் வந்து நின்றான்.ஸ்ரீமத் அழகிய சிங்கர் அவனைப்பார்த்து இவ்விடத்திலுள்ள விலையுயர்ந்த வஸ்துக்கள் யாவற்றையும் உன் இஷடப்படி நாமே நேரில் ஒப்படைத்து விடுகிறோம்.
ஆனால் இந்த ஆபரணங்களைக் கடைசியாகக் கண்ணனுக்கு சாத்தி டோலோத்ஸவம் பண்ணி சேவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
ஆகையல் உத்ஸவம் முடிந்ததும் கொடுத்து விடுகிறோம். அதுவரையில் பொறுத்திருங்கள்!என்று சாதித்தார்.
கள்வர் தலைவனும் ஒப்புக் கொண்டான்.
பெருமாளுக்கு சர்க்கரைப்பொங்கல் தளிகை பண்ணி கள்வர்களை வரச்சொல்லி டோலையில் கண்ணனை சேவித்து விட்டு மங்கள ஹாரத்தி பண்ணியாயிற்று. கண்ணனை தியானம் பண்ணிக் கொண்டு கண்ணீர் மல்க அழகியசிங்கர் நின்றார்.
சிறிது நேரத்தில் கள்வர் கூட்டத்தில் அலறல்!..கள்வர்கள் பயத்துடன் ஸ்ரீமத் அழகியசிங்கரின் காலடியில் வந்து விழுந்தனர்.அவர் தீர்த்தத்தால் ப்ரோஷித்தவுடன் அவர்கள் சொன்னது!
“கற்பூர ஹாரத்தியின் போது 100 ந்ருசிம்ஹர்கள் எங்களை பீடித்தனர். அவ்வளவு பயமும் நீங்கள் ப்ரோஷித்த தீர்த்தத்தின் மகிமையால் மறைந்தன.பின் தங்களை ஷமிக்கச் சொல்லி ப்ரர்த்தித்து ப்ரசாதம் சாப்பிட்டு தங்கள் காணிக்கையாக ஸ்வாமிக்கு அநேக திரவியங்களை சமர்ப்பித்தனர்..
ந்ருசிம்ஹப்ரியாவில் வந்த செய்தி.
No comments:
Post a Comment