Wednesday, May 27, 2020

திருமந்திரம் 1055:


"தான் எங்குளன், அங்கு உளள் தையல் மாதேவி,
ஊன் எங்கு உள , அங்கு உள உயிர்க்காவலன்;
வான் எங்கு உள அங்குளே வந்து மப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே"

எங்கெங்கு சிவபிரான் விளங்கி நிற்கிறாரோ, அங்கங்கு அவரை அதிட்டித்து விளங்குபவள் தையலாள்!! என்றும் பதினாறு வயதுடையவள் ஆதலின் அவள் தையல் நல்லாள்!! மாதேவி!! இவளை விட பெரியவர் எவருமில்லை ஆதலின் இவள் மஹாதேவி!!

எங்கெல்லாம் உடம்பு இருக்கிறதோ, அங்கெலாம் உயிர் விளங்குவது போல், சிவனிருக்குமிடத்தெல்லாம் , அச்சிவத்திற்கு ப்ரணனைப்போல் விளங்குபவள் மஹாதேவியாகிய அம்பிகை!! உயிருக்கு காவலாய் விளங்கி நிற்பவளும் இவளேயன்றோ!!

வெளியில்லாத இடம் என்பது எதுவும் கிடையாது!! அதுபோல் எவ்விடத்திலும் நிறைந்திருப்பவள் பராசக்தி!! "Vacuum" என்றால் வெற்றிடம் என்பர்!! அவ்விடத்திலும் வெளியானது நிற்கும்!! அவ்வெளி எங்கும் நிறைந்துள்ளதைப் போல் பராசக்தியாகிய அம்மையும் எவ்விடத்திலும் விளங்கி நிற்பவள்!! அவளில்லாத இடமே எங்கும் இல்லை!!

அப்படிபட்ட மாதேவி அவ்வெளியையும் கடந்து பரஞான மயமாய் ஒளிர்பவள்!! ஆகாயத்தினைக் கடந்த பரவெளியிலும் அவள் விளங்குவதை ஞானியர் காண்பர்!! ப்ரஹ்மாணடத்தைச் சுற்றி ஒரு சுவர் உண்டு!! அதற்குள்ளே தான் கைலாயம், வைகுண்டம் முதலியன இயங்கும்!! அதன் வெளியில் சிதாகாசம்!! ஆங்கு நாதசக்தியாக மஹாசம்புநாதரும், ஞானசக்தியான பராசக்தியும் விளங்குவர்!! அங்கு ஞானமயமாய் விளங்குபவளும் திரிபுரை ஆவாள்!!

அச்சிதாகாசத்திற்கும் அப்பால் மஹாகைலாயம் விளங்கும் என்று கூறுவர்!! பூர்ண ப்ரம்ம வடிவான சிவசக்தியர் அங்கே உறைவர்!!

ஆதலின் உலகிற்குள்ளும் அப்பாலும் எவ்விடத்திலும் விளங்குவது திரிபுரை ஒருத்தியே!! அவளே யாவுமாய், எதிலுமாய், எங்குமாய் ஒளிர்வாள்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...