Showing posts with label வரலாற்று நிகழ்வுகள். Show all posts
Showing posts with label வரலாற்று நிகழ்வுகள். Show all posts

Tuesday, October 29, 2019

ஞானியாக மாறிய அலெக்ஸாண்டர்

சிந்துநதி கரை வரை  வரை வந்துவிட்டு போரஸுடன் சண்டையிட்டு வெல்லமுடியாமல்   சமாதானமும் செய்த காலங்களில் மகா அலெக்சாண்டருக்கு இந்திய மதமான இந்துமதத்திலும் அதன் சாராம்ச தத்துவங்களிலும் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று,

அந்த காலத்து ரிஷி தண்டமில்ஸ் என்பவரை தன்னை காண அழைக்கின்றான். அவர் அன்று பெயர் பெற்ற ஞானியும் முனிவருமாயிருந்தார்.

(தண்ட முனி அல்லது தண்டம் வைத்திருக்கும் முனி என்பதே தண்டமில்ஸ் என கிரேக்கர்களால் அழைக்கபட்டது என்பார்கள்)

ஒரு நதிகரை மணலில் படுத்திருந்த தண்டமில்ஸிடம் அலெக்ஸாண்டரின் அடிபொடிகள் வந்து செய்தியினை சொல்கின்றன, மகா மன்னன் அழைத்தும் அசால்ட்டாக மறுக்கின்றார் ஞானி

"அவன் உலக அரசனாக இருக்கட்டும், அவன் கங்கையினை தாண்டி உலக முடிவுவரை வெல்லட்டும் , எனக்கென்ன வந்தது?

எனக்கு அவன் யார்?

அவன் ஒருநாள் சாகத்தான் போகின்றான், அவன் அரசு ஒழியத்தான் போகின்றது, பேராசையில் நாடு நாடாக அலையும் அவன் தன்னை உணராதவரை நிம்மதி அடையமாட்டான், சூரியனின் பாதை எல்லாம் அவன் வென்றாலும் அவனுக்கு நிறைவு வராது,  அவனை நான் சந்திக்கவரமாட்டேன் என சொல்" என திருப்பிசொன்னார்

வீரர்கள் சீறினர், சிரத்தை கொய்வோம் என்றனர் "சாவே மனிதனுக்கான விடுதலை, முடிந்தால் கொன்றுவிடு, நானோ நீயோ உன் அலெக்ஸாண்டரோ காலம் காலமாக இருக்க போகின்றோமா?"

செய்தி அலெக்ஸாண்டருக்கு செல்கின்றது, அவன் ஓடிவந்து பார்க்கின்றான், வந்தவன் தன் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான்.

புளூடார்ச் எனும் மேற்கத்திய வரலாற்று எழுத்தாளன் அந்த சந்திப்பை இப்படி சொல்கின்றான்

ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்

" உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்

  நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
 
  பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

   நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே

பகலா இரவா எது முதலானது?

பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது

   மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

  இதுவரை காணாத மிருகத்தை
   
ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?

  மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

  ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

  ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

வாழ்வா சாவா எது கொடுமையானது?

வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?"

இந்த வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்

மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்

மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்

கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அசந்துவிடுகின்றான் அலெக்ஸாண்டர்

அவன் அசோகரை போல் மனம் மாறினான், போரை வெறுத்தான், அதன் பின் எந்த போரிலும் அவன் ஈடுபடவில்லை,

தன் ராஜ்யத்தை தன் வம்சத்துக்கு அல்லாமல் தளபதிக்கு பிரித்து கொடுக்கும் எண்ணம் அன்றே அவனுக்கு உதயமாயிற்று

பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில்  ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான், இந்த மாபெரும் ஞானம் கிரேக்கத்துக்கும் வேண்டுமென்றான், அந்த ரிஷியும் உடன் வந்தார்

அவரை அதன் பின்  சுவாமி ஸ்பைன்ஸ், சுவாமி காலன்ஸ் என்றும் பல பெயர்களில்    கிரேக்கத்தில் அழைத்தார்கள்

அந்த ஸ்பைன்ஸ் ஸ்வாமி பாபிலோனில் அலெக்ஸாண்டருக்கு முன்பே பாரசீகத்தில் இறந்தார், அதுவும் தன் சாவு வருவதை உணர்ந்தார்,

