Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Saturday, July 21, 2018

சேஷாத்ரி சுவாமிகள்

சேஷாத்ரி சுவாமிகள் 1870ம் ஆண்டு பிறந்தார் இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார்.

இவரின் வரலாறை கேட்டால் வித்தியாசமானது. இவர் தங்கக்கை #சேஷாத்ரி என்றும் அழைக்கப்பட்டார்
இதற்க்கு காரணம் இவர் சிறுவயதாக இருந்தபோது இவர் ஊரில் இருந்த கண்ணன் கோவிலில்
விழா நடந்தது.

அந்தகோவில் விழாவிற்க்கு இவர் தன்
தாயுடன் சென்று இருந்தார் அந்தநேரமாக ‌அந்தக்கோவிலில் ஒருவன் பொம்மை விற்றுகொண்டிருந்தான் சிறு குழந்தையான சேஷாத்ரி.

பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்க தாய் வேண்டாம் என்றார்.இதை பார்த்த பொம்மை விற்றவன் அம்மா சிறு குழந்தை கேட்கிறது உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு பொம்மை நான் சும்மா தருகிறேன் என்று சேஷாத்ரியிடம் ஒரு பொம்மையை கொடுத்தான்.

சிலமணிநேரங்களுக்கு பிறகு சேஷாத்ரியை தேடி பொம்மை விற்பவன் வந்தான் அம்மா இது சாதாரண குழந்தை இல்லை ஞானக்குழந்தை என்றான். ஏனென்றால் சற்றுமுன் என்னிடம் நிறைய பொம்மைகள் இருந்தன பலநாட்களாக அந்தபொம்மைகள் விற்கவில்லை. இப்போது விற்றுதீர்ந்துவிட்டது இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை இது சாதாரணகை இல்லை தங்கக்கை என்று பாராட்டினான் அதனாலேயே இந்தபெயர் வந்தது.

ஞானமார்க்கத்தை தேடிய சேஷாத்ரி தனது இளமைப்பருவத்தில் திருவண்ணாமலை வந்தார்.
அங்கேயே சுற்றிதிரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில் சிலர் மீது மட்டும் [கடும் தோஷம் உடைய]
பக்தர்கள் மீது தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார் பலருக்கு பல்வேறு விதமான நோய்கள் தீர்ந்துஇருப்பதாக இதனால் நம்பப்படுகிறது பலருக்கு பல்வேறுவிதமான தோஷங்கள்
விலகி உள்ளது.

இவர் திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும் அழைக்கப்பட்டார் அதற்க்குகாரணம் இவர் ஊரை சுற்றி வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது.

திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார் கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார் கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும் வியாபாரிகளும் இவர் பார்வை நம் மீது படாதா என ஏங்குவர்.ஆனால் சரியான நபருக்கு மட்டுமே இவரின் கருணைப்பார்வை படும்.

ஒருமுறை ஒரு சவஊர்வலம் சென்று
கொண்டிருந்தது அதன் பின்னே சென்ற இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள் சென்றார். சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில் வைத்து இருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை தட்டிவிட்டார்.

ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென் ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள் ஒரு நாகம் இறந்து கிடந்தது சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை கையெடுத்து வணங்கினர் மக்கள் அனைவரும். இப்படி இவரின் வரலாறு அதிகம். ஒரு முறை ஊரில் அம்மை நோய் அதிகம் இருந்தது யாரும் வெளியில் வரக்கூடாது என்ற ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவை மீறி வெளியில் வந்தார்.

இவரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு விழுப்புரம் செல்வதற்க்கு நீதிபதி காரில் சென்று கொண்டிருந்தபோது
நீதிபதியின் கண்களுக்கு சாலையோரத்தில் இவர் தெரிந்தார். அப்படியே தன் உதவியாளரை அனுப்பி ஜெயிலில் சேஷாத்ரி உள்ளாரா எனப்பார்த்து வரச்செய்தார் அவர் அங்கு பத்திரமாக‌ உள்ளார் என உதவியாளர் வந்து தகவல் சொன்னார். நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை அவர் ஒரு மகான் எனப்புரிந்துகொண்டார் தன் தவறை உணர்ந்து அவரை விடுதலை செய்தார்.

இப்படி பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமிகள் 1929ம் ஆண்டு சித்தியடைந்தார் அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.

Tuesday, August 19, 2014

பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்.. உறையூர்

 
              சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காண்லாம்.

காலையில் ரத்னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார்.

புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனவரும் புகழ்ச் சோழ நாயனாரும், மற்றும் யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலம் ..

Monday, December 30, 2013

பாலை நீராக்கும் ஜாலம்


தாமரைமணியை(விதை) இடித்துப்பொடியாக்கி பாலில்போட 
 நீராகிவிடும். அதிகமாகப்போட்டால் வெருந்தண்ணீராகிவிடும்.

Monday, September 30, 2013

சித்தர் பழமொழிகள்.



1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.


3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.



4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா..?!

Tuesday, September 24, 2013

நக்கீரர்!



தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்னும் பெயரால் முத்தமிழ் நாடாக விளங்கியது. இவற்றுள் தமிழ் வளர்த்த சங்கங்கள் அமைத்துப் புகழ் பெற்ற நாடு பாண்டிய நாடாகும். அதன் தலைநகரமே மதுரை மாநகரம். அந்நகரத்தில் அமைக்கப் பெற்று விளங்கிய தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ச்சி செய்த புலவர்கள் சங்கப்புலவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களாகும்.

இத்தமிழ்ச் சங்கத்தில் தமிழை ஆராய்ந்தவர்களுள் நக்கீரரும் ஒருவர். தலைப்புலவர்களான கபிலர், பரணர், நக்கீரர் மூவருமே சமமனான புலமை பெற்றிருந்த போதும் இவர்கள் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அந்நட்பினைச் சிறப்பிக்கும் வகையில் "கபில பரண நக்கீரர்" என்று அழைக்கப்பட்டனர். எனினும், கபிலர், பரணர் இவர்களை விட நக்கீரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

Friday, July 19, 2013

அகத்தியர் வரலாறு:-



ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1-191வது ரிக்காக விளங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்க, சகல விஷத் தொல்லைகளும் நீங்கும்.

கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக் வேதத்தில் 1-165-192-ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.

அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் என பாகவதம் அறிவிக்கின்றது.

ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன் விளங்கினார் என விஷ்ணுபுராணமும் முழங்குகின்றது.

சுகேது என்னும் யட்சன் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தான். அவர் அருளினால் ஒரு பெண் குழந்தையை அடைந்தான். தன் மகளுக்குத் தாடகை என்று பெயரிட்டான். சுகேது தக்க பருவத்தில் தாடகையை ஜர்ஜன் என்னும் யட்சனின் மகனாகிய சுந்தன் என்பவனுக்கு மணமுடித்தான்.

சுந்தனுக்கும், தாடகைக்கும் மாரீசன், சுபாகு என்னும் இரண்டு குமாரர்கள் பிறந்தனர். ஒரு நாள் சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தான். ஆணவத்தாலும் காமத்தாலும் மதிகெட்ட அவன் ஆசிரமத்தில் இருந்த மரங்களைப் பெயர்த்து எறிந்தும், மான் முதலிய ஜீவன்களைக் கொன்றும் ஆசிரமத்தை அழித்தான். தவச்சாலை பிணச்சாலை ஆனது. அகத்தியர் கோபங்கொண்டு பார்க்க, சுந்தன் சாம்பல் ஆயினான்.

கணவன் இறந்ததை அறிந்த தாடகை தன் குமாரர்களுடன் அகத்தியர் இருக்கும் இடம் வந்தாள். அகத்தியரைக் கொல்ல எண்ணி அவர் மீது மூவரும் பாய்ந்தனர். அழிவன செய்தமையின் மூவரும் அரக்கர் ஆகுக! என அவர் சபிக்க மூவரும் அரக்கர் ஆயினர்.

இவர்களை இராமபிரான் வதைத்த வரலாறு இராமாயணத்தினுள் காணலாம்.

இனி, பிதுர்வாக்ய பரிபாலனம், மாத்ரு வாக்கிய பரிபாலனம் என்னும் அறத்தினை மேற்கொண்டு இராமன் வனவாசம் செல்கையில், தண்டகாரண்யத்து மகரிஷிகள் அனைவரும் அவனிடம் சென்று இராவணனால் படும் துயரங்களைக் கூறிச் சரண் புகுந்தனர்.

சரணாகத வத்சலனான இராமன் அவர்களை ஆதரித்து, அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி தந்தனன். பின் அங்கிருந்து அகத்தியரின் ஆசிரமம் சென்றனன்.

தன் ஆசிரமம் வந்த இராம, இலக்குவர்களை அகத்தியர் வரவேற்றார். அகத்தியர் அருள் கிடைத்தமையால் தனக்கு அனைத்தும் கிடைத்ததாக இராமபிரான் மகிழ்ந்தான்; எனில் அகத்தியரின் பெருமைதான் என்னே! என்னே!. பின் அகத்தியர் இராமபிரானுக்கு வில்லையும், நாராயண அஸ்திரத்தையும், வாள் ஒன்றினையும் கொடுத்தார். முடிவில் அவர்களைப் பஞ்சவடியில் தங்கியிருக்குமாறு அகத்தியர் வழியனுப்பி வைத்தார். இவை இராமாயணத்தில் காணப்படுவனவாம்.

வனம் ஒன்றின் வழியாக அகத்தியர் சென்று கொண்டிருந்தார். தன் முன்னோர்கள் (பித்ருக்கள்) பெரும் பள்ளத்தில் ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களின் துன்பத்திற்குக் காரணம் கேட்டார். "அகத்தியா! நீ இல்லறத்தில் ஈடுபடவேண்டும். ஆண் சந்ததி ஒன்றைப் பெற்றெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்கட்கு இந்த யம தண்டனை தீரும்" என்றனர்.

முன்னோர்களைக் கரையேற்ற எண்ணிய அகத்தியர், திருமணத்தில் எண்ணங்கொண்டார். விதர்ப்பராஜன் மகள் லோபமுத்திரையை மணந்தார். இளவரசிக்கு உரிய கோலங்களை நீக்கித் தவக்கோலம் கொண்டவளாக லோபமுத்திரையை மாற்றி அழைத்துக் கொண்டு கானகம் சென்றார்.

நீண்ட நாள் கழித்து முன்னோர்களை எண்ணிய அகத்தியர், சந்ததி விருத்தி செய்ய எண்ணி லோபமுத்திரையை நாடினார். ஆனால் லோபமுத்திரையோ அகத்தியரை வணங்கி “சுவாமி! ஆண், பெண்ணை மணந்து கொள்வது புத்திரப்பேற்றினுக்குத்தான். நான் தங்களிடம் வைத்துள்ள பிரியத்தைப் போல நீங்களும் என் மீது பிரியம் வைக்க வேண்டும். இந்த பர்ணசாலையில் தவத்தைத் தவிர வேறு ஒன்றனையும் என்னால் எண்ண முடியவில்லை.

தாங்கள் ஓர் அரண்மனை கட்ட வேண்டும். நான் அதில் ஆடை, ஆபரணங்கள், இதர சௌக்கியங்களுடன் இருந்து, உங்கள் மகனைப் பெற ஆசைப்படுகின்றேன்,“ என்று தன் உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் கூறினார். சிற்றின்பத்திற்காக தவத்தை இழக்க விரும்பாத அகத்தியர், மன்னர்களிடம் யாசகம் பெறச் சென்றார். சுருதர்வா என்ற மன்னனிடம் சென்றார். மன்னன் அவரை வரவேற்று வேண்டிய பொருள்களை எடுத்துச் செல்லுங்கள் என்று வேண்டினான்.

மறுத்த அகத்தியர் மன்னனிடம் வரவு, செலவு கணக்கைக் கேட்டார். கணக்கைப் பரிசோதிக்க வரவிற்கும், செலவிற்கும் சரியாய் இருப்பதைக் கண்டு, “உன்னிடம் நான் தானம் பெறுவது பாவம்“ என்று கூறி வேறு மன்னனிடம் புறப்பட்டார். அத்தனை மன்னர்களிடத்தும் உபரியாக நிதி இல்லாமையால் யாரிடமும் தானம் பெறாது சென்றார் அகத்தியர்.

