Sunday, February 21, 2021

பருமனை குறைக்கும் காய்கறிகள்

1.சுரைக்காய்

சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

2.குடைமிளகாய்

குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

3.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

4.பசலைக்கீரை

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

5.ப்ராக்கோலி

ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

6.பீன்ஸ்

பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

7.வெங்காயம்

வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

8.ஆளி விதை

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும். அதற்கு ஆளி விதையை அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம்.

9.ப்ராக்கோலி

உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்
 
10.கேரட்

கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

11.தக்காளி

தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.

12.பாகற்காய்

கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்

13.முட்டைக்கோஸ்

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...