அக்கால ரிஷிகள் ஜலசமாதி, மண் சமாதி போல அக்னி சமாதியும் செய்வார்கள், எரியும் தீயில் இறங்கி வாழ்வை முடிப்பார்கள்

அப்படி அந்த ஸ்பைன்ஸ் முனிவரும் அலெக்ஸாண்டரின் படை வீரர்களிடம் விடைபெற்றார், அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்தார் அவனோ கலங்கி நின்றான்

அவரோ புன்னகைத்தபடி உன்னை விரைவில் பாபிலோனில் சந்திப்பேன் என சொல்லி தீயில் இறங்கினார்

அடுத்தவருடம் பாபிலோனில் இறந்தான் அலெக்ஸாண்டர்,

முனிவர் சொன்ன வார்த்தையின் பொருள் அதன் பின்பே கிரேக்கருக்கு புரிந்தது

இச்சம்பவம் கிரேக்க கதைகளிலும் புளூடார்ச் போன்ற பெரும் வரலாற்று எழுத்தாளர்கள் எழுத்திலும் உண்டு

அதை திட்டமிட்டு இங்கு மறைத்தார்கள் என்பதுதான் நிஜம்.

பெரும் சாம்ராஜ்யங்களை வென்று பெரும் பெரும் செல்வத்தை குவித்து மாபெரும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கோட்டைகளையும் சேனையினையும் குவித்த அலெக்ஸாண்டரை தோற்கடித்து ஞானியாய் திரும்ப செய்தது இந்து தர்மம்

உலகில் எத்தனையோ மதங்களும் கலாச்சாரமும் தத்துவமும் சுவடே இல்லாமல் அழிந்தபின்பும் பன்னெடுங்காலமாக நிலைபெற்றிருகின்றது இந்துமதம்

எப்படி?

"நீதிமான் என ஒருவனை கண்டேனாகிலும் அந்த ஊரை அழிக்கமாட்டேன்" என பைபிளில் சொல்கின்றார் கடவுள்

Monday, October 8, 2018

தெய்வீக காதல்


அனார்கலியின் இயற்பெயர் - ஷரிஃப் உன்னிசா
சலீம் என்ற இளவரசனின் இயற்பெயர் - ஜஹாங்கிர்.

அனார்கலி / ஷரிஃப் உன்னிசா யார்? - அக்பரின் இணைவிகளில் (concubines) ஒருத்தி.
அனார்கலி / ஷரிஃப் உன்னிசாவை உயிரோடு புதைக்க சொன்னது - அக்பர்.
சலீம் என்ற ஜஹாங்கிர் யார்? - அக்பரின் மகன்.

அதாவது... சலீம் (ஜஹாங்கிர்) தன் தந்தையின் இணைவிகளோடேயே கொண்டிருந்த தகாத உறவை அறிய வந்த அக்பர், ஷரிஃப் உன்னிசாவை கொன்றான். தன் இணைவி ஷரிஃபுன்னிசாவை கொன்ற அக்பர் தன் ரத்தத்தின் ரத்தமான ஜஹாங்கீரை ஒன்றும் செய்யவில்லை.

ஜஹாங்கீரும் தன் 'காதலியை' கொன்ற அக்பரை ஒன்றும் செய்யவில்லை.

ரொம்ப ப்ராக்டிகல் மக்கள்!

தன் இணைவிகளில் ஒருத்தியை இழந்த என்ன செய்தான்? - 5000 வைப்புகளுடன் தொடர்ந்து வாழ்ந்தான் !

தன் 'காதலில்' தோற்ற ஜஹாங்கீர் என்ன செய்தான்? தற்கொலை செய்து கொண்டானா? - இல்லை. ஷரிஃப் உன்னிசாவை பிரிந்த வேதனையில் 300 வைப்புகளுடன் தொடர்ந்து வாழ்ந்தான் ;-)

ஜஹாங்கிரின் மகன் ஷா ஜஹான். ஷா ஜஹானும் இன்னொருவன் மனைவியான மும்தாஜை கண்டதும் காதலுற்று, அவள் கணவனை கொன்று, மும்தாஜை மணந்தான்.

