Saturday, April 25, 2020

கடவுளைப் பார்க்க...

ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்...!!

வந்தவர் கேட்டார்:

   “ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”

பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:

“ஓ....!   பார்த்திருக்கிறேனே...!!
காலையில் கூட தாயுடன் பேசினேன்”

“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”

 என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் ,

    சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று,

 ஆவலோடு காத்திருந்தனர்.

பரமஹம்சர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம்,
   
    “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?”
 என்று கேட்டார்.....!!

அவர் சொன்னார்:

      “நான் டாக்டர் வேலை செய்கிறேன்”...!!

“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே...?”

“நன்றாகத் தெரியும்”

“அப்படியானால்,
    என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”

“அது எப்படி....?

நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே....?”

“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,

கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா....?

 நான் அதைப் படித்திருக்கிறேன்.

நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்”

என்று பரமஹம்சர் நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.

டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார்.


No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...