சிவபெருமான் ராஜராஜேஸ்வரி தேவியை சதுரங்கத்தில வென்று மணத்தா கோவில் திருவாருர் மாவட்டத்தில் பூவனூரில் உள்ளது. இது பாடல் பெற்ற ஸ்தலம்.
ராஜா ஓருவர் குழந்தை இல்லாமல் இறைவன் நெல்லையப்பரிடம் வேண்டுகிறார். பார்வதிதேவியே மகளாக பிறப்பாள் என்று சிவபிரான் அருளுகிறார். ராஜா, ராணி இருவரும் ஆற்றங்கரையில் ஒரு சங்கை காண்கிறார்கள். அந்த சங்கை அவர்கள் எடுக்கும் பொழுது அது பெண்குழந்தை மாறுகிறது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தையை பார்த்து கொள்ள சிவனால் அனுப்பப்படுகிறார். ராஜராஜேஸ்வரி எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குகிறார்.சதுரங்கம் சிறப்பாக ஆடுவார். அதனால் ராஜா தன் பெண்ணுக்கு சதுரங்கம் ஆடுவதில் சிறந்தவரை திருமணம் பண்ண ஏற்பாடு செய்கிறார். சிவபெருமான் சித்தராக வருகிறார். சதுரங்கம் விளையாடி ஜெயித்து தான் ராஜராஜேஸ்வரியை மணப்பதாக ராஜாவிடம் சொல்லுகிறார். ராஜாவும் சம்மதிக்க சித்தர் சதுரங்கத்தில் வென்று ராஜராஜேஸ்வரியை மணக்கிறார். தெய்வீக திருமணத்தை இறைவன் எல்லோருக்கும் காண அருள்புரிகிறார். இவரை சதுரங்க வல்லப நாதர் என்ற திருநாமத்துடன் வணங்குகிறோம்.
https://maps.app.goo.gl/rg7u94kt8v31A7Fq5
No comments:
Post a Comment