சனி பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், சனி கிரக தோஷங்களனைத்தும் விலகும். தொழில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். நோய்கள் நீங்கப் பெற்று ஆனந்தமாக வாழச் செய்வார் சனீஸ்வர பகவான்.
சனி பகவான். நமக்குச் சோதனைகளைத் தருவார். நம்மைச் சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகத்தான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே சனி பகவானை நினைத்து எந்தச் சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை.
சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம். விமோசனம் பெறலாம்.
அப்போது, சனி பகவானின் காயத்ரியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை என்றில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.
மந்திரம்
”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த பிரசோதயாத்”
அதாவது, காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவானே... கட்க என்கிற ஆயுதத்தால் மங்லம் பொங்குகிற காரியங்களைச் செய்து கொடுத்து அருளுவாய். குறைவின்றி வாழ்வதற்கு அருள் புரிவாயாக’ என்று அர்த்தம்.
இந்த சனீஸ்வர காயத்ரிமந்திரத்தைச் சொல்லி, காகத்துக்கு எள்ளும் சாதமும் கலந்த உணவிடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனியால் விளையும் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ந்து, முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். நீண்ட ஆயுளுடன் நோய்கள் நீங்கப் பெற்று, இனிதே வாழ்வீர்கள்.
No comments:
Post a Comment