Saturday, May 23, 2020

பைரவர்

அஷ்ட பைரவர்கள்: 
***********************

1.   அசிதாங்க பைரவர்
2.   ருரு பைரவர்
3.   சண்ட பைரவர்
4.   குரோத பைரவர்
5.   உன்மத்த பைரவர்
6.   கபால பைரவர்
7.   பீஷண பைரவர்
8.   சம்ஹார பைரவர்

மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன.  வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.

எட்டு பைரவர்களின் வாகனங்கள்:
*****************************************

1.   அசிதாங்க பைரவர் -  அன்ன வாகனம்
2.   ருரு பைரவர் – காளை வாகனம்
3.   சண்ட பைரவர் – மயில் வாகனம்
4.   குரோத பைரவர் -  கருட வாகனம்
5.   உன்மத்தபைரவர் -  குதிரை வாகனம்
6.   கபால பைரவர் -  யானை வாகனம்
7.   பீஷண பைரவர் -  சிம்ம வாகனம்
8.   சம்ஹார பைரவர் -  நாய் வாகனம்

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அசிதாங்க பைரவர்
***********************

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்
****************

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சிவிளங்குகிறாள்.

சண்ட பைரவர்
******************

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

குரோதன பைரவர்
**********************

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்
**********************

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்
******************

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீக்ஷன பைரவர்
*******************

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்
*********************

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன 

அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில்
குரோத பைரவர் - காமாட்சி ஆலயம் 
உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில்
ருரு பைரவர் - அனுமன் காட்டில்
கபால பைரவர் - லாட் பஜாரில்
சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில்
பீஷண பைரவர் - பூத பைரவத்தில்
சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.

அறுபத்து நான்கு பைரவர்கள்
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்
***********************************

சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலை
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. 

கால பைரவர்
****************

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
வேறு பைரவ வடிவங்கள்
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.

பைரவ வழிபாடு
********************

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பைரவ விரதம்
******************

பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது

 இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்:

  "ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
   ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
   அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
   ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
   மம தாரித்தர்ய வித்வேஷணாய
   ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:"

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

  "ஓம்  வம் வடுகாய ஆபத்துத்தாரணாய,
குரு குரு வடுகாய ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா"

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

  "ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே                                     ஸ்வாந வாஹாய தீமஹி
   தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

  "ஓம் திகம்பராய வித்மஹே                 தீர்கதிஷணாய தீமஹி                                              தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...