Tuesday, January 24, 2023

செல்வநாராயணர் கோவிலில் உள்ள மகுடி வாசிக்கும் சிற்பம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலில் உள்ள ராயர கோபுரத்தின் கல் தூணில், ஒருவர் பாம்புக்கு மகுடி வாசிக்கும் சிற்பச்செதுக்கல் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..!!

Sunday, January 22, 2023

முதலில் தாயார் பிறகு பெருமாள் ஏன்?

|| கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன் ||

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்.

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ஸ்ரீராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.

அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ஸ்ரீராமபிரானை தரிசித்த பிறகு, சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.

சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியைபார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ஸ்ரீராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 

ஸ்ரீராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.

ஸ்ரீராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 

ஸ்ரீராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.

ஸ்ரீராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.

பராக்ரமசாலியே ! ஸ்ரீராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ஸ்ரீராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.

சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை. இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன் 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன், என்றாள் சீதாதேவி.

பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.

தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.

ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.

தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே ' என்று கோபப்படுவார்.

தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.

'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.

"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.

நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன ' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே!

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருளாலே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

உமாமகேஸ்வரி ஹலபேடு

சிவ_பெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை, அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள், அதிலும் உமாமகேஸ்வரியின் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து, பொற்கொல்லர்களைப் போல் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்கள் நம் சிற்பிகள்..!!
அமைவிடம்: ஹலபேடு, ஹாசன் மாவட்டம், கர்நாடக மாநிலம்.

கிராதன்

சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. "கிராதன்" என்பதுவே சரி.


கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை த்தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்

சகல சௌபாக்ய அஷ்டகம்

1..மங்கள மாலினி மன்மத ரூபிணி மஞ்சுள பாஷிணி மதிவதனீ சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் பங்கயன் மாலொடு பரமனும் பணிந்திடும் பதுமபதங்கொளும் பகவதியே ஐயஜய மங்கள கவுரி மகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி 
2..கஞ்சியில் மிஞ்சிய கருணையுடன் திகழ் கற்பக மென்றொளிர் சிற்பரையே தஞ்சமென்றுன்சரண் சாருமெனக்கு நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் அஞ்சிய நெஞ்சுடனடிகள் பணிந்திடும் அன்பருக்கபயமளிப்பவனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

3..பூமகள் நாமகள் பூவடி போற்றிடப் பொலிவுடன் கொலுகொளும் பூரணியே தாமத மின்றியென் சஞ்சலம் தவிர்த்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் கோமள முகமதிற் குறு நகை கொஞ்சிடக் குங்குமமும் திகழ் கோமகளே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

4..பங்கய னுன்பதத் தூளிக ளால் பல அண்டமும் நன்கு படைத்தனனே சங்குடை மாயவன் தன் தலை ஆயிரம் கொண்டவை சீர்படத் தாங்கினனே சங்கரன் இறுதியில் சாம்பலுமாக்கியே தன் நுதலொளிபெற தரித்தனனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி.

5..கற்பகவல்லியும் கஞ்சிகாமாக்ஷியும் கயற்கண் மீனாக்ஷியுமானவளே சற்கதி கூடிட சஞ்சலமோடிட சகலசௌபாக்கியம் தந்தருள்வாய் பொற்பதம் போற்றிடும் புண்ணியர் கவலைகள் போக்கியருள்புரி பூரணியே ஜயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர
சுந்தரி காமாக்ஷி. 

6..ஆதியும் அந்தமும் அற்ற சுதந்தரி அகிலமும் தானென ஆனவளே பாத சரோருகம் பணியுமெனக்கு நீ பரிந்து சௌபாக்கியம் பல்கிடுவாய் வேதமெலாம்புகழ் மீன்விழியாள் பசும் பொன்னென மின்னிய மேனியளே ஐயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

7..நாதமும் பிந்துவும் நாடுமெய் ஞானமும் நானென நன்குமொருந்தவளே வேதனை நீங்கிட வெம்மிடர் தீர்ந்திட விரைவில் சௌபாக்கியம் தந்தருள்வா போதமெலாம்தரும் புண்ணியனே பல போகமு மிந்தருள் பூரணியே ஜயஜய மங்கள கவுரிய கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

8.ஜயஜய மங்கள சண்டிகையே ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரியே ஜயஜய ஜய சௌபாக்கிய சுந்தரி ஜயமகிஷாஸுரமர்த்தனியே ஜய ஜய ஜயலலிதாம்பிகையே ஐய ஐயபுவனேஸ்வரி பைரவியே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி . 

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.


அபிராமி அந்தாதி பலன்கள்

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.                  
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.                  
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும். 26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும். 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.                     
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.                    
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.                          
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.                                
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள். 48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.                        
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும். 
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம். 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.                                          
60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும். 65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.                         
67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும். 73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும். 84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம். 97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்..!!

திருக்கடையூ அபிராமி பட்டர்

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், "இன்று என்ன திதி..??" என கேட்டார். உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய "பவுர்ணமி" என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை. கோபமுற்ற மன்னன், "இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா..??" என்று கேட்க, அதற்கு பட்டர் "முடியும்..!!" என்றார். இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், "இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்..!!" என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது, அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். "இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்..!!" என்று சபதம் செய்தார்.

பின்பு,
‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார். உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச, அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக..!!’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும். அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்.


Wednesday, January 18, 2023

அஷ்டபுஜ காளி


கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி என்னும் ஊர். இங்கு சுவேத_விநாயகர் எனப்படும் வெள்ளை விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் வடக்குப் பகுதியில் அம்மன் சன்னிதி ஒன்று உள்ளது.
 சோழப் பேரரசர்களான ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன்பாக, இந்த அஷ்டபுஜ காளி அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அம்மனின் முன்பாக வாள், ஈட்டி, கேடயம் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் அனைத்தையும் வைத்து பூஜை நடத்தி, அம்மனின் உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் புகுந்துள்ளனர். அப்போது அவர்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை சோழர்களிடம் நிலவியிருக்கிறது.

இந்த அன்னை ஏகவீரி என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்று பெயர் மாற்றம் பெற்று கோவிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். தற்போது இந்த ஆலயத்திற்கு வரும் பலரும், இந்த அன்னையை கோவிலில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் என்ற வகையிலேயே பார்த்து வணங்கிச் செல்கின்றனர். ஆனால் , புன்னகை புரியும் போர்க்காலகாளி..!!
அந்த காலத்தில் எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறாள் என்பது, அங்குள்ள கல்வெட்டுகளுக்கு மட்டுமே தெரியும். இந்த அன்னையின் புன்னகைக்கு ஈடாக எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு இந்த அஷ்டபுஜ காளியின் சிரிப்பு சிறப்பு வாய்ந்தது..!!

Monday, January 16, 2023

பக்தின் ஆழ்நிலை அனுபவம்

கேள்வி: பக்தி சேவையின் இனிமையை ஒருவர் உண்மையில் அனுபவிக்கக்கூடிய இரண்டு நிகழ்வுகள் யாவை?.............
 பிரபுபாதர்: பக்தித் தொண்டு செய்வதில் உள்ள இந்த ஆழ்நிலை மென்மையான அனுபவத்தை எல்லா வகை ஆண்களாலும் அனுபவிக்க முடியாது, ஏனென்றால் இந்த இனிமையான அன்பான மனநிலையானது ஒருவரது முந்தைய வாழ்க்கையின் செயல்பாடுகளிலிருந்தோ அல்லது அலாதியான பக்தர்களின் சங்கமத்திலிருந்தோ மட்டுமே உருவாகிறது. மேலே விளக்கப்பட்டபடி, தூய பக்தர்களுடன் இணைந்திருப்பது பக்தி சேவையில் நம்பிக்கையின் தொடக்கமாகும். ஒரு தூய பக்தரின் கூட்டுறவில் அத்தகைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலமோ அல்லது ஒருவரின் முந்தைய வாழ்க்கையில் பக்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமோ மட்டுமே ஒருவர் உண்மையில் பக்தித் தொண்டின் இனிமையை அனுபவிக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்த ஒரு சாதாரண மனிதனும் பக்தர்களுடன் இணைந்திருக்கவோ அல்லது தனது முந்தைய பிறவியின் பக்தி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கோ மிகவும் அசாதாரணமான அதிர்ஷ்டசாலியாக இல்லாவிட்டால், இந்த ஆழ்நிலை ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

Monday, January 2, 2023

அப்த கணிதம்

 பஞ்சாங்கங்களிள் பதினாறு வருஷ விஷயங்கள் உபயோக படுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது ஆண்டுகள் 

1.சிஷ்டியாப்தம்
2.கல்பம்
3.மன்வந்தரம்
4.யுகம்
5. கலியாப்தம் (கலியுகம் - கலி ஆண்டு)
6.சாலீவாகன சதாப்தம் (சாலீவாகனன் என்ற மன்னனால் துவங்கப்பட்ட வருஷம்)
7. பாண்டவாப்தம் (பாண்டவர்களை கொண்டு பிறப்பு வருடம் அஸ்தினாபுரத்தில் துவங்கியது)
8.விக்ரமாதித்தாப்தம்(விக்ரம ஆண்டு - விக்ரமாதித்ய மன்னன் துவங்கியது)
9.போஜராஜாப்தம் (போஜராஜ மன்னன் துவங்கிய ஆண்டு)
10.கொல்லாப்தம் (சுதர்ஸன மன்னன் கொல்லத்தை கொண்டு பிறப்பித்த ஆண்டு கொல்லம் ஆண்டு)
11.ப்ரதாபருத்ராப்தம் (கலிங்க தேசத்து அரசன் துவக்கியது)
12.ராமதேவாப்தம் (ராமதேவர் துவங்கியது)
13.கிருஷ்ணதேவராயாப்தம் (ஆந்திரா கிருஷ்ணதேவராயரால் துவக்கப்பட்ட ஆண்டு)
14. கிருஸ்துஆப்தம் (ஏசுகிருஸ்து பிறந்த வருடம் முதல் ஐரோப்பியர்களால் துவக்கப்பட்ட இங்கிலீஷ் வருஷம்)
15. பஸ்லி - அக்பரால் துவக்கப்பட்ட பசலி ஆண்டு
16. கிஜ்ரி - இஸ்லாமியர்கள் துவக்கிய ஆண்டு (அரபு தேசத்திலிருந்து வந்தது

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...