Saturday, May 23, 2020

வைகுண்டர் தாலாட்டு

தாரதரதர தாராரோ தாரரர ரரரா றாறோ 
நாராயணர் தானோ தாறாரோ நல்லநாராயண வைகுண்டமோ 
காரணர் தானோ வைகுண்டமோ கைலாசநாதக் கண்மணியோ 
செல்வமுதலான சீமானோ சிவசிவா சிவசிவ முதலோ 
அல்லலகற்றியே யரசாளும் அரியோன் மிகப் பெற்ற அரிதானோ 
தெய்வப்பெருமாள்தான் பெற்றகன்றோ சீதைமாதுதான் பெற்றகன்றோ 
மெய்யநரிநாதன் பெற்றகண்ணோ விஸ்ணுமகாபரன் பெற்றகண்ணோ

ஈசர்மைத்துனர் பெற்றகண்ணோ யிரவா 
திருமாது பெற்ற கண்ணோ 
மாயத்திருவுளம் பெற்றகண்ணோ மானவை 
குண்ட ராஜகன்றோ 
வேதக்குருநாதன் பெற்ற கன்றோ வீரலட் 
சுமி யீன்ற கன்றோ 
சீதக்குருதாயார் யீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசகன்றோ 
கிஸ்ணமகாநாதன் பெற்றகன்றோ கிருபைக்குருநாதக் கண்மணியே 
விஷ்ணுமகாநாதன் பெற்றகன்றோ வீரலெக்ஷிமி யீன்றகன்றோ
நாட்டுக்குடையதோர் நாரணரின் நல்லபாலனோ வைகுண்டனோ 
மூலச்சிவநாதன் பெற்றகன்றோ வுலகைவொருக்குடைக் காள்வானோ 
நாலுவேதமுந்தாண்டி முறை நடத்தி வொருக்குடைக் காள்வானோ 
தர்மத்திரவானோ தாராரோ தங்கவைகுண்டத் தாட்டீகனோ 

மகரசீதையாள் வயிற்றிலுற்று வளர்ந்த வைகுண்ட மாமனியோ 
அகரசிவகோபுர அழகுபதி அதிகபதி கண்டுவந்தவரோ 
தங்ககோபுரந்தளிர் மரமுஞ் சதுரமேடைகள் கண்டவறோ 
சங்கமகிளவே வந்தவரோ சகலகலை தமிழராய்ந்தவறோ 
உலகபதினாலும் ஒருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காழ வந்தவறோ 
இலகுபிரகாசச் சுவருகொண்டு யிலங்கும் பதியாள பிறந்தவறோ 
வம்புக்கலியுகக் குலமறுக்க வைந்தப்பதியாள வந்தவறோ 

அம்புகணை யொன்றுமில்லாமலே அறுக்கவந்தாறோ கலிதனையும் 
கூடப்படைகள் துணையில்லாமல் குறும்பையடக்கவே வந்தவறோ 
சாடத்தலையாறி வொன்றில்லாமல் சதைக்கவந்தாறோ கலியுகத்தை 
வாழுவாயுத மெடுக்காமலே வதைக்கவந்தாறோக் கலியுகத்தை 
கோழுபேய்களை கிரகங்களை கொல்லவரம் பெற்ற வைகுண்டரோ 
சாணாக்குருநாத வைகுண்டறோ சாதிதர்க்கார்க்குந் தலையாரியோ 
காணாக்கருவான குருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ 
நீசக்குலங்களைக் கருவருக்க நெடிய நாராயணர் பெற்றகன்றோ 
தோஷப்புழுச்சாதிக் குலமறுக்க திருமால் நாராயணர் பெற்றகன்றோ
சீமையன்பத்தாரு தேச மெல்லாஞ் சொல்லொன்றுக்குள்ளாய்ப் பிறந்தவறோ 
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம்பெற வோங்கவந்தவரோ 
தெய்வபாலர்கள் சிறந்துபோற்ற சீமையரசாள வந்தவரோ 
மெய்வரம்பதின் முறைநடத்தி மேன்மைசெங்கோல் முடிதரித்து 
பொர்மை பெரியோனோ வைகுண்டனோ பெரியப்பூமேடைக் கொலுவீரனோ 

தர்மவரம்புகள் தவராமல் தரணியரசாளும் வைகுண்டறோ 
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவறோ 
மிராசுமூவர்க்கு முதன்மைதானோ மூலச்சிவமணிக் குருநாதனோ 
சான்றோர் கைகட்டி சரணங்கூறத் தரணியொருக்குடைக் காள்வாறோ 
வையமழந்தோர் நாரணர்க்கு மதலையென வந்த வைகுண்டமோ 
தர்மபதியாழும் வைகுண்டரோ சாணார்கனு கூலமானவரோ 
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிகவிதி கொண்டு பிறந்தவறோ 
சாணார் குடிக்குல நாயகமோ தர்மந்தளைக்கவே பிறந்தவறோ 

தோணுதுறை கொண்டுவந்தவறோ துவரயம்பதியாளப் பிறந்தவறோ 
ஏழுயுகபர கணக்குயெல்லாம் யெடுத்து நடுத்தீர்க்க பிறந்தவரோ 
ஆழும் வைகுண்டப் பதியாளவே அதியவைகுண்டம் பிறந்தவறோ 
வீரவீராதி வீரன்றானோ வீரசூரனா ரீன்றகன்றோ 
சூரசூராதி சூரன்றானோ சூரனார்பெற்ற கண்மணியோ 
நாதநாரணர் பெற்றகண்ணோ நாகமணிநாதன் பெற்றகண்ணோ
ஏகச்சிவநாதன் பெற்றகண்ணோ யிரவாத்திரு மூர்த்தி பெற்றகண்ணோ

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...