இவங்க லவ் ஸ்டோரி எல்லாம் டெரராகத்தான் இருக்கின்றன. 😀

- முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்களை கொன்ற அக்பர் த கிரேட் என்று வரலாற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள் இர்ஃபான் ஹபீபு உள்ளிட்ட நேருவியலாளர்கள். நாமும் படித்து வருகிறோம்.

Saturday, January 13, 2018

மருது பாண்டியர்கள்

பதினொன்றாவது மருது பாண்டியர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும் அவர்களுக்கு நடந்த துரோகங்களும் ஏறலாம். மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே இவர்கள் நினைத்து இருந்தால் இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும் ஆனால் அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்...!!!
தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர் ஆனால் வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு சிறு குழந்தைகளையும் அழித்தான்...!!!
சின்ன மருது பாண்டியரின் காலில் இரத்தம் வலிக்கிறதே இது துரோகி கரடி கருத்தான் சின்ன மருது பாண்டியருக்கு கொடுத்த பரிசு ஆம் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் நிழலாக இருந்த கரடி கருத்தான் பணத்திற்காக வெள்ளையனிடம் விலைபோகி சின்ன மருது பாண்டியரை காலில் துப்பாக்கியால் சுட்டு சிங்கத்தை அடைக்கும் இரும்பு கூண்டிற்குள் அடைத்து வெள்ளையனிடம் பிடித்து கொடுத்தான்...!!!
மருது பாண்டியர்களை சுற்றி ஒரு பிண குவியல் உள்ளதே யார் இவர்கள்...??? நம்மில் பலருக்கு தெரியாது அக்டோபர் 24 1801 அன்று திருப்பத்தூரில் மருது பாண்டியர்களை மட்டுமின்றி 500 க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொத்து கொத்தாக வெள்ளையன் தூக்கிலிட்டானே அந்த கொடூர சம்பவத்தை இந்த உலகம் மறந்துவிட்டது அந்த வீரர்களின் வீரமரணத்திற்கும் மரியாதை செய்யவே இந்த படம்...!!!
திருப்பத்தூரே இரத்த வெள்ளம் ஓட மரணமே அஞ்சும் மாவீரர்கள் மருது பாண்டியர்களே தூக்கு கயிற்றின் முன்பு நிற்கும் போது வெள்ளையன் அருகில் சிலர் நிம்மதியாக கை கட்டி நின்று இந்த கொடூர சம்பவத்தை கண்டு சிரித்த முகத்துடன் ரசிக்கிறார்களே இவர்கள் தான் சிவகங்கை அரியணைக்கு ஆசைப்பட்டு தாய் நாட்டையும் அவர்களது தன்மானத்தையும் வெள்ளையனின் காலுக்கு கீழ் வைத்துவிட்டு வெள்ளையன் காலில் விழுந்த துரோகிகள் மருது பாண்டியர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்து மன்னரான தமிழ் இனத்தின் துரோகிகள்...!!!
மறதி நமது தேசிய வியாதி எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை மறக்க முடியுமா...???
வீரவணக்கம் மாமன்னர்களுக்கு...

பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர்


மகாபாரதத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இருக்க முடியாது. மேலாண்மை தத்துவங்கள், நாட்டு நடப்பு, அரசியல், தனி மனித வாழ்க்கை என்று எல்லா விஷயங்களையும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள, இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு கதையை படிப்போம்.
மகாபாரதத்தில் சண்டையெல்லாம் முடிந்து அம்புப் படுக்கையில் படுத்தவாறு பீஷ்மர், தர்மபுத்திரருக்கு கூறிய அறிவுரைகளில் ஒன்றுதான், சாந்தி பர்வத்தில் இடம் பெற்றுள்ள காலகவிருக்ஷியர் கதை.
‘தர்மா! காலகவிருக்ஷியர் என்பவர் கோசல நாட்டு அரசனுக்கும் மிகவும் நெருங்கியவர். ஆட்சியில் பல மோசடிகள் நடைபெறுகின்றன என்று கேள்விப்பட்டார். உண்மை நிலவரத்தை அரசனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தார். பறவைகளை அடைக்கும் சிறிய கூண்டு ஒன்றை வாங்கினார். ஒரு காகத்தை பிடித்து அதில் அடைத்தார். அதை கையில் எடுத்துக் கொண்டு நாட்டிற்குள் சென்றார்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிக்குச் சென்று, அனைவரின் காதுகளிலும் விழும்படி உரக்க பேசினார்.
“காகங்களுடன் பேசுகிற வித்தை எனக்குத் தெரியும். ‘நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது', ஆகிய எல்லாவற்றையுமே காகம் என்னிடம் சொல்லிவிடும். இந்த ராஜ்யத்தில் நடக்கிற விஷயங்கள் எல்லாவற்றையும் இந்தக் காகத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்”, என்று சொன்னார்.
பிறகு, அங்கிருந்து கிளம்பி, அந்த தேசத்தின் பல பகுதிகளில் சுற்றி வந்தார். அதோடு மட்டுமில்லாமல் பலரிடம் பேசி, நாட்டில் நடக்கும் குற்றங்களையும், தவறுகளையும் தெரிந்து கொண்டார்.
அடுத்த நாள், நேராக அரசவைக்குச் சென்றார். அரசன் மட்டுமல்ல, எல்லோரும் கூடியிருக்கும் சபை அது. அங்கு அமர்ந்திருந்த ஒரு முக்கியமான அதிகாரியைப் பார்த்து பேசினார்.
“அதிகாரியே! ‘நீ எந்த இடத்தில், என்ன குற்றத்தைச் செய்தாய்', என்பதை இந்தக் காகம் என்னிடம் தெரிவித்துவிட்டது. நாட்டின் பொக்கிஷத்தில் நீ கை வைத்த விஷயத்தை இது என்னிடம் கூறி விட்டது. ஆகையால் இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்”, என்று தைரியமாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மீதும் அவர் குற்றாம் சாட்டினார். அரச சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு சபை கலைந்தது.
அன்று காலகவிருக்ஷியர் ஓர் மடத்தில் தங்கினார். அவரால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்தனர். அன்றிரவு, கூண்டிலிருந்த காகத்தை கொன்றனர். பொழுது விடிந்தது. காகம் இறந்ததை அறிந்தார் முனிவர். வருத்தமடைந்தார். நேராக அரண்மனை சென்றார். அரசனை தனிமையில் சந்தித்தார்.
‘அரசனே! நான் சொல்லும் விஷயத்தை நீ பொறுமையோடு கேட்க வேண்டும்', என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கினார்.
“அரசனை நெருங்குவது நல்லதல்ல என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். பிழைப்பதற்கு வழியே அற்றவனுக்கும் கூட, அரசனை அண்டிப் பிழைப்பது என்பது தவிர்க்க வேண்டிய செயல். ‘அரசனை நெருங்கி வாழ்வது, பாம்புகளுடன் வாழ்வது போல', என்று பண்டிதர்கள் சொல்கிறார்கள். அரசனுக்கு நண்பர்கள், பகைவர்கள் என்று பலர் இருப்பதால், அரசனை அண்டிப் பிழைப்பவனுக்கு அவர்கள் அனைவரிடமிருந்தே கூட ஆபத்துகள் உண்டாகலாம். கருணை காட்டும் அரசனுக்கு கோபம் ஏற்படும் போது, தீயாக மாறி பொசுக்கி விடுவான். இவையெல்லாம் தெரிந்திருந்தும் கூட, நான் உன்னை