Thursday, April 30, 2020

உண்மையான தெளிவு -ஓஷோ

அந்த ஊரில் ஒரு உண்மையான ஞானி [சாது] வாழ்ந்து வந்தார்.
.
அவர் எப்போதும் குழந்தைத்தனமாகவும்  சலனமற்றும் வாழ்ந்து வந்தார்

.அங்கே வந்த ஒரு இளைஞர் அந்த ஞானியிடம் 

``எப்போதும் நீங்கள் எப்படி கரைபடியாத மனதோடும் சூழ்ச்சிகளற்ற மனதோடும் வாழ்ந்து வருகிறீர்கள்`` 
என்றார்.

அதற்கு அந்த சாது

``அதை பின்பு அறிந்து கொள்வீர்கள் போய் வாருங்கள்`` 
என்றார்.

இன்னும் சில நாட்கள் கழித்து அதே இளைஞர் திரும்ப வந்தார்.அப்போதும் அதே கேள்வியை திரும்ப கேட்டார்.சாது அமைதியாக சிறிது நேரம் இருந்து விட்டு அந்த இளைஞரின் கரத்தை இறுக்க பற்றினார்.

அந்த இளைஞரின் கைரேகைகளை பார்வையிட்ட சாது 

``அடடா  உன் ஆயுள்ரேகை பாதியோடு நின்றுவிட்டதே .

அட ஆமாம் இன்னும் ஒரு வாரத்தில் நீ இறந்துவிடுவாய் என்று உன் ரேகைகள் சொல்கின்றன``.
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது.இந்த சாது சொன்னதெல்லாம் இதுவரை நடந்து தான் வந்துள்ளது.அதனால் இவர் வாக்கை பொய்யென தள்ளிவிடவும் முடியாது.அப்படியானால் இன்னும் ஒரு வாரத்தில் நான் இறக்கத்தான் வேண்டும் என தன் மனதுக்குள் எண்ணியவனாய் வீடு திரும்பினான்.

அன்றிலிருந்து அவன் வாழ்க்கையை வேறுவிதமாக வாழ் ஆரம்பித்தான்.ஆறு நாட்கள் கழிந்து ஏழாவது நாள் வந்தது.அவனுடைய உறவினர்கள்  அவனுடைய மனைவி மக்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவன் கட்டிலை சூழ்ந்துகொண்டனர்.ஆனால் அந்த இளைஞன் தெளிவாக இருந்தான்.

சூரியன் மறைய சில நிமிடங்களே இருந்தன.இளைஞன் இன்னும் தெளிவாக மரணத்தை ஏற்பவனாக இருந்தான்.உறவினர்கள் ஓலமிட்டு அழ ஆரம்பித்தனர்.சூரியன் முற்றிலுமாக மறைந்தது.

சூரிய அஸ்தமன நேரத்தில் சரியாக அந்த ஞானி இளைஞனின் வீட்டிற்குள் நுழைந்தார்.இளைஞன் சாதுவை வணங்கினான்.

சாது இளைஞனிடம்``இந்த ஒரு வாரம் உன் மனநிலை எப்படி இருந்தது`` என வினவினார்.அந்த இளைஞன்``ஐயா இந்த ஏழுநாட்களும் நான் எந்த தவறும் செய்யவில்லை.மனம் நல்லவைகளை நாடியே சென்றது.குற்றமிளைப்பவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருந்தது.சாகப்போகிறவர்கள் ஏன் இவ்வளவு தவறுகளை மனம் கூசாமல் செய்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன்.திருடுபவர்களை பார்த்து மனம் சஞ்சலப்பட்டேன்.அடுத்தவர் பொருளை அபகரித்து இவன் எத்தனை நாளைக்கு வாழ்ந்துவிடப்போகிறான் என நினைத்துக்கொள்வேன்.மொத்தத்தில் உங்களை போலவே நானும் மாறிவிட்டேன்``என்று பதிலுரைத்தான்.

அப்படியானால் நான் கிளம்புகிறேன் என சாது கிளம்பப்போனார்.அதற்கு இளைஞன்``என்ன ஐயா சூரியன் அஸ்தமனமாகி அரை மணிநேரமாகிவிட்டது  இன்னும் மரணம் சம்பவிக்கவில்லையே `` 

.அதற்கு சாது 

``இனி உனக்கு மரணமில்லை நீ புதிதாக பிறந்துவிட்டாய்.நீ அன்றுகேட்ட  கேள்விக்கு விடையும் இது தான் .எந்த ஒரு நொடியும் தனக்கு இறுதி நொடியாக அமையலாம் என நினைப்பவர்கள் தவறுகளை செய்வதில்லை.அவன் கொள்ளையடிக்க மாட்டான் அடுத்தவரை வஞ்சிக்கவும் மாட்டான்.``.

என சொல்லிவிட்டு கிளம்பினார்

இளைஞன் புத்தி தெளிந்தவனாக புத்துணர்ச்சியோடு எழுந்து அமர்ந்தான்.

என்னுடைய பயணத்தில்,,

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...