(பண்டைக்காலம் முதலே நம் மன்னர்கள் வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) வைத்திருந்தனர் என்பதும், குடிமக்களிடமிருந்து வரவு ஆகும் பொருளையெல்லாம் திரும்பவும் குடிமக்களுக்கே செலவு செய்தனர் என்பதும், அரசன் பொருளைக் கண்டபடி செலவு செய்யவில்லை என்பதும், முன்னோர்கள் நமக்கு வைத்துச் சென்ற அரசியல் அனுபவ நீதியும், நிதியுமாகும்.)

அரசர்கள் அனைவரும் அகத்தியருடன் ஆலோசித்தனர். ‘தவநிதியே! மணிமதி என்னும் நகரில் இல்வலன் என்ற அசுரன் அளவற்ற செல்வம் உடையவனாய் வாழ்கின்றான். அவனிடம் யாசிப்போம் என்று முனிவரை அழைத்துச் சென்றனர்.

இல்வலன் தவசிகளைக் கொன்று தின்னும் பழக்கமுடையவன். முனிவர் கோலம் தரித்து அவன் முனிவர்களைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்வான், தன் தம்பியை ஆடாக்கிச் சமைத்து, அதனை முனிவர்களுக்குப் பரிமாறுவான். முனிவர்கள் உண்டு முடித்தபின்."வாதாபி வா!"என்று அழைத்தால் வாதாபி உருவம் பெற்று, முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருவான். பின் இருவரும் இறந்த முனிவரின் உடலைத் தின்று பசியாறுவர்.

இல்வலன் அகத்தியருக்கும் தன் தம்பியை உணவாக்கிப் பரிமாறினான். அகத்தியரும் உண்டார். வழக்கப்படி வாதாபி வா! வா! எனப்பலமுறை அழைத்தும் வாதாபி வரவில்லை. அகத்தியர் அவனை ஜீரணமாபி எனக் கூறி ஜீரணித்து விட்டார். பிரம்மாவின் வரத்தையும் வெல்லும் ஆற்றல் அகத்தியருக்கிருந்தது.

இல்வலன் அகத்தியரை வணங்கினான். சுவாமி! வேண்டியது என்னவோ? என்றான். இல்வலா! பிறர்க்குத் துன்பம் இல்லாமல் உன்னால் முடிகின்ற தனத்தைக் கொடு என்றார். ஆனால் அசுரனோ, நான் இவ்வளவு கொடுக்கப் போகிறேன் என்பதைச் சொன்னால் கொடுக்கிறேன் என,

இந்த அரசர்கள் ஒவ்வொருவருக்கும் பதினாயிரம் தங்க நாணயங்களையும், எனக்கு அதைப்போல் இருமடங்கும் ஒரு தங்க ரதமும் மனோ வேகமுள்ள இரண்டு குதிரைகளையும் தரப்போகின்றாய் என்றார். அசுரனும் அவ்வாறே கொடுக்க ரதம் அடுத்த வினாடி அகத்தியரை அவர் ஆசிரமத்தில் சேர்த்தது.

ஆனால் அசுரன் அரசர்களையும், அகத்தியரையும் பின் தொடர்ந்து வந்தான். அனைவரையும் வஞ்சித்துக் கொன்று கொடுத்ததைத் திரும்பக் கவர்ந்து செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். அரசர்கள் அஞ்சி அகத்தியரை வேண்ட, தீயவனை ஒரு ஹீங்காரத்தால் அழித்தார்.

அசுரர்களான இல்வலன், வாதாபி இருவராலும் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்ஙனம் உலக மக்கட்குப் பயன்படச் செய்தார்.

தம் இருப்பிடம் அடைந்தார். மனைவியிடம் “ஆயிரம் புதல்வர் வேண்டுமா? அல்லது ஆயிரம் புதல்வர்க்கு நிகரான ஒரு புத்திரன் வேண்டுமா?“ எனக் கேட்க, அவ்வம்மையார், “வித்தையிலும், விநயத்திலும், சீலத்திலும்,ஞானத்திலும், ஒப்பில்லாத ஒரே புத்திரன் வேண்டும்,“ என வேண்ட, அகத்தியர் அருளினால், த்ருடாயு என்னும் புதல்வன் வேதங்களை உச்சரித்துக் கொண்டே பிறந்தான். த்ருடாயு வளர்ந்து யாகசாலைக்குத் தேவையான ஹோம திரவியங்கள், விறகுகள் இவற்றை நாள்தோறும் சுமந்து வந்ததால் அப்புதல்வன் இத்மவாஹனன் எனப்பட்டான். அகத்தியரின் முன்னோர்களும் யமதண்டனை நீங்கிச் சுவர்க்கம் புகுந்தனர்.

இந்திரன் பிரம்மஹத்யா தோஷத்தினால் ஒரு முறை இந்திரலோகத்தை விட்டு ஓடியொளிந்தான். பாண்டவர்களின் முன்னோனும் சந்திரகுல மன்னனுமாகிய நகுஷன் அசுவமேதயாக பலத்தால் இந்திரன் ஆயினன்.

செருக்கினால் சீரழிந்தான் அவன். இந்திராணியைக் காமுற்றான். தன் பெருமையை அவள் அறிந்து மதிக்க வேண்டுமென எண்ணினான். இதுவரை எந்த இந்திரனும் பயன்படுத்தாத ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். அதுவே தன் பெருமைக்கு தகுந்தது என முடிவு செய்து சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் இந்திராணி இருப்பிடம் சென்றான்.

பல்லக்கின் முன்புறத்தில் குள்ளமான திருமேனியுடைய அகத்தியர் சுமந்து சென்றார். அதனால் பல்லக்கு மெதுவாகச் சென்றது. காமவேகம் கொண்டிருந்த நகுஷன் பல்லக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் “ஸர்ப்ப! ஸர்ப்ப! (வேகமாகச் செல்) என்று கூறி அகத்தியரைக் காலால் தீண்டினான்.

அகத்தியர் உடனே “ஸர்ப்போ பவ“ (பாம்பாக மாறுவாய்) என்று சபித்தார். இங்ஙனம் அவர் ஓர் அபலையின் கற்பினைக் காத்தார். இந்த நகுஷன் பின்னாளில் பாண்டவர் வனவாச காலத்தில் பீமனைப் பிடிக்க, அவனைக் காப்பாற்ற வந்த தருமனிடம் தருமத்தின் சூட்சுமங்களைக் கேட்டுணர்ந்து சாபவிமோசனம் பெற்றான். இவ்வரலாற்றை மகாபாரத்தினுள் காணலாம்.

