Saturday, May 9, 2020

அதிர்ஷ்டம் தரும் துளசி மற்றும் ஸ்படிக மாலை

இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஆன்மீக அணிகலன் பொருட்களில் துளசி மாலையும், ஸ்படிக மாலையும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு பொருட்களை நாம் அணிந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், இந்த இரண்டு பொருட்களும் எந்தப் பொருளிலிருந்து, எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக பஞ்சபூத மாலைகளில் இந்த இரண்டு மாலைகளும் அடங்கியுள்ளது. சிவப்பு சந்தன மாலை, ருத்ராட்ச மாலை, துளசி மாலை, ஸ்படிக மாலை, தாமரை மணி மாலை இவைகள் அனைத்தும் பஞ்ச பூதங்களுக்கு இணையானது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி. இந்த பதிவில் முதலில் துளசி மாலையின் சிறப்பு பலனை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். துளசிச் செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடியது தான் துளசி மாலை. துளசிச் செடியின் சின்ன சிறிய மரத் துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும். இந்த மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.

நீங்கள் கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும். மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதுதான் சரியான முறை.

சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி. ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி. மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறை படுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.

ஜபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது. பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம்.

அடுத்ததாக பார்க்கப்போவது ஸ்படிக மாலை. இந்த ஸ்படிக மாலை இயற்கை நமக்கு தந்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். பூமியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த ஸ்படிகம். பூமிக்கு அடியில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தண்ணீரானது சேர்ந்து, இறுகி ஒரு பாறையாக மாறி அதிலிருந்து உருவாகும் ஒரு பொருள் தான் இந்த ஸ்படிகம். இந்த ஸ்பரிசத்தில் அதிகமாக போலிகளும் வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஸ்படிகம் மாலையிலேயே முதல் தரம், இரண்டாவது தரம் என்று பிரிக்கப்பட்டு எழுத்தாளர்கள். பலவகையான தரவரிசையில் இந்த ஸ்படிகமானது நமக்கு கிடைக்கும். இதில் முதல் தரமான ஸ்படிகத்தை தண்ணீரில் போட்டால் அதன் வடிவமே தெரியாது என்று சொல்வார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஸ்படிகம் கிடைப்பது சற்று கடினம் தான்.

சில படிகங்கள் தரமானதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க, அந்த படத்தின் வழியாக சூரியனை பார்ப்பார்கள். அப்போது சூரியனிலிருந்து ஏழு வண்ண கதிர்களும் அந்த ஸ்பரிசத்தில் தெரியும் என்பதும் ஒரு சிலரின் கருத்து. இவ்வாறாக பரிசோதனைகள் செய்து பார்த்து நம்பிக்கையுள்ளவர்கள் இடம் தரமான ஸ்படிகத்தை வாங்கிக் கொள்வது அவரவரின் சாமர்த்தியம்.

இந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள்வதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பமானது வெளியேறி குளிர்ச்சி அடையும். அதாவது ஸ்படிக த்திற்கு உடலை குளிர்ச்சியூட்டும் தன்மை அதிகமாக உள்ளது. சிலபேருக்கு ஸ்படிக மாலையை அணிந்த உடன் காய்ச்சல் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஸ்படிக மாலையை அணிந்து கொண்ட பிறகு உடல்நிலை சரி வரவில்லை என்றால், அவர்கள் அந்த ஸ்படிக மாலையை அணியாமல் இருப்பதே நல்லது. அது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. சூடு உடம்பை உடையவர்கள் இந்த ஸ்படிக மாலையை தாராளமாக அணிந்து கொள்ளலாம். மிக மிக நல்லது. ஸ்படிக மாலையில் இருந்து நல்ல அதிர்வுகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

ஸ்படிக மாலையை புதியதாக வாங்கிய உடன் பயன்படுத்தக்கூடாது. அதிலிருக்கும் தோஷங்கள் நீங்க சிறிதளவு சாணத்தை எடுத்து அதனுள் இந்த ஸ்படிக மாலையை வைத்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து சாணத்தில் இருந்து எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி, அதன் பின்பு பாலில் போட்டு 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு மீண்டும் ஒரு முறை நல்ல தண்ணீரில் கழுவி விட வேண்டும். இதை விட அதிகப்படியான நேரம் கொண்டு சாணத்திலும் பாலிலும் ஊர வைத்தாலும் தவறில்லை.

அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களின் காலடியில் வைத்துவிட்டு, நன்றாக இறைவனை வேண்டிக் கொண்டு கழுத்தில் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதிகப்படியான மன அழுத்தம் உடையவர்கள் கூட இந்த ஸ்படிக மாலையை அணிந்து கொண்டால் மன நிம்மதி அடையலாம்.


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...