Saturday, May 23, 2020

ஶ்ரீசட்டை முனி சித்தா்

கடல்சூழ் இலங்கையில் ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுவாமிகள் பிறந்தார். பின்னர் அவரது பெற்றோர்கள் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். தன் மகனை இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச்செய்ய மிகவும் போராடினர். திருமணமும் நடந்தது. ஆனால், இறைவன் சித்தப்படி சட்டைமுனிக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாயிற்று. வீட்டை விட்டு வெளியேறி காடு, மலைகளில் திரிந்தார். அப்போது போகர், திருமூலர் மற்றும் அகஸ்தியர் ஆகிய சித்தர்களை தரிசனம் செய்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். ஸ்ரீ போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.  

ஸ்ரீ போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ கொங்கணர், கருவூரார் சுவாமிகள்முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களைக் குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக்கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்தில் இருந்து தெரியும் திருவரங்கர் கோயில் கலசங்களைக் கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோயில் நடைசாத்துவதற் குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூஜை முடிந்து கோயில் கதவு அடைக்கப்பட்டுவிட்டது.

ஏமாற்றத்துடன்கோவில் வாசலில் நின்று அரங்கா!அரங்கா! அரங்கா! என்று கத்தினார் உடனே கதவுகள் தாமாகத்திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று சுவாமிகளின் மேல் சட்டைபோல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி அரங்கா!" என்று கத்திய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் முன் நின்ற சட்டைமுனி இறைவனுடன் ஒன்றாகக் கலந்தார்.


No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...