இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டு காலமாக நான் கண்ட உண்மை என்னை ஆச்சரியப் படவைக்கிறது.
எந்த ஒரு பணக்காரனோ, நடுத்தரவாதியோ, படித்த பண்பாடு மிக்க மனிதனோ, பிராமணனோ, ஜெயினனோ யாரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட வில்லை.
கிறுத்துவ மதத்திற்கு மாறியவர்களை எல்லாம் பாருங்கள்.
அநாதைகள், வறுமையில் உழலும் கதியற்றோர் மற்றும் அறிவுக் கண் திறக்காத பழங்குடியினர்கள்.
இவர்களைத் தவிர வேறு அறிவுப்பூர்வமானவர்கள் யாராவது மதம் மாறி இருக்கின்றனரா?
இது போன்ற ஏழை அறிவிலிகளை எளிதாக கிறித்துவம் விலை பேசி விடுகிறது.
மதமாற்றம் பற்றிய ஒரு நேரடி நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது.
மத்திய இந்தியாவில் பஸ்தார் என்றொரு இடம்.
இது பழங்குடியினர் வாழுமிடம்.
பள்ளிக்கூடம் இல்லை, மருத்துவமனை இல்லை, மின்சாரம் இல்லை, நிர்வாணக் கோலம், ஒரு வேலை உணவுக்குத் திண்டாட்டம், மீனும் அரிசியுமே அவர்களின் உணவு.
இது போன்றவர்களை கிறித்துவத்திற்கு எளிதாக மதமாற்றம் செய்துவிட முடியும்.
இவர்களிடம் மதம் பற்றிய வாத பிரதிவாதம் தேவையில்லை.
கிறித்துவத்திற்கு வறுமையே போதுமானது.
நேர்பாதை இல்லை. கரடுமுரடான மலைப்பகுதியைக் கடந்து நான் அந்த இடத்திற்கு சென்றேன்.
இருபத்தைந்து மைல்கள் நடந்து அந்த இடத்தை அடைந்தேன்.
மதமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது?
என்பதைக்காண
பழங்குடி மக்கள் குழுமி இருந்தனர்.
கடும் குளிர்.
ஓரத்தில் தீ மூட்டத்திலிருந்து வந்த வெம்மையான வெளிச்சத்தில் நிர்வாணமாய் குளிரில் அமர்ந்திருந்தனர்.
ஒரு கிறித்துவ பாதிரியார் வந்திருந்தார்.
அவர் தன் பையில் வைத்திருந்த இரு சிலைகளை வெளியே எடுத்தார்.
ஒன்று ராமர் சிலை மற்றொன்று ஜீசஸ் சிலை.
ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச்செய்து அதில் இரு சிலைகளையும் போட்டார்.
ராமர் சிலை மூழ்கிவிட்டது.
ஜீசஸ் சிலை மிதந்தது.
ஹாய்ய்ய் என்று பழங்குடியினர் கைதட்டி ஜீசஸின் சிலையை போற்றினர்.
"ஜீசஸ் உங்களைக் காப்பார்.
தண்ணீரில் மூழ்கிப் போய்விட்ட ராமரால் உங்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?
என்று பாதிரியார் மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
நான் எழுந்தேன். "நீங்கள் தண்ணீர் பரிசோதனையை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.
"இல்லை" என்றனர் மக்கள்.
"அக்னிப் பரிட்சை - ராமன் சீதையின் தூய்மையை பரிசோதிக்க உபயோகப்பட்டது." என்றேன்.
"ஆம். அக்னிப் பரிட்சையே சரியானது " என்றனர் பழங்குடியினர்.
நான் எழுந்து "சரி. இதோ தீ எரிகிறது.
இரண்டு சிலைகளையும் அதில் போடுங்கள்." என்றேன்.
'பாதிரியார் பதைபதைத்தார் '
ஜீசஸ் சிலை பொசுங்கிப்போனது.
இராமர் சிலை அப்படியே இருந்தது.
காரணம் ஜீசஸ் சிலை மரத்தால் ஆனது.
ராமர் சிலை இரும்பினால் ஆனது.
பழங்குடியினர் பாதிரியாரை அடிக்கத் துணிந்து விட்டனர்.
நான் அவர்களை தடுத்து பாதிரியை காப்பாற்றினேன்.
அறிவுப்பூர்வ வாதம் செய்யத் தெரியாத ஏழை மக்களை மதம் மாற்றுவது எளிது.
இது போன்ற ஜாலவித்தையே போதுமானது.
No comments:
Post a Comment