அணுகியதற்குக் காரணம், உன் மீது இருக்கும் அக்கறையே! உன் தந்தையின் காலத்திலிருந்து உங்கள் குடும்பத்துடன் நட்பு பாராட்டியதால், ஆட்சி ஒழுங்காக நடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதனால்தான் இங்கே நடக்கும் குற்றங்களை நான் எடுத்துரைக்க முயன்றேன். அதிகாரிகளைப் பற்றிய உண்மையை நான் உனக்குத் தெரிவித்தேன். ‘எனக்கு அந்த தகவல்களை கூறியது காகம்', என்று நம்பி, அதைக் கொன்றுவிட்டார்கள். அவர்களுடைய அடுத்த குறி நானாகத்தான் இருப்பேன். இனி உன் ராஜ்யத்தில் வசிப்பது எனக்கு நல்லதல்ல”.
“உன்னுடைய அதிகாரிகளை நீ சோதித்துப் பார்க்க வேண்டும். உனக்கு நல்லதைச் செய்ய விரும்புகிறவர்களை அவர்கள் அழிக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் உன்னால் விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள். என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், வாலில் அடிக்கப்பட்ட பாம்பை போன்றவர்கள்! பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்”, என்று கூறி கிளம்பினார்.
வருத்தமடைந்தான் அரசன்.
‘ஐயா! எனக்கு நல்லது செய்ய விரும்பிய உங்களுக்குத் தீமையை நினைக்கிறவர்கள், இங்கு இருக்கத் தேவையில்லை. அவர்களை உடனே விரட்டி விடுகிறேன். நீங்கள் என்னுடன் இருந்து ஆட்சி செய்ய உதவ வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டான்', அரசன்.
காலகவிருஷியர் பேசினார்.
‘அரசனே! என்னால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும், உடனே நடவடிக்கை எடுத்துவிடாதே! குற்றம் செய்த பலர் ஒன்று சேர்ந்து கொண்டால், அவர்களுடைய கொடுமை தாங்க முடியாது. ஆகையால், அவர்கள் ஒன்று சேரும் வகையில் உனது நடவடிக்கை அமைந்து விடக்கூடாது. அவர்களை ஒவ்வொருவராக நீ அழிக்கவேண்டும். முதலில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தைப் பறிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால் அவர்கள் திருடிச் சேர்த்த செல்வத்தின் காரணமாகத்தான், அவர்களுடைய கர்வம் வளர்ந்திருக்கிறது. முதலில் அதைக் குலைக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகளில் ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கக்கூடும். அந்த விரோதியை அனுப்பி, குற்றத்தைக் காட்டிக்கொடுத்து விடுவேன் என்று மிரட்டச் சொல்லி பொருளைப் பறிக்க வேண்டும். அதன் பின்னர் இருவரையும் முடிக்க வேண்டும். அவர்களில் சிலரிடம் நீ அன்பு காட்டுவது போல் நடிக்க வேண்டும். இது அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். தீய மந்திரியை, மற்றொரு தீய மந்திரியாலேயே அழிக்க வேண்டும். தீயவர்களிடம் அதிகாரம் அளிக்காமல், மக்களின் நன்மையைக் கருதி ராஜ்யத்தை நடத்தும் திறமை உன்னிடம் வளரவேண்டும்”.
காலகவிருஷியர் சொன்ன விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று இதுதான்:
‘அரசனே! சுலபத்தில் எரிந்து விடக்கூடிய புதர்கள், ஒரு மரத்தைச் சுற்றி வளர்கிறது. பிறகு அந்த மரத்தையே சார்ந்து வாழ்கிறது. காட்டுத் தீ ஏற்படும் போது, புதர்களில் பற்றுகின்ற தீ அந்த மரத்தையே அழித்து விடுகிறது. அதைப் போல உன்னைச் சார்ந்திருப்பவர்களாலேயே உனக்கு அழிவு வரும்', என்று அறிவுரை கூறினார்.
அரசன் உண்மை நிலையை உணர்ந்து கொண்டான். திறமையும், நேர்மையும் கொண்ட ஒருவரை மந்திரியாக்கினான். காலகவிருக்ஷியரை தனது புரோகிதராக அமர்த்திக்கொண்டான். அவரின் வழிகாட்டுதலின் பேரில், தீய அதிகாரிகளையும், மந்திரிகளையும் விலக்கினான். நல்ல முறையில் ஆட்சி செய்து புகழ்பெற்ற அரசனாக விளங்கினான்.
பீஷ்மர் கூறிய காலகவிருக்ஷியர் கதை முடிந்தது.

