Sunday, February 21, 2021
இதய புற்று நோய்
யானைக்கால் வீக்கம் தீர
பருமனை குறைக்கும் காய்கறிகள்
சிறுநீரகக்கல் பெண்களுக்கு அதிகம்
Wednesday, August 19, 2020
பெருங்காயத் தூள்
தலைவலி குறைய
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்
தொப்பை குறைக்க
நரைமுடி மறைய
Saturday, May 23, 2020
இலுப்பை மரம்
Wednesday, January 22, 2020
மருத்துவ பழமொழிகள்
Sunday, June 2, 2019
அல்சர் அலட்சியம்_வேண்டாம்
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும் ஒன்று.
உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
அல்சர் அறிகுறிகள்!
அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது.
அடிக்கடி பசி,
சாப்பிட்ட பிறகும் பசி,
வயிற்று வலி,
முதுகு வலி,
வயிற்று எரிச்சல்,
நெஞ்சு எரிச்சல்,
சாப்பிட்டதும் வாந்தி
போன்ற பிரச்னைகள் இருக்கும்.
பால்,
தண்ணீர்,
பிஸ்கட்
போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர்.
சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அல்சர் வரக் காரணங்கள்!
சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது,
அதிக மசாலா,
எண்ணெய் உணவுகள்,
உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல்,
ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று,
மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள்,
வீரியமுள்ள வலி மாத்திரைகள்,
ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது,
மது மற்றும் புகைப்பழக்கமும்
அல்சரை ஏற்படுத்தும்.
70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.
#ரிஸ்க்அல்சர்
வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது லிப்போமா (lymphoma) என்ற புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம். என்றோ ஒரு நாளைக்கு அதிகளவில் மது அருந்த, அவர்களுக்கும் அல்சர் வரும். வாந்தி, வாயு பிரச்னைகளைக் கொண்டுவந்து, அல்சர் நோயைத் தீவிரமாக்கிவிடும்.
நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.
உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்!
நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம்.
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம்.
எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது.
தவிர்க்கலாம்……
கோலா பானங்கள்,
சோடா,
ஊறுகாய்,
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
சிட்ரஸ் வகை
ஆயத்த பழச்சாறுகள்,
டீ,
காபி
தவிர்க்கலாம்.
Sunday, July 15, 2018
வெந்தயம்
வெந்த+அயம்
அயம் என்றால் இரும்பு
உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*
சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*
வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.
எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.
அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.
அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.
அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.
சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.
அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்
*வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள் செய்திருப்பீர்கள்*
வெந்தயத்_தேநீரை குடித்திருக்கிறீர்களா?
அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,
அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,
மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,
தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்
வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
குடலை_சுத்தமாக்க :
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.
நச்சுக்களை உடலில் தங்க விடாது.
*ரத்தசோகை_போக்க*
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.
மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு இந்த #வெந்தய_டீ அருமருந்தாகிறது.
மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும்.
அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.
இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது.
இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.
தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.
தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.
கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.
இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.
மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.
மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால்,
அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது.
உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது.
அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.
இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம்.
இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.
அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது.
இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது.
இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.
சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம்.
அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது.
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு.
தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள்.
முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.
பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள்.
இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
Saturday, July 14, 2018
சிறுபிணிக்கு முலிகை
இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
Saturday, January 13, 2018
வாயு தொல்லை நீங்க!!!
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
இந்துப்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
சாதிக்காய் - 50 கிராம்
இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன் அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.
Monday, April 10, 2017
சஞ்சீவி_தீர்த்தம்
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் . இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.
Saturday, November 5, 2016
FOODS For Pain Relief
1. Muscle Pain – Ginger.
2. Toothaches – Cloves.
3. Acid Reflux – Apple Cider Vinegar.
4. Earache – Garlic.
5. Headaches and joint pains – Cherries.
6. Stomachaches – Fish.
7. PMS – Yogurt. 80% of women suffer from PMS-related pain before and during their periods.
8. Chronic Pains – Turmeric.
9. Endometriosis – Oats.
10. Ingrown Toenails and Toothaches – Salt.
11. Indigestion – Pineapple.
12. Muscle Pains – Mint.
13. Backaches – Grapes.
14. Injury-Related Pains – Water.
15. Sinus Pain – Horseradish.
16. Oral Infections – Honey.
17. Chest Pains – Flax Seeds.
18. Migraines – Coffee .and
19. Cramped Muscles – Tomato Juice.......
Thursday, October 15, 2015
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
ஒம் நம சிவாய.திருச்சிற்றம்பலம்.
Monday, October 5, 2015
மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது.
நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்...
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை...
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்...
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது...
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்...
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது...
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது...
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்...
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு...
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்...
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது...
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது...
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது...
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்...
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது...
24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது...
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது...
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்...
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்...
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...
36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன...
37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது...
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...
41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்...
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது...
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...
46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே...
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்...
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன...
49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்...
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது...
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்...
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்...
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்...
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன...
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது...
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்...
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்...
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்...
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன...
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது...
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்...
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது...
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்...
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை...
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்...
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..
85. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்..
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்..
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உடலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்...
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...