Saturday, May 23, 2020

இலுப்பை மரம்

இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் இலையுதிர்க் காடுகளிலும் காணப்படும் மர வகையாகும். இதன் எண்ணெய் சோப்பு உற்பத்தியில் பயன்படுகிறது. அதே மாதிரி இந்த இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்பு போன்றவற்றில் வணிக ரீதியாகவும் பயன்பட்டு வருகிறது.

இலுப்பை மரத்தின் பாகங்கள்

இந்த மரத்தின் பூக்கள் மற்றும் விதைகள் உண்ணக் கூடியது. இந்த மரத்தின் பழங்களை நீங்கள் காய்கறிகளாக பயன்படுத்தலாம். இந்த மரத்தின் விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை பழங்குடி மக்கள் சமையல் எண்ணெய்யாகக் கூட பயன்படுத்தி வருகின்றனர். நம் ஊர் மக்கள் இந்த எண்ணெய்யை வீட்டில் விளக்கேற்ற பயன்படுத்துகின்றனர். மேலும் இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சோப்பு தயாரிப்பு, வெண்ணெய் தயாரிப்புகள் போன்றவற்றிலும் பயன்பட்டு வருகிறது.

மருத்துவ பயன்கள்:

சரும பராமரிப்பு
இலுப்பை எண்ணெய் சருமத்திற்கு தோல் மினுமினுப்பை கொடுக்கக் கூடியது. எனவே உங்க சரும பிரச்சனைகள் நீங்க இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். விதைகளில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பிறகு உள்ள பிண்ணாக்கை ஊற வைத்து அரைத்து வடிகஞ்சியுடன் தேய்த்து குளித்து வந்தால் சரும வியாதிகள் நீங்கும். எனவே தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தி வந்தார்கள்.

சுவாச பிரச்சனைகள் நீங்க..

இலுப்பை மரத்தின் பூக்களுக்கு அலற்சியை போக்கும் பண்புகள் உண்டு. இதனால் இவை இருமல், மூச்சுக் குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச கோளாறுகளை நீக்க உதவுகிறது.

தாய்ப்பால் சுரக்க..

தாய்ப்பால் சுரக்காத பெண்கள் அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு பால் சுரப்பை தூண்ட இலுப்பை இலைகளை பயன்படுத்தினாலே போதும். இலுப்பை இலைகளை மார்பில் வைத்து பெண்கள் கட்டி வர குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும் என்கிறது ஆயுர்வேதம்.

வயிற்று அல்சர் நீங்க..

நிறைய பேர்கள் வயிற்றில் அதிகமான அமில சுரப்பால் புண் ஏற்பட்டு அல்சரால் அவதிப்படுவார்கள். அவர்கள் இலுப்பையை பயன்படுத்தி வந்தால் போதும் அமில சுரப்பிற்கு காரணமான ஹிஸ்டமைன் என்ற சேர்மத்தை தடுக்கிறது. இதன் மூலம் வயிற்றில் அமில சுரப்பு குறைந்து வயிற்று அல்சர் சீக்கிரமே ஆறுவதற்கு உதவி செய்கிறது.

பல் ஆரோக்கியம்

உங்க பற்கள், ஈறுகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இலுப்பை சிறந்த ஒன்று. ஈறுகளில் வடியும் இரத்தக் கசிவை நிறுத்த இந்த மரத்தின் பட்டையை பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மரத்தின் பட்டையை தண்ணீரில் போட்டு சாறு எடுத்து பயன்படுத்தி வர ஈறுகளில் வடியும் இரத்தப் போக்கு சரியாகிறது. அதே மாதிரி இதைக் கொண்டு தொண்டை புண் போன்றவற்றை சரிசெய்யலாம். இதற்கு முக்கிய காரணம் இலுப்பையில் காணப்படும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தான்.

இதய நோய்கள் குணமாகும்

தற்போது நிறைய மக்கள் இதய நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இதய நோய்களிலிருந்து உங்களை காக்க இலுப்பையின் விதைகள் பயன்படுகிறது. ஏனெனில் இந்த விதைகளில் உள்ள ஒலிக் அமிலம் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. எனவே இலுப்பை எண்ணெய்யை சமையல்களில் தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

காய்ச்சல் குணமாக

இலுப்பை பட்டையின் சாற்றில் வலி நிவாரணி பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது காய்ச்சல், வீக்கம் மற்றும் வலி போன்ற அறிகுறிகளை போக்க உதவுகிறது. மேலும் இதில் நிறைய ஊட்டச்சத்துகள் பொதிந்து இருப்பதால் சீக்கிரமே காய்ச்சலில் இருந்து எழுந்திருக்க உதவி செய்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்

நமது உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் இலுப்பை நமது கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கல்லீரல் சுவர்களை வலுப்படுத்துகிறது. குளுட்டமிக்-ஆக்சலோஅசெடிக் டிரான்ஸ்மினேஸ் மற்றும் இரத்தத்தில் அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதன் ஆக்ஸினேற்ற தன்மை கல்லீரல் செல்கள் அழிவதை தடுக்கிறது. கல்லீரல் நோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.



நீரிழிவு நோயை கட்டுப்படுத்த..

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோயால் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் முக்கியமான உறுப்புகளும் பாதிப்படைகிறது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இலுப்பை மரத்தின் பட்டைகள் பயன்படுகிறது. இலுப்பை மர பட்டைகளின் சாற்றை கொண்டு விலங்குகளில் ஒரு ஆய்வு நடத்தினர். அப்பொழுது இந்த சாறு நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பது தெரிய வந்தது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

பக்க விளைவுகள்:

* இலுப்பையை அதிகமாக எடுத்துக் கொள்வது கருவுறாமை பிரச்சினையை உண்டாக்கலாம்.

* இலுப்பை நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரியலாம். எனவே இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
* இலுப்பையின் விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குகிறது. எனவே நீங்கள் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் போன்ற ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது நோயெதிரிப்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தாலோ இலுப்பையை எடுத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவர்களிடம் ஒரு முறை அணுகிக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...