Saturday, November 5, 2016

திப்பு ஏன் மணிமண்டபம்??


ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”

1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”
1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.

1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai) எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.

இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”
-ராஜேஷ் குமார்

திப்பு ஆட்சியில் 27 கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கபட்டது ..


அவைகள் மங்களூரில் உள்ள னூஷா செனோரா டி ரொசாரியோ மிளகியர் திருச்சபை .
மான்டே மரியானோ மணிக்கு fr மிராண்டா செமினரி,
போலார் ஓம்சார் சேப்பல் மற்றும் ஜேசு
மேரி ஜோஸ், சேப்பல் சர்ச்,
சர்ச் ஆப் மெர்சஸ் உல்லால்
எமாகுளுட்ட கோன்ஸேஸாங் சர்ச் , முல்கி
சர்ச் ஆப் முல்கி
சான் ஜோஸ் சர்ச் , பேரர்
கரிமில் அமைந்த நாஸா சென்னோரா டோஸ் ரெமிட்டாஸ் சர்ச்

கார்கில் அமைந்த சாவோ லாரன்ஸ் சர்ச்
பர்கூர் அமைந்த ரொசாரியோ சர்ச்
பிந்தூரில் அமைந்த இம்மாங்குள கோன்ஸேஸாங்.சர்ச்
என்று அணைத்து தேவாலயமும் எரித்து , தரைமட்டமாக்கப்பட்டன,
இதில் ஹோஸ்பெட் ஹோலி கிராஸ் சர்ச் தப்பியது
மூடுபத்ரி ராஜா நட்பு காரணமாக
மேலும் அங்கே பணியில் இருந்த பாதிரியார்களுக்கு 2,00000 பணம் அபராதம் விதிக்கப்பட்டது ..

மதச்சார்பற்ற ஹீரோக்கள்

திப்பு சுல்தான் ஓர் மத பயங்கரவாத , மிகக்கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான மன்னராக இருந்தார்..

திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த அபிராமி அம்மன் சிலையை எட்டி உதைத்தான் "திப்பு சுல்தான்". அதான் சிலையில் ஒரு கை உடைந்து விட்டது. கோவிலையும் இடிக்க முயன்றான். இந்துக்கள் அவன் காலில் விழுந்து சிலையை தரைக்கு எடுத்து சென்று மீண்டும் கோவில் கட்டினர். அது தான் தற்போதைய அபிராமி அம்மன் கோவில்.

கோடிக்கணக்கான இந்துக்கள் அவரது ஆட்சியில் மிகக் கொடூரமான முறையில் மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டார்கள் ..

திப்பு ஜெயந்தி கொண்டாட்டம் , கர்நாடக அரசு ஒரு அவசரமான மற்றும் தவறான தகவல் அடிப்படையில் எடுத்த முடிவு என்று முன்னாள் பெங்களூர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். மேலும் அரசு தனது அவசரத்தில் சில வரலாற்று நிகழ்வுகள் தேதிகளை கூட சரிபார்க்காமல் , தனது ராஜ்ய மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுகிறார் . இது அரசாங்கத்தின் அறியாமையை காட்டுகிறது . எதேச்சிக் காரத்தை காட்டுகிறது .

மத கொடுங்கோல ஆட்சி புரிந்த திப்புவின் பிறந்த நாள் நவம்பர் 20-ம் தேதி ஆம் தேதி. அதே நேரத்தில் நவம்பர் 10 திப்பு சூல்தான் மேலக்கோட்டையில் உள்ள 700க்கும் அதிகமான ஐயங்கார் சமூகத்து மக்களை தூக்கிலிடப்பட்டார் என்றும் , அதனால் அந்த மேலக்கோட்டை மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை இன்றுவரையிலும் கொண்டாடுவது இல்லை என்பது வரலாற்று பதிவு. அப்படி இருக்க அது கூர்க் , மற்றும் மேலக்கோட்டை மக்களுக்கு எந்த அளவுக்கு மன சங்கடமாக இருக்கும் என்பதை பற்றிய கவலையே இல்லாமல் , உதாசீனப்படுத்தி தங்களை மதச்சார்பற்ற ஹீரோவாக கட்டிக்கொள்ள , அந்த நவம்பர் 20 ஆம் தேதியை திப்பு ஜெயந்தி என்று கொண்டாட முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த அளவுக்கு குரூரமான வஞ்சனை புத்தி இருக்கும் என்று மக்கள் எண்ணி பார்க்கவேண்டும் என்று திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். திப்பு பற்றிய உண்மை தகவலுக்கு

References & Notes: There is ample evidence, available in many authentic records of his military operations in Kerala, to show that Tipu Sultan of Mysore was a fanatic Muslim tyrant who was responsible for the destruction of hundreds of Hindu temples, large-scale forcible conversion of the Hindus, and perpetration of unimaginable brutalities on the Hindu population in Kerala.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...