பார்வதி தேவியாரின் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் மற்றும் உள்ள திரிலோக வாசிகள் அனைவரும் இமயமலையில் கூடினர். இவர்களின் பாரதத்தைத் தாங்காது வடதிசை தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகினை அழிவிலிருந்து காக்கத் திருவுள்ளம் பற்றிய சிவபிரான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்பினார். இறைவனின் ஆணையை ஏற்ற அகத்தியர் தென்திசை வந்தார். உலகம் சீர் பெற்றது.

சிவபிரான் முதல் அனைவரும் ஒரு தட்டில். அகத்தியர் ஒரு தட்டில் என்றால் அவர் தம் பெருமையை என்னென்பது? தம் திருக்கல்யாண கோலத்தை அகத்திய முனிபுங்கவருக்கு அவர் இருந்த இடத்தில் காட்டி அருளினார் சிவபிரான்.

அகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.

“என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)

சிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் 8) கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம் செய்தார்.

1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் – என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய “அகத்தியம்“ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.

அகத்தியர் தென்திசை வருங்காலத்தில், மேரு மலையுடன் பகைகொண்ட விந்திய மலை அதனுக்குப் போட்டியாக வளரத் தொடங்கியது. கர்வம் கொண்ட விந்தியம் முனிபுங்கவருக்கு வழிவிடவில்லை. தம் கரத்தை பிரும்மாண்டத்தின் எல்லை வரை உயர்த்தினார்; விந்தியத்தின் உச்சிமீது வைத்தார். அழுத்தினார். விந்தியம் தாழ்ந்தது.

“நாகமது நாகமுற நாகமென நின்றான்“ (கம்பராமாயணம்)

சூரபன்மாவின் தங்கை அஜமுகி அவள் பிள்ளைகள் அகத்தியரைக் கொல்ல வர, அவர்களைப் பாசுபத அஸ்திரத்தினால் அழித்தார். போகும் வழியில் கர்வத்துடனிருந்த இந்திரத்துய்ம்மனன் என்னும் பாண்டி மன்னனை யானையாகச் சபித்தார். இவனே கஜேந்திரன் எனப்பட்டான்.

திருக்குற்றாலத்துப் பெருமானை ஹரிஹரரூபமாய் தரிசித்தார். அதன்பின் ஒரு திருத்தலத்திற்குச் சென்றார். இறைவனை தரிசனம் செய்ய, ஆனால் திருக்கோயில் சாத்தப்பட்டு இருந்தது. வண்டின் வடிவம் (ஈ) கொண்டார். மலர்களில் இருந்த தேனை எடுத்து அபிஷேகம் செய்தார். இங்ஙனம் வண்டின் (ஈ) வடிவம் கொண்டு அகத்தியர் வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை.

இந்திரன் சிவபூசனைக்காக நந்தவனம் வைத்தான். சூரபன்மனின் ஆணையால் மழை பெய்யாது நந்தவனம் வாட, இந்திரன் மனம் வாடினான். விநாயகனை வேண்டினான். அவர் காக்கை வடிவம் எடுத்துச் சென்று அகத்தியரின் கமண்டல தீர்த்தத்தைக் கவிழ்த்தார். கமண்டல கங்கை பெருக்கெடுத்தது. இந்திரனின் நந்தவனம் செழித்தது. கா, விரியும்படி இந்நதி பெருகியதால் காவிரி எனப்பட்டது.

காய்சின வழுதி (வழுதி – பாண்டியன்) அகத்தியரை முன்னிட்டுக் கொண்டு தமிழ் ஆராய்ந்தான். இது தலைச்சங்கம் எனப்படும். புதிதாக நூல் செய்பவர் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது. அகத்தியரின் இலக்கணம் பரவிய நாடுகள் செந்தமிழ் நாடு எனவும் மற்றவை கொடுந்தமிழ் நாடு எனவும் அழைக்கப்பட்டன.

“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி

பன்றி யருவா வதன்வடக்கு – நன்றாய்

சீதம்ம லாடு புனநாடு செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிநொட் டெண்“

தம் குலகுருவான வியாழ பகவானை அவமதித்து அதனால் பெருந்தொல்லைகளுக்கு ஆளானான் இந்திரன். விருத்திராசூரனிடம் தோல்வியடைந்து பதவியிழந்தான். பின் ததீசிமுனிவரின் முதுகெலும்பினால் புதிய வஜ்ஜிராயுதம் செய்து அதனால் அசுரனைக் கொன்றான். மற்ற அசுரர்கள் கடலில் ஒளிந்து கொண்டனர். இரவு நேரத்தில் வெளிப்பட்டு முனிவர்களைக் கொன்றனர். சாதுக்கள் இதனால் அவதிப்பட்டனர். யாக, யக்ஞங்கள், ஜப, தபங்கள் அழிந்தன. ஹோமார்ச்சனைகள் நின்றன. பூமி ஒளியிழந்தது.

தேவாதி தேவர்கள் அனைவரும் நடுநடுங்கி, இந்திரனை முன்னிட்டுக் கொண்டு மகா விஷ்ணுவைச் சரண் புகுந்தனர். எம்பிரான் அனைவரையும் அகத்தியரிடம் அனுப்பினான். அனைவரும் அவரிடம் வந்து அவர்தம் மகிமைகளைக் கூறிக் கொண்டாடினர்.

கருணை கனிந்த அகத்தியர் அவர்கட்கு அருள் பாலித்தார். கடற்கரை சென்றார். தம் தவ வன்மையால் கடல்நீரை ஒரு சொட்டு நீரைப் போல சுருக்கினார். பின் அதனை உண்டார். சகலரும் இதனைக் கண்டு அதிசயித்தனர். தேவர்கள் கடலுள் சென்றனர். அசுரர்களை எதிர்த்துப் போரிட்டனர். முனிவர்களுக்குச் செய்த அபராதத்தினால் வலிமையிழந்த அசுரர் தோற்றனர்; அழிந்தனர். சிலர் பாதாளம் சென்று மறைந்தனர். இங்ஙனம் அனைவரின் அச்சத்தையும் அகத்தியர் அகற்றினார்.

மைத்ரா வருணரின் ஒளியினால் கலசத்திலிருந்து பிறந்ததால் கும்பசம்பவர் என்றும் கலசயோனி என்றும் அழைக்கப்படுகின்றார். இவரால் செய்யப்பெற்ற சம்ஹிதை ஒன்று வேதங்களில் விளங்குகின்றது. அஃது அகத்திய சம்ஹிதை என்று பெயர் பெற்றுள்ளது.

வெகுகாலத்திற்கு முன் தாரகன் என்னும் அரக்கனும் அவனைச் சார்ந்தவர்களும் உலகினைத் துன்புறுத்தினர். அவர்களை அழிக்க எண்ணிய இந்திரன் அக்நி, வாயு இவர்கள் துணைகொண்டு பூமிக்கு வந்தான். தேவர்களைக் கண்ட அசுரர் கடலில் அஞ்சி மறைந்தனர். பின் அவர்கள் தேவர்களை வெல்ல உபாயந்தேடினர். இதனை அறிந்தும் அக்நி அவர்களை அழிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கரின் வன்மை அதிகம் ஆயிற்று. கோபம் கொண்ட இந்திரன் அக்னி தேவனே! நீ வாயுவுடன் கூடி கும்பத்திலிருந்து பிறந்து கடல் நீரைக் குடிக்கக் கடவாய் எனச் சாபம் இட்டான். இஃது அகத்தியரின் பிறப்பிற்குக் காரணம் ஆயிற்று.

தமிழ்நாட்டைக் கந்தப்பெருமான் அகத்தியருக்குத் தந்தான். அவர் அதனை பாண்டியனுக்கு வழங்கினார்.

பொன்னி நதியைச் சிவபிரான் அகத்தியருக்கு வழங்கினார். தன் தவத்திற்குத் தொல்லை தந்த மதியநந்தை என்னும் தெய்வப் பெண்ணை மனிதப் பெண்ணாக மாற்றினார். நீரில் படுத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இயற்றினார்.

மகரிஷிகள் ஒருமுறை மூன்றாண்டுக்காலம் தொடர்ந்து யாகம் செய்தனர். கோபம் கொண்ட தேவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் வாங்கச் செல்லவில்லை. கடும் பஞ்சத்தை உண்டாக்கினர். வளம் குறைந்ததால் யாகத்திற்குப் பொருட்கள் கிடைக்கவில்லை. முனிவர்கள் அகத்தியரை வேண்ட அவர் உத்திரகுருவிலிருந்து பொருள்களை வரவழைத்தார். முனிவர்கள் யாகத்தை நிறைவுடன் நடத்தி திரிமூர்த்திகளுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் தருணத்தில் அஞ்சி நடுங்கிய தேவர்கள் மன்னிப்பு வேண்டி யாக தரிசனம் செய்து அவிர்ப்பாகம் பெற்று மழை பொழிந்து வளம் தந்தனர்.

ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை ஸ்ரீ ராமனுக்கு உபதேசம் செய்தார் அகத்தியர்.

சுவேதன் என்பவன் பிணம் தின்னும் சாபம் பெற்று இருந்தான். அகத்தியர் இச்சாபத்தைப் போக்கினார். உதய காலத்தில் அகத்திய நட்சத்திரம் ஆகாயத்தில் இருந்து கொண்டு கடல்நீரை வற்றச் செய்கிறது.

துட்பண்ணியன் என்பான் பேயாய் இருந்த சாபத்தையும், இந்திர சாபத்தால் பூமியில் பிறந்து வாடிய அரம்பையின் சாபத்தையும் அகத்தியர் போக்கினார்.

தீர்த்த யாத்திரை செய்த அர்ச்சுனன் அகத்திய தீர்த்தத்தில் புனிதநீர் ஆடினான். அகத்தியரால் ஸ்தாபிக்கப் பெற்ற லிங்கம் அகத்தியலிங்கம் எனப்படும். தமிழ்நாட்டிற்கு காவிரி கிடைத்தது அகத்தியரால்தான்.இவற்றில் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

Wednesday, May 29, 2013

பேய் பிசாசு, பில்லி, சூனியத்தை விரட்டும் பால ஹனுமான்


ஏழரை நாட்டு சனி, மனக் குழப்பம் , பீதி மற்றும் காரிய சித்தி பெற வேண்டும் என்பதற்காக பலர் அனுமான் வழிபாடு செய்வார்கள் . ஆனால் பேய் பிசாசு, பில்லி, சூனியம் பிடித்தவர்களும் பால ஹனுமான் வழிபாடு செய்வது உள்ளது என்பது ஆச்சரியம் தரும் செய்தி ஆகும் .
http://www.punjabigraphics.com/images/7/hanuman-ji.jpg



அப்படிப்பட்ட ஒரு ஆலயம் இராஜஸ்தானில் மெஹந்திபூர் அருகில் தௌசா என்ற மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள பால அனுமான் , தன்னுடன் பூதங்களின் தலைவரான பிரேத சர்கார் மற்றும் பைரவரை வைத்துக் கொண்டு பேய் பிசாசு, பில்லி , சூனியம் பிடித்தவர்களுக்கு நிவாரணம் தருவதான நம்பிக்கை உள்ளது. இந்த ஆலயத்தை மெஹந்திபூர் பாலாஜி ஆலயம் என அழைக்கின்றனர்.

இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்டது எனவும் , கொடிய வன விலங்குகள் உலாவிய அடந்த காட்டின் நடுவில் இருந்த ஆலயம் எவருக்கும் தெரியாமல் இருந்தது எனவும் , ஆனால் வெகுகாலத்திற்குப் பிறகு தற்பொழுது ஆலயத்தில் உள்ள பண்டிதரின் முந்தைய சந்ததியினர் ஒருவருடைய கனவில் பால " அனுமார்" தோன்றி அந்த ஆலயம் உள்ள இடத்தைக் காட்டி, அதன் மகிமையை எடுத்துக் கூற அவர்கள் அங்கு சென்று ஆலயத்தைக் கண்டு பிடித்து பூஜைகள் செய்யத் துவங்கினர் எனவும் தெரிகின்றது .

அங்குள்ள பைரவர் பால "அனுமானின் சேனைத் தலைவராக " கருதப்படுகின்றார் . பைரவர் சிவபெருமானின் அவதாரம். நான்கு கைகளுடன் இடுப்பில் கைவைத்தவாறு சிவப்பு வண்ண துணி உடுத்தி உள்ளார் என்பதே அவருடைய தோற்றம் . சாதாரணமாகவே பைரவர் உள்ள இடத்தில் பேய் பிசாசுகள் நுழைய முடியாது என்பது உண்டு. ஏன் எனில் அவர் சுடுகாட்டில் வசிப்பவர் . சிவபெருமானின் அவதாரம் . துஷ்ட தேவதைகளை விரட்டி அடிப்பவர் . பைரவர் யார் என்பதும் அவருடைய மகிமைகளையும் இன்னொரு கட்டுரையில் காணலாம் .

பிரேத சர்கார் பற்றிய எந்த குறிப்பும் புராணங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆலயத்தில் மட்டுமே பிரேத சர்கார் என்ற பெயரையே அறிய முடிகின்றது. ஆனால் இறந்து போனவர்களின் பிரேதத்தில் இருந்து வெளியேறிய ஆத்மாக்கள் சில பேய்களாகத் திரிகின்றன, மற்றும் சில ஆத்மாக்கள் உடனடியாக பிறவிகள் எடுக்கின்றன. அவற்றில் தீயவர்கள் பேய் மற்றும் பூதங்களாக மாற அப்படித் திரியும் ஆத்மாக்களுக்கும் ஒரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே அவரே பிரேதங்களின் தலைவர் எனப் பொருள்படும் பிரேத சர்காராகவும் இருக்க வேண்டும் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPpvI64Vdw78QtUfHSGyyuE5AmPQ_CT0MnxrN4-HOEXHJbRbfBcWxD3jli6IBPCh9_j60eEBWwDYGVG1g3AA6ASHDYXMKsHAdrFxo0RnNYfMNNMRuZ2AnOzhTeTdoh6gm_FiW5OyoJbyg/s1600/bal+hanuman.JPG
இந்த ஆலயத்தில் உள்ள பால அனுமார் , பைரவர் போன்றவர்களுடன் பிரேத சர்கார் இருந்து கொண்டு தவறு செய்யும் பேய் மற்றும் தீய ஆவிகளுக்குத் தண்டனைத் தருகின்றாராம் . இந்த மூவரில் எவருடைய சக்தி எப்படி வேலை செய்கின்றது எனத் தெரியாவிடிலும் , மூவரையும் சரிசமனாகவே பக்தர்கள் பூஜிக்கின்றனர்.

ஆலயம் இரண்டு கணவாய் போன்ற பகுதியில் உள்ளது. அனுமான் ஒரு பாறையில் விக்ரகமாக காணப்படுகின்றார். அது மலையுடன் ஒட்டி இருந்ததினால் பல மொகலாய மன்னர்கள் அந்த சிலையை உடைத்தெரிய பல முறை முயன்றும் அதன் உருவத்தைக் கூட அவர்களால் சிதைக்க முடியவில்லை,

சிலையையும் கொண்டு செல்ல முடியவில்லை என கூறப்படுகின்றது. அனுமாரின் இடது மார்புப் பகுதியில் இருந்து தொடர்ந்து கசிந்து வந்து கொண்டு இருக்கும் நீர் விழுகின்றதினால் இன்றுவரை பால அனுமானின் காலடியில் உள்ள பாத்திரம் ஈரப்பதமில்லாமல் இருந்தது இல்லையாம் .
http://img.tradeindia.com/fp/1/581/991.jpg
துர்தேவதைகள் , பேய்கள் , பிசாசுகளினால் பிடிக்கப்பட்டுள்ளவர்களை இந்த ஆலயத்திற்கு அழைத்து வருகின்றனர். பொதுவாக வியாதியினால் அவதிப்படுவோர் ஆலயத்தில் நுழைந்ததுமே அந்த தீய ஆவிகள் பலவும் ஓடிவிடுகின்றனவாம் . அதையும் மீறி உடலில் தங்கும் சில தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் உள்ளே வந்தால் பைரவர் சன்னதியின் எதிரில் உள்ள குழிகளில் அவர்கள் தலை கீழாக சற்று நேரம் தொங்கத் தொடங்குகின்றனர் . அதற்குக் காரணம் அந்த தீய ஆவிகளுக்கு பைரவர் தூக்கு தண்டனை தந்து விட்டதின் அர்த்தமாம் . பிறகு சில மணி நேரத்தில் அவர்கள் சரியாகி விடுகின்றனராம் .

சிலருக்கு கோளாறு நிவர்தியாக சில காலம் பிடிக்கின்றது. அப்பொழு தெல்லாம் அந்த தீய ஆவிகளுக்கு பால அனுமார், பைரவர் மற்றும் பிரேத சர்கார் போன்ற மூவரும் கடுமையான தண்டனைகளைத் தருவதினால் , தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் தங்கள் மீது பெரிய கற்களை வைத்துக் கொண்டும் , தலைகீழாக இருந்து கொண்டும் , நடனமாடிக் கொண்டும் இருக்கும் சில காட்சிகளை காணலாம். ஆனால் அங்கு வந்து வியாதி நிவர்தியாகிய பின் திரும்பிச் செல்பவர்கள் மீண்டும் அந்த கொடுமையை அனுபவிப்பதில்லை என்ற தீவிரமான நம்பிக்கை உள்ளது.

எவரையும் அனாவசியமாக கட்டிப் போட்டு சித்திரவதை செய்வதில்லை. பல நேரங்களில் மந்திரங்கள் படிக்கப்பட்டும் , சிலர ; உடம்பில் கற்களை வைத்தும், அபூர்வமாக சிலரை ஆலயத்திற் குள்ளேயே கட்டி வைத்தும் உடலுக்குள் புகுந்துள்ள தீய ஆத்மாக்களை விரட்டுகின்றனராம்

கட்டு மந்திரம்



நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


திக்கு கட்டு
1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு    
     முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே                      
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே



உடல்கட்டு ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)


கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும் 1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்


தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்

Saturday, May 18, 2013

Quotes of Vethathiri Maharishi


         Vethathiri Maharishi is a greater Spiritual Leader born in Guduvancherry, Tamilnadu,India.He has founded the Simplified Kundalini Yoga. Here are the quotes of Vethathiri Maharishi to be followed by all of us to lead a peaceful and useful life for ourselves and others.

Vethathiri MaharishiVethathiri Maharishi

1. Habit is Destiny. 2. Man, society and nature all are interlinked with one another. Man cannot be separated from this.
3. God + Impurities (Sins) = Man; Man – Impurities = God.
4. Every man is due to the society because all are enjoying the benefits and prosperity of the society.
5. A proper spiritual approach for changing the behavior of man and establishing World Peace is Karma Yoga.
6. A living being is a joint function of life force and physical body. The life energy in a living being is the bio-magnetism which gets physical transformation and maintain the metabolic routine of the body and psychic functions.
7. Short circuit in blood / heat / air circulation is felt as Pain.
8. Good thoughts, divine thoughts are even in the atmosphere, criss-crossing as waves: and when our mind become receptive, these thoughts are registered there.
9. Whatever an action may be, there is a result. And for every result there is an action or cause. This is the cause and effect system which never fails.
10. Karma Yoga superimposes good impressions against the impressions of sins.
11. To live in harmony, do not command, do not comment, do not demand.
12. Constant awareness, introspection and planned action these three would develop your intellect. Success then is certain in life.
13. An integrated practice of reorganising and restructuring the body and the mind for a newly planned life is Kundalini Yoga.
14. Using violence against violence carefully in inevitable circumstance is non-violence.
15. No one can take away from you what Providence has allotted for you.
16. The husband-wife relationship is divine; no other can equal it in its depth and intensity, because only in this relationship the union of souls occur.
17. Vegetarianism is the only way of life based on the observance of non-violence. Non-violence is a method of living without hurting, torturing or killing any living being for one’s own enjoyment.
18. Blessings are safe and beneficial always. Blessings are more powerful and more divine than chanting mantras.
19. Do not comment on the activities of others, even if it be your life-partner or children. Guiding them is one thing, but criticizing them would have a negative effect.
20. When we reach Alpha, Theta and Delta frequencies, all the brain cells which were dormant and not used up to now, even though existed, begin to function.
21. When any force starts, it has to stop. The gap between the two, the start and the stop, is calculated as Time.
22. Unemployment and ignorance to earn his livelihood will make a Criminal.
23. When you do meditation, you get God consciousness and undisturbed peace in you. That will be added as a plus point to your material benefits also.
24. Giving up and giving up whatever is not wanted whether it is men, material, action or enjoyment is the method of purification and enlightenment.
25. Physical body, life force and mind, are inter-linked and inter-connected in the existence of Man.
26. Man has to understand the value of himself, the purpose of birth and has to develop his consciousness to fulfill the purpose.
27. Consciousness is the radical universal principle.
28. Feeler of the pain and pleasure is life force (soul).
29. Gnana Yoga (SKY – Brahma gnanam) is the process of throwing light on the souls to guide them in reaching their goal quickly without unnecessary delay. This is possible by attaining the full understanding of Truth, Universe, Life and Knowledge.
30. The benefits of Nature are all over the Universe but the secrets of Nature are only within your own Mind. Go in and in to get more and more.
31. Desires of experiencing God through senses will never be successful. By developing your Consciousness you have to become God yourself.
32. The art of tolerating the needs, regulating the habits and making better use of the environments for the harmony of self and others is Morality.
33. When man realize himself, he realizes the value of everybody. So to respect the needs and ambitions of others and to restrict and moralize one’s own activities become possible.
34. There is no problem in the Nature, only the problem is in the Mind.
35. The principal goals of introspection are examining yourself and finding out “What You are?”
36. The one and only valid test for a person’s wisdom is the peace and harmony prevailing in his family.
37. The three main ways in which man wastes his energy are Greed, Anger and Worry.
38. Man’s needs and achievements must be compatible to and in accordance with the purpose of his birth.
39. To speak or act in a manner which will wound the feelings of one’s life-partner is really a curse that will leave an indelible on the human mind.
40. Revelation of the realities of Nature or enlightenment of Consciousness is not by any effort. Effort means conditioning.
41. Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards wisdom.
42. Thought force is the first Phenomenon to be understood by the Truth Seekers.
43. We are not separate in the World; We are linked by the universal force which is called Universal Consciousness.

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா?

கிராமம் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் ஏன் சில அரசியல் தலைவர்களாலும் கூறப்படும் / நம்பப்படும் செய்தி, அவர் எனக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால்தான் எனக்கு ஆட்சியில் பிரச்னை ஏற்படுகிறது; மோரில் இடு மருந்து வைத்துக் கொடுத்ததால்தான் அந்த அரசியல்வாதியின் உடல் செயலிழந்து விட்டது; என் எதிரி எனக்கு ஏவல் வைத்து விட்டதால்தான் என் மகன் பைத்தியமாகி விட்டான்; மகள் ஓடிப் போய் விட்டாள்; எதிரிகள் சூனியம் வைத்து விட்டார்கள், அதனால்தான் என் நண்பருக்கு தொழில் நஷ்டமாகி விட்டது. – இது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருக்க முடியும். நாளிதழ்களிலும் கூட அது பற்றிய செய்திகள், சில இதழ்களில் இந்த மர்ம, மாந்த்ரீகம் பற்றிய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. அது சரி, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதானா? இல்லை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க சிலர் செய்யும் ஏமாற்று வேலையா? அது பற்றிப் பார்ப்போம்.
சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.
சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.
இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில.  …………..  சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.“ என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)
மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.
சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.
பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சில சம்பவங்களைப் பார்ப்போம்.
அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்… புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.
ஸ்ரீ அன்னை
பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.
ஸ்ரீ அரவிந்தர்
ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்” என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.
மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?
 Every Action has an Equal and Opposite Reaction என்றார் நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒருவருக்கு நாம் தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். இதற்கு மேற்கண்ட சம்பவம் சரியான உதாரணம். இதைத் தான் வள்ளுவரும்,
 ” மறந்தும் பிறன் கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”
என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.
இதனை,
“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”
-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சங்கரர்
சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

மகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்


ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
                


                காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.
வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.
அண்ணாமலை
                                            அண்ணாமலை
சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.
மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.
சிலருக்கு தங்கள் தவப்பயனால் மகானின் அருள் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காது. 
சில வெளியூர் பக்தர்கள் சேஷாத்ரி சுவாமிகள் மீது அதிகப் பற்று வைத்திருந்தனர். ஒரு முறை அவரை தரிசனம் செய்ய வந்த அவர்கள், அவரை தங்கள் ஊருக்கே கூட்டிச் செல்ல முடிவெடுத்தனர். எனவே சுவாமிகள் மறுத்தும் கேளாமல், அவரை தங்கள் கையோடு கூட்டிக் கொண்டு ரயில் ஏறி விட்டனர். ரயிலும் புறப்பட்டு விட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம். ஓடும் ரயிலிலிருந்து மகான் கீழே குதித்து விட்டார். உடம்பெல்லாம் காயம். ரயிலும் நின்று விட்டது.
கார்டும் டிரைவரும் வந்தனர். மகானைக் குற்றம் சாட்டினர். அவர்கள் மகானைப் பற்றி அறியாதவர்கள் என்பதால் மகானை பலவாறாகத் திட்டினர். அதுபோன்றே மகானின் அருமை தெரியாத சிலர் இதனை தற்கொலை முயற்சி என்றும், அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லினர். அவ்வாறே மகானைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக குண்டுக் கட்டாக ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். ரயில் ஓர் அங்குலம் கூடக் கிளம்பவில்லை. டிரைவர் பல முறை முயற்சி செய்தும் பலனில்லை. வண்டி நகரவே இல்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. அதில் சில சேஷாத்ரி பகவானின் பக்தர்களும் இருந்தனர். நடந்ததை அறிந்தனர். கார்டிடமும், டிரைவரிடமும், மகானின் பெருமையை விளக்கினர். அவரை விடுவிக்கும்படி வேண்டினர். பகவானைக் கடத்திய பக்தர்களையும் கண்டித்தனர்.
டிரைவரும், கார்டும் தங்கள் செயலுக்காக வருந்தி சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மகானைக் கூட்டிக் கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டி அவர் தம் தாள் பணிந்தனர். ரயிலிலிருந்து சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார்.
உடனே அவர் ‘ஹா ஹா’வெனச் சிரித்தார். டிரைவரும் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். மெதுவாக ரயிலைத் தடவிக் கொடுத்த மகான், பின்னர் ‘போ, போ’ என்றார். உடன் ரயில் எந்தத் தடங்கலுமில்லாமல் புறப்பட்டுவிட்டது.
காண்போர் வியக்கும் வண்ணம் நடந்த இந் நிகழச்சியின் மூலம் சேஷாத்ரி சுவாமிகளின் பெருமை மூலை முடுக்கெல்லாம் பரவியது.
****
ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார்.
‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் சுவாமிகள்.
கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார்.
அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது.
’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.
****
மகா சமாதி
                                     மகா சமாதி
தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்தார். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.

Friday, May 3, 2013

பதினெண் சித்தர் யார் யார்?

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண்
சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?
1. திருமூலர்,   
2. இராமதேவர்,  
3. கும்பமுனி, 
4. இடைக்காடர், 
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,  
11. கொங்கணர்,
12, பதஞ்சலி, 
13. நந்திதேவர், 
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.  
16. சட்டைமுனி, 
17. சுந்தரானந்த தேவர்,  
18. கோரக்கர்.
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 
4. சதோகநாதர், 
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர், 
7. புண்ணாக்குச் சித்தர்.  
8. ஞானச்சித்தர், 
9. மௌனச் சித்தர், 
10. பாம்பாட்டிச் சித்தர், 
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர், 
16. கடுவெளிச் சித்தர்,
17. சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.
இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.
1. வான்மீகர்,
2. பதஞ்சலியார், 
3. துர்வாசர்,
4. ஊர்வசி,  
5. சூதமுனி,
6. வரரிஷி, 
7. வேதமுனி, 
8. கஞ்சமுனி, 
9. வியாசர், 
10. கௌதமர் 
                     இது இன்னொரு  பட்டியல்.  பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி, 
2. கமலநாதர்,
3. கலசநாதர், 
4. யூகி, 
5. கருணானந்தர்,
6. போகர்,
7. சட்டைநாதர், 
8. பதஞ்சலியார், 
9. கோரக்கர், 
10. பவணந்தி,
11. புலிப்பாணி, 
12, அழுகணி,
13. பாம்பாட்டி,  
14. இடைக்காட்டுச் சித்தர், 
15. கௌசிகர்,
16. வசிட்டர், 
17. பிரம்மமுனி, 
18. வியாகர்,
19. தன்வந்திரி,
20. சட்டைமுனி, 
21. புண்ணாக்கீசர்,
22. நந்தீசர், 
23, அகப்பேய்,  
24. கொங்கணவர்,
25. மச்சமுனி, 
26. குருபாத நாதர், 
27. பரத்துவாசர், 
28. கூன் தண்ணீர், 
29. கடுவெளி,
30. ரோமரிஷி, 
31. காகபுசுண்டர்,
32. பராசரர். 
33. தேரையர்,
34. புலத்தியர், 
35. சுந்தரானந்தர்,
36. திருமூலர், 
37. கருவூரார், 
38, சிவவாக்கியர்,
39. தொழுகண், 
40. நவநாதர்
                          (அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,
ஐ. கோரக்க நாதர்)
 
 41. அஷ்டவசுக்கள்,
 42. சப்த ரிஷிகள்.
 
                                 இப்படி   சித்தர்கள்   பட்டியல்  கணக்கில்லாமல்  பெருகிக்கொண்டே செல்கிறது.  ஆயினும்   பதினெட்டுப்  புராணங்கள்,  பதினெட்டுப்  படிகள், பதினெண்  குடிமை,  பதினெண்  பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும்  பதினெண்  சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள்   செய்த  நூல்கள்  பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண் கீழ்க்கணக்கு  என்று  எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர்  பாடல்களும்  பெரிய  ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.
                         இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி, கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச்  சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக் காட்டுச்  சித்தர்,  புண்ணாக்குச்  சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட் டன.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...