Wednesday, May 27, 2020

சகல ரோக நிவாரணி அஷ்டகம்

ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகம், நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்த,மிக மகிமை வாய்ந்த துதியாகும். நம்பிக்கையுடன் இதைப் பாராயணம் செய்து அம்பிகையைப் பூஜித்தால், அம்பிகையின் அருளால், சகல விதமான நோய்களும், பிறவிப்பிணியும் நீங்கி பேரானந்த நிலையை அடையலாம்.

ராகு காலத்தில் - குறிப்பாக செவ்வாய்க் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை
அம்மாவாசை மற்றும் அதற்கு முன் நாள், பௌர்ணமி போன்ற நாடுகளில் இந்த வழிபாடு செய்யலாம்.

ராகு காலத்தில் ஏற்ற ஒரு குத்து விளக்கை வாங்கி கொள்ளவும்.

அந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி கிழே கொடுத்துள்ள சகல ரோக நிவாரணி அஷ்டகம் படிக்கவும்.


பகவதி தேவி பர்வத தேவி.

பலமிகு தேவி துர்க்கையளே

ஜகமது யாவும் ஜயஜயவெனவே

சங்கரி உன்னைப் பாடிடுமே

ஹநஹந தகதக பசபச வெனவே

தளிர்த் திடு ஜோதியானவளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


தண்டினி தேவி தக்ஷிணி தேவி

கட்கினி தேவி துர்க்கையளே

தந்தன தான தனதன தான

தாண்டவ நடன ஈச்வ ரியே

முண்டினி தேவி முனையொளி சூலி

முனிவர்கள் தேவி மணித் தீவியளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


காளினி நீயே காமினி நீயே

கார்த்திகை நீயே துர்க்கையளே

நீலினி நீயே நீதினி நீயே

நீர்நிதி நீயே நீர் ஒளியே

மாலினி நீயே மாதினி நீயே

மாதவி நீயே மான் விழியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


நாரணி மாயே நான் முகன் தாயே

நாகினியாயே துர்க்கையளே

ஊரணி மாயே ஊற்றுத்தாயே

ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே

காரணி மாயே காருணி தாயே

கானகயாளே காசி னியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


திருமகளானாய் கலைமகளானாய்

மலைமகளானாய் துர்க்கையளே

பெருநிதியானாய் பேரறிவானாய்

பெருவலியானாய் பெண்மையளே

நறுமலரானாய் நல்லவ ளானாய்

நந்தினி யானாய் நங்கையளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


வேதமும் நீயே வேதியள் நீயே

வேகமும் நீயே துர்க்கையளே

நாதமும் நீயே நாற்றிசை நீயே

நாணமும் நீயே நாயகியே

மாதமும் நீயே மாதவம் நீயே

மானமும் நீயே மாயவளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


கோவுறை ஜோதி கோமள ஜோதி

கோமதி ஜோதி துர்க்கையளே,

நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி

நாட்டிய ஜோதி நாச்சியாளே

பூவுறை ஜோதி பூரண ஜோதி

பூதநற் ஜோதி பூரணியே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம

சாரிணி சந்திர கண்டினியே

ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யாயன்ய யளே

ஜய ஜய காலராத்திரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநிவாரணி ஜய துர்க்கா


சகல ரோக நிவாரணி அஷ்டகம் சகலருக்கும் சகலவிதமான நன்மைகளை அருளும் மந்திரம்,
துர்கையை துதிப்பவர்களுக்கு துயரம் இல்லா வாழ்வுகிட்டிடும்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...