Saturday, November 5, 2016

திப்பு ஏன் மணிமண்டபம்??


ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”

1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”
1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.

1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai) எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.

இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”
-ராஜேஷ் குமார்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...