காந்திஜியைக் காண, 75 வயது மதிக்கத்தக்க, ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட பெண்மணி வந்திருந்தார். அவரின் நிலையை அறிந்த காந்திஜி, தனது மருத்துவரிடம் அப்பெண்மணிக்கு, வேப்பிலையைக் கசக்கிப் பிழிந்து அச்சாரையும், மேற்கொண்டு குடிப்பதற்கு மோரும் கொடுக்குமாறு கூறினார்.
உடனே மருத்துவர் அப்பெண்மணியை நோக்கி, தாங்களே மோர் எடுத்துக் குடிக்குமாறு கூறினார்.
மறுநாள் காந்திஜி மருத்துவரிடம், நேற்று அப்பெண்மணி எவ்வளவு மோர் குடித்தார்? என்று கேட்டார். மருத்துவரால் பதில் கூற முடியவில்லை. அதனை அறிவதற்காக அவர், அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்றார். மருத்துவரிடம் அப்பெண்மணி, தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் மோர் குடிக்கவில்லை என்று கூறினார்.
காந்திஜி அனைத்து விஷயத்தையும் அறிந்து கொண்டு மனக்கவலை கொண்டார். மருத்துவரிடம், “வெளிநாட்டில் நீங்கள் என்ன படித்தீர்கள்? இப்பொழுது கூட நீங்கள் அப்பெண்மணிக்கு மோர் வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் அக்கிராம மக்களிடமிருந்தாவது மோர் வாங் அப்பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும்; அப்பெண்மணியின் அழுகையைப் போக்காமல் இங்கு வந்து என்ன பயன்?” என்றார்.
பிறகு காந்திஜி, “மருத்துவம் என்பது தர்மம் நிறைந்த செயல் என்று வெறுமனே மருந்து எழுதிக் கொடுப்பதும், அளவைச் சொல்வதும் மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வரை அவரைப் பார்க்கும் பொறுப்பும் மருத்துவருடையதே" எனக் கூறினார்.
No comments:
Post a Comment