Sunday, February 21, 2021

சிறுநீரகக்கல் பெண்களுக்கு அதிகம்

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எப்போதும் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் இப்பிரச்னை ஏற்படும் என்ற பொதுவான கருத்தும் உண்டு. இதேபோல், சிறுநீரகக்கல் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றும் பலர் பயமுறுத்துவார்கள்.

அதேபோல், இயற்கை மருத்துவத்தின்மூலம் சிறுநீரகக்கல்லை அகற்றுகிறேன் என்று தவறான சுய மருத்துவம் செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்த சந்தேகங்களுக்கு சரியான பதிலை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.

சிறுநீரகத்தில் கற்கள் எதனால் வருகிறது?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.

ஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.

பொதுவாக ஆண்களுக்குதான் அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்ற ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இது முழுவதுமாக ஆண்களுக்கு மட்டுமே வருகின்றன என்று உறுதியாக கூற முடியாது. அவ்வாறு நிரூபிக்கப்படவும் இல்லை. பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.

நம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்னை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

அலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.

அது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது...

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...