பெய்திறனின் அடிப்படையில் தான் மழைக்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது.
• தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது,விரைவில் உலர்ந்துவிடும்.
• சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
• மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
• பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.
• அடைமழை – ஐப்பசியில் பெய்வது.
• கனமழை – கார்த்திகையில் பெய்வது.
இதையே அளவில் கூறும்போது:
•மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
• அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
• 4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
மழையைப் பற்றித் திருவள்ளுவர்
"மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.
"கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி". (குறள் 701)
இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று . நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு"
(குறள் 452)
எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் தன்மையை இல்லை அளவைத்தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
No comments:
Post a Comment