Saturday, May 23, 2020

காசிலால் முக்தி பவன்

காசி (வாரணாசி) பற்றி எல்லோருக்கும் தெரியும். புண்ணிய பூமி. பலர் பார்த்தும் இருப்பீர்கள்.

காசியில் இறந்தால் முக்தி, மோட்சம் என்று இந்து மதத்தினர்க்கு ஆழ்ந்த நம்பிக்கை.

பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு.

இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு.

அதில் ஒன்றுதான் "காசிலால் முக்தி பவன்"

அங்கே ஒரு விசித்திரமான rules உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார்கள்.

அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்து விட வேண்டும்.

இதை கேள்விபட்ட ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவரின் அனுபவம் இங்கே.இனி அவர் பேசுவார்,,,

நான் முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் ஆச்சரியமாகவும், ஆர்வமாகவும் இருந்தது.

அங்கே வந்து தங்குபவர்கள் எந்த மனநிலையில் வருகிறார்கள்? அவர்கள் விரும்பியபடி மன நிறைவோடு தங்கள் பயணத்தை முடித்து கொள்கிறார்களா? என்ற அறிய ஆவல் ஏற்பட்டது.

அந்த முக்தி பவனில் ஒரு வாரம் தங்குவதற்கு அனுமதி பெற்று அங்கே தங்கி, அங்கே உள்ள வயதானவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடியதில் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டேன்.

Resolve all conflicts
Before you go!!

முக்தி பவனின் மேனேஜர் Mr.சுக்லா.44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார்.

சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார்.

அவரிடம் உரையாடியதில் கிடைத்த Core point.

வாழும் போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரி செய்து விட வேண்டும். (குடும்பத்துடன், உறவுகளுடன், மற்றவர்களுடன்)

அதை விட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும் வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்து கொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள்.

செய்த தவறுக்கு வருந்துகிறார்கள். சரி செய்து கொள்ள அந்திம காலத்தில் முயற்சிக்கிறார்கள்.அவதிப்டுகிறார்கள்.

Mr.சர்மா என்பவர் இங்கே வந்த போது 16வது நாள் இறந்து விடுவேன் என்றார்.

14 வது நாள் என்னை கூப்பிட்டு, 40 வருடங்களுக்கு முன்பு முட்டாள் தனமாக சகோதரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டின் குறுக்கே சுவர் கட்டி எல்லோரையும் வருத்தப்படச் செய்தேன்.

என் சகோதரர்களை பார்க்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.

சகோதரர்களை வரவழைத்தேன். அவர்கள் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.

வீட்டு சுவரை இடித்து விடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

சகோதரர்களும் கண் கலங்கி அவரை சமாதானப்படுத்தினார்கள்.

உரையாடிக் கொண்டிருக்கும் போதே, மன நிறைவுடன் அவர் மூச்சு நின்றது. அன்று 16வது நாள்

இது நிஜம். சினிமாக் கதை இல்லை. இது போல பல நிகழ்வுகள்.

வாழும் போதே எல்லாவற்றையும் மன நிறைவோடு ஒழுங்குபடுத்தி விட்டால் இறப்பு ஒரு முக்தி மோட்சமே " என்று முடித்தார்.

இதிலிருந்து என்ன புரிகிறது?

இந்த கணம் மட்டுமே நிஜம்.

அடுத்து என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது.

மன நிறைவோடு வாழ்வது நம் கையில